அம்பானி நிறுவனம் திரட்டிய $4 பில்லியன் வெளிநாட்டு பணம்

அம்பானி நிறுவனம் திரட்டிய $4 பில்லியன் வெளிநாட்டு பணம்

இந்திய வர்த்தகர் அம்பானியின் தலைமையில் இயங்கும் Reliance Industries என்ற நிறுவனம் bond மூலம் $4 பில்லியன் வெளிநாட்டு முதலீடுகளை திரட்டி உள்ளது. இந்திய நிறுவனம் ஒன்று bond மூலம் பெற்ற மிகக்கூடிய தொகை இதுவே. இந்த bond சிங்கப்பூர் stock exchange மூலமே விற்பனை செய்யப்படுகிறது. இந்த bond களின் 53% த்தை ஆசியரும், 33% த்தை அமெரிக்கரும், 14% த்தை ஐரோப்பியரும் கொள்வனவு செய்து உள்ளனர். மேற்படி bond கொள்வனவை செய்த நிறுவனங்களின் பெயர்கள் […]

கசகஸ்தானின் அரச எதிர்ப்பு வன்முறை, பலர் பலி

கசகஸ்தானின் அரச எதிர்ப்பு வன்முறை, பலர் பலி

கசகஸ்தான் என்ற மத்திய ஆசிய நாட்டில் அரசுக்கு எதிரான வன்முறைக்கு பலர் பலியாகி உள்ளனர். எரிபொருள் விலை உயர்வுக்கு எதிரான போராட்டம் இறுதியில் வன்முறையை அடைந்துள்ளது. பலியானோரில் 12 போலீசாரும் அடங்குவர். அரசுக்கு உதவும் நோக்கில் ரஷ்ய படைகள் கசகஸ்தான் நகரான Almaty யை அடைந்துள்ளன. ரஷ்ய படை நகர்வை ஐரோப்பிய ஒன்றியம் கண்டித்து உள்ளது. சோவியத்தில் அங்கம் கொண்டிருந்த கசகஸ்தான் தற்போது ரஷ்யாவின் இரண்டாவது பெரிய நட்பு நாடு. சோவியத் கால அதிகாரியான Nursultan Nazarbayev, […]

Tennis வீரர் Djokovic அஸ்ரேலியாவுள் நுழைய தடை

Tennis வீரர் Djokovic அஸ்ரேலியாவுள் நுழைய தடை

இந்த மாதம் 17ம் திகதி இடம்பெறவுள்ள Australian Open என்ற டென்னிஸ் போட்டியில் பங்கு கொள்ள சென்ற Serbia நாட்டு வீரரான Novak Djokovic அஸ்ரேலியாவுள் நுழைய அனுமதி வழங்கப்படவில்லை. இவர் திருப்பி அனுப்படுவதற்காக காவலில் வைக்கப்பட்டு உள்ளார். இவரிடம் உரிய விசா இருந்தாலும், விசா விதிக்கு இணங்க கரோனா தடுப்பு ஊசி பெற்றமைக்கான ஆதாரங்களோ அல்லது சட்டப்படி விதிவிலக்கு பெற்ற ஆவணங்களோ இருந்திருக்கவில்லை. கடந்த ஆண்டு இவர் கரோனா தடுப்பு ஊசிக்கு எதிராக கருத்து தெரிவித்து […]

Apple ஒரு $3 டிரில்லியன் நிறுவனம்

Apple ஒரு $3 டிரில்லியன் நிறுவனம்

அமெரிக்காவின் iPhone தயாரிப்பு நிறுவனமான Apple முதல் தடவையாக பங்கு சந்தையில் $3 டிரில்லியன் ($3,000 பில்லியன்) பெறுமதியை அடைந்து உள்ளது. இந்த ஆண்டின் முதல் பங்கு சந்தை வர்த்தக தினத்திலேயே Apple இந்த உயர்வை அடைந்து உள்ளது. Apple நிறுவனம் தயாரிக்கும் iPhone விற்பனையே இந்த நிறுவனத்தின் வருமானம் தொடர்ந்தும் உச்சத்தில் இருக்க காரணம். ஆண்டுதோறும் பல மில்லியன் iPhone கள் விற்பனை செய்யப்படுகின்றன. 2018ம் ஆண்டு Apple நிறுவனத்தின் பங்குசந்தை பெறுமதி $1 டிரில்லியன் […]

கடந்த ஆண்டு $55.7 பில்லியனுக்கு இந்தியா தங்கம் இறக்குமதி

கடந்த ஆண்டு $55.7 பில்லியனுக்கு இந்தியா தங்கம் இறக்குமதி

2021ம் ஆண்டு இந்தியா $55.7 பில்லியன் பெறுமதியான தங்கத்தை (1,050 தொன்) இறக்குமதி செய்துள்ளது என்று கூறுகிறது அரச தரவுகள். இது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இரண்டு மடங்கிலும் அதிகம். 2020ம் ஆண்டு $22 பில்லியன் பெறுமதியான (430 தொன்) தங்கத்தை மட்டுமே இந்தியா இறக்குமதி செய்திருந்தது. 2011ம் ஆண்டு $53.9 பில்லியனுக்கு இந்தியா தங்கத்தை இறக்குமதி செய்திருந்தது. இதுவரை அத்தொகையே அதிகூடிய தொகையாக இருந்தது. தங்கத்தின் விலை சிறிது வீழ்ச்சி அடைந்தமை, கரோனா காரணமாக பின்போடப்பட்ட […]

