இன்று திங்கள் (செப்டம்பர் 20, 2021) இடம்பெற்ற கனடிய தேர்தலில் மீண்டும் லிபரல் கட்சி ஆட்சியை கைப்பற்றுகிறது. தேர்தல் முடிவுகள் தற்போதும் வெளிவந்துகொண்டிருந்தாலும், ஏற்கனவே 155 ஆசனங்களை மட்டும் கொண்டு சிறுபான்மை ஆட்சியை கொண்டுருந்த பிரதமர் ரூடோவின் அரசு மீண்டும் ஒரு சிறுபான்மை அரசையே அமைக்கக்கூடும். மொத்தம் 338 ஆசனங்களை கொண்ட பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆட்சியை அமைக்க 170 ஆசனங்கள் தேவையாக இருக்கும் நிலையில் லிபரல் கட்சி, 82% வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், 157 தொகுதிகளில் மட்டுமே […]
அமெரிக்கா பிரித்தானியாவுடனும், அஸ்ரேலியாவுடனும் இரகசியமாக செய்து கொண்ட AUKUS கூட்டின் பின் பிரான்ஸ் தொடர்ந்தும் வெறுப்பில் உள்ளது. இந்த கிழமை பிரித்தானியவுடன் செய்துகொள்ளவிருந்த பாதுகாப்பு தொடர்பான பேச்சுக்களை பிரான்ஸ் இடைநிறுத்தி உள்ளது. பிரித்தானிய பிரதமர் Boris Johnson பிரான்ஸ் AUKUS கூட்டையிட்டு பயம் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை என்று கூறியிருந்தாலும், பிரான்ஸ் பெரும் விசனத்தில் உள்ளது. பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் Ben Wallace உடன் பிரான்சின் பாதுகாப்பு அமைச்சர் Florence Parly செய்யவிருந்த பேச்சே இடைநிறுத்தப்பட்டு உள்ளது. […]
ஆகஸ்ட் மாதம் 29ம் திகதி அமெரிக்காவின் ஆளில்லா விமானம் ஒன்று ஏவிய ஏவுகணைக்கு ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் 10 பேர் பலியாகி இருந்தனர். இன்று வெள்ளிக்கிழமை அமெரிக்க படைகளின் தலைமையகமான பென்ரகன் (Pentagon) மேற்படி தாக்குதலில் மரணித்தோர் பொதுமக்களே என்றும், தமது தவறை மன்னிக்கும்படியும் கேட்டுள்ளார். இந்த மன்னிப்பு வேண்டுகோளை இராணுவத்தின் மத்திய தலைமையக அதிகாரி ஜெனரல் Frank McKenzie விடுத்துள்ளார். தாக்குதல் நேரத்தில் குறி உண்மையில் ISIS-K என்றே தான் நம்பியதாக அவர் கூறியுள்ளார். அத்துடன் […]
அமெரிக்கா நேற்று பிரித்தானியாவுடனும் அஸ்ரேலியாவுடனும் செய்துகொண்ட AUKUS என்ற இராணுவ கூட்டு எதிரி நாடான சீனாவிலிருந்து மட்டுமன்றி பிரான்ஸ், நியூசிலாந்து போன்ற நேச நாடுகளில் இருந்தும் எதிர்ப்பை பெற்றுள்ளது. 2016ம் ஆண்டு அஸ்ரேலியா பிரான்சிடம் இருந்து 12 அணுமின் மூலம் இயங்கும் நீர்மூழ்கிகளை கொள்வனவு செய்ய இணங்கி இருந்தாலும், நேற்று அந்த இணக்கத்தை அஸ்ரேலியா முறித்துள்ளது. பதிலாக தற்போது அமெரிக்க நீர்மூழ்கிகளையே அஸ்ரேலியா கொள்வனவு செய்யவுள்ளது. அதனால் பிரான்ஸ் விசனம் கொண்டுள்ளது. பிரான்சின் வெளியுறவு அமைச்சர் Jean-Yves […]
அமெரிக்கா, பிரித்தானியா, அஸ்ரேலியா ஆகிய மூன்று நாடுகளும் இன்று புதன்கிழமை கூட்டாக AUKUS என்ற புதியதோர் கூட்டணியை அறிவித்துள்ளன. இந்த புதிய கூட்டணியின் எதிரி சீனா என்று கூறப்படாவிட்டாலும் அந்த உண்மை பொதுவாக அறியப்பட்டது. AUKUS கூட்டின் இணக்கப்படி மூன்று நாடுகளும் தமது இராணுவ, தொழில்நுட்ப அறிவுகளை பகிர்ந்து கொள்ளும். 2016ம் ஆண்டு பிரான்சிடம் இருந்து அஸ்ரேலியா 12 அனுமினில் இயங்கும் நீர்மூழ்கிகளை $90 பில்லியன் பெறுமதிக்கு கொள்வனவு செய்ய இணங்கி இருந்தாலும் அந்த உடன்படிக்கை தற்போது […]
