Xiaomi யின் $725 மில்லியனை இந்தியா முடக்கம்

Xiaomi யின் $725 மில்லியனை இந்தியா முடக்கம்

சீனாவின் சியாமி (XiaoMi) என்ற தொலைபேசி தயாரிக்கும் நிறுவனத்தின் வங்கிகளில் இருந்த $725 மில்லின் பணத்தை இந்திய அரசு நேற்று சனிக்கிழமை முடக்கி உள்ளது. சியாமி இந்தியாவின் வெளிநாட்டு பணமாற்றில் குளறுபடி செய்துள்ளது என்கிறது. சியாமி அந்த குற்றச்சாட்டை மறுக்கிறது. மேற்படி பணத்தை Xiaomi Technology India Private Limited அமெரிக்கா உட்பட்ட 3 நிறுவனங்களுக்கு நகர்த்தி உள்ளதாக இந்திய அரசு கூறுகிறது. ஆனால் அவ்வாறான royalty செலுத்துமதி சட்டப்படியானது என்கிறது சியாமி. இந்தியாவில் அதிகம் smartphone […]

பூட்டின், செலென்ஸ்கி இந்தோனேசியாவில் சந்திப்பர்?

பூட்டின், செலென்ஸ்கி இந்தோனேசியாவில் சந்திப்பர்?

G20 அமைப்பின் இந்த ஆண்டுக்கான அமர்வு வரும் நவம்பர் மாதம் 15ம், 16ம் திகதிகளில் இந்தோனேசியாவின் Bali என்ற இடத்தில் நடைபெறவுள்ளது. தற்போது G20 அமைப்பின் தலைமையை இந்தோனேசியாவே கொண்டுள்ளது. ரஷ்யா ஒரு G20 நாடாக இருந்தாலும் யுகிரைன் யுத்தம் காரணமாக அமெரிக்காவும், மேற்கு நாடுகளும் பூட்டினை G20 அமர்வுக்கு அழைக்க விரும்பவில்லை. ஆனாலும் இந்தோனேசியா அதற்கு இணங்கவில்லை. அதேவேளை யுகிரேனின் செலன்ஸ்கியை அழைக்க அமெரிக்கா விரும்பி இருந்தது. அதற்கு இணங்கிய இந்தோனேசியா பூட்டின், செலென்ஸ்கி இருவரையும் […]

ரஷ்ய tanks அழிய அவற்றின் கட்டமைப்பு காரணம்?

ரஷ்ய tanks அழிய அவற்றின் கட்டமைப்பு காரணம்?

யூகிரேனில் இடம்பெறும் யுத்தத்தில் எதிர்பார்த்ததற்கும் அதிக அளவில் ரஷ்ய tanks அழிந்து இருந்தன. அவற்றில் இருந்த படையினரும் பலியாகி இருந்தனர். இவ்வாறு ரஷ்ய tanks அழிந்தமை ரஷ்யாவின் யுத்த இழப்புகளுக்கும், பின்னடைவுக்கும் காரணமாக அமைத்தது. ரஷ்யா யுகிரேனின் தலைநகர் கியேவ்வை தாக்கும் முயற்சியையும் கைவிட்டு இருந்தது. தலைநகரை தாக்குவது இல்லை என்று ரஷ்யா அறிவிக்க இதுவே காரணமாக இருந்திருக்கலாம். இதுவே பெருமளவு ரஷ்ய படையினர் அழிய காரணமாகவும் இருந்திருக்கலாம். பலநூறு ரஷ்ய tanks ஆரம்பத்தில் அழிந்ததாக கூறப்படுகிறது. […]

இந்தியாவில் 122 ஆண்டுகளில் அதிக வெப்பம்

இந்தியாவில் 122 ஆண்டுகளில் அதிக வெப்பம்

இந்தியாவை மீண்டும் வெப்பம் தாக்க ஆரம்பித்து உள்ளது. வழமைக்கு மாறாக இந்த ஆண்டு வெப்பம் சில கிழமைகள் முன்னதாகவே தாக்க ஆரம்பித்து. இந்தியா 122 ஆண்டுகளாக வெப்பநிலையை பதிவு செய்கிறது. அதன்படி மார்ச் சராசரி வெப்பநிலை 122 ஆண்டுகளில் அதிகமாக இருந்துள்ளது. தலைநகர் டெல்லி பகுதியில் தற்போது வெப்பநிலை 40 C ஆக உள்ளது. வரும் ஞாயிறு வரை வெப்ப கொடுமை தொடரும் என்றும், வெப்பநிலை 44 C ஆக உயரும் என்றும் கூறப்படுகிறது. கடும் வெப்பம் […]

தஞ்சாவூர் இந்து ஊர்வலத்தை மின் தாக்கி 11 பேர் பலி

தஞ்சாவூர் இந்து ஊர்வலத்தை மின் தாக்கி 11 பேர் பலி

தமிழ்நாட்டு மாவட்டமான தஞ்சாவூரில் வீதி வழி சென்ற இந்து ஊர்வல வாகனம் ஒன்று உயர் அழுத்த மின் இணைப்பை தொட்டதால் ஏற்பட்ட விபத்துக்கு 11 பேர் பலியாகி உள்ளனர். பலியானோரில் இரு சிறுவர்களும் அடங்குவர். இந்த விபத்து புதன் அதிகாலை நிகழ்ந்துள்ளது. மேலும் 3 பேர் எரி காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மின் தாக்கிய வாகனம் தீக்கும் இரையாகி உள்ளது. இறந்தவர்களின் குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் 500,000 இந்திய ரூபாய்களை வழங்க தமிழ்நாடு அரசு முன்வந்துள்ளது. பிரதமர் […]

Elon Musk $44 பில்லியனுக்கு Twitter மீது கண், Tesla $125 பில்லியன் இழந்தது

Elon Musk $44 பில்லியனுக்கு Twitter மீது கண், Tesla $125 பில்லியன் இழந்தது

உலகின் தற்போதைய முதலாவது செல்வந்தரான Elon Musk மொத்தம் $44 பில்லியன் பணத்துக்கு Twitter நிறுவனத்தை கொள்வனவு செய்ய இணங்கியதற்கு அடுத்த நாளான இன்று செவ்வாய் அவரின் Tesla என்ற மின்சக்தியில் இயங்கும் கார் தயாரிப்பு நிறுவனத்தின் பங்கு சந்தை பெறுமதி $125 பில்லியனால் வீழ்ச்சி அடைந்துள்ளது. Twitter கொள்வனவுக்கு Musk $44 பில்லியன் பணம் வழங்க முந்தாலும், தான் $21 பில்லியன் பணத்தை செலுத்த உள்ளதாகவும் மிகுதியை வங்கி கடன் மூலம் செலுத்த உள்ளதாகவும் கூறி […]

அஸ்ரேலிய குடியேற்றத்தில் சீனரை பின் தள்ளும் இந்தியர்

அஸ்ரேலிய குடியேற்றத்தில் சீனரை பின் தள்ளும் இந்தியர்

அண்மை காலங்களில் சீனாவுக்கும், அஸ்ரேலியாவுக்கும் இடையில் நிகழும் மோதல்கள் காரணமாக சீனர்கள் அஸ்ரேலியா செல்வது குறைந்து வந்துள்ளது. அதனால் அஸ்ரேலியா செல்லும் இந்தியர்களின் தொகை சீனர்கள் தொகையிலும் அதிகமாகி உள்ளது. தற்போது அஸ்ரேலிய சனத்தொகையின் 2.8% இந்தியராகவும், 2.3% சீனராகவும் உள்ளனர். முதலாம் இடத்தில் 3.8% பங்கை கொண்ட பிரித்தானியர் உள்ளனர். 2011ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரையான காலத்தில் 373,000 இந்தியர் அஸ்ரேலியா சென்று குடியேறி உள்ளனர். அதே காலத்தில் 208,000 சீனர்கள் மட்டுமே […]

R-S Paper உங்கள் கௌபீனம்

R-S Paper உங்கள் கௌபீனம்

Facebook மூலம் எவராவது உண்மை செய்திகளை பெறுவதாக கருதினால் அவர்களுக்கு குறைந்தது அரை மண்டை பழுது என்று அர்த்தம். பல Facebook பாவனையாளர் முன், பின் ஆராயாது R-S Papers என்ற மூடர்கள் பேச்சை மீண்டும் பரப்பி வருகிறார்கள். மழைக்கும் பாடசாலை செல்லாத இந்த மூடர்கள் தமது துணைக்கு Dark-net என்ற உச்சநிலை அறிவாளிகளையும் இழுத்து உள்ளனர். மிக பிரதானமாக இந்த மூடர்கள் மில்லியன், பில்லியன், டிரில்லியன் என்ற பதங்களில் குழம்பி உள்ளனர். இலங்கையின் மொத்த கடன் […]

Macron மீண்டும் பிரான்சின் சனாதிபதி

Macron மீண்டும் பிரான்சின் சனாதிபதி

இன்று இடம்பெற்ற தேர்தலில் இம்மானுவேல் மகிறோன் (Emmanuel Macron) மீண்டும் சனாதிபதியாக தெரிவு செய்யப்படுகிறார். இம்முறை இவர் சுமார் 58% வாக்குகளை பெறுகிறார். 2017ம் ஆண்டு இவர் 66% வாக்குகளை பெற்று இருந்தார். இவர் தனது ஆதரவை பெருமளவில் இழந்து இருந்தாலும் இறுதியில் வெற்றி பெற்றுள்ளார்.ஏனைய ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் மகிறோன் வெற்றியால் நிம்மதி அடைந்துள்ளனர்.  இவருக்கு எதிராக போட்டியிட்ட National Rally (NR) கட்சியின் Le Pen சுமார் 42% வாக்குகளை பெறுகிறார். National Rally […]

ராஜபக்ச குடும்பத்திடம் $1 டிரில்லியன் இல்லை

ராஜபக்ச குடும்பத்திடம் $1 டிரில்லியன் இல்லை

Facebook பொய்களின் தளம். மனிதரை மடையார் ஆக்கும் வல்லமை கொண்டது Facebook. ராஜபக்ச குடும்பம் இலங்கை மக்கள் பணத்தை அபகரித்ததை அறிய மக்கள் ஆவலாக உள்ள காலத்தில் சில விசமிகள் சூடான பொய் செய்திகளை பரப்பி கூதல் காய்கிறார்கள். தம்மை ‘anonymous hackers’ என்று கூறும் பொய் செய்தி புனைவோர் ராஜபக்ச குடும்ப சொத்துக்கள் என்று கூறி ஒரு பட்டியலை தயாரித்து உள்ளார்கள். அதில் சில ஏற்கனவே வேறு செய்திகளில் புகைப்படம் போன்ற சில ஆதரங்களுடன் வந்தன. […]