அமெரிக்காவின் ரேனசீ (Tennessee) மாநிலத்தில் உள்ள Humphreys பகுதியில் சனிக்கிழமை ஏற்பட்ட திடீர் வெள்ளத்துக்கு குறைந்தது 21 பலியாகியும், 20 பேர் தொலைந்தும் உள்ளனர். வெள்ளப்பெருக்கு இடம்பெற்ற பகுதிகள் சனத்தொகை குறைந்த பகுதிகள் என்றாலும், வெள்ளத்தின் வேகம் காரணமாக அழிவுகள் அதிகமாக உள்ளன. தொலைபேசி கட்டுமானங்களும் பாதிப்பு அடைந்ததால் தொலைபேசி தொடர்புகளும் துண்டிக்கப்பட்டு உள்ளன. McEwen என்ற இடம் சனிக்கிழமை 24 மணி நேரத்துள் 17 அங்குல (43 cm) மழை வீழ்ச்சியை பெற்றுள்ளது. இது பதிவு […]
ஆப்கானிஸ்தானின் தலிபானை கட்டுப்படுத்த ரஷ்யாவினதும், சீனாவினதும் ஆதரவு தேவை என்று பிரித்தானிய வெளியுறவு செயலாளர் (Foreign Secretary) Dominic Raab கூறியுள்ளார். மேற்கு நாடுகள் தற்காலங்களில் சீனாவுடன் முரண்பட்டாலும், சீனாவின் உதவியை நாடுவதை தவிர்க்க முடியாது என்றுள்ளார் Dominic Raap. ஆப்கான் அரச படைகளின் தரம், தலிபானின் தரம் ஆகியவற்றின் அமெரிக்காவின் கணிப்புகள் தவறியதால் அமெரிக்கா ஆப்கான் அரசுக்கு வழங்கிய பல தரமான ஆயுதங்கள், விமானங்கள் எல்லாம் இன்று தலிபான் கைகளை அடைந்துள்ளன. அதில் மூன்று C-130 […]
ஆபிரிக்காவில் இருந்து 53 அகதிகளை ஏற்றி சென்ற சிறு வள்ளம் (dinghy) ஒன்று கவிழ்ந்ததால் 52 பேர் பலியாகி உள்ளனர். முப்பது வயதுடைய பெண் ஒருவர் மட்டுமே தப்பி உள்ளார். இந்த விபத்து ஸ்பானிஸ் நாட்டுக்கு உரிய Canary Island என்ற தீவில் இருந்து 220 km தூரத்து கடலில் நிகழ்ந்துள்ளது. அவ்வழியே சென்ற வர்த்தக கப்பல் ஒன்று வழங்கிய தகவலின் அடிப்படையில் ஸ்பெயின் படைகள் தேடுதல் செய்துள்ளனர். அப்படையினரே உயிருடன் இருந்த 30 வயது பெண்ணை […]
உலக அளவில் விரைவில் கார் போன்ற பயணிகள் வாகனங்களுக்கு தட்டுப்பாடு வரவுள்ளது. அளவுக்கு அதிகமாக பயணிகள் வாகனங்களுள் computer chip உள்ளடக்கப்பட்டு வந்தமையே காரணம். வாகனங்களின் மிகையான chip பயன்பாடு காரணமாகவும், கரோனா ஆசிய chip தயாரிப்பு தொழிற்சாலைகளை முடக்கியது காரணமாகவும் தற்போது computer chip களுக்கு பெரும் தட்டுப்பாடு தோன்றியுள்ளது. உலகின் மிக பெரிய பயணிகள் வாகன தயாரிப்பாளரான Toyota தனது உலக அளவிலான உற்பத்தியை 40% ஆல் குறைக்க உள்ளது. பயணிகள் வாகனங்களில் பயன்படுத்தப்படும் […]
கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்கா ஆயுதம், அறிவு, பயிற்சி வழங்கி வளர்த்த ஆப்கானிஸ்தான் அரச படைகள் இவ்வளவு விரைவாக தோற்றுப்போகும் என்று தாம் நம்பியிருக்கவில்லை என்று அமெரிக்க படைகளின் தலைவர் Mark Milley இன்று புதன் கூறியுள்ளார். Joint Chiefs Chairman General Mark Milley தனது உரை ஒன்றில் “There was nothing that I or anyone else saw that indicated a collapse of this army in this government […]
