ஜப்பானில் தயாரிக்கப்பட்ட AstraZeneca வகை கரோனா தடுப்பு மருந்து குப்பிகள் 700,000 இன்று சனிக்கிழமை கொழும்பை அடைந்துள்ளன. மேலும் 800,000 குப்பிகளை ஜப்பான் பின்னர் அனுப்பும். ஐ.நா. தலைமையில் வறிய நாடுகளுக்கு கரோனா தடுப்பு மருந்து வழங்க COVAX திட்டம் உருவாக்கப்பட்டு இருந்தது. அந்த திட்டப்படி ஜப்பான் 15 நாடுகளுக்கு 11 மில்லியன் AstraZeneca மருந்துகளை வழங்க இணங்கி இருந்தது. அந்த 15 நாடுகளில் ஒருநாடு இலங்கை. இலங்கைக்கு ஜப்பான் மொத்தம் 1.5 மில்லியன் AstraZeneca தடுப்பு […]
தற்போது National Gallery of Australia என்ற அஸ்ரேலிய நூதனசாலையில் இருக்கும் சம்பந்தர் சிலை மீண்டும் இந்தியா திரும்பவுள்ளது. இது தமிழ்நாட்டில் இருந்து திருடப்பட்டு, பின் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டு இருந்தது. அதையே அஸ்ரேலியா கொள்வனவு செய்திருந்தது. இந்த 12ம் நூற்றாண்டு சிலை சுமார் $2.2 மில்லியன் பெறுமதியானது என்று கூறப்படுகிறது. இந்த சோழ காலத்து சிலையுடன் மொத்தம் 14 திருடப்பட்ட புராதன பொருட்கள் அஸ்ரேலியாவை அடைந்து உள்ளன. அவை பெரும்பாலும் தமிழ்நாட்டு சைவ பொருட்களே. குயாராத்தினரை […]
அந்நிய செலாவணி பளுவை குறைக்கும் நோக்கில் இலங்கை அரசு இறக்குமதிகளுக்கு பெரும் கட்டுப்பாடுகளை இட்டுள்ளது. இச்செயல் அந்நிய செலவாணி பளுவை குறைக்க சிறிது நிவாரணம் வழங்கினாலும், இறக்குமதியில் பிணைந்துள்ள சிறு வர்த்தகங்கள் பாதிப்பை அடைகின்றன. இறக்குமதி தடைகள் காரணமாக கார், மோட்டார் சைக்கிள் போன்ற பாவித்த பொருட்களின் விலைகளும் உள்ளூரில் மிகையாக அதிகரித்து உள்ளன. இலங்கை சராசரியா ஆண்டு ஒன்றில் 50,000 முதல் 60,000 வாகனங்களை இறக்குமதி செய்யும். ஆனால் கட்டுப்பாடுகள் காரணமாக அத்தொகை தற்போது குறைந்து […]
Margaret Mac Neil என்ற கனடிய பெண் Tokyo 2020 ஒலிம்பிக் போட்டியின் 100 மீட்டர் butterfly நீச்சலில் தங்க பதக்கம் பெற்றுள்ளார். தற்போது 21 வயதான இவரின் வாழ்க்கை இன்னோர் காரணத்தாலும் பாராட்டை பெற்றுள்ளது. 2000ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 26ம் திகதி சீனாவின் JiuJiang என்ற நகரில் பிறந்த இவர் உடனேயே பெற்றாரால் கைவிடப்பட்டு இருந்தார். ஒரு குழந்தை மட்டும் பெறலாம் என்ற அக்கால சீன கொள்கையால் ஆண் குழந்தைகள் மீது நாட்டம் கொண்ட […]
இந்தியாவின் மும்பாய் நகரில் உள்ள, $110 மில்லியன் பெறுமதியான, Lincoln House என்ற அரண்மனை விற்பனை விசயம் தொடர்பாக இந்தியாவின் மோதி அரசும், அமெரிக்காவும் முரண்பட்டு வருகின்றனர். இந்த கிழமை இந்தியா செல்லும் அமெரிக்க வெளியுறவு செயலாளர் Antony Blinken இந்த விசயம் தொடர்பாக மோதியை மீண்டும் அழுத்துவார் என்று கூறப்படுகிறது. Wankaner House என்ற இந்த 3-மாடி அரண்மனை 1930ம் ஆண்டு பிரித்தானியரின் ஆட்சிக்கு கீழ் இருந்த அக்கால Wankaner மகாராசாவுக்கு அமைக்கப்பட்டது. சுதந்திரத்தின் பின் […]
