இன்று செவ்வாய் இடம்பெற்ற இலங்கை தொடர்பான வாக்களிப்பில் UNHRC தீர்மானத்துக்கு ஆதரவாக 22 நாடுகள் வாக்களித்து உள்ளன. மொத்தம் 47 வாக்குகள் கொண்ட அவையில் 14 நாடுகள் வாக்களியாத நிலையில் தீர்மானம் வெற்றி பெற்றது. பாம்புக்கு வாலும் மீனுக்கு தலையும் காட்டும் இந்தியா வாக்களியாது இன்று மறைந்து (abstained) உள்ளது. ஆனால் வாக்களிப்புக்கு முன் இந்தியா 13ம் திருத்தத்துக்கு அமைய இலங்கை செயற்படவேண்டும் என்று அறிக்கை விடுத்துள்ளது. கூடவே பஹ்ரைன், கமரூன், இந்தோனேசிய, ஜப்பான், லிபியா, நேபாள், […]
ஜெனீவாவில் இடம்பெறவிருந்த UNHRC சபையின் இலங்கை மீதான தீர்மானத்துக்கான வாக்கெடுப்பு இன்று திங்கள்கிழமை இடம்பெற திட்டமிடப்பட்டு இருந்தாலும், இறுதி நேரத்தில் அது செவ்வாய்க்கிழமைக்கு பின்போடப்பட்டு உள்ளது. கால அட்டவணை தயாரிக்கும் நெருக்கடியே காரணம் என்று கூறப்பட்டு உள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை சனாதிபதி கோத்தபாயா Organization of Islamic Cooperation (OIC) செயலாளருடன் தொலைபேசி தொடர்பு கொண்டு இலங்கைக்கு இறுதி நேர ஆதரவு தேடியுள்ளார். அதேவேளை பிரதமர் மகிந்த பஹ்ரைன் நாட்டின் Deputy King உடன் உரையாடி இறுதி […]
அஸ்ரேலியா தொடர்ந்தும் வெள்ள அனர்த்தத்தால் பாரிய பாதிப்பை அடைந்து வருகிறது. அங்கு பல்லாயிரம் மக்கள் இடம்பெயர்ந்து உள்ளனர். மாடுகள் போன்ற பண்ணை மிருகங்கள் மிதமான வெள்ளத்துள் மூழ்கி மரணிக்கின்றன. சில மரணித்த மாடுகளின் உடல்கள் கடலில் இருந்து மீட்கப்பட்டு உள்ளன. மாடு ஒன்று தனது தலையை மட்டும் நீரின் மேல உயர்த்தி பிடித்து தன்னை பாதுகாக்க முனைவது வீடியோ ஒன்றில் பதிவாகி உள்ளது. குறிப்பாக New South Wales பகுதியே மிகையான வெள்ளத்தை கொண்டுள்ளது. இங்கு கடந்த […]
அமெரிக்காவின் சன் பிரான்சிஸ்கோ (San Francisco) நகரில் Xie XiaoZhen என்ற 76 வயது சீனா பெண் ஒருவரின் முகத்தில் 39 வயதுடைய Steven Jenkins என்ற வெள்ளை இனத்தவன் “Chinese” என்று கூறி இடித்துள்ளான். அதனால் கோபம் கொண்ட சீன பெண் அருகில் இருந்த மர துண்டு ஒன்றினால் தாக்கியவனை அடித்து காயப்படுத்தி உள்ளார். மேற்படி பெண் புதன்கிழமை சந்தி ஒன்றில் வீதியை கடக்க காத்திருந்த வேளையிலேயே Steven தாக்கி உள்ளார். Steven வியாழக்கிழமை கைது […]
பிரித்தானிய மாணவருக்கு tutors சேவையை 17 வயது வரையான இலங்கையர் வழங்கி வருவதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. அத்துடன் 17 வயதானோருக்கு சுமார் 1.57 பௌண்ட்ஸ் ($2.18) ஊதியம் மட்டுமே வழங்கப்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. Third Space Learning (TSL) என்ற இலாப நோக்கம் கொண்ட நிறுவனம் மூலமே இலங்கையர் சேவைக்கு அமர்த்தப்பட்டு உள்ளனர். மேற்படி விபரம் வெளிவந்த பின் பிரித்தானியாவின் Department of Education 18 வயதுக்கு கீழானோரை tutors சேவைக்கு அமர்த்துவதை தடை […]
