Facebook நிறுவனத்தின் தாய் நிறுவனமான Meta வின் பங்கு சந்தை பெறுமதி இன்று $252 பில்லியனை இழந்துள்ளது. இந்த நிறுவனத்தின் வர்த்தக வளர்ச்சி நலிவடைந்து செல்வதே காரணம். வேகமாக வளரும் Tik Tok நிறுவனம் Facebook வர்த்தகத்தை வேகமாக பறித்து வருகிறது. Facebook (அல்லது Meta) பங்கு ஒன்றின் விலை இன்று $85.24 ஆல் வீழ்ச்சி அடைந்து உள்ளது. அது 26.39% வீழ்ச்சி. பெரிய நிறுவனங்களின் இவ்வகை வீழ்ச்சியை ஒப்பிடுகையில் இதுவே மிக பெரிய வீழ்ச்சி. Facebook […]
நேற்று புதன்கிழமை அமெரிக்காவின் விசேட படையினர் தற்போதைய ISIS குழுவின் தலைவர் Abu Ibrahim al-Hashimi al-Qurayshi தங்கி இருந்த வீட்டை சுற்றிவளைத்த நேரத்தில் குண்டு ஒன்றை வெடித்து தன்னையும், தன்னுடன் இருந்த 12 போரையும் பலியாக்கி உள்ளதாக அமெரிக்கா இன்று கூறியுள்ளது. சிரியாவின் வடக்கே, துருக்கி எல்லையோரம் உள்ள Atmeh என்ற பகுதியிலேயே இந்த தாக்குதல் இடம்பெறுள்ளது. பலியானோரில் Abu Ibrahim al-Hashimi al-Qurayshi யின் மனைவி, 4 பெண்கள், 6 சிறுவர்கள் ஆகியோரும் அடங்குவர். […]
வெள்ளிக்கிழமை சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் ஆரம்பமாகவுள்ள 2022 Winter ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியாவில் இருந்து Arif Khan என்ற ஒருவர் மட்டுமே செல்கிறார். இவர் ஒரு காஸ்மீர் வாசி. இந்தியா ஒரு வெப்பமான மத்திய கோட்டு நாடு என்றாலும், காஸ்மீர் போன்ற இமயமலையை அண்டிய வடக்கு மாநிலங்கள் பல winter விளையாட்டுகளை பழக வசதியான இடங்கள். ஆனாலும் இந்தியாவில் இருந்து ஒருவர் மட்டுமே winter ஒலிம்பிக் போட்டிக்கு செல்கிறார். இவரை 6 அதிகாரிகள் அழைத்து செல்கின்றனர். Arif […]
இஸ்ரேலிலும், இஸ்ரேல் ஆக்கிரமித்து உள்ள பலஸ்தீனர் இடங்களில் வாழும் பலஸ்தீனர் மீது இஸ்ரேல் திட்டமிட்ட apartheid ஆட்சி செய்கிறது என்று பிரித்தானியாவை தளமாக கொண்ட Amnesty International இன்று செவ்வாய் கூறியுள்ளது. இன்று வெளியிட்ட 278 பக்கங்களை கொண்ட இந்த அறிக்கையை Amnesty கடந்த 4 ஆண்டுகளாக தயாரித்து உள்ளது. அமெரிக்காவை தளமாக கொண்ட Human Rights Watch அமைப்பும், இஸ்ரேலை தளமாக கொண்ட B’Tselem என்ற அமைப்பும் Amnesty இன்று கூறுவதை ஏற்கனவே கூறி உள்ளன. […]
இலங்கையின் விலைவாசி இந்த ஆண்டு தை மாதம் 14.2% ஆல் அதிகரித்து உள்ளது. தற்போது ஆசியாவிலேயே அதிக விலைவாசி உயர்வை கொண்ட நாடாக இலங்கை உள்ளது. இங்கு விலைவாசி தொடர்ந்தும் அதிகரிக்கும் என்றே கருதப்படுகிறது. இறக்குமதிக்கு தேவையான அந்நியசெலவாணி இன்மை, அதனால் நடைமுறை செய்யப்பட்ட இறக்குமதி தடைகள், உள்நாட்டு அறுவடை பாதிப்பு, உலக அளவில் எரிபொருள் விலை அதிகரிப்பது எல்லாமே இலங்கையின் நெருக்கடிக்கு காரணம். இங்கு அரிசி உற்பத்தி மட்டும் சுமார் 50% ஆல் வீழ்ச்சி அடைந்துள்ளது […]