அமெரிக்க படைகள் ஈராக்கையும் விட்டு வெளியேறவுள்ளது என்று அமெரிக்க சனாதிபதி பைடென் இன்று திங்கள் கூறியுள்ளார். ஈராக்கின் பிரதமரை இன்று வெள்ளை மாளிகையில் சந்தித்த பைடென் மேற்படி அறிவிப்பை செய்துள்ளார். தற்போது அங்கு சுமார் 2,500 அமெரிக்க படையினர் மட்டுமே உள்ளனர். ஒருகாலத்தில் அங்கு சுமார் 160,000 அமெரிக்க படையினர் போராடினர். சுமார் 18 ஆண்டுகளுக்கு முன் அணு ஆயுதம் வைத்துள்ளார் என்ற பொய் குற்றச்சாட்டின் அடிப்படியில் சதாமை விரட்ட ஈராக் சென்ற அமெரிக்க படைகள் தற்போது […]
மேற்கு நாடுகளின் அண்மைக்கால இராணுவ நகர்வுகளால் விசனம் கொண்ட ரஷ்ய சனாதிபதி தாம் எதிரிகள் மீது தவிர்க்கமுடியாத தாக்குதல் (unpreventable strike) செய்ய தயக்கம் கொள்ளோம் என்று இன்று ஞாயிறு கூறியுள்ளார். கடந்த கிழமை பிரித்தானியாவின் யுத்த கப்பலான HMS Defender கருங்கடலில் (Black Sea) கிரைமியா (Crimea) அருகே சென்று இருந்தது. ரஷ்யா 2014ம் ஆண்டு கிரைமியாவை தனதாக்கி இருந்தது. பிரித்தானியா, அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகள் ரஷ்யா கிரைமியாவை யுக்கிரனிடம் இருந்து பறித்ததை ஏற்றுக்கொள்ளவில்லை. […]
இந்தியாவின் மேற்கு உள்ள மஹாராஷ்டிரா மாநிலத்தில் இடம்பெற்ற கடும் மழை தோற்றுவித்த வெள்ளத்துக்கு இதுவரை குறைந்தது 125 பேர் பலியாகி உள்ளனர். சில பள்ளமான இடங்களில் வீடுகளின் கூரைவரை வெள்ளம் உயர்ந்து உள்ளது. வீதிகள், தண்டவாளங்கள் நீருள் அமிழ்ந்ததால் போக்குவரத்தும் தடைப்பட்டு உள்ளது. குறிப்பாக மும்பாய்-பெங்களூர் பெருவீதியின் பாகங்களும் வெள்ளத்துள் மூழ்கி உள்ளது. அதனால் பல்லாயிரம் பார வாகனங்களும் இடைவெளியில் முடங்கி உள்ளன. சுமார் 40 ஆண்டுகளுக்கு பின் இப்பகுதியில் பெருமழை மொழிந்து உள்ளதாக கூறப்படுகிறது. Mahabaleshwar […]
முன்னாள் அமெரிக்க சனாதிபதி ரம்பை விட்டு அவரின் மனைவி மெலனியா (Melania Trump) மெல்ல விலகுகிறாரா என்று சந்தேகிக்க வைக்கின்றன அவரின் அண்மைக்கால செயற்பாடுகள். ஜூன் மாதம் 14ம் திகதி இடம்பெற்ற ரம்பின் 75வது பிறந்ததின கொண்டாட்டத்தில் மனைவி மெலனியாவை காணவில்லை என்று கூறப்படுகிறது. அது மட்டுமன்றி வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறிய பின் இருவரும் பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து கொண்டதுவும் அறியப்படவில்லை. ரம்ப் புளோரிடாவில் வாழ மெலனியா அடிக்கடி நியூ யார்க் நகரில் காணப்பட்டு […]
தனியார் நிறுவனங்கள் மூலம் இயங்கும் டியூஷன் (tuition) வகுப்புகளுக்கு சீனாவில் பெரும் தடை நடைமுறை செய்யப்பட்டுள்ளது. தனியார் டியூஷன் நிறுவனங்கள் பெரும் பணம் உழைக்கும் நிறுவனங்கள் ஆவதை சீனா தடுக்க முனைகிறது. அரச கல்வி இலவசம் என்றாலும், சிறுவர்களுக்கான படிப்பு செலவு அதிகரிப்பதும் தம்பதிகள் குழந்தைகளை பெறாமைக்கு காரணம் என்று சீன அரசு கருதுகிறது. புதிய சட்டப்படி சனி, ஞாயிறு, விடுமுறை ஆகிய தினங்களில் டியூஷன் வகுப்புக்களை கொண்டிருக்க முற்றாக தடை விதிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் பாடசாலை […]