உலகின் முதல் 10 நிலக்கரி மூலம் மின் உற்பத்தி செய்யும் மின் ஆலைகள் உலக அளவில் 73% CO2 மாசுக்கு காரணம் என்கிறது அமெரிக்காவின் University of Colorado Boulder ஆய்வு ஒன்று. அதாவது உலக அளவில் மேற்படி 5% நிலக்கரி மின் உற்பத்தி ஆலைகள் 73% CO2 மாசை உருவாக்குகின்றன. மொத்தம் 221 நாடுகளில் உள்ள 29,078 நிலக்கரி (fossil-fuel) மூலம் மின் உற்பத்தி செய்யும் ஆலைகள் இந்த ஆய்வுக்கு உட்பட்டு இருந்தன. அதிகமாக CO2 […]
அமெரிக்க CDC (Centers for Disease Control and Prevention) வெளியிட்ட கரோனா தவுகளின்படி முற்றாக கரோனா தடுப்பூசி பெற்றவர்களில் 0.004% மக்களே மீண்டும் கடுமையான delta வகை கரோனா வரைஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைக்கு சென்று உள்ளனர் என்று Kaiser Foundation ஆய்வு கூறுகிறது. இது கரோனா தடுப்பூசியின் வல்லமையை மீண்டும் உறுதி செய்கிறது. அத்துடன் அவர்களில் 0.001% நோயாளிகளே மரணத்தை தழுவி உள்ளனர். மொத்தம் 163 மில்லியன் அமெரிக்கர் முழுமையாக கரோனா தடுப்பூசி பெற்று […]
ஆறு மாதங்களுக்கு முன் இராணுவ சதி மூலம் அப்போது பதவியில் இருந்த ஜனநாயக ஆட்சியை கலைத்து இராணுவ ஆட்சி அமைத்த ஜெனரல் Min Aung இன்று ஞாயிறு தன்னை தானே பிரதமர் ஆகியுள்ளார். அத்துடன் 2023ம் ஆண்டில் மீண்டும் தேர்தல் இடம்பெறும் என்றும் அவர் கூறியுள்ளார். பெப்ருவரி மாதம் 1ம் திகதி மேற்படி ஜெனரல் ஆட்சி கவிழ்ப்பு செய்திருந்தார். அன்று முதல் 75 வயதான Aung San Suu Kyi இரகசிய இடத்தில் தடுப்புக்காவலில் உள்ளார். அவருடன் […]
ஜப்பானில் தயாரிக்கப்பட்ட AstraZeneca வகை கரோனா தடுப்பு மருந்து குப்பிகள் 700,000 இன்று சனிக்கிழமை கொழும்பை அடைந்துள்ளன. மேலும் 800,000 குப்பிகளை ஜப்பான் பின்னர் அனுப்பும். ஐ.நா. தலைமையில் வறிய நாடுகளுக்கு கரோனா தடுப்பு மருந்து வழங்க COVAX திட்டம் உருவாக்கப்பட்டு இருந்தது. அந்த திட்டப்படி ஜப்பான் 15 நாடுகளுக்கு 11 மில்லியன் AstraZeneca மருந்துகளை வழங்க இணங்கி இருந்தது. அந்த 15 நாடுகளில் ஒருநாடு இலங்கை. இலங்கைக்கு ஜப்பான் மொத்தம் 1.5 மில்லியன் AstraZeneca தடுப்பு […]
தற்போது National Gallery of Australia என்ற அஸ்ரேலிய நூதனசாலையில் இருக்கும் சம்பந்தர் சிலை மீண்டும் இந்தியா திரும்பவுள்ளது. இது தமிழ்நாட்டில் இருந்து திருடப்பட்டு, பின் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டு இருந்தது. அதையே அஸ்ரேலியா கொள்வனவு செய்திருந்தது. இந்த 12ம் நூற்றாண்டு சிலை சுமார் $2.2 மில்லியன் பெறுமதியானது என்று கூறப்படுகிறது. இந்த சோழ காலத்து சிலையுடன் மொத்தம் 14 திருடப்பட்ட புராதன பொருட்கள் அஸ்ரேலியாவை அடைந்து உள்ளன. அவை பெரும்பாலும் தமிழ்நாட்டு சைவ பொருட்களே. குயாராத்தினரை […]
அந்நிய செலாவணி பளுவை குறைக்கும் நோக்கில் இலங்கை அரசு இறக்குமதிகளுக்கு பெரும் கட்டுப்பாடுகளை இட்டுள்ளது. இச்செயல் அந்நிய செலவாணி பளுவை குறைக்க சிறிது நிவாரணம் வழங்கினாலும், இறக்குமதியில் பிணைந்துள்ள சிறு வர்த்தகங்கள் பாதிப்பை அடைகின்றன. இறக்குமதி தடைகள் காரணமாக கார், மோட்டார் சைக்கிள் போன்ற பாவித்த பொருட்களின் விலைகளும் உள்ளூரில் மிகையாக அதிகரித்து உள்ளன. இலங்கை சராசரியா ஆண்டு ஒன்றில் 50,000 முதல் 60,000 வாகனங்களை இறக்குமதி செய்யும். ஆனால் கட்டுப்பாடுகள் காரணமாக அத்தொகை தற்போது குறைந்து […]
Margaret Mac Neil என்ற கனடிய பெண் Tokyo 2020 ஒலிம்பிக் போட்டியின் 100 மீட்டர் butterfly நீச்சலில் தங்க பதக்கம் பெற்றுள்ளார். தற்போது 21 வயதான இவரின் வாழ்க்கை இன்னோர் காரணத்தாலும் பாராட்டை பெற்றுள்ளது. 2000ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 26ம் திகதி சீனாவின் JiuJiang என்ற நகரில் பிறந்த இவர் உடனேயே பெற்றாரால் கைவிடப்பட்டு இருந்தார். ஒரு குழந்தை மட்டும் பெறலாம் என்ற அக்கால சீன கொள்கையால் ஆண் குழந்தைகள் மீது நாட்டம் கொண்ட […]
இந்தியாவின் மும்பாய் நகரில் உள்ள, $110 மில்லியன் பெறுமதியான, Lincoln House என்ற அரண்மனை விற்பனை விசயம் தொடர்பாக இந்தியாவின் மோதி அரசும், அமெரிக்காவும் முரண்பட்டு வருகின்றனர். இந்த கிழமை இந்தியா செல்லும் அமெரிக்க வெளியுறவு செயலாளர் Antony Blinken இந்த விசயம் தொடர்பாக மோதியை மீண்டும் அழுத்துவார் என்று கூறப்படுகிறது. Wankaner House என்ற இந்த 3-மாடி அரண்மனை 1930ம் ஆண்டு பிரித்தானியரின் ஆட்சிக்கு கீழ் இருந்த அக்கால Wankaner மகாராசாவுக்கு அமைக்கப்பட்டது. சுதந்திரத்தின் பின் […]
அமெரிக்க படைகள் ஈராக்கையும் விட்டு வெளியேறவுள்ளது என்று அமெரிக்க சனாதிபதி பைடென் இன்று திங்கள் கூறியுள்ளார். ஈராக்கின் பிரதமரை இன்று வெள்ளை மாளிகையில் சந்தித்த பைடென் மேற்படி அறிவிப்பை செய்துள்ளார். தற்போது அங்கு சுமார் 2,500 அமெரிக்க படையினர் மட்டுமே உள்ளனர். ஒருகாலத்தில் அங்கு சுமார் 160,000 அமெரிக்க படையினர் போராடினர். சுமார் 18 ஆண்டுகளுக்கு முன் அணு ஆயுதம் வைத்துள்ளார் என்ற பொய் குற்றச்சாட்டின் அடிப்படியில் சதாமை விரட்ட ஈராக் சென்ற அமெரிக்க படைகள் தற்போது […]
மேற்கு நாடுகளின் அண்மைக்கால இராணுவ நகர்வுகளால் விசனம் கொண்ட ரஷ்ய சனாதிபதி தாம் எதிரிகள் மீது தவிர்க்கமுடியாத தாக்குதல் (unpreventable strike) செய்ய தயக்கம் கொள்ளோம் என்று இன்று ஞாயிறு கூறியுள்ளார். கடந்த கிழமை பிரித்தானியாவின் யுத்த கப்பலான HMS Defender கருங்கடலில் (Black Sea) கிரைமியா (Crimea) அருகே சென்று இருந்தது. ரஷ்யா 2014ம் ஆண்டு கிரைமியாவை தனதாக்கி இருந்தது. பிரித்தானியா, அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகள் ரஷ்யா கிரைமியாவை யுக்கிரனிடம் இருந்து பறித்ததை ஏற்றுக்கொள்ளவில்லை. […]