போலாந்துக்கும் (Poland), பெலரூஸுக்கும் (Belarus) இடையிலான எல்லை குதியில் பல்லாயிரம் அகதிகள் குவிந்து வருகின்றனர். இந்த அகதிகளின் குவிவால் போலாந்து, லித்துவேனியா (Lithuania), லத்வியா (Latvia) ஆகிய நாடுகள் NATO நாடுகளின் உதவியை நாடி உள்ளன. நேட்டோ அணியில் அங்கம் கொண்ட மேற்படி மூன்று நாடுகளும் நேட்டோ அணியின் Article 4 ஐ நடைமுறை செய்யவுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதன்படி ஒரு நேட்டோ நாடு ஆபத்தில் இருந்தால் ஏனைய நேட்டோ நாடுகள் ஆபத்தில் உள்ள நாட்டுக்கு உதவ முன்வரவேண்டும். […]
ஏற்கனவே கொள்வனவு செய்ய இணங்கியபடி ரஷ்யாவின் S-400 என்ற ஏவுகணை இந்த ஆண்டின் இறுதிக்குள் இந்தியா வரவுள்ளன என்று ரஷ்ய இராணுவ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். ஆனால் 2017ம் ஆண்டு அமெரிக்கா நடைமுறை செய்த சட்டம் ஒன்றின்படி S-400 ஏவுகணையை கொள்வனவு செய்யும் நாடுகளை அமெரிக்கா தண்டிக்கவேண்டும். அந்த சட்டப்படி இந்தியாவையும் அமெரிக்கா தண்டிக்குமா என்பது இதுவரை அறியப்படவில்லை. அமெரிக்காவின் மேற்படி சட்டம் Countering America’s Adversaries Sanctions Act (CAATSA) என்று அழைக்கப்படும். துருக்கி ஒரு […]
அமெரிக்க சனாதிபதி பைடெனும், சீன சனாதிபதி சீ ஜின் பிங்கும் அமெரிக்க நேரப்படி திங்கள் (சீன நேரப்படி செவ்வாய் காலை) இணையம் மூலம் (virtual meeting) உரையாட உள்ளனர் என்று வெள்ளை மாளிகை கூறியுள்ளது. இரு தரப்புமிடையே தற்போது நிலவி வரும் முறுகல் நிலையை இந்த உரையாடல் தணிக்க முனையலாம் என்று கருதப்படுகிறது. பைடென் ஆட்சிக்கு வந்தபின் மேற்கொள்ளும் ஆழமான உரையாடலாக இது இருக்கும் என்றும் கூறப்படுகிறது. கரோனா, தாய்வான், ஹாங் காங், வர்த்தகம் போன்ற பல […]
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் கடந்த சில தினங்களாக வளி மாசு உச்ச நிலையில் உள்ளது. இங்கு தற்போது வளி மாசு சுட்டி (AQI அல்லது Air Quality Index) 556 ஆக உள்ளது. AQI சுட்டி 0 முதல் 500 வரையான அளவிலேயே குறிப்பிடப்படும். இந்த அளவீட்டையே மீறி உள்ளது டெல்லி. மிக சுத்தமான வளி 0 சுட்டியை கொண்டிருக்கும். இதனுடன் ஒப்பிடுகையில் கனடாவின் Toronto நகரில் இன்று AQI 3 மட்டுமே. இந்த மாசால் டெல்லியில் […]
உலகின் மிக பெரு நிறுவனங்கள் மூன்று தம்மை சிறு நிறுவனங்களாக துண்டாட உள்ளதாக கூறியுள்ளன. ஜப்பானின் Toshiba, அமெரிக்காவின் General Electric (GE) மற்றும் Johnson & Johnson ஆகிய நிறுவனங்களே தம்மை சிறு நிறுவனங்களாக பிரிக்கவுள்ளன. ஜப்பானின் Toshiba நிறுவனம் 3 சிறிய நிறுவனங்களாக பிரிக்கப்படும். எரிபொருள் மற்றும் கட்டுமான வர்த்தக பிரிவு ஒரு தனி நிறுவனமாகவும், semiconductors பிரிவு இன்னோர் தனி நிறுவனமாகவும், devices மற்றும் storage பிரிவு மூன்றாவது தனி நிறுவனமாகவும் பிரிக்கப்படும். […]
