Mark Milley என்ற அமெரிக்காவின் Chairman of the Joint Chiefs of Staff சீனா அண்மையில் ஏவிய hypersonic ஏவுகணை தொடர்பாக கருத்து கூறுகையில் சீனாவுக்கு இது சோவியத் Sputnik செய்மதி ஏவியதை போன்றது என்று கூறியுள்ளார். 1957ம் ஆண்டு சோவியத் முதலில் Sputnik என்ற செய்மதியை ஏவியபோது அமெரிக்கா கலங்கி இருந்தது. குறிப்பாக Sputnik அமெரிக்கா மேல் சென்றது அமெரிக்காவின் பாதுகாப்புக்கும், பெருமைக்கும் பாதகமாக அமைந்து இருந்தது. சீனாவின் hypersonic ஏவல் மிகவும் கவலைக்கு […]
அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையில் நிலவும் முறுகல் நிலையை தணிக்கும் நோக்கில் அமெரிக்க சனாதிபதி பைடென் சீன ஜனாதிபதியை நேரடியாக சந்திக்க முயன்று வருகிறார். ஆனால் சீன சனாதிபதி அதற்கான சந்தர்ப்பத்தை தவிர்த்து உள்ளார். அதனால் பைடென் தரப்பு விசனம் கொண்டுள்ளது. வரும் சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் இத்தாலியின் ரோம் (Rome) நகரில் இடம்பெறவுள்ள G20 மாநாட்டில் சீன சனாதிபதியை சந்திக்க பைடென் திட்டம் கொண்டிருந்தார். ஆனால் சீன சனாதிபதி சி ஜின் பிங் G20 […]
1967ம் ஆண்டு இஸ்ரேல் பாலஸ்தீனர்களுக்கு உரிய West Bank பகுதியை ஆக்கிரமித்து இருந்தது. அன்றில் இருந்து இன்று வரை ஆக்கிரமித்த பகுதிகளில் யூதர்களுக்கு வீடுகளை கட்டி வழங்கி வருகிறது இஸ்ரேல். அமெரிக்கா இதற்கு பாதுகாப்பு வழங்கி வருகிறது. West Bank பகுதியில் மேலும் 1,300 வீடுகளை யூதர்களுக்கு கட்ட இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை அறிவித்து இருந்தது. இந்த வீடுகளுக்கான கட்டு வேலைகள் நாளை புதன்கிழமை முதல் ஆரம்பமாகும். அமெரிக்காவின் பைடென் அரசு வழமைபோல் ஒரு கவலையை மட்டும் தெரிவித்து […]
ஆபிரிக்க நாடான சூடானில் (Sudan) மீண்டும் அரசியல் குழப்பம் உருவாகியுள்ளது. இராணுவம் அந்நாட்டின் பிரதமரையும், பல அமைச்சர்களையும் இரகசிய இடத்தில் தடுத்து வைத்துள்ளது. வீதிக்கு வந்த ஆர்பாட்டக்காரர்களிலும் குறைந்தது 3 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 80 பேர் காயமடைந்தும் உள்ளனர். பிரதமர் Abdalla Hamdok இராணுவ சதிக்கு ஆதரவு வழங்க மறுத்ததனாலேயே தடுப்பில் வைக்கப்பட்டு உள்ளார்.இராணுவ அதிகாரி ஜெனரல் Abdel Fattah al-Burhan தற்போது நாடு முழுவதும் அவசரகால நிலையை அறிவித்து உள்ளார். அந்நாட்டு பாராளுமன்றமும் […]
சீனாவின் பிரபல பல்கலைக்கழகமான நான்ஜிங் (Nanjing) பல்கலைக்கழகத்தின் ஆய்வுகூடம் ஒன்றில் இன்று ஞாயிறு இடம்பெற்ற வெடிப்பு விபத்துக்கு குறைந்தது 2 பேர் பலியாகியும் 9 பேர் காயமடைந்து உள்ளனர். அமெரிக்காவின் Stanford பல்கலைக்கழகத்தின் Hoover Institution என்ற ஆய்வு அமைப்பு நான்ஜிங் பல்கலைக்கழகத்தை 7 சீன தேசிய பாதுகாப்பு மகன்களில் ஒன்று (one of the seven sons of national defense) என்று விபரித்து இருந்தது. அதாவது இந்த ஆய்வுகூடம் சீன பாதுகாப்பு ஆயுத ஆய்வுகளில் […]
