இன்று திங்கள் தாம் மாக் 7 வேகம் கொண்ட (Mach 7, ஒலியிலும் 7 மடங்கு அதிக வேகம்) cruise ஏவுகணை ஒன்றை வெற்றிகரமாக ஏவியதாக ரஷ்யா கூறியுள்ளது. Zircon (அல்லது Tsirkon) என்ற பெயர்கொண்ட இந்த cruise missile வகை ஏவுகணை ஒலியிலும் 7 மடங்கு அதிகரித்த வேகத்தில் சென்று 350 km தூரத்தில் இருந்த சோதனை குறியை வெற்றிகரமாக தாக்கி உள்ளது. இந்த ஏவுகணை Admiral Gorshkov யுத்த கப்பலில் இருந்து ஏவப்பட்டது. ஆனால் […]
சுமார் $1 பில்லியன் பெறுமதியான இலங்கை அரசின் வெளிநாட்டு கடன் (ISBs, international sovereign bonds) ஜூலை மாதம் 27ம் திகதி முதிர்வடைகிறது. அதை அடைக்கும் நிலையில் இலங்கை உள்ளதா என்பது மீண்டும் கேள்விக்குறியாக உள்ளது. கடனை அடைக்க மீண்டும் கடன் பெறவேண்டிய நிலைக்கு இலங்கை மீண்டும் தள்ளப்படலாம். கடன் சுமையில் முறியக்கூடிய நிகழ்தகவை அதிகம் கொண்ட பப்புவா நியூகினி, கசகஸ்தான், மங்கோலியா, பாகிஸ்தான், மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளை பின்தள்ளிய இலங்கையின் கடனில் முறிவதற்கான நிகழ்த்தவு […]
சீனாவில் Zhang Ziyu என்ற 14 வயது மாணவி தற்போது 2.26 மீட்டர் (7 அடி 5 அங்குலம்) கொண்டவளாக உள்ளார். ஒரு கூடைப்பந்து விளையாடும் இவர் Yao Ming என்ற முன்னாள் சீன கூடை பந்தாட்ட வீரனை நினைவு கொள்ள வைக்கிறார். Yao Ming முன்னாள் வீரர் 2.29 மீட்டர் (7 அடி 6 அங்குலம்) உயரம் கொண்டவர். ஏனைய கூடை பந்தாட்ட வீரர் துள்ளி, பாய்ந்து பந்தை கூடைக்குள் போடும் நிலையில், Zhang Ziyu […]
ஜெர்மனியிலும், பெல்ஜியத்திலும் வியாழன் திடீரென ஏற்பட்ட வெள்ளத்துக்கு குறைந்தது 67 பேர் பலியாகி உள்ளனர். அதில் அதிகமானோர் ஜெர்மனியிலேயே பலியாகி உள்ளனர். பெல்ஜியத்தில் 9 பேர் பலியாகி உள்ளனர். இராணுவம் ஹெலிகள் மூலம் பலரை காப்பாற்றியும் உள்ளது. Cologne நகருக்கு தெற்கே உள்ள Euskirchen என்ற நகரில் 15 பேர் வெள்ளத்துக்கு பலியாகி உள்ளனர். Bad Neuenahr-Ahrweiler என்ற இடத்தில் 18 பேர் பலியாகி உள்ளனர். பாலங்கள் பல உடைந்தும், ஆறுகளுக்கு அருகே உள்ள வீடுகள் அழிக்கப்பட்டும் […]
சீனாவின் தொழில்நுட்பம் வேகமாக வளர ஒரு காரணம் அங்குள்ள தொழில்நுட்ப நிறுவனங்கள் ஊழிர்களை காலை 9:00 மணி முதல் மாலை 9:00 மணி வரை, திங்கள் முதல் சனி வரையிலான 6 தினங்களும் கடமையாற்ற எதிர்பார்ப்பதே. இதை அங்கே 996 என்று அழைப்பர். இவ்வாறு ஊழியரை பிழிவதை நிறுத்த அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்த 996 கொள்கை சட்டப்படியானது அல்ல என்றாலும் ஊழியர்கள் மத்தியில் இது படிப்படியாக வளர்ந்து வந்துள்ளது. சிலவேளைகளில் ஊழியர்கள் தமது வேலைவாய்ப்பை பாதுகாக்கவும், […]