தாய்லாந்தின் அரசர் King Maha Vajiralongkorn, வயது 69, மீண்டும் இரகசியமாக ஜெர்மனி சென்று இனிய வாழ்வை தொடர ஆரம்பித்து உள்ளார் என்கிறது ஜெர்மனியின் Bild என்ற பத்திரிகை. இவர் தன்னுடன் 30 poodle வகை வளர்ப்பு நாய்களையும் எடுத்து சென்றுள்ளார் என்று கூறப்படுகிறது. இவருடன் 250 உதவியாளரும் இந்த கிழமையின் ஆரம்பத்தில் ஜெர்மனி சென்று உள்ளனர் என்று கருதப்படுகிறது. தாய்லாந்தில் இருந்து ஜெர்மனி செல்வோர் தம்மை குறைந்தது 5 தினங்கள் தனிமைப்படுத்துவது அவசியம் என்ற காரணத்தால் […]
ஜப்பானில் பல நற்பண்புகள் உண்டு. அதில் ஒன்று நேரம் தவறாமை. அண்மையில் ரயில் சாரதி ஒருவர் கடமையை நிறைவு செய்ய 1 நிமிடம் பிந்தியதால் அவருக்கு 56 ஜப்பானிய யென் ($0.49) தண்டம் விதிக்கப்பட்டு உள்ளது. அந்த தண்டத்தை எதிர்த்து சாரதி நீதிமன்றம் செல்கிறார். நீதிமன்றம் செல்லும் சாரதி 2.2 மில்லியன் யென் ($19,407) நட்டஈடு பெற முனைகிறார். JR West என்ற ரயில் சேவையில் பணிபுரியும் மேற்படி சாரதி பயணிகள் அற்ற ரயில் ஒன்றை ஒரு […]
அமெரிக்காவின் யுத்த கப்பல்களின் அமைப்பை கொண்ட பல முழு அளவிலான பொய் பிரதிகள் (mock-ups) சீனாவில் அமைக்கப்பட்டு உள்ளமையை Maxar Technologies என்ற அமெரிக்க அமைப்பு தனது செய்மதி மூலம் அறிந்துள்ளது. இவை சீனாவில் வடமேற்கே உள்ள Xinjiang ப்குதி பாலைவனத்தில் அமைக்கப்பட்டு உள்ளன. சீனா தனது விமானம்தாங்கி கப்பல்களை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்ட DF-12D என்ற ஏவுகணைகளை பரிசோதனை செய்யவே இந்த பொய் பிரதி கப்பல்களை அமைத்துள்ளதாக அமெரிக்க கருதுகிறது. இவற்றில் ஒரு பொய் […]
இஸ்லாமியர் மற்றைய நாடுகளுக்கு பரவும் வேளையில், இஸ்லாமியர் அல்லாதோர் (non-Muslims) UAE போன்ற நாடுகளுக்கும் செல்வதால் இஸ்லாமிய நாடுகள் இஸ்லாமியர் அல்லாதோருக்கான சட்டங்களை உருவாக்க ஆரம்பித்து உள்ளன. இதற்கு அமைய UAE பெரும் சட்ட மாற்றங்ககளை அறிவித்து உள்ளது. அபுதாபியில் (Abu Dhabi) நடைமுறைக்கு வரும் இந்த புதிய சட்டத்தில் இஸ்லாமியர் அல்லதோரின் விவாகரத்துக்கள் விதிமுறை செய்யப்படுகிறது. இவர்களுக்கான விவாகரத்து விதிமுறைகள் இஸ்லாமிய முறைப்படி அல்லாது, பொது முறைப்படி அமையும். அதுமட்டுமன்றி விவாகம் செய்யாதோர் (unmarried) பொது […]
கனடாவின் British Columbia மாநிலத்தில் உள்ள வன்கூவர் நகர அரசுக்கு அங்கு குடியிருக்கும் ஒருவர் தனது C$47,700 கட்டணத்தை C$20 டாலர் தாள்கள் மூலம் செலுத்தி உள்ளார். இவர் செலுத்திய தாள்களின் எடை 2.2 kg. இது 2014ம் ஆண்டில் இடம்பெற்ற சம்பவம் என்றாலும் தற்போதே இந்த உண்மை பகிரங்கத்துக்கு வந்துள்ளது. இது மட்டுமன்றி பலர் அங்கு காசோலை போன்றவற்றை பயன்படுத்தாது, தாள் மூலம் தமது கட்டணங்களை செலுத்தி உள்ளனர். 2017ம் ஆண்டு ஒருவர் C$44,463 கட்டணத்தை […]