Marinella Beretta என்ற 70 வயது பெண்ணின் உடலை இத்தாலியின் வடக்கு பகுதியில் Lake Como என்ற இடத்து அதிகாரிகள் கண்டெடுத்து உள்ளனர். தனியே வாழ்ந்த இவர் மரணித்து 2 ஆண்டுகளுக்கு மேல். மேற்படி பெண்ணின் வீட்டு தோட்டத்து மரம் ஒன்று அளவுக்கு மிகையாக வளர்ந்து முறிந்து இருந்தது. இதை அவதானித்த அயலவர் அதிகாரிகளுக்கு அறிவித்து உள்ளனர். அந்த வீட்டை அடைந்த அதிகாரிகள் பெண்ணின் வீட்டில் மரணித்த உடலை கண்டுள்ளனர். இந்த செய்தியை Como City அதிகாரி […]
Caixuan Qin என்ற பெண்ணும், Jian Jun Zhu என்ற அவரின் கணவனும் சட்டவிரோத பணத்தை சட்டவிரோத வங்கி ஒன்று மூலம் தூய பணமாக்கும் செயலில் ஈடுபட்டு வந்திருந்தனர். ஆனால் கணவர் 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18ம் கணவர் வான்கூவர் உணவகம் ஒன்றில் சுட்டு கொலை செய்யப்பட்டு இருந்தார். தற்போது கனடிய குடியுரிமை பெற முனையும் மனைவி Qin கனடிய அரசை நீதிமன்றம் இழுக்கிறார். 2015ம் ஆண்டு Silver International Investments என்ற சட்டவிரோத வங்கி […]
நீண்ட காலமாக இந்தியாவின் முதலாவது பணக்காரராக இருந்த முகேஷ் அம்பானியை பின்தள்ளி நேற்று திங்கள் அடானி (Gautam Adani) இந்தியாவின் முதலாவது செல்வந்தர் ஆகியுள்ளார். தற்போது அடானியிடம் $88.5 பில்லியன் சொத்துக்கள் உள்ளதாகவும், அம்பானியிடம் $87.9 பில்லியன் சொத்துக்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சொத்துக்கள் பெரும்பாலும் திடமான பெறுமதியை கொண்டிராத பங்கு சந்தை பங்குகளே. அம்பானி பெருமளவு முதலீட்டை Facebook நிறுவனத்தில் செய்திருந்தார். அண்மையில் Facebook நிறுவன பங்கு பெரும் வீழ்ச்சி அடைந்த போது அம்பானியின் வெகுமதியும் […]
தற்போது பெய்ஜிங்கில் இடம்பெறும் 2022 Winter ஒலிம்பிக் போட்டியில் சீன கொடியின் கீழ் விளையாடும் பல சீன விளையாட்டு வீரர்கள் வெளிநாடுகளில் பிறந்த இரண்டாம் சந்ததியினரே. சீனாவின் மிகையான வளர்ச்சி இவர்களை சீனா சார்பில் விளையாட தூண்டி உள்ளது. Eileen Gu என்ற 18 வயதான freestyle skier பெண் வீரர் அமெரிக்காவின் San Francisco நகரில் பிறந்த அமெரிக்கர். இவரின் தாய் சீனர், தந்தை அமெரிக்கர். ஆனால் சீன கொடியின் கீழ் விளையாடும் நோக்கில் இவர் […]
இரண்டு கரோனா தடுப்பு ஊசிகளை பெற்ற வெளிநாட்டவருக்கு அஸ்ரேலியாவுள் நுழைய பெப்ரவரி 21ம் திகதி முதல் அனுமதி வழங்கப்படவுள்ளது. சுமார் இரண்டு ஆண்டுகளின் பின் அஸ்ரேலியா வெளிநாட்டவரை அனுமதிக்கவுள்ளது. உல்லாச பயணிகள் மட்டுமன்றி அங்கு கல்வி பயில விரும்பும் மாணவர்களையும் அழைக்கிறது அஸ்ரேலியா. சீனாவில் இருந்து பெருமளவு மாணவர் அஸ்ரேலியா செல்வதுண்டு. நியூசிலாந்து, சிங்கப்பூர், தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாட்டவர் ஏற்கனவே அஸ்ரேலியா செல்ல அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அமெரிக்க, ஐரோப்பிய தடுப்பு மருந்துகள் மட்டுமா ஏற்றுக்கொள்ளப்படும், அல்லது […]