முன்னாள் அமெரிக்க சனாதிபதி ரம்ப் ஆட்சியில் இருந்த காலத்தில், அவர் சீனாவை தாக்கும்படி கட்டளை இட்டாலும் அமெரிக்க இராணுவம் அவ்வாறு சீனாவை முன்னறிவிப்பு இன்றி தாக்காது என்று அமெரிக்க முப்படை தலைவர் ஜெனரல் Mark Milley சீன படைகளுக்கு இரண்டு தடவைகள் உறுதி கூறியுள்ளார். இந்த செய்தி முதலில் Bob Woodward மற்றும் Robert Costa எழுதிய Peril என்ற நூலில் வெளிவந்திருந்தாலும், இன்று புதன்கிழமை பென்ரகன் (Pentagon) வெளியிட்ட அறிக்கை ஒன்று முப்படை தளபதி சீனாவுக்கு […]
அண்மை காலங்களில் உலகம் எங்கும் மக்கள் வீட்டு கொள்வனவுகளை முதலீட்டு வழியாக (investment vehicle) பயன்படுத்தி வருகின்றனர். இதனால் வீடு மற்றும் condo கட்டுமானம், கொள்வனவு எல்லாம் அளவுக்கு மிஞ்சி வளர்ந்துள்ளது. தேவைக்கு அப்பாற்பட்ட வளர்ச்சி சில இடங்களில் பாரிய இழப்புகளுக்கு காரணமாகி வருகிறது. தற்போது சீனாவின் China Evergrande என்ற நிறுவனம் பலரின் முதலீடுகளையும் அழித்து, தானும் அழியக்கூடும் என்ற நிலையில் உள்ளது. 1996ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட China Evergrande என்ற வீடு கட்டுமான நிறுவனம் […]
கடந்த சுமார் இரண்டு ஆண்டுகளாக அமெரிக்கா, கனடா போன்ற மேற்கு நாடுகள் பெருமளவு பணத்தை வேலையிழந்த தம் மக்களுக்கு மானியமாக (stimulus) வழங்கி இருந்தன. அவ்வகை மானியம் பணவீக்கத்தை (consumer-price inflation) உருவாக்கி உள்ளது என்று கணிப்புகள் தற்போது காட்டுகின்றன. கரோனா காலத்தில் அமெரிக்கா தனது GDP யின் 25% அளவு பணத்தை மக்களுக்கு நன்கொடையாக வழங்கி இருந்தது. இதனால் அமெரிக்காவின் 2020-2021 காலத்து disposable household income 2018-2019 காலத்துடன் ஒப்பிடுகையில் 14.9% ஆல் அதிகரித்து […]
நிலைமைக்கு ஏற்ப திட்டமிடாது அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் இருந்து திடீர்ரென வெளியேறிய பின் தலிபான் வேகமாக முழு ஆப்கானிஸ்தானையும் கைப்பற்றி இருந்தது. அதனால் பைடென் அரசு அவமானப்பட்டது. இந்நிலையில் அங்குள்ள ISIS-K அமைப்பு பெரும் தாக்குதல் ஒன்றை காபூல் விமான நிலையத்துக்கு வெளியே செய்திருந்தது. அந்த தாக்குதலுக்கு 13 அமெரிக்க படையினர் உட்பட சுமார் 180 பேர் பலியாகி இருந்தனர். அவமானத்தில் இருந்த பைடென் அரசு சுடச்சுட எதிர் தாக்குதல் ஒன்றை நிகழ்த்தி வெற்றி கொண்டாட முனைந்தது. ஆகஸ்ட் […]
சுமார் 7 மாதங்களின் பின் அமெரிக்க சனாதிபதி பைடெனும் (Biden), சீன சனாதிபதி சீ ஜின் பிங்கும் (Xi JinPing) தொலைபேசி மூலம் உரையாடி உள்ளனர். சீன நேரப்படி வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற இந்த உரையாடல் சுமார் 90 நிமிடங்கள் நீடித்ததாக கூறப்படுகிறது. இரு நாடுகளும் இணங்கும் விசயங்களும், முரண்படும் விசயங்களும் பேசப்பட்டுள்ளன. இந்த உரையாடலை அமெரிக்க சனாதிபதி பைடெனே ஆரம்பித்து இருந்தார். இந்த உரையாடலில் இருதரப்பும் பல மட்டங்களில் தொடர்ச்சியான தொடர்புகளை ஏற்படுத்த இணங்கி உள்ளன. […]