இன்று வியாழன் அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் கடும் வாய் சண்டைகளுடன் ஆரம்பமாகின. ரம்ப் காலத்தில் முறிந்துபோன அமெரிக்க-சீன உறவை புதுப்பிக்கும் நோக்கிலேயே இந்த பேச்சுக்கள் திட்டமிடப்பட்டு இருந்தன. ஆனால் ஆரம்ப பேச்சுகளே ஒருவரை மற்றவர் குற்றம் கூறும் களமாகியது. அமெரிக்கா ஹாங் காங், தாய்வான், Xinjiang நிலவரங்கள் தொடர்பாக சீனாவை குற்றம் சாட, சீனா பதிலுக்கு அமெரிக்காவின் கருப்பு இனத்தவர் குறைபாடுகள் போன்ற குறைபாடுகளை சாடியது. அத்துடன் அமெரிக்கா தனது பண […]
இலங்கை நாணயத்தின் பெறுமதி தொடர்ச்சியாக வீழ்ச்சி அடைந்து வருகிறது. இன்று அமெரிக்க டாலர் ஒன்றுக்கு 200 இலங்கை ரூபா என்ற நாணய மாற்று விகிதத்தை அடைந்துள்ளது இலங்கை நாணயம். இந்நிலை சில மணி நேரம் நீடித்து பின் டாலருக்கு 198 ரூபாய் என்ற மாற்று விகிதத்தை அடைந்துள்ளது. இதுவரை காலமும் இலங்கை பொருளாதார வீழ்ச்சிக்கும், இலங்கை நாணய பெறுமதி இழப்புக்கும் யுத்தத்தை காரணம் கூறி இருந்தாலும், 2009ம் ஆண்டு யுத்தம் முடிந்த காலத்தில் ஒரு அமெரிக்க டாலருக்கு […]
இந்தியாவின் அயோத்தியில் கட்டப்படவுள்ள இராமர் கோவிலுக்கு இலங்கையின் சீதா எலிய (Seetha Eliya) கல் ஒன்று இலங்கையால் வழங்கப்பட்டு உள்ளது. இந்த கல்லை இந்தியாவுக்கான தூதுவராக பணி ஏற்கவுள்ள Milinda Moragoda எடுத்து செல்லக்கூடும் என்றும் கூறப்படுகிறது. இராவணன் சீதையை கடத்தி இலங்கையின் சீதா எலிய என்ற இடத்திலேயே சிறை வைத்து இருந்ததாக கூறப்படுகிறது. இங்கு சீதைக்கு தற்போது ஒரு ஆலயம் உண்டு. இந்த கல் மயூராபதி அம்மன் ஆலயத்தில் (Mayurapathi Amman) வைத்து கையளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. […]
அமெரிக்காவின் Georgia மாநிலத்து பெரிய நகரான அட்லாண்டாவில் (Atlanta) உள்ள 3 சீனா massage நிலையங்களில் இடம்பெற்ற துப்பாக்கி தாக்குதல்களுக்கு 8 பேர் பலியாகி உள்ளனர். அதில் குறைந்தது 6 பேர் சீன அமெரிக்க பெண்கள். மேலும் பலர் காயமடைந்தும் உள்ளனர். Robert Aaron Long என்ற 21 வயது வெள்ளை இனத்தவர் கைது செய்யப்பட்டு உள்ளார். Gold Massage Spa, Aromatherapy Spa, Young’s Asian Massage ஆகிய மூன்று நிலையங்களே தாக்குதலுக்கு உள்ளாகின. சந்தேகநபர் […]
அமெரிக்காவின் அலபாமா (Alabama) மாநில பாடசாலை மாணவர்களுக்கு யோகா பயிற்சி வழங்கல் மீதான தடை விரைவில் நிறுத்தப்படவுள்ளது. 1993ம் ஆண்டு முதல் அலபாமா பாடசாலைகளில் யோகா பயிற்சி வழங்குவது தடை செய்யப்பட்டு இருந்தது. இந்த தடையை நீக்க அந்த மாநில House of Representative சபைக்கு வந்த சரத்து 73 வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளது. ஆனாலும் 25 உறுப்பினர் எதிர்த்து வாக்களித்து உள்ளனர். யோகா பயிற்சி கிறிஸ்தவ நம்பிக்கைக்கு எதிரானது என்றும், இந்து மத அடிப்படைகளை கொண்டது […]