இந்தியாவின் பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் இன்று சனிக்கிழமை தனது 92 ஆவது வயதில் மரணமாகி உள்ளார். பல உறுப்புகள் செயல் இழந்தமையாலே அவர் மும்பாயில் உள்ள Breach Candy வைத்தியசாலையில் மரணமானதாக கூறப்படுகிறது. இவர் சுமார் 30,000 பாடல்களை 16 மொழிகளில் பாடி உள்ளார் என்று கூறப்படுகிறது. ஆனாலும் இந்தி பாடல்களே இவரை பிரசித்தம் அடைய செய்தன. திரை உலகில் தொடர்பு கொண்டிருந்த தந்தையிடம் இசையை கற்ற இவர் முதலில் மராத்தி திரைப்பட பாடலையே பாடினார். […]
மொராக்கோ நாட்டில் 5 வயது Rayan Awram என்ற சிறுவன் மிக ஆழமான குழாய் கிணறு ஒன்றுள் வீழ்ந்து 32 அடி ஆழத்தில் இறுகி இருந்தான். இவன் வீழ்ந்தது கடந்த செவ்வாய்க்கிழமை. அவனை மீட்க வேகமாக நடவடிக்கைகள் எடுத்தாலும் இன்று சனிக்கிழமை அவன் உடலே கிடைத்துள்ளது. இவனை மீட்க பாரிய கிடங்கு கிண்டும் இயந்திகள் பயன்படுத்தப்பட்டாலும் சிறுவன் இருந்த ஆழத்தை அடைய சுமார் 5 நாட்கள் எடுத்துள்ளது. காற்று, உணவு, நீர் ஆகியன மேலே இருந்து அனுப்பப்படாலும் […]
இதுவரை ரஷ்யா மட்டுமே NATO கிழக்கு நோக்கி பரவுவதை எதிர்த்து வந்திருந்தது. ஆனால் இன்று வெள்ளிக்கிழமை 2022 பெய்ஜிங் Winter ஒலிம்பிக் ஆரம்ப விழாவுக்கு சென்றிருந்த ரஷ்ய சனாதிபதி பூட்டினும், சீனா சனாதிபதி சீ ஜின் பிங்கும் கூட்டாக NATO கிழக்கு நோக்கி பரவுவதை எதிர்த்து உள்ளனர். அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகள் ரஷ்யாவையும், சீனாவையும் கட்டுப்படுத்த முனைவது, ரஷ்யாவையும் சீனாவையும் மேலும் நெருக்கம் அடைய செய்கிறது. ரஷ்யாவுக்கு ஆதரவாக NATO பரவலை சீனா எதிர்க்கிறது சீனா. […]
Facebook நிறுவனத்தின் தாய் நிறுவனமான Meta வின் பங்கு சந்தை பெறுமதி இன்று $252 பில்லியனை இழந்துள்ளது. இந்த நிறுவனத்தின் வர்த்தக வளர்ச்சி நலிவடைந்து செல்வதே காரணம். வேகமாக வளரும் Tik Tok நிறுவனம் Facebook வர்த்தகத்தை வேகமாக பறித்து வருகிறது. Facebook (அல்லது Meta) பங்கு ஒன்றின் விலை இன்று $85.24 ஆல் வீழ்ச்சி அடைந்து உள்ளது. அது 26.39% வீழ்ச்சி. பெரிய நிறுவனங்களின் இவ்வகை வீழ்ச்சியை ஒப்பிடுகையில் இதுவே மிக பெரிய வீழ்ச்சி. Facebook […]
நேற்று புதன்கிழமை அமெரிக்காவின் விசேட படையினர் தற்போதைய ISIS குழுவின் தலைவர் Abu Ibrahim al-Hashimi al-Qurayshi தங்கி இருந்த வீட்டை சுற்றிவளைத்த நேரத்தில் குண்டு ஒன்றை வெடித்து தன்னையும், தன்னுடன் இருந்த 12 போரையும் பலியாக்கி உள்ளதாக அமெரிக்கா இன்று கூறியுள்ளது. சிரியாவின் வடக்கே, துருக்கி எல்லையோரம் உள்ள Atmeh என்ற பகுதியிலேயே இந்த தாக்குதல் இடம்பெறுள்ளது. பலியானோரில் Abu Ibrahim al-Hashimi al-Qurayshi யின் மனைவி, 4 பெண்கள், 6 சிறுவர்கள் ஆகியோரும் அடங்குவர். […]