அமெரிக்காவின் West Virginia மாநிலம் கரோனா தடுப்பு மருந்து பெறும் 16 முதல் 35 வயதுக்கு உட்பட்டோருக்கு $100 வழங்க முன்வந்துள்ளது. இந்த செய்தியை ஆளுநர் Jim Justice தெரிவித்து உள்ளார். மேற்படி வயதினரை தடுப்பு மருந்து பெற ஊக்குவிப்பதே நோக்கம். அந்த $100 சன்மானம் saving bond மூலமே வழங்கப்படும். பொதுவாக Republican கட்சி முன்னணியில் உள்ள மாநிலங்களில் கரோனா தடுப்பு மருந்துக்கு ஆதரவு இல்லை. ரம்ப் போன்ற அரசியல்வாதிகளின் பேச்சுகளும் காரணம். ஆனால் ரம்ப் […]
Human Rights Watch (HRW) இன்று செவ்வாய் வெளியிட்ட அறிக்கையில் இஸ்ரேல் பாலஸ்தீனர்களுக்கு எதிராக இனவெறி குற்றங்கள் (crimes of apartheid and prosecutions) செய்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்காவை தளமாக கொண்ட இந்த அமைப்பின் 213 பக்கங்களை கொண்ட அறிக்கை இஸ்ரேல் தொடர்ந்தும் பாலத்தீனர்களை அடக்கி ஆள முனைகிறது என்று கூறியுள்ளது. ஆக்கிரமிப்புக்கு உள்ளன பாலஸ்தீனர் மட்டுமன்றி, இஸ்ரேலில் உள்ள இஸ்ரேல் குடிவாசிகளான பாலஸ்தீனர்களையும் இஸ்ரேல் அரசு இரண்டாம் தரத்தினராக அடிமைப்படுத்துகிறது என்று மேற்படி […]
இந்திய வைத்தியசாலைகள் கரோனா நோயாளிகளால் நிரம்பி, புதிதாக வரும் நோயாளிகள் கட்டில் இன்றி வைத்தியசாலைகளின் முன் வீதிகளில் மரணிக்க, இந்தியா அமர்நாத் (Amarnath Cave Temple) என்ற அடுத்த இந்து யாத்திரைக்கு தயாராகுகிறது. ஏப்ரல் மாதத்தில் திடீரென கரோனா தெற்று இந்தியாவில் அதிகரிக்க கும்பமேளா யாத்திரையும், அங்கு அண்மையில் இடம்பெற்ற தேர்தல் ஊர்வலங்களும் பிரதான காரணங்களாக இருந்தன. தற்போது அமர்நாத் யாத்திரையும் அதில் இணைய உள்ளது. இணையம் மூலம் அமர்நாத் யாத்திரைக்கு பதிவு செய்யும் திட்டம் இருந்திருந்தாலும் […]
இந்தியாவில் கரோனா கடுமையாக பரவும் காரணத்தால் பிரித்தானியா இந்தியர்களின் வரவை தடை செய்ய தீர்மானித்த பின் குறைந்தது 8 சொகுசு விமானங்களில் இந்தியாவின் பெரும் செல்வந்தர் (super rich) லண்டனுக்கு தப்பி ஓடியுள்ளதாக லண்டன் Times செய்தி வெளியிட்டு உள்ளது. பிரித்தானியாவின் Red List தடை கடந்த வெள்ளி காலை 4:00 am மணிக்கு நடைமுறைக்கு வர இருந்த நிலையில், இந்தியாவில் இருந்து கடைசி சொகுசு விமானம் 3:15 am அளவில் லண்டன் விமான நிலையத்தில் இறங்கி […]
ஈராக்கின் தலைநகரான பக்தாத்தில் கரோனா நோயாளிகளை கொண்டிருந்த Ibn al-Khatib என்ற வைத்தியசாலையில் oxygen tank ஒன்று சனிக்கிழமை இரவு வெடித்ததால் தீ மூண்டு, அத்தீக்கு குறைந்தது 82 பேர் பலியாகி உள்ளனர். அத்துடன் மேலும் 110 பேர் வரை காயமடைந்தும் உள்ளனர். அந்த வைத்தியசாலையின் ICU தளத்திலேயே தீ பரவி உள்ளது. அந்த தளத்தில் ICU சேவை பெறும் 30 நோயாளிகள் இருந்ததாக கூறப்படுகிறது. ஞாயிரு அதிகாலையில் தீ கட்டுப்பாட்டுள் கொண்டுவரப்பட்டு உள்ளது. தீயில் இருந்து […]
