பைடென், பூட்டின் இன்று அவசர இணைய உரையாடல்

பைடென், பூட்டின் இன்று அவசர இணைய உரையாடல்

அமெரிக்க சனாதிபதி பைடெனும் ரஷ்ய சனாதிபதி பூட்டினும் அமெரிக்க நேரப்படி இன்று செவ்வாய் இணையம் மூலம் சுமார் 2 மணிநேர உரையாடல் ஒன்றை செய்தனர். அமெரிக்கா தற்போது சீன நெருக்கடியில் இருக்கையில் ரஷ்யாவின் நெருக்கடியை தவிர்க்க விரும்புகிறது. இந்நிலையில் தற்போது ரஷ்யா தனது படைகளை யுக்கிரைன் எல்லையில் குவிப்பதால் விசனம் கொண்டுள்ளது அமெரிக்கா. இன்றைய உரையாடல் விபரங்கள், இணக்கங்கள் இதுவரை பகிரங்கம் செய்யப்படவில்லை. தற்போது ரஷ்யா யுக்கிரைன் எல்லையில் குவித்துள்ள சுமார் 90,000 படைகளை அகற்றுமாறு அமெரிக்க […]

சீன ஒலிம்பிக்கை அமெரிக்கா அரசியல் புறக்கணிப்பு

சீன ஒலிம்பிக்கை அமெரிக்கா அரசியல் புறக்கணிப்பு

அடுத்த ஆண்டு பெய்ஜிங்கில் இடம்பெறவுள்ள 2002 Winter Olympic போட்டியை அரசியல் அளவில் புறக்கணிக்க அமெரிக்கா தீர்மானித்து உள்ளது. இது வெறும் அரசியல் நாடகமே. அமெரிக்க அரசியவாதிகள் பெய்ஜிங் செல்லாவிடினும் அமெரிக்க போட்டியாளர் பெய்ஜிங் சென்று போட்டிகளில் பங்கு கொள்வர். இந்த புறக்கணிப்பு ஒன்றும் புதியது அல்ல. நல்ல உறவு கொண்ட இரண்டு நாடுகளுக்கு இடையில் தோன்றிய புதியதொரு பிளவு அல்ல இது. ஏற்கனவே சீன எதிர்ப்பு வசைபாடும் அமெரிக்க அரசியல்வாதிகள் மேலும் ஒரு வசைபாடலையே செய்கின்றனர். […]

Zoom அமர்வு மூலம் 900 ஊழியர் வேலையில் இருந்து நீக்கம்

Zoom அமர்வு மூலம் 900 ஊழியர் வேலையில் இருந்து நீக்கம்

Better.com என்ற வீட்டு அடமான நிறுவனத்தின் (online mortgage company) தலைமை அதிகாரி (CEO) Vishal Garg தனது 900 ஊழியர்களை Zoom அமர்வுக்கு அழைத்து 900 பேரும் வேலைவாய்ப்பை உடனடியாக இழப்பதாக கூறியுள்ளார். அமர்வுக்கு அழைக்கப்பட்டவர்களிடம் “if you are on this call, you are part of the unlucky group that being laid off” என்றும் “your employment here is terminated effective immediately” என்றும் கூறியுள்ளார் அந்த […]

யாருக்கு சொல்லியழ 13: ஒரே மட்டையில் ஊறிய குட்டைகள்

யாருக்கு சொல்லியழ 13: ஒரே மட்டையில் ஊறிய குட்டைகள்

(இளவழகன், 2021-12-06) அண்மையில் இலங்கை சிங்களவர் ஒருவர் பாகிஸ்தானில் தாக்கி, எரியூட்டப்பட்டு இருந்ததை சில பாகிஸ்தான் இஸ்லாமியர் உட்பட பலரும் கண்டித்து இருந்தனர். பாகிஸ்தானின் தலைமை இராணுவ அதிகாரியும் இதை “cold-blooded murder”என்று அழைத்திருந்தார். இவ்வகை செயற்பாடுகள் பாகிஸ்தானில் மட்டும் நிகழ்பவை அல்ல. பாகிஸ்தான், இந்தியா, இலங்கை எங்கும் இவ்வகை செயற்பாடுகள் நிகழ்ந்துள்ளன. ஆபிரிக்க நாடுகளும் இதற்கு விதிவிலக்கல்ல. 1983ம் ஆண்டு இனகலவர காலத்தில் புறக்கோட்டை பகுதியில் தமிழ் குடும்பம் ஒன்று அவர்களின் கார் ஒன்றுள் வைத்து […]

இந்திய இராணுவ தாக்குதலுக்கு 13 பொதுமக்கள் பலி

இந்திய இராணுவ தாக்குதலுக்கு 13 பொதுமக்கள் பலி

இந்தியாவின் கிழக்கு மாநிலமான நாகலாந்து பகுதில் உள்ள Oting என்ற கிராமத்தில் சனிக்கிழமை இந்திய இராணுவம் தவறாக செய்த தாக்குதல் ஒன்றுக்கு 13 பொதுமக்களும், 1 இராணுவத்தினரும் பலியாகி உள்ளனர். சுரங்கம் ஒன்றில் பணியாற்றும் ஊழியர் வீடு திரும்புகையில் அவர்களை நாகலாந்து ஆயுத குழு என்று தவறாக கருதியே இந்திய இராணுவம் மறைந்து இருந்து தாக்கி உள்ளது. இந்திய, பர்மா எல்லையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்று உள்ளது. இராணுவத்தின் தாக்குதலுக்கு முதலில் 6 பேர் பலியாகி இருந்தனர். […]

