200 சதுர km கொண்ட உலகின் மிக பரந்த தாவரம்

200 சதுர km கொண்ட உலகின் மிக பரந்த தாவரம்

உலகின் மிகப்பெரிய தாவரம் அஸ்ரேலியாவுக்கு அருகில் அண்மையில் காணப்பட்டுள்ளது. சுமார் 200 சதுர km கொண்ட இந்த கடல் தாவரம் (sea grass) ஒரு விதையில் இருந்து வளர்ந்தது என்பதாலேயே இது ஒரு தனி தாவரமாக கணிக்கப்படுகிறது. அத்துடன் இந்த தாவரம் சுமார் 4,500 ஆண்டுகள் பழமையானது என்றும் கணிக்கப்படுகிறது. அஸ்ரேலியாவின் Perth நகருக்கு வடக்கே சுமார் 800 km தூரத்தில் உள்ள Shark Bay என்ற இடத்திலேயே இந்த கடல் தாவரம் உள்ளது. University of […]

$100,000 வைப்புக்கு இலங்கை 10-ஆண்டு Golden Visa

$100,000 வைப்புக்கு இலங்கை 10-ஆண்டு Golden Visa

பல நாடுகள் அந்நிய செலவாணியை பெறும் நோக்கில் தற்காலிக வதிவுரிமை வழங்குவது போல் இலங்கையும் தற்போது Golden Paradise Residence Visa வழங்க முன்வந்துள்ளது. அந்நிய நாட்டவர் இலங்கையில் $100,000 வைப்பு செய்தால் அவருக்கு 10-ஆண்டு கால வதிவுரிமை மற்றும் படிப்பு விசா வழங்கப்படும். வைப்பிடப்படும் $100,000 பணத்தின் அரைப்பங்கு ($50,000) ஒரு ஆண்டின் பின் மீள பெறப்படலாம். மிகுதி $50,000 வழங்கப்படும் விசா முடிவு அடையும்வரை வைப்பில் இருத்தல் வேண்டும். இந்த விசா கொண்டோர் இலங்கையில் […]

50 பல்கலைக்கழகங்களின் பட்டதாரிகளுக்கு பிரித்தானிய வேலை விசா

50 பல்கலைக்கழகங்களின் பட்டதாரிகளுக்கு பிரித்தானிய வேலை விசா

உலகில் உள்ள சிறந்த 50 பல்கலைக்கழகங்களின் பட்டதாரிகளுக்கு பிரித்தானிய வேலை விசா வழங்க முன்வந்துள்ளது. இந்த செய்தியை பிரித்தானிய அரசு திங்கள் அறிவித்துள்ளது. Bachelor’s, master’s படிப்பை கொண்டவர்களுக்கு 2-ஆண்டு விசாவும், PhD படிப்பை கொண்டவர்களுக்கு 3-ஆண்டு விசாவும் வழங்கப்படும். மேற்படி பட்டதாரிகள் தமது படிப்பை முடித்து 5 ஆண்டுகளுக்குள் விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டும். மேற்படி விசா பெறுவோர் தமது குடும்பங்களையும் பிரித்தானிய அழைத்துவர அனுமதி வழங்கப்படும். தேவைப்படின் இவர்களின் விசா பின்னர் நீடிக்கப்படவும் உரிமை உண்டு. […]

கனடிய புஞ்சாபி பாடகர் இந்தியாவில் சுட்டு கொலை

கனடிய புஞ்சாபி பாடகர் இந்தியாவில் சுட்டு கொலை

Sidhu Moose என்ற கனடிய புஞ்சாபி பாடகர் இந்தியாவின் புஞ்சாப் மாநிலத்தில் சுட்டு கொலை செய்யப்பட்டு உள்ளார். தற்பொழுது 28 வயதுடைய இவர் 2016ம் ஆண்டு கனடா சென்று Toronto நகரை அண்டிய Brampton பகுதியில் வாழ்ந்தவர். இவர் கொலையை சட்டவிரோத குழுக்களின் செயல் என்கிறது இந்திய போலீஸ். ஆனால் உண்மை விபரம் எதுவும் வெளியிடப்படவில்லை. Sidhu தனது பாடல்களில் அரசியல், சமூக விசயங்கள் போன்றவற்றை உள்ளடக்கி இருந்தார். அத்துடன் கடந்த ஆண்டு இவர் இந்திய காங்கிரஸ் […]

இலங்கைக்கு $72.6 மில்லியன் ரஷ்ய எரிபொருள்

இலங்கைக்கு $72.6 மில்லியன் ரஷ்ய எரிபொருள்

கடந்த சில கிழமைகளாக கொழும்பு துறைமுகத்துக்கு அண்மையில் 90,000 தொன் ரஷ்ய மசகு எண்ணெயுடன் தரித்து நின்ற கப்பலில் இருந்து அந்த மசகு எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த எண்ணெய்க்கு உரிய $72.6 மில்லியன் பணம் இலங்கை அரசால் செலுத்தப்பட்ட பின்னரே மசகு எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. மார்ச் மாதம் 25ம் திகதி முதல் மூடப்பட்டுள்ள இலங்கையின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மேற்படி ரஷ்ய மசகை சுத்திகரிக்கும் பணியை ஆரம்பிக்கும். அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகள் ரஷ்யா […]

Gambian சர்வாதிகாரியின் வீட்டை அமெரிக்க நீதிமன்றம் பறித்தது

Gambian சர்வாதிகாரியின் வீட்டை அமெரிக்க நீதிமன்றம் பறித்தது

The Gambia என்ற மேற்கு ஆபிரிக்க நாட்டை ஆண்ட Yahya Jammeh என்பவரின் மனைவிக்கு சொந்தமான மாளிகை போன்ற வீடு ஒன்றை அமெரிக்க நீதிமன்றம் பறித்து உள்ளது. சுமார் $3 மில்லியன் பெறுமதியான இந்த வீட்டை விற்பனை செய்து அந்த பணத்தை சர்வாதிகாரியால் பாதிக்கப்பட்டோருக்கு வழங்க உள்ளது நீதிமன்றம். வெள்ளை மாளிகைக்கு அருகில் உள்ள Maryland மாநிலத்திலேயே சர்வாதிகாரியின் இந்த மாளிகை உள்ளது. இதை அமெரிக்காவில் உள்ள Gambia மக்கள் உளவு அறிந்து நீதிமன்றத்துக்கு எடுத்து உள்ளனர். […]

அமெரிக்காவில் 18 மாணவர் துப்பாக்கி சூட்டுக்கு பலி

அமெரிக்காவில் 18 மாணவர் துப்பாக்கி சூட்டுக்கு பலி

அமெரிக்காவின் Texas மாநிலத்தில் உள்ள Uvalde என்ற இடத்து Robb Elementary School மாணவர் 18 பேர் செவ்வாய்க்கிழமை துப்பாக்கி சூட்டுக்கு பலியாகி உள்ளனர். உள்ளூர் நேரப்படி இந்த சூடு மதியம் 12:17 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சந்தேக நபரும், வயது 18, அதிகாரிகளின் சூட்டுக்கு பலியாகி உள்ளார். கவச உடைகள் அணிந்த சந்தேகநபர் முதலில் தனது பேத்தியை (grandmother) சுட்டுள்ளார். பேத்தி ஹெலி மூலம் வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டார். சந்தேகநபர் பின்னர் தான் பயணித்த pick-up வாகனத்தை […]

இலங்கைக்கு ஆலோசனை வழங்க Lazard, Clifford Chance

இலங்கைக்கு ஆலோசனை வழங்க Lazard, Clifford Chance

கடன் நெருக்கடியில் முறிந்துபோன இலங்கைக்கு நிதி ஆலோசனை (financial advice), சட்ட ஆலோசனைகளை (legal advice) வழங்க Lazard மற்றும் Clifford Chance ஆகிய மேற்கு நாட்டு நிறுவனங்களை அமர்த்துகிறது இலங்கை. 1848ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட Lizard அமெரிக்காவின் நியூ யார்க் நகரை தளமாக கொண்டது. சுமார் 3,200 ஆலோசகர்களை கொண்டுள்ள  இதற்கு குறைந்தது 26 நாடுகளில் கிளைகள் உண்டு. 2021ம் ஆண்டில் இதன் வருமானம் $3.19 பில்லியன் ஆக இருந்துள்ளது. Clifford Chance LLP பிரித்தானியாவின் […]

அஸ்ரேலியாவில் Fernando வெல்ல, Perera தோல்வி

அஸ்ரேலியாவில் Fernando வெல்ல, Perera தோல்வி

இந்த மாதம் 21ம் திகதி இடம்பெற்ற அஸ்ரேலிய பொது தேர்தலில் Holt என்ற தொகுதியில் வென்ற Cassandra Fernando என்பவரும் (Labor கட்சி), இரண்டாம் இடத்தை அடைந்து தோற்ற Ranj Perera என்பவரும் (Liberal கட்சி) இலங்கையில் பிறந்தவர்களே. அத்துடன் ரவி ரகுபதி என்பவர் சுயேற்சையாக போட்டியிட்டு 6ம் இடத்தை அடைந்து உள்ளார். Cassandra 29,220 வாக்குகளை (41.8%) பெற்று பாராளுமன்ற உறுப்பினர் ஆகி உள்ளார். இவர் 1999ம் ஆண்டு தனது 11 வயதில் பெற்றாருடன் இலங்கையில் […]

யாருக்கு சொல்லியழ 17: யுக்கிரைனுக்கு இறைச்சி, கனடா தமிழருக்கு எலும்பு

யாருக்கு சொல்லியழ 17: யுக்கிரைனுக்கு இறைச்சி, கனடா தமிழருக்கு எலும்பு

கனடிய தமிழ் வாக்குகளை சில்லறை விலையில் பெற்று கனடிய அரசியல் கட்சிகளுக்கு மொத்த விலையில் விற்கும் கனடிய தமிழ் அரசியல் வர்த்தகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க கனடிய பிரதமர் மே மாதம் 18ம் திகதியை கனடாவில் “Tamil Genocide Remembrance Day” என்று அறிவித்து உள்ளார். இது கனடிய தமிழ் அரசியல் வர்த்தகர்களின் மற்றுமொரு சில்லறை சாதனை மட்டுமே. இவ்வகை கனடிய சில்லறை நாடகங்களால் முள்ளிவாய்க்காலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்தவித நன்மையும் கிடைக்கபோவது இல்லை. கனடா இப்போது கூறும் massacre […]