பைடெனின் சனநாயக அமர்வு, இலங்கைக்கு அழைப்பில்லை

பைடெனின் சனநாயக அமர்வு, இலங்கைக்கு அழைப்பில்லை

டிசம்பர் மாதம் 9ம், 10ம் திகதிகளில் அமெரிக்க சனாதிபதி பைடென் Summits for Democracy என்ற அமர்வு ஒன்றை இணையம் மூலம் செய்யவுள்ளார். இந்த அமர்வுக்கு சுமார் 110 நாடுகளும், தாய்வான் போன்ற நாடுகள் அல்லாத அரசுகளும் பைடென் அரசால் அழைக்கப்பட்டு உள்ளன. அனால் இலங்கைக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இலங்கை மட்டுமன்றி, பங்களாதேசமும் அழைக்கப்படவில்லை.ஆனால் இந்தியாவும், பாகிஸ்தானும் அழைக்கப்பட்டு உள்ளன. அமெரிக்காவை தளமாக கொண்ட Freedom House என்ற சனநாயகத்தை அளவீடு செய்யும் அமைப்பு பாகிஸ்தானின் ஜனநாயகத்துக்கு […]

சீன, ரஷ்ய AI அறிவு வளர்கின்றன, பிரித்தானிய MI6 எச்சரிக்கை

சீன, ரஷ்ய AI அறிவு வளர்கின்றன, பிரித்தானிய MI6 எச்சரிக்கை

சீனாவினதும், ரஷ்யாவினதும் Artificial Intelligence (AI) அறிவு வேகமாக வளர்கின்றன என்று பிரித்தானியாவின் MI6 என்ற உளவு அமைப்பின் (Secret Intelligence Service) தலைவர் Richard Moore கூறியுள்ளார். இவரின் கூற்று ஏற்கனவே அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்த கூற்றுக்களுடன் இணங்கி உள்ளது. சீனவினதும், ரஷ்யாவினதும் வளர்ச்சி அடுத்த 10 ஆண்டுகளில் உலக அரசியலை பெருமளவில் மாற்றி அமைக்கலாம் என்றும் Moore தெரிவித்து உள்ளார். குறிப்பாக இந்த இரு நாடுகளின் quantum engineering, engineering biology, பெருமளவு தரவுகள் […]

இன்றில் இருந்து இராணியை கைவிடுகிறது Barbados

இன்றில் இருந்து இராணியை கைவிடுகிறது Barbados

பார்பேடோஸ் (Barbados) என்ற சிறிய Caribbean நாடும் இன்றில் இருந்து இராணியின் தலைமையை கைவிடுகிறது. இதுவரை 16 நாடுகள் இராணியை தமது நாட்டின் தலைமையாக கொண்டிருந்தாலும், இன்றிலிருந்து 15 நாடுகளே இராணியை தமது தலைமையாக கொண்டிருக்கும். நாளை செவ்வாய் அந்த நாட்டின் 56ஆவது சுதந்திர தினமாகும். 1620ம் ஆண்டு முதல் இது பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் இருந்தது. Barbados 55 ஆண்டுகளுக்கு முன் சுதந்திரம் அடைந்து இருந்தாலும், இன்றுவரை பிரித்தானிய இராணியே அந்நாட்டின் சம்பிரதாய தலைமை ஆக இருந்தார். […]

மேடை நகைச்சுவையை கைவிடும் இந்திய இஸ்லாமியர்

மேடை நகைச்சுவையை கைவிடும் இந்திய இஸ்லாமியர்

Munawar Faruqui என்ற மேடை நகைச்சுவை செய்து உழைப்பவர் (stand-up comedian), வயது 29, இந்துவாதிகளின் மிரட்டல்கள், தொல்லைகள் காரணமாக தனது தொழிலை கைவிடுவதாக கூறியுள்ளார். இவரின் நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ள மண்டபங்களை பா.ஜ. ஆதரவு இந்துவாதிகள் மிரட்டி, தாக்குவதால் மண்டபங்களும் நிகழ்ச்சிகளை இரத்து செய்துள்ளன. கடந்த 2 மாதங்களில் குறைந்தது இவரின் 12 நிகவுகள் இரத்து செய்யப்பட்டு உள்ளன. நேற்று ஞாயிறு கர்நாடகா மாநிலத்து பெங்களூர் நகரில் இடம்பெறவிருந்த இவரின் நகைசுவை நிகழ்வும் இரத்து செய்யப்பட்டு உள்ளது. […]

சைக்கிளில் பிரசவத்துக்கு சென்ற நியூசிலாந்து பா. உ.

சைக்கிளில் பிரசவத்துக்கு சென்ற நியூசிலாந்து பா. உ.

