இந்தியாவை கைவிடுகிறது அமெரிக்காவின் Ford

இந்தியாவை கைவிடுகிறது அமெரிக்காவின் Ford

அமெரிக்காவின் வாகன உற்பத்தி நிறுவனமான Ford Motor Company தனது இந்திய வர்த்தக நடவடிக்கைகளை கைவிடுவதாக கூறியுள்ளது. இந்தியாவில் தம்மால் இலாபகரமாக செயற்பட முடியாது என்று Ford கூறியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் தமது இந்திய வர்த்தக நடவடிக்கை $2 பில்லியன் இழப்பை கொண்டுள்ளது என்றும் Ford கூறியுள்ளது. சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் Ford இந்தியாவில் இயங்க ஆரம்பித்து இருந்தது. ஆனால் அது இந்தியாவில் பலமாக காலூன்ற முடியவில்லை. தற்போது இந்தியாவில் விற்பனை செய்யப்படும் […]

தாமிரபரணி எச்சங்கள் 3,200 ஆண்டுகள் பழையன

தாமிரபரணி எச்சங்கள் 3,200 ஆண்டுகள் பழையன

தமிழ்நாட்டு தாமிரபரணி ஆற்றோரம் (River Thamiraparani) கண்டெடுக்கப்பட்ட முற்கால குடிகளின் மட்பாண்டங்கள் சுமார் 3,200 ஆண்டுகள் பழையன என்று காபன் பரிசோதனை மூலம் அறியப்பட்டு உள்ளது. இந்த காபன் பரிசோதனையை அமெரிக்காவின் Florida மாநிலத்தில் உள்ள Beta Analytic என்ற பரிசோதனை கூடம் செய்துள்ளது. பொருனை (Porunai) பகுதி அகழ்வுகளில் எடுக்கப்பட்ட பொருட்களே Beta Analytic ஆய்வு கூடத்துக்கு காபன் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு இருந்தன. பரிசோதனையின் பின் இப்பொருட்கள் 1155 B.C. காலத்துக்கு உரியன என்றுள்ளது ஆய்வுகூடம். […]

மாணவர் வீச முனைந்த உணவை உண்ட சீன அதிபர்

மாணவர் வீச முனைந்த உணவை உண்ட சீன அதிபர்

தனது பாடசாலை மாணவர்கள் விரையமாக வீச முனைந்த உணவை 58 வயதான Wang YongXin என்ற அப்பாடசாலை அதிபர் பெற்று தான் புசித்துள்ளார். மாணவர்கள் உணவை விரையமாக்குவதை நிறுத்தும்படி அவர்களுக்கு அறிவூட்டும் நோக்கிலேயே அதிபர் இவ்வாறு செய்துள்ளார். HuNan மாநிலத்தில் உள்ள QiYang நகர் பாடசாலை அதிபர் சில மாணவர் வீச முனைந்த உணவை உண்டதை கண்ட ஏனைய மாணவர் தாம் வீச இருந்த உணவை உடனே உண்டு முடித்தனர் என்று கூறப்படுகிறது. அத்துடன் தற்போது அளவுக்கு […]

உதவிக்கு குதித்த ரஷ்ய அவசரகால அமைச்சரும் பலி

உதவிக்கு குதித்த ரஷ்ய அவசரகால அமைச்சரும் பலி

RT என்ற ரஷ்ய செய்தி சேவையின் படப்பிடிப்பாளர் ஒருவர் வீழ்ச்சி ஒன்றில் வீழ்ந்தபோது அவரை காப்பாற்ற குதித்த 55 வயதுடைய Yevgeny Zinichev என்ற ரஷ்ய அவசரகால அமைச்சரும் (Emergency Minister) பலியாகி உள்ளார். வயது 63 கொண்ட Alexander Melnik என்ற படப்பிடிப்பாளர் Norilsk என்ற பகுதியில் உள்ள Kitabo Oron என்ற நீர்வீழ்ச்சியின் எல்லையில் (cliff) இருந்தபோது தவறி பள்ளத்தாக்குள் வீழ்ந்துள்ளார். அவரை காப்பாற்ற முனைந்த அமைச்சரே பலியாகி உள்ளார். படப்பிடிப்பாளரும் கூடவே பலியாகி […]

இந்தியாவை மிரட்டும் கரோனாவிலும் கொடிய Nipah

இந்தியாவை மிரட்டும் கரோனாவிலும் கொடிய Nipah

கரோனா பிடியில் தவிக்கும் இந்தியாவை தற்போது நீபா (Nipah, NiV) வைரஸ் தாக்கிக்குறது. கேரளா மாநிலத்தில் பரவும் இந்த வைரசை கட்டுப்படுத்த அதிகாரிகள் முனைந்து வருகின்றனர். அங்கு இந்த வைரஸ் 12 வயது சிறுவன் ஒருவனை பலியாக்கி உள்ளது. ஒரு கிழமைக்கு முன் கடும் காச்சல் காரணமாக வைத்தியசாலைக்கு வந்திருந்த சிறுவனின் இரத்தம் இந்திய National Institute of Virology க்கு அனுப்பப்பட்டு அங்கு செய்த ஆய்வுகள் நீபா தொற்றியமையை உறுதி செய்துள்ளன. சிறுவன் ஞாயிறு காலை […]