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தை அண்டிய தென்கிழக்கு பகுதி நீண்ட காலமாக கடும் வறட்சிக்கு உள்ளாகி வருகிறது. அதனால் அரசு அங்கு நீர் பாவனையை கட்டுப்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேவேளை அப்பகுதிக்கு கணிசமான அளவில் நீர் வழங்கி வந்த Colorado River என்ற ஆற்றிலும் நீரோட்ட அளவு குறைந்து வருகிறது. நீர் பற்றாக்குறையால் Hoover Dam அணைக்கு நீரை தேக்கும் Lake Mead வாவியின் நீர் மட்டமும் வேகமாக குறைந்து வருகிறது. இதில் உள்ள நீரின் கனவளவு தற்போது […]
அமெரிக்கா எதிர்பார்த்ததிலும் வேகமாக ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூல் தலிபானின் கைகளில் வீழ்ந்து உள்ளது. காபூலின் வீழ்ச்சியை பலரும் 1975ம் ஆண்டு இடம்பெற்ற வியட்நாம் Saigon வீழ்ச்சிக்கு ஒப்பிடுகின்றனர். அமெரிக்க சனாதிபதி பைடெனுக்கு இது ஒரு படுதோல்வியாக அமைந்துள்ளது. அமெரிக்க உளவு படைகள் ஆப்கானித்தான் நிலையை அறிய தவறி இருந்ததா அல்லது உளவு படைகள் வழங்கிய தரவுகளை விலக்கி பைடென் பின் யோசனை இன்றி அமெரிக்க படைகளை ஆப்கானிஸ்தானில் இருந்து மீட்டு தலிபானின் மீட்சிக்கு அறியாமல் சந்தர்ப்பம் வழங்கி […]
தென் ஆப்பிரிக்காவின் கடலோர பகுதியான Durban நகருக்கு அண்மையில் உள்ள Phoenix என்ற இடத்தில் அந்நாட்டு இந்தியர்களுக்கும், கருப்பு இனத்தவர்களுக்கும் இடையில் சில காலமாக இனக்கலவரம் நிகழ்ந்து வருகிறது. இந்த கலவரங்களுக்கு இதுவரை சுமார் 300 பேர் பலியாகி உள்ளனர். ஜூலை 12ம் திகதி 34 வயதான Bhekinkosi Ngcobo என்பவர் இந்திய ஆயுததாரிகளால் கொலை செய்யப்பட்டு உள்ளார் என்று முறையிடப்பட்டு உள்ளது. இவரின் காரும் எரிக்கப்பட்டு உள்ளது. சில இந்தியர் சட்டவிரோத முறையில் ஆயுதங்களுடன் தமது […]
சுமார் 20 ஆண்டுகள் ஆப்கானிஸ்தானில் இருந்த அமெரிக்க படைகளை பைடென் அரசு திருப்பி அழைத்த தினம் முதல் தலிபான் அங்கு வேகமாக நகரங்களை கைப்பற்றி வருகிறது. தற்போது குறைந்தது 18 மாநில தலைநகரங்கள் தலிபான் கைக்கு மாறி உள்ளன. தற்போது தலிபான் ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலையும் (Kabul) நெருங்கி உள்ளது. இந்நிலையில் அங்குள்ள அமெரிக்க தூதுவரகத்து பணியாளரை மீட்க அமெரிக்கா 3,000 படையினரை அனுப்புகிறது. அதில் சிலர் ஏற்கனவே காபூல் சென்று உள்ளனர். ஏனையோர் இந்த கிழமை […]
அமெரிக்காவிலும் வெள்ளையரின் சனத்தொகை வீதம் வேகமாக குறைந்து வருகிறது. 2020ம் ஆண்டுக்கான சனத்தொகை கணக்கெடுப்பின்படி (census) 2010ம் ஆண்டு அங்கு 63.0% ஆக இருந்த வெள்ளையரின் சனத்தொகை 2020ம் ஆண்டில் 57.3% ஆக குறைந்து உள்ளது. அதேவேளை அங்கு ஸ்பானியரினதும், ஆசியரினதும் அளவு வேகமாக அதிகரித்து வருகிறது. கலப்பு திருமண குடும்பங்களின் தொகை சிறியது என்றாலும் அது அனைத்து வகையிலும் வேகமாக அதிகரித்து உள்ளது. 2010ம் ஆண்டில் 17.3% ஆக இருந்த ஸ்பானியர் தொகை 2020ம் ஆண்டில் […]