இந்தோனேசிய எரிமலை குமுறலுக்கு 13 பேர் பலி

இந்தோனேசிய எரிமலை குமுறலுக்கு 13 பேர் பலி

இந்தோனேசியாவின் Semeru என்ற எரிமலை சனிக்கிழமை முதல் மீண்டும் குமுற ஆரம்பித்து உள்ளது. உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை பிற்பகல் 2:30 மணியளவில் ஆரம்பித்த இந்த குமுறலுக்கு இதுவரை குறைந்தது 13 பேர் பலியாகி உள்ளனர். குறைந்தது 11 கிராமங்கள் எரிமலை சாம்பலால் மூடப்பட்டுள்ளன. எரிமலை உருவாக்கும் வாயு, சாம்பல் ஆகியன உயிர்களுக்கு ஆபத்தானவை. அதனால் மலையில் இருந்து 5 km தூரம் வரை உள்ள மக்கள் வேறு இடங்களுக்கு நகர்ந்து உள்ளனர். இப்பகுதியில் 15,000 மீட்டர் (50,000 […]

ஒரு மாதத்தில் Bitcoin பெறுமதி $26,000 ஆல் வீழ்ச்சி

ஒரு மாதத்தில் Bitcoin பெறுமதி $26,000 ஆல் வீழ்ச்சி

சென்ற ஜூன் மாதம் 9ம் திகதி Bitcoin ஒன்றின் பெறுமதி சுமார் $69,000 ஆக இருந்தது. ஆனால் கடந்த 24 மணி நேரத்தில் Bitcoin ஒன்றின் பெறுமதி சுமார் $43,000 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. அதன்படி Bitcoin ஒன்றின் பெறுமதி கடந்த ஒரு மாதத்தில் சுமார் 38% ஆல் வீழ்ச்சி அடைந்துள்ளது. குறிப்பாக கடந்த இரண்டு தினங்களில் Bitcoin பாரிய வீழ்ச்சியை அடைந்துள்ளது. வெள்ளிக்கிழமை சுமார் 13% ஆலும் , சனிக்கிழமை மேலும் 17% ஆலும் வீழ்ச்சி […]

இலங்கை சிங்களவரை பாகிஸ்தானில் எரித்து கொலை

இலங்கை சிங்களவரை பாகிஸ்தானில் எரித்து கொலை

இஸ்லாமிய வன்முறை கூட்டம் ஒன்று பிரியந்த குமார என்ற இலங்கை சிங்களவரை தாக்கி, எரித்து கொலை செய்துள்ளது. கொலை செய்யப்பட்டவர் இஸ்லாமிய மதத்தை இழிவு செய்துள்ளார் என்பதே கொலை கூட்டம் கூறிய காரணம். பிரியந்த குமார என்ற இலங்கையர் பாகிஸ்தானில் உள்ள விளையாட்டு உபகரணம் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று manager பதவியில் இருந்தவர். இவர் இஸ்லாமிய மதத்தை இழிவு செய்தார் என்று அங்கு தொழில் செய்யும் சிலர் கூறியுள்ளனர். அதன் பின்னரே வன்முறை கும்பல் அங்கு வந்து […]

சீனாவின் தீவுப்பகுதி சூரிய மின் திட்டம் இடைநிறுத்தம்

சீனாவின் தீவுப்பகுதி சூரிய மின் திட்டம் இடைநிறுத்தம்

சீனாவின் Sino Soar என்ற நிறுவனம் இலங்கையின் வடக்கே உள்ள நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு ஆகிய மூன்று  தீவுகளில் அமைக்கவிருந்த சூரிய மின் உற்பத்தி கட்டுமானம் நிறுத்தப்படுகிறது. இந்தியா விசனம் தெரிவித்தாலேயே இந்த திட்டம் கைவிடப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் 18ம் திகதி இலங்கை அரசு Sino Soar நிறுவனத்துக்கு இந்த உரிமையை வழங்கி இருந்தது. இந்த திட்டம் Sinosoar-Etechwin என்ற கூட்டு முயற்சியாகவே நடைமுறை செய்யப்பட இருந்தது. பதிலுக்கு இந்த நிறுவனம் மாலைதீவில் சூரிய மின்னை […]

கேள்விக்குறியாகும் கமலா ஹாரிஸின் அரசியல் எதிர்காலம்

கேள்விக்குறியாகும் கமலா ஹாரிஸின் அரசியல் எதிர்காலம்

அமெரிக்க உதவி சனாதிபதி கமலா ஹாரிஸின் அரசியல் எதிர்காலம் மெல்ல மங்கி வருகிறது. சனாதிபதி பைடெனின் ஆதரவும் மங்கி வந்தாலும், அவரின் வயது காரணமாக அவரின் அரசியல் எதிர்காலத்தையிட்டு எவரும் அதிகம் அக்கறை கொள்ளவில்லை. ஆனால் கமலா ஹாரிசின் நிலை அவ்வாறு அல்ல. ஹாரிஸ் ஆட்சிக்கு வந்து ஒரு ஆண்டுக்கு முடிவதற்குள் அவரின் இரண்டு பிரதான அதிகாரிகள் தமது பதவிகளை விட்டு விலகி உள்ளனர். Ashley Etienne என்ற communication director இரண்டு கிழமைகளுக்கு முன்னர் தனது […]