நியூ யார்க் நேரப்படி இன்று திங்கள் ரஷ்ய-யுகிரைன் விவகாரம் ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு செல்கிறது. ஆனாலும் ரஷ்ய மற்றும் சீனா veto அதிகாரம் கொண்டுள்ளதால் ஐ.நா. பாதுகாப்பு சபை எதையும் சாதிக்கப்போவது இல்லை. இங்கே வெறும் வசைபாடலே இடம்பெறும். அண்மை காலங்களில் ரஷ்யா பெருமளவு படைகளை யுகிரைன் எல்லையோரம் குவித்து வருகிறது. ரஷ்யா அவ்வாறு செய்வது யுகிரைனுள் நுழையவே என்று அமெரிக்கா தலைமையிலான NATO கூறுகிறது. ரஷ்ய படைகளை எல்லையில் இருந்து பின்வாங்குமாறு மேற்கு வற்புறுத்தும் நேரத்தில், […]
கனடாவில் பார வாகன சாரதிகள் (truckers) தற்போது பெரும் ஊர்வலம் ஒன்றை தலைநகர் ஒட்டாவாவில் செய்கின்றனர். முன் எச்சரிக்கையாக கனடிய பிரதமர் பாதுகாப்பான இடம் ஒன்றுக்கு நகர்த்தப்பட்டு உள்ளார். அமெரிக்கா, கனடா போன்ற மேற்கு நாடுகளில் தற்காலங்களில் ஒவ்வொரு சிறிய விசயங்களிலும் அரசியல் மயமாகி வருகின்றன. இந்த பார வாகன சாரதிகள் ஊர்வலத்தின் பின்னணியும் அரசியலே. அமெரிக்காவில் இருந்து கனடா திரும்பும் பார வாகன சாரதிகள் ஒவ்வொருவரும் முழுமையாக கரோனா தடுப்பு ஊசி பெற்று இருத்தல் அவசியம் […]
கனடிய-அமெரிக்க எல்லையோரம் ஆண், பெண், இளவயதினர், குழந்தை ஆகிய நால்வர் கடும் குளிரில் உறைந்து பலியாகி உள்ளனர் (frozen to death). அகதிகளை கடத்தும் குழு ஒன்றே இதற்கு உடந்தையாக இருந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இது தொடர்பாக இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் 6 பேர் கைதும் செய்யப்பட்டு உள்ளனர். மரணித்தவர்கள் கடவுச்சீட்டு விபரங்களின் அடிப்படையில் இந்த நால்வரும் குஜராத் மாநிலத்தின் குடும்பம் ஒன்று என்று குஜராத் போலீசார் கூறியுள்ளனர். இவர்கள் கனடா சென்று அங்கிருந்து அமெரிக்கா செல்ல […]
Transparency International என்ற அமைப்பு செய்யும் ஊழல் கணிப்பின்படி 2021ம் ஆண்டு இலங்கை 102ம் இடத்தில் இருந்துள்ளது. மொத்தம் 180 நாடுகள் இந்த கணிப்புக்கு உள்ளடக்கப்பட்டு இருந்தன. இலங்கை 37/100 புள்ளிகளை மட்டுமே பெற்று இருந்தது. 2020ம் ஆண்டில் இலங்கை 101ம் இடத்தில் இருந்தது. ஆனால் கடந்த ஆண்டு ஒரு இடம் பின் சென்றுள்ளது. டென்மார்க், பின்லாந்து, நியூசிலாந்து ஆகிய மூன்று நாடுகளும் 88/100 புள்ளிகளை பெற்று முதலாம் இடத்தில் இருந்துள்ளன. நோர்வே, சிங்கப்பூர், சுவீடன் ஆகிய […]
கடந்த திங்கள் கிழமை அமெரிக்காவின் USS Carl Vinson என்ற விமானம் தாங்கி கப்பலில் தரையிறக்கும் நேரத்தில் விபத்துக்கு உள்ளாகி கடலில் வீழ்ந்த F-35C வகை யுத்த விமானத்தை மீட்க அமெரிக்கா கடும் முயற்சி செய்து வருகிறது. அமெரிக்கா இதை மீட்க தவறின், சீனா இதை மீட்டு இதில் உள்ள உண்மைகளை, விஞ்ஞானங்களை, தொழில்நுட்பங்களை அறியக்கூடும். F-35C வகை யுத்த விமானங்களே அமெரிக்காவின் எதிர்கால யுத்த விமானம். இது பல நுட்பங்களை கொண்டது. இந்த நுட்பங்கள் பாதுகாக்கப்படாவிடின் […]