நேற்று வெள்ளிக்கிழமை சீனா அதிக பலம் கொண்ட Type 075 வகை யுத்த கப்பல் ஒன்றை சேவைக்கு விட்டுள்ளது. இந்த Type 075 கப்பலே உலகில் இரண்டாவது அதிக பலம் கொண்டது. அமெரிக்காவின் USS Zumwalt யுத்த கப்பலே உலகத்தில் முதலாவது அதிக பலம் கொண்டது. சீனாவின் இந்த புதிய Type 075 யுத்த கப்பல் மொத்தம் 30 யுத்த ஹெலிகளை கொண்டிருக்கும். அத்துடன் இதில் முன்னும், பின்னுமாக இரண்டு ஏவுகணை ஏவிகள் உண்டு. ஒவ்வொன்றும் 64 […]
சீனா வெளியிடும் கரோனா தொடர்பான எல்லா அறிக்கைகளையும் நம்ப மறுக்கும் மேற்கு நாடுகள் சீனா கரோனா பரவலை திறமையாக தடுத்ததை தற்போது மறைமுகமாக ஏற்றுக்கொள்கின்றன. அமெரிக்கா வெளிநாடுகளுக்கு செல்லும் தனது மக்களுக்கு கரோனா தொடர்பான எச்சரிக்கையை Level 1 முதல் Level 4 வரையான அளவீடு மூலம் தெரிவிக்கிறது. அம்முறையில் Level 1 நாடுகள் குறைந்த (low) கரோனா ஆபத்தை கொண்டன, Level 4 நாடுகள் மிகையான ஆபத்தை (very high) கொண்டன. உலகின் சுமார் 80% […]
கரோனா தடுப்பு மருந்து பங்கீட்டில் வறிய நாடுகள் பெரிதும் வஞ்சிக்கப்பட்டு உள்ளன என்பதை தடுப்பது மருந்து பங்கீடு காட்டுகிறது. ஆபிரிக்க நாடுகள் போன்ற வறிய நாடுகளை பின்தள்ளி இஸ்ரேல், அமெரிக்கா, கனடா, மற்றும் ஐரோப்பிய நாடுகள் பெருமளவு மருந்தை தம்வசப்படுத்தி உள்ளன. நமீபியா என்ற நாட்டுக்கு இதுவரை 3,000 தடுப்பு மருந்துகள் மட்டுமே வழங்கப்பட்டு உள்ளன. இதை COVID apartheid என்று வர்ணித்து உள்ளார் அந்நாட்டு சனாதிபதி. ஏப்ரல் 20ம் திகதி வரை பிரித்தானியாவில் 48.82% மக்கள் […]
இந்தியாவின் இரண்டாம் கரோனா அலை முதலாவது அலையிலும் மடங்குகள் அதிகமாக உள்ளது. அந்த பளுவால் இந்தியாவின் வைத்திய சேவை முறியும் நிலையில் உள்ளது. இன்று புதன்கிழமை மட்டும் மேலும் 295,041 பேருக்கு கரோனா தொற்றி உள்ளமை அறியப்பட்டுள்ளது. அதேதினம் 2,023 பேர் கரோனாவுக்கு பலியாகியும் உள்ளனர். பல இடங்களில் கரோனா நோயாளிகளுக்கு தேவையான oxygen தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் வைத்தியசாலை கட்டில்களும் சுமார் 100% வரை நிரம்பி உள்ளன. நோயாளிகள் கட்டில் அனுமதிக்கு கிழமைகளுக்கு பொறுத்திருக்க […]
இந்தோனேசியாவின் KRI Nanggala 402 என்ற நீர்மூழ்கி கப்பல் 53 கடற்படையினருடன் தொலைந்து உள்ளது. அது பாலி கடல் பகுதியில் ஏவுகணை ஏவும் பயிற்சி ஒன்றுக்கு தயாராகும் வேளை புதன் அதிகாலை 4:30 மணியளவில் தொலைந்து உள்ளதாக அந்நாட்டு இராணுவம் கூறியுள்ளது. மேற்படி ஏவுகணை ஏவல் வியாழன் இடம்பெற இருந்தது. தொலைந்த நீர்மூழ்கியை கண்டுபிடிக்க அஸ்ரேலியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் உதவியை நாடியுள்ளது இந்தோனேசியா. இந்த நீர்மூழ்கி பாலி கரையில் இருந்து 100 km தொலைவில் உள்ள […]