தனது கடன்களுக்கு வட்டி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டு இன்று புதன் முறியும் நிலையில் இருந்து அமெரிக்கா இறுதி நேரத்தில் தப்பி உள்ளது. நேற்று செவ்வாய் இரவு காங்கிரஸ் அமெரிக்கா சட்டப்படி பெறக்கூடிய அதிகூடிய கடன் எல்லையை மேலும் $2.5 டிரில்லியனால் அதிகரித்து உள்ளதாலேயே அமெரிக்கா முறிவில் இருந்து தப்பி உள்ளது. இந்த அதிகரிப்பால் அமெரிக்கா 2023ம் ஆண்டு முடியும்வரை முறிவு நிலைக்கு தள்ளப்படாது இருக்கும். கடன் பெறக்கூடிய அளவு அதிகரிக்கப்படாவிடின் டிசம்பர் மாதம் 15ம் திகதியில் […]
அமெரிக்காவிடம் இருந்து நவீன நுட்பங்களை கொண்ட F-35 வகை யுத்த விமானங்கள் 50 ஐ UAE கொள்வனவு செய்ய இருந்தது. ஆனால் இன்று செவ்வாய் தாம் அந்த உடன்படிக்கையில் இருந்து வெளியேறுவதாக UAE கூறியுள்ளது. அமெரிக்காவிடம் இருந்து $23 பில்லியனுக்கு UAE செய்யவிருந்த கொள்வனவுகளில் மேற்படி 50 விமானங்களும் அடங்கி இருந்தன. அமெரிக்காவின் Lockheed Martin என்ற நிறுவனம் தயாரிக்கும் F-35 யுத்த விமானங்களே அமெரிக்காவிடம் தற்போது உள்ள சிறந்த விமானங்கள் ஆகும். UAE சீனாவுடன் நெருக்கமான […]
இந்தியாவின் COVID தடுப்பு மருந்து தயாரிக்கும் நிறுவனமான Serum Institute of India தனது Covishield தடுப்பு மருந்து (இந்திய தயாரிப்பான AstraZeneca மருந்து) தயாரிப்பை 50% ஆல் குறைக்கவுள்ளதாக கூறியுள்ளது. இந்தியாவின் தேவைக்கு போதுமான மருந்து கைவசம் உள்ளதாலேயே மேலதிக தயாரிப்பை குறைப்பதாக கூறுகிறது Serum. இந்தியாவில் சுமார் 950 மில்லியன் பேர் COVID தடுப்பு ஊசிக்கு தகுதி உடையோராக உள்ளனர். அவர்களில் 816 மில்லியன் பேர் குறைந்தது 1 ஊசியாவது பெற்று உள்ளனர். அத்துடன் […]
ரஷ்யா மீதான NATO அணியின் மிரட்டல் தொடர்ந்தால், ரஷ்யா தனது நடுத்தர தூர அணு ஏவுகணைகளை (intermediate-range nuclear missiles) NATO நாடுகள் நோக்கி நகர்த்தும் என்று இன்று திங்கள் கூறியுள்ளது. இந்த எச்சரிக்கையை ரஷ்யாவின் உதவி வெளியுறவு அமைச்சர் Sergei Ryabkov தொடுத்து உள்ளார். யுக்கிரைன் NATO அணியில் இணைவதை ரஷ்யா எந்த வழி மூலமும் தடுக்க முனைகிறது. இந்த விசயத்துக்கு மேற்கு நாடுகள் பொருளாதார தடைகளை மட்டுமே பயன்படுத்த உள்ளதாக கூறினாலும், ரஷ்யா இராணுவ […]
அமெரிக்காவின் NewFortress நிறுவனம் இலங்கையில் அமைக்கவிருந்த LNG எரிவாயு திட்டம் முறியலாம் என்று கூறப்படுகிறது. எதிர்கட்சிகள் மட்டுமன்றி ஆளும் கூட்டணியின் கட்சிகள் சிலவும் கூடவே மேற்படி திட்டத்தை எதிர்க்கின்றனர். தொழிலாளர் சங்கங்களும் எதிர்க்கின்றன. சஜித் பிரேமதாச தலைமையிலான எதிர்க்கட்சியும், JVPயும் இந்த திட்டத்துக்கு வன்மையான எதிர்ப்பு தெரிவிக்கின்றன. தாம் ஆட்சிக்கு வந்தால் இந்த திட்ட ஒப்பந்தங்களை கைவிடுவோம் என்று கூறியுள்ளார் சஜித் பிரேமதாச. NewFortress இந்த மிரட்டலை விரும்பவில்லை. சஜித் பிரேமதாச ஆட்சிக்கு வந்தால் நிலைமையை சாதகமாக […]