முன்னாள் சனாதிபதி சூமா (Jacob Zuma) சிறைக்கு சென்றபின் அங்கு வன்முறைகள் இடம்பெறுகின்றன. வன்முறைகளுக்கு குறைந்தது 72 பேர் பலியாகி உள்ளனர். அத்துடன் பல வர்த்தகங்களும், வீடுகளும் கொள்ளைக்கு இரையாகின்றன. இதுவரை சுமார் 1,235 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு உள்ளனர். சுமார் 200 shopping mall களில் உள்ள வர்த்தகங்கள் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளன. தற்போதைய சனாதிபதி Cyril Ramaphosa மீதும் பலர் வெறுப்பு கொண்டுள்ளனர். Zuma, Ramaphosa இருவரும் மண்டேலாவின் ANC கட்சியினரே. மண்டேலா சிறையில் […]
கடனாவின் வான்கூவர் நகருக்கும், British Columbia மாநில தலைநகர் விக்ரோரியாவுக்கும் இடையில் அமைந்துள்ள சிறிய தீவுகளில் ஒன்றான Penelakut என்ற தீவிலும் குறைந்தது 160 அடையாளம் இல்லாத புதைகுழிகள் காணப்படுள்ளன. இந்த புதைகுழிகள் தொடர்பான ஆவணங்களும் இல்லை. மேலதிக விபரங்கள் ஓரிரு தினங்களுள் வெளிவரும் என்று கூறப்படுகிறது. இந்த தீவு முன்னர் Kuper தீவு என்று அழைக்கப்பட்டது. இங்கிருந்த residential பாடசாலை Kuper Island Residential School என்று அழைக்கப்பட்டது. இந்த பாடசாலை 1890ம் ஆண்டு முதல் […]
கியூபாவில் பல்லாயிரம் மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டு உள்ளனர். கிளர்ச்சிகள் பல நகரங்களில் இடம்பெற்றுள்ளன. கரோனா காலத்தில் உணவு பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டமையும், உணவு பொருட்களின் விலை மிகையாக அதிகரித்தமையும் காரணம் என்று கூறப்படுகிறது. கியூபாவில் இவ்வாறு அரச எதிர்ப்பு கிளர்ச்சிகள் இடம்பெறுவது மிக அருமை. தற்போதைய கிளர்ச்சிகள் நேற்று ஞாயிறு பிற்பகல் ஆரம்பித்து இருந்தன. சில கிளர்ச்சியாளர் பொலிஸ் மீது கல்லெறியும் செய்தனர். பெருமளவு கிளர்ச்சியாளர் கைது செய்யப்பட்டும் உள்ளனர். அதேவேளை அரச ஆதரவு மக்களும் […]
இன்று இடம்பெற்ற Euro 2020 உதைபந்தாட்ட இறுதி போட்டியில் இத்தாலி முதலாம் இடத்தை வென்றுள்ளது. அதனுடன் மோதிய இங்கிலாந்து இரண்டாம் இடத்தை அடைந்து உள்ளது. கரோனா காரணமாக Euro 2020 இந்த ஆண்டே இடம்பெற்றது. ஆட்டம் ஆரம்பித்து 2 நிமிடங்களில் இங்கிலாந்து தனது 1வது புள்ளியை (goal) பெற்றது. இத்தாலி 67 நிமிடங்களின் பின் தனது 1ம் புள்ளியை பெற்றது. ஆனால் 90 நிமிடங்களின் வழங்கப்பட்ட மேலதிக நேரத்தின் பின்னரும் 1:1 என்ற நிலையிலேயே புள்ளிகள் இருந்தன. […]
செல்வந்தரான (billionaire) Richard Branson, வயது 71, முதலீடு செய்து தயாரித்த Virgin Galactic என்ற தனியார் விண்வெளி கலம் இன்று அமெரிக்காவின் New Mexico மாநிலத்தில் இருந்து வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. அவரும், அவருடன் சென்ற ஏனைய 5 பேரும் பத்திரமாக மீண்டும் தரையை அடைந்தனர். சுமார் 17 ஆண்டுகளாக தயாரிக்கப்பட்ட இந்த ஏவல் முறை இரண்டு பிரதான பாகங்களை கொண்டது. தாய் கலம் ஒரு பாரிய விமானம் போன்றது. அது விமானம் போலவே தரையில் இருந்து […]