​ஆறு பாலஸ்தீன கைதிகள் சுரங்கம் கிண்டி தப்பினர்

​ஆறு பாலஸ்தீன கைதிகள் சுரங்கம் கிண்டி தப்பினர்

இஸ்ரேலில் உள்ள Gilboa என்ற அதிகூடிய பாதுகாப்பு கொண்ட சிறைச்சாலையில் வைக்கப்பட்டு இருந்த 6 பாலஸ்தீன கைதிகள் நிலத்துக்கு கீழே சுரங்கம் கிண்டி தப்பி உள்ளனர். அவர்களை தேடும் பணியை இஸ்ரேல் தற்போது தீவிரப்படுத்தி உள்ளது. சிறைச்சாலைக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் பணியாற்றிய தோட்டக்காரர் சிலர் தோட்டங்கள் ஊடாக ஓடுவதை அதிகாரிகளுக்கு அறிவித்த பின்னரே கைதிகள் தப்பியது தெரியவந்துள்ளது. தப்பியவர்களில் ஒருவர் 46 வயதுடைய Al-Aqsa Martyrs Brigades என்ற ஆயுத குழுவின் முன்னாள் தலைவர் […]

கினியில் கவிழ்ப்பு மூலம் இராணுவம் ஆட்சியில்

கினியில் கவிழ்ப்பு மூலம் இராணுவம் ஆட்சியில்

மேற்கு ஆபிரிக்க நாடான கினியில் (Guinea) இராணுவம் கவிழ்ப்பு மூலம் ஆட்சியை கைப்பற்றி உள்ளது. அந்நாட்டின் முன்னைய சனாதிபதி Alpha Conde, வயது 83, தற்போது எங்குள்ளார் என்பது அறியப்படவில்லை. ஞாயிற்றுக்கிழமை அங்குள்ள தொலைக்காட்சி சேவை மூலம் தாம் ஆட்சியை கைப்பற்றி உள்ளதாக இராணுவம் கூறியுள்ளது. தம்மை National Committee for Reconciliation என்றும் இராணுவம் பெயரிட்டு உள்ளது. இந்த இராணுவ கவிழ்ப்பை Lt Col Mamady Doumbouya செய்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. இயற்கை வளமும், கனியங்களும் […]

ஜேர்மன் பல்கலைக்கழகத்தில் 96% சைவ உணவுகள்

ஜேர்மன் பல்கலைக்கழகத்தில் 96% சைவ உணவுகள்

ஜேர்மனியில் உள்ள 34 பல்கலைக்கழக உணவகங்களில் அடுத்த மாதம் (அக்டோபர்) முதல் விற்பனை செய்யப்படும் உணவுகளில் 96% உணவுகள் சைவ அல்லது vegan உணவுகளாகவே இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இறைச்சி வகை உணவுகள் 2% அளவிலும் மீன் உணவுகள் 2% அளவிலும் மட்டுமே இருக்கும். இந்த செய்தியை பல்கலைக்கழக மாணவர்களுக்கு உணவு வழங்கும் மாணவர் அமைப்பான Studierenden தெரிவித்து உள்ளது. வழங்கப்படவுள்ள மொத்தம் 510 உணவுகளில் (meals) 341 உணவுகள் பால் பொருட்களையும் தவிர்த்த vegan உணவாகவும், […]

நியூசிலாந்தில் இலங்கையரின் கத்தி குத்துக்கு 6 பேர் காயம்

நியூசிலாந்தில் இலங்கையரின் கத்தி குத்துக்கு 6 பேர் காயம்

நியூசிலாந்தின் Auckland நகரில் இலங்கையர் ஒருவர் செய்த கத்தி குத்துக்கு 6 பேர் காயம் அடைந்து உள்ளனர். கத்தி குத்தை செய்த இலங்கையர் போலீசால் சுட்டு கொலை செய்யப்பட்டு உள்ளார். இந்த வன்முறையை செய்தவர் ஒரு ISIS ஆதரவாளர் என்று நியூசிலாந்து அரசு கூறியுள்ளது. பெயர் குறிப்பிடப்படாத இலங்கையர் நியூசிலாந்துக்கு 2011ம் ஆண்டு அக்டோபர் மாதம் சென்று இருந்தார். இன்று வெள்ளி பிற்பகல் 2:40 மணியளவில் அப்பகுதியில் உள்ள Countdown என்ற கடைக்கு சென்ற இவர் அங்கு […]

ஐடா வெள்ளத்துக்கு நியூ யார்க் பகுதியில் குறைந்தது 45 பேர் பலி

ஐடா வெள்ளத்துக்கு நியூ யார்க் பகுதியில் குறைந்தது 45 பேர் பலி

சூறாவளி ஐடா (Hurricane Ida) ஏற்படுத்திய திடீர் வெள்ளத்துக்கு அமெரிக்காவின் நியூ யார்க் நகர் மற்றும் அதை அண்டிய Connecticut, New Jersey, Pennsylvania, Maryland, Virginia மாநில பகுதிகளில் குறைந்தது 45 பேர் பலியாகி உள்ளனர். நியூ யார்க் நகரில் பல நிலக்கீழ் ரயில் நிலையங்களுள் வெள்ளம் புகுந்ததால் ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டு உள்ளன. இதனால் பல பயணிகள் புதன் இரவு ரயில் நிலையங்களில் தங்க நேரிட்டது. Philadelphia நகரில் உள்ள Schuylkill ஆற்று நீர்மட்டம் […]