Julie Anne Genter என்ற நியூசிலாந்து பாராளுமன்ற உறுப்பினர், வயது 41, தனது இரண்டாம் பிரசவத்துக்கு வைத்தியசாலை நோக்கி சைக்கிளில் சென்றுள்ளார். இன்று ஞாயிறு அதிகாலை 2:00 மணிக்கு சைக்கிளில் தனது பயணத்தை ஆரம்பித்த இவர் 3:04 மணிக்கு தனது குழந்தையை பெற்று உள்ளார். Greens கட்சி உறுப்பினரான இவரின் செயல் சூழல் மீது அக்கறை கொண்ட இவரின் கட்சி கொள்கைக்கு சாதகமாக அமைந்து உள்ளது. நியூசிலாந்து அரசியல் உறுப்பினர்கள் பொதுவாக ஆடம்பரம் அற்றவர்கள். இவர்கள் தமது […]

சீனாவில் மதிப்பை இழக்கும் மேற்கின் பட்டதாரிகள்

சீனாவில் மதிப்பை இழக்கும் மேற்கின் பட்டதாரிகள்

ஒரு காலத்தில் சீனர் அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளுக்கு சென்று அங்குள்ள பல்கலைக்கழகங்களில் பட்டம் பெறுவது சீனாவில் வேலைவாய்ப்பை பெறும் சந்தர்ப்பத்தை பெருமளவு அதிகரித்து இருந்தது. ஆனால் அந்த நிலை தற்போது வேகமாக அழிந்து வருகிறது. பதிலுக்கு சீன நிறுவனங்கள் சீன பட்டதாரிகள் மீது நாட்டம் கொள்ள ஆரம்பித்து உள்ளனர். 2019ம் ஆண்டு 703,500 சீனர் வெளிநாடுகள் சென்று பல்கலைக்கழகங்களில் கற்று உள்ளனர். அதில் சுமார் 100,000 மாணவர் பிரித்தானியா சென்று கற்றுள்ளனர். ஆனாலும் உள்ளூரில் பட்டம் […]

தெற்கு ஆபிரிக்க நாடுகளின் விமானங்களுக்கு தடை

தெற்கு ஆபிரிக்க நாடுகளின் விமானங்களுக்கு தடை

அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பலவும் தெற்கு ஆபிரிக்க நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை விதித்து உள்ளன. தெற்கு ஆபிரிக்க நாடுகளில் பரவும்  Omicron என புதிய வகை கரோனா வைரஸே இந்த தடைக்கு காரணம். இந்த புதிய வகை வைரஸ் முதலில் தென் ஆபிரிக்காவில் காணப்பட்டது. பின்னர் Botswana, பெல்ஜியம், இஸ்ரேல், ஹாங் காங் ஆகிய இடங்களுக்கும் பரவி உள்ளது. மொத்தமாக சில பத்து நோயாளிகளே இதுவரை இவ்வகை தொற்றை கொண்டுள்ளமை அறியப்பட்டு […]

சீன-தாய்வான் முறுகலால் Solomon தீவுகளில் வன்முறை

சீன-தாய்வான் முறுகலால் Solomon தீவுகளில் வன்முறை

சிறிய, வறிய நாடுகளின் உள்நாட்டு கலவரங்களை வல்லரசுகள் தமது அரசியல் நகர்வுகளுக்கு பயன்படுத்த எரியும் தீயை ஊதி வளர்ப்பது உண்டு. அஸ்ரேலியாவுக்கு வடமேற்கே உள்ள Solomon தீவுகளிலும் (Solomon Islands) அவ்வகை வல்லரசுகள் தூண்டும் கலவரங்கள் மீண்டும் தலை தூக்கி உள்ளன. இன்று வெள்ளிக்கிழமை அஸ்ரேலியா தனது படைகளில் சிறு தொகையை அந்நாடு தலைநகர் Honiara நகரில் உள்ள விமான நிலையம் மற்றும் துறைமுகத்தை பாதுகாக்க அனுப்பி உள்ளது. சுமார் 100 பேர் கொண்ட இந்த படை […]

ரஷ்யாவின் சைபீரிய சுரங்கத்தில் 52 பேர் பலி

ரஷ்யாவின் சைபீரிய சுரங்கத்தில் 52 பேர் பலி

ரஷ்யாவின் சைபீரியாவில் உள்ள நிலக்கரி சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்துக்கு குறைந்தது 52 சுரங்க தொழிலாளர் பலியாகி உள்ளனர். விபத்தில் இறந்தோரை காப்பாற்ற சென்ற அணியிலும் 6 பேர் மரணித்து உள்ளனர். பாதுகாப்புக்கு சென்றோர் கொண்டிருந்த கொள்கலன்களில் (oxygen tank) இருந்த oxygen அளவு குறைந்ததே அவர்களின் மரணத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது. மொஸ்கோவில் இருந்து சுமார் 3,500 km கிழக்கே உள்ள Listvyazhnaya என்ற இந்த சுரங்கத்தில் வியாழக்கிழமை ஏற்பட்ட விபத்துக்கு மேலும் 49 […]

ஆங்கில கால்வாயில் 27 அகதிகள் பலி

ஆங்கில கால்வாயில் 27 அகதிகள் பலி

பிரான்சில் இருந்து பிரித்தானியா நோக்கி சென்ற அகதிகள் வள்ளம் ஒன்று கவிழ்ந்ததால் குறைந்தது 27 அகதிகள் பலியாகி உள்ளனர். இன்று புதன் காலை பிரான்சின் Calais பகுதிக்கு அண்மையிலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. பிரெஞ்சு மற்றும் பிரித்தானிய படைகளும் மீனவரும் தேடுதலில் ஈடுபட்டு உள்ளனர். விபத்தின் பின் சிலர் உயிருடன் மீட்கப்பட்டும் உள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது. இது winter காலமாகையால் கால்வாய் நீர் மிகவும் குளிராக உள்ளது. குளிர் நீரில் நீண்ட நேரம் இருப்பது உயிருக்கு ஆபத்தானது. […]