அமெரிக்கரில் 64% சனநாயகத்தில் சந்தேகம்

அமெரிக்கரில் 64% சனநாயகத்தில் சந்தேகம்

தம்மை சனநாயகத்தின் பாதுகாவலர் என்று நீண்ட காலம் கருதி வந்த அமெரிக்கரில் 64% மக்கள் தற்போது சனநாயகம் மீது சந்தேகம் கொள்ள ஆரம்பித்துள்ளனர் என்று கூறுகிறது கருத்து கணிப்பு ஒன்று. அமெரிக்காவின் NPR, Ipsos poll ஆகிய இரண்டு அமைப்புக்களும் இணைந்து செய்த கணிப்பு ஆய்வில் 64% அமெரிக்கர் சனநாயகத்தில் சந்தேகம் கொண்டமை தெரிய வந்துள்ளது. வலதுசாரிகளை (Republican) மட்டும் கருத்தில் கொண்டால் சுமார் 66.6% மக்கள் சனநாயகத்தில் சந்தேகம் கொண்டுள்ளனர். இவர்கள் கடந்த தேர்தலில் பைடென் […]

இன்று முதல் RCEP என்ற மிக பெரிய வர்த்தக வலயம்

இன்று முதல் RCEP என்ற மிக பெரிய வர்த்தக வலயம்

Regional Comprehensive Economic Partnership (RCEP) என்ற உலகின் மிக பெரிய வரிகள் அற்ற வர்த்தக வலயம் இன்று ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வருகின்றது. இந்த வர்த்தக வலயத்துள் 90% இறக்குமதி, ஏற்றுமதி வரிகள் விலக்கப்படும். RCEP மூலம் சீனாவே அதிக பயனை அடையும் என்று கணிக்கப்படுகிறது. பர்மா, லஒஸ், தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, புரூணை, கம்போடியா, பிலிப்பீன், வியட்நாம் ஆகிய பத்து ASEAN நாடுகளும், சீனா, ஜப்பான், தென் கொரியா, அஸ்ரேலியா, […]

அமெரிக்காவில் காட்டுத்தீக்கு 580 வீடுகள் இரை

அமெரிக்காவில் காட்டுத்தீக்கு 580 வீடுகள் இரை

அமெரிக்காவின் Colorado மாநிலத்தில் உள்ள Boulder Country பகுதியில் ஏற்பட்ட காட்டு தீக்கு குறைந்தது 580 வீடுகள் இரையாகி உள்ளன. வியாழன் ஆரம்பித்த இந்த தீ 1,600 ஏக்கர் நிலத்தையும் அழித்து, 30,000 பேரை இடம்பெயரவும் வைத்துள்ளது. அங்கு வீசும் கடும் காற்றே தீ வேகமாக பரவ காரணமாக இருந்துள்ளது. இங்கு காற்று வீச்சு சுமார் 160 km/h ஆக இருந்துள்ளது. ஆனாலும் வெள்ளிக்கிழமை அப்பகுதிக்கு winter காலநிலை மீண்டும் வந்துள்ளது. சனிக்கிழமை வரையான காலத்தில் 5 […]

பைடென், பூட்டின் வியாழன் மீண்டும் உரையாடுவர்

பைடென், பூட்டின் வியாழன் மீண்டும் உரையாடுவர்

அமெரிக்க சனாதிபதி பைடெனும், ரஷ்ய சனாதிபதி பூட்டினும் நியூ யார்க் நேரப்படி வியாழக்கிழமை பிற்பகல் 3:30 மணிக்கு மீண்டும் அவசர உரையாடல் ஒன்றை செய்வர் என்று வெள்ளைமாளிகை அறிவித்து உள்ளது. இந்த உரையாடல் பல விசயங்களை உள்ளடக்கினாலும், யுக்கிரைன் எல்லையோரம் ரஷ்யா தனது படைகளை குவிப்பது பிரதானமாக பேசப்படும். அமெரிக்கா, NATO, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன கூட்டாக ரஷ்யாவை கட்டுப்படுத்த முனைகின்றன. வரும் ஜனவரி 10ம் திகதி அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையில் பாதுகாப்பு தொடர்பான அமர்வும் ஒன்று […]

பர்மா இராணுவ கொலைக்கு Save the Children ஊழியர் பலி

பர்மா இராணுவ கொலைக்கு Save the Children ஊழியர் பலி

பர்மாவின் கிழக்கு எல்லை மாநிலமான Kayah யில் உள்ள Hpruso என்ற இடத்தில் பர்மாவின் இராணுவம் செய்த படுகொலைக்கு 35 பேருக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். அவர்களில் இருவர் Save the Children என்ற தொண்டர் அமைப்பின் ஊழியர் என்று Save the Children கூறியுள்ளது. பெரு வீதி ஒன்றில் பயணித்தோரையே இராணுவம் வாகனங்களில் இருந்து வெளியேற்றி, கொலை செய்து, உடல்களை எரித்து உள்ளது என்று கூறப்படுகிறது. படுகொலை ஆதாரங்கள் தற்போதே பகிரங்கத்துக்கு வர ஆரம்பித்து உள்ளன. […]