அமெரிக்காவின் Arkansas, Illinois, Kentucky, Missouri, Mississippi, Tennessee ஆகிய 6 மாநிலங்களில் நிலவிய பாதகமான காலநிலை காரணமாக வெள்ளிக்கிழமை இரவு குறைந்தது 30 tornadoes (அல்லது twister) உருவாகி, Kentucky மாநிலத்தில் மட்டும் குறைந்தது 50 பேர் பலியாகி உள்ளனர். Kentucky மாநிலத்தில் உள்ள Mayfield என்ற நகரில் உள்ள Mayfield Consumer Product என்ற மெழுகுவர்த்தி தொழிற்சாலை ஒன்றில் இரவு சுமார் 110 பேர் கடமையில் ஈடுபட்டு இருந்தனர். அந்த தொழிற்சாலையை ஒரு tornado […]
அமெரிக்காவுக்கு தெற்கே உள்ள நாடான மெக்ஸிக்கோவில் இரகசியமாக அகதிகளை ஏற்றி சென்ற பாரவாகனம் (truck) ஒன்று வியாழன் விபத்துக்கு உள்ளானதால் குறைந்தது 55 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 105 பேர் படுகாயம் அடைந்தும் உள்ளனர். இவர்கள் அமெரிக்கா நோக்கி செல்லும் Honduras, Ecuador, Nicaragua போன்ற மத்திய அமெரிக்க நாட்டவர் என்று கூறப்படுகிறது. மெக்ஸிக்கோவின் எல்லை நாடான குவாட்டமாலாவில் இருந்தே இவர்கள் வந்திருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. விபத்து எல்லைக்கு அண்மையில் உள்ள Chiapas என்ற மெக்ஸிக்கோ […]
அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையில் மீண்டும் முறுகல் நிலை தோன்றியுள்ளது. அண்மையில் ரஷ்யா சுமார் 90,000 படையினரை யுக்கிரைன் எல்லைக்கு நகர்த்தி இருந்தது. ரஷ்யா மீண்டும் யுக்கிரைன் உள்ளே நுழைய திட்டமிடுகிறது என்று கருதிய மேற்கு நாடுகள் எச்சரிகைகளை விடுத்தன. குறிப்பாக அமெரிக்க சனாதிபதி பைடென் ரஷ்யா சனாதிபதி பூட்டினுடன் இணையம் மூலம் உரையாடி தனது விசனத்தை தெரிவித்து உள்ளார். ரஷ்யா யுக்கிரைனுள் நுழைந்தால் ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்றும் பைடென் கூறியுள்ளார். பதிலுக்கு […]
பங்களாதேச பல்கலைக்கழக மாணவன் ஒருவனை அடித்து கொலை செய்த அதே பல்கலைக்கழக 20 மாணவருக்கு இன்று நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியுள்ளது. மேலும் 5 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டு உள்ளது. Abrar Fahad என்ற 21 வயது Bangladesh University of Engineering and Technology மாணவன் 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் திகதி அதே பல்கலைக்கழக மாணவர்களால் அடித்து கொலை செய்யப்பட்டார். கொலை செய்யப்பட்ட மாணவன் எதிர்க்கட்சி ஆதரவாளன். கொலையை செய்தவர்கள் ஆளும் […]
இந்திய இராணுவத்துக்கு சொந்தமான Mi-17V5 வகை ஹெலி ஒன்று புதன்கிழமை காலை தமிழ்நாட்டு குன்னூர் பகுதியில் வீழ்ந்து விபத்துக்கு உள்ளாகியது. அந்த விபத்துக்கு இந்திய உயர் இராணுவ அதிகாரியான (Chief of Defense Staff) ஜெனரல் Bipin Rawat, வயது 63, அவரின் மனைவி உட்பட மொத்தம் 14 பேர் பலியாகி உள்ளனர். Varun Singh என்ற ஒருவர் மட்டும் உயிர் தப்பி உள்ளார். இந்த ஹெலி சூலூர் என்ற இடத்து இராணுவ தளம் ஒன்றில் இருந்து […]