துருக்கியின் சனாதிபதி Recep Tayyip Erdogan அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், பின்லாந்து, டென்மார்க், ஜெர்மனி, நெதர்லாந்து, நியூ சிலாந்து, நோர்வே, சுவீடன் ஆகிய 10 நாடுகளின் தூதுவர்களை உடனடியாக துருக்கியை விட்டு வெளியேற்றுமாறு இன்று சனிக்கிழமை வெளியுறவு அமைச்சுக்கு கட்டளை இட்டுள்ளார். மேற்படி 10 நாடுகளில் 7 நாடுகள் NATO நாடுகள். ஒரு NATO நாடான துருக்கி 7 நேட்டோ நாடுகளின் தூதுவர்களை வெளியேற்றுவது சாதாரண விசயம் அல்ல. ஒரு NATO நாடு மீதான தாக்குதல், எல்லா […]
அமெரிக்காவின் New Mexico மாநிலத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற Rust என்ற ஆங்கில படப்பிடிப்பு ஒன்றின் போது இடம்பெற்ற துப்பாக்கி சூடு ஒன்றுக்கு 42 வயதுடைய Halyna Hutchins என்ற திரைப்பட படப்பிடிப்பாளர் (cinema photographer) பலியாகியதுடன், 48 வயதுடைய Joel Souza என்ற director காயமடைந்தும் உள்ளார். திரைப்பட படப்பிடிப்பு செய்யும் வேளைகளில் துப்பாக்கி சூடுகளின் உண்மைத்தன்மையை காண்பிக்க உண்மை துப்பாக்கிகளை (prop gun) பயன்படுத்துவது உண்டு. உண்மை துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டாலும் குண்டுகள் (bullet) மாற்றத்துக்கு உட்படும். […]
1965 முதல் 1966 வரை இந்தோனேசியாவில் இடதுசாரிகளையும், கம்யூனிஸ்ட்களையும் அந்த நாட்டு இராணுவம் கலவரம் என்ற போர்வையில் படுகொலை செய்து இருந்தது. இந்த படுகொலைகளுக்கு சுமார் 2 முதல் 3 மில்லியன் பேர் பலியாகியதாக கணிப்புகள் கூறுகின்றன. Cold War காலத்தில் இடம்பெற்ற இந்த படுகொலைகளுக்கு அமெரிக்கா, பிரித்தானியா, அஸ்ரேலியா ஆகிய நாடுகள் உதவியும் ஊக்கமும் வழங்கி இருந்தன. இவர்களே சர்வாதிகாரி Suharto வை ஆட்சியில் அமர்த்தினர். தற்போது International People’s Tribunal (IPT) for 1965 […]
இலங்கையில் முருங்கை மரத்தை அடிப்படியாக கொண்ட மருத்துவ தயாரிப்புகளுக்கு கியூபா உதவ முன்வந்துள்ளது என்று இன்று புதன்கிழமை கூறப்பட்டு உள்ளது. கியூபாவின் இலங்கைக்கான தூதுவர் Andres Gonzalez இந்த இந்த அறிவிப்பை செய்துள்ளார். கியூபா முருங்கை குளிசைகள் மற்றும் முருங்கை இலை தூள் போன்றவற்றை ஏற்கனவே தயாரிக்கிறது. ஆனாலும் முருங்கை இந்தியாவில் இருந்தே உலகம் எங்கும் பரவி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. ஆங்கிலத்தில் முருங்கை காயை drumstick என்று சிலர் அழைத்தாலும், பொதுவாக Moringa என்ற தமிழ் […]
1990ம் ஆண்டு ஏவப்பட்ட Lockheed Martin நிறுவன தயாரிப்பான Hubble Telescope பல பில்லியன் light year தொலைவில் உள்ள galaxy களை படம் பிடித்து காட்டியது. தற்போதும் Hubble தனது சேவையை செய்து வருகிறது. ஆனாலும் Hubble சுமார் 31 ஆண்டு பழைய தொழில்நுட்பங்களை கொண்டுள்ளது. பதிலுக்கு வரும் டிசம்பர் மாதம் 18ம் திகதி ஏவப்படவுள்ள James Webb Space Telescope (JWST) தற்கால நுட்பங்களை கொண்ட தொலைநோக்கியாக செயற்படவுள்ளது. JWST தொலைநோக்கி அமெரிக்கா, கனடா, […]