கனடா தனது சட்டத்தை மீறி சவுதிக்கு ஆயுதம் விற்பனை

கனடா தனது சட்டத்தை மீறி சவுதிக்கு ஆயுதம் விற்பனை

கனடா தனது சட்டத்தையும் மீறி சவுதி அரேபியாவுக்கு ஆயுதங்களை விற்பனை செய்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளன Amnesty International Canada, Project Ploughshares ஆகிய அமைப்புகள். இன்று புதன் வெளியிடப்பட்ட இந்த அறிக்கை கனடா தான் சட்டமாக்கிய Arm Trade Treaty (ATT) என்ற இணக்கத்துக்கு முரணாக ஆயுத விற்பனையில் ஈடுபடுவதை சுட்டிக்காட்டி உள்ளது. 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கனடா ஐ.நா. வின் ATT விதிகளை தனது Bill C-47 மூலம் சட்டமாக்கியது. B-47 சட்டத்தின் […]

ஐந்து தினங்களில் 8 நகர்களை தலிபான் கைப்பற்றியது

ஐந்து தினங்களில் 8 நகர்களை தலிபான் கைப்பற்றியது

கடந்த 5 தினங்களில் ஆப்கானிஸ்தான் ஆயுத குழுவான தலிபான் மொத்தம் 8 மாநில தலைநகரங்களை அரசிடம் இருந்து கைப்பற்றி உள்ளது. அமெரிக்க படைகள் அங்கிருந்து வெளியேறிய பின் தலிபான் பல சிறிய, பெரிய நகரங்களை கைப்பற்றி, வேகமாக தனது கட்டுப்பாட்டை நடைமுறை செய்து வருகிறது. இந்தியாவின் ஆதரவு கொண்ட அரசு வேகமாக வலுவிழந்து வருவதால் இந்தியாவுக்கு இது இன்னோர் தலையிடியாக மாறி உள்ளது. பாகிஸ்தானுக்கு அடுத்த பக்கத்தில் இந்தியா தனது ஆளுமையை கொண்டிருக்க விரும்பியது. ஆனால் அமெரிக்கா […]

இரண்டு நாடுகள் போல் மோதும் அசாம், மிசோராம்

இரண்டு நாடுகள் போல் மோதும் அசாம், மிசோராம்

இந்தியாவின் இரண்டு மாநிலங்களான அசாமும், மிசோராமும் இரண்டு நாடுகள் போல் தம்முள் மோதிக்கொள்கின்றன. ஜூலை 26ம் திகதி ஆரம்பித்த வன்முறை இன்றும் தொடர்கிறது. மோதல்களுக்கு இதுவரை 7 பேர் பலியாகி உள்ளனர். பலியானோரில் 6 பேர் அசாம் போலீசார். மிசோராம் கூற்றுப்படி 200 அசாம் போலீசார் மிசோராம் எல்லைக்குள் நுழைந்து, Vairengte என்ற இடத்தில் 20 போலீசாருடன் இருந்த இருந்த மிசோராம் போலீஸ் நிலையத்தை தாக்கி உள்ளனர். உடனே மேலும் பல மிசோராம் போலீசார் உதவிக்கு வந்து […]

கரண்டி கொள்வனவுக்கு இலங்கை வந்த அம்பானி

கரண்டி கொள்வனவுக்கு இலங்கை வந்த அம்பானி

விலை உயர்ந்த கரண்டி (kitchenware) கொள்வனவுக்கு இந்திய செல்வந்தர் முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி (Nita Ambani) 2010ம் ஆண்டு இலங்கை பறந்திருந்தார் என்று கூறப்படுகிறது. மும்பையில் உள்ள அம்பானி வீடு உலகத்தில் இரண்டாவது விலை உயர்ந்த வீடு என்று கருதப்படுகிறது (முதலாவதாக Buckingham Palace உள்ளது). அவ்வகை வீட்டின் சமையல் பகுதிக்கு தேவையான kitchenware கொள்வனவுக்கு நீதா தனது சொந்த விமானத்தில் இலங்கை பறந்திருந்தார். நீதா விரும்பிய Noritake வகை கரண்டிகள், மட்பாண்டங்கள் இந்தியாவிலும் […]

கரோனா மத்தியில் Tokyo 2020 நிறைவு பெற்றது

கரோனா மத்தியில் Tokyo 2020 நிறைவு பெற்றது

கரோனா வைரசின் தாக்கத்தின் மத்தியில், ஒரு ஆண்டு காலம் பின் தள்ளப்பட்ட Tokyo 2020 ஒலிம்பிக் போட்டிகள் இன்று ஞாயிறு நிறைவு பெற்றன. அமெரிக்கா 39 தங்க பதக்கங்கள் உட்பட மொத்தம் 113 பதக்கங்கள் பெற்று முதல் இடத்தில் உள்ளது. ஆனாலும் அமெரிக்கா எதிர்பார்த்ததிலும் 16 பதக்கங்கள் குறைவாகவே பெற்று உள்ளது. சீனா இறுதிவரை அதிக தங்க பதக்கங்களை கொண்டிருந்தாலும் இறுதி நாளில் அமெரிக்கா ஒரு தங்க பதக்கத்தை சீனாவிலும் அதிகமாக பெற்று உள்ளது. சீனா எதிர்பார்த்ததிலும் […]

ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு தங்க பதக்கம்

ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு தங்க பதக்கம்

இந்தியாவின் Neeraj Chopra இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஈட்டி எறிதல் விளையாட்டில் (javelin) தங்க பதக்கம் பெற்றுள்ளார். Tokyo 2020 போட்டியில் இவர் ஈட்டியை 87.58 மீட்டர் தூரம் எறிந்து முதலிடத்தை அடைந்து உள்ளார். Neeraj Chopra, வயது 23, ஒரு இராணுவத்தினர். இவர் இந்தியாவின் Rajputana Rifles என்ற இராணுவ அணியில் உள்ளார். இதுவே இந்தியாவின் முதல் ‘athletics’ தங்க பதக்கமாகும். ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியா இதுவரை 10 தங்க பதக்கங்களை வென்று இருந்தாலும், அவை […]

தினங்களில் சீனா Carrier-killer ஏவுகணையை பரிசோதிக்கும்?

தினங்களில் சீனா Carrier-killer ஏவுகணையை பரிசோதிக்கும்?

வரும் சில தினங்களில் சீனா தனது carrier-killer என்ற விமானம் தாங்கி கப்பல்களை தாக்கி அழிக்கக்கூடிய மிக பலம்வாய்ந்த ஏவுகணையை பரிசோதனை செய்யக்கூடும் என்று கூறப்படுகிறது. அதற்கு வசதியாக Hainan தீவுக்கு அண்டிய பெருமளவு தென்சீன கடல் பகுதியை சீனா முறைப்படி கப்பல் போக்குவரத்துக்கு தடை செய்துள்ளது. சீனாவின் DF-26 (Dong-Feng 26, கிழக்கு-காற்று 26) என்ற ஏவுகணையே பரிசோதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதன் தாக்குதல் தூரம் 5,000 km. இது 1,200 முதல் 1,800 kg […]

Field Hockey பித்தளை பதக்கம் இந்தியாவுக்கு, 41 ஆண்டுகளின் பின்

Field Hockey பித்தளை பதக்கம் இந்தியாவுக்கு, 41 ஆண்டுகளின் பின்

இன்று வியாழன் இடம்பெற்ற ஆண்களுக்கான field hockey ஒலிம்பிக் விளையாட்டில் இந்தியா மூன்றாம் இடத்தை அடைந்து பித்தளை பதக்கத்தை வென்றுள்ளது. ஜெர்மனியை தோற்கடித்தே இந்தியா இந்த பதக்கத்தை வென்றுள்ளது. முதலாம் இடத்தில் பெல்ஜியமும், இரண்டாம் இடத்தில் அஸ்ரேலியாவும் உள்ளன. தற்போது இந்தியா 2 வெள்ளி மற்றும் 3 பித்தளை பதக்கங்களாக மொத்தம் 5 பதக்கங்களை வென்றுள்ளது. 1900ம் ஆண்டு முதல் இந்தியா 33 பதக்கங்களையே வென்றுள்ளது. அதில் 12 பதக்கங்கள் field hockey விளையாட்டுக்கே கிடைத்தன. முற்காலங்களில் […]

அமெரிக்காவில் அகதிகள் வாகனம் விபத்தில், 10 பேர் பலி

அமெரிக்காவில் அகதிகள் வாகனம் விபத்தில், 10 பேர் பலி

அமெரிக்காவின் Texas மாநிலத்தில் அகதிகள் பயணித்த van ஒன்று விபத்துக்கு உள்ளாகியதால் 10 பேர் பலியாகியும், 20 பேர் காயப்பட்டும் உள்ளனர். உள்ளூர் நேரப்படி புதன் பிற்பகல் 4:00 மணிக்கு இந்த விபத்து Encino என்ற சிறு நகரில் இடம்பெற்றுள்ளது. இந்த நகரம் அமெரிக்க, மெக்ஸிகோ எல்லைக்கு அண்மையில் உள்ளது. அகதிகளுடன் மிக வேகமாக பயணித்த இந்த வாகனம் வலதுபக்கம் திரும்ப முனைகையில் பாதையை விட்டு விலகி மின் கம்பம் ஒன்றுடன் மோதி உள்ளது. சாரதியும், 9 […]

அமெரிக்காவில் தாயை மகன் குத்திக்கொலை

அமெரிக்காவில் தாயை மகன் குத்திக்கொலை

இலங்கையில் பிறந்த 58 வயது தாயான Juanita Koilpillai என்பவரை அவரின் 23 வயது மகன் Andrew Weylin Beavers குத்தி கொலை செய்துள்ளார். இந்த கொலை ஜூலை 25ம் திகதி அமெரிக்காவின் Maryland என்ற மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. மகன் ஜூலை 31ம் திகதி அருகே உள்ள Virginia மாநிலத்தில் கைது செய்யப்பட்டு உள்ளார். மகன் தாயுடனேயே வாழ்ந்தவர். இவரின் தற்போதைய boyfriend பொலிஸாருக்கு Juanita வையும், அவரின் காரையும் காணவில்லை என்று அறிவித்து இருந்தார். அத்துடன் […]