ஹரியானா, ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களை காங்கிரஸ் வெல்கிறது?

ஹரியானா, ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களை காங்கிரஸ் வெல்கிறது?

ஹரியானா, ஜம்மு-காஷ்மீர் ஆகிய இரண்டு மாநிலங்களில் இன்று சனிக்கிழமை முடிவடைந்த மாநில தேர்தல்கள் இரண்டிலும் காங்கிரஸ் தலைமையிலான INDIA கூட்டணி வெற்றி அடையும் என்று கணிக்கப்படுகிறது. வாக்களித்தோர் கூற்று (exit poll) அடிப்படையில் 90 ஆசனங்கள் கொண்ட ஹரியானா மாநிலத்தில் காங்கிரஸ் அணி 54 ஆசனங்கள் வரை பெற்று பெரும்பான்மை ஆட்சி அமைக்கலாம் என்று கணிக்கப்படுகிறது. பா.ஜ. கட்சி 29 ஆசனங்கள் வரை பெறலாம் என்றும் கணிக்கப்படுகிறது. மொத்தம் 90 ஆசனங்கள் கொண்ட ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் காங்கிரஸ் […]

Forbes கணிப்பில் உலகின் மிகப்பெரிய வங்கிகள்

Forbes கணிப்பில் உலகின் மிகப்பெரிய வங்கிகள்

Forbes செய்தி மற்றும் வணிகத்துறை ஆய்வு நிறுவனம் செய்த கணிப்பின்படி பின்வரும் வங்கிகள் உலக அளவில் முதல் 10 இடங்களை அடைந்துள்ளன. அந்த வங்கிகளும் அவை அக்டோபர் மாதம் 4ம் திகதி கொண்டிருந்த market capital தொகைகளும் வருமாறு: 1) JPMorgan Chase (அமெரிக்கா): $583.91 பில்லியன் 2) Bank of America (அமெரிக்கா): $304.56 பில்லியன் 3) Industrial and Commercial Bank of China (சீனா): $288.06 பில்லியன்4) Agricultural Bank of China (சீனா): $231.00 […]

சீன EV வாகனங்களுக்கு ஐரோப்பா 25% மேலதிக வரி 

சீன EV வாகனங்களுக்கு ஐரோப்பா 25% மேலதிக வரி 

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுள் இறக்குமதி செய்யப்படும் சீன EV களுக்கு (electric vehicles) 25% மேலதிக இறக்குமதி வரியை அறவிட அங்கத்துவ நாடுகளால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ், இத்தாலி, போலந்து உட்பட 10 நாடுகள் மேலதிக வரிக்கு ஆதரவாக வாக்களிக்க, ஜெர்மனி, ஹங்கேரி உட்பட 5 நாடுகள் மேலதிக வரிக்கு எதிராக வாக்களித்து உள்ளன. ஸ்பெயின், பெல்ஜியம், ஸ்வீடன், போர்த்துக்கல் உட்பட 12 நாடுகள் வாக்களியாது இருந்துள்ளன. மேற்படி மேலதிக வரிக்கு 10 நாடுகள் மட்டுமே ஆதரவு வழங்க, 12 […]

இந்திய வெளியுறவு அமைச்சர் வெள்ளி இலங்கை வருகிறார்

இந்திய வெளியுறவு அமைச்சர் வெள்ளி இலங்கை வருகிறார்

இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் நாளை வெள்ளிக்கிழமை இலங்கை வருகிறார். இவர் சனாதிபதி அனுர குமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய, வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரை சந்திப்பார். இந்தியா முதலில் ரணில் சனாதிபதி ஆவதையே விரும்பியது. ஆனால் அது சாத்தியம் ஆகாது என்று தெரிந்தவுடன் சஜித்தை சனாதிபதி ஆக்க முனைந்தது. இறுதியில் அனுரவே சனாதிபதி ஆனார். அனுர ஆட்சி இந்தியாவின் விருப்பத்துக்குரியது அல்ல. குறைந்தது பாராளுமன்றமாவது எதிர் கட்சிகளின் கைகளுக்கு செல்வதையே இந்தியா விரும்பும். […]

இஸ்ரேல் மீது ஈரான் மீண்டும் ஏவுகணை தாக்குதல்

இஸ்ரேல் மீது ஈரான் மீண்டும் ஏவுகணை தாக்குதல்

இஸ்ரேல் மீது ஈரான் மீண்டும் கடந்த இரவு ஏவுகணை தாக்குதலை செய்துள்ளது. ஈரான் சுமார் 180 கணைகளை இஸ்ரேல் நோக்கி ஏவியுள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. இந்த ஏவுகளைகளில் எவ்வளவு இஸ்ரேலின் Iron Dome, David’s Sling, Arrow போன்ற ஏவுகணை எதிர்ப்பு கணைகளால் தடுக்கப்பட்டன, எவ்வளவு குறிகளை தாக்கின என்பது அறியப்படவில்லை. ஆனால் கடந்த தாக்குதலை போல் அன்றி இம்முறை பல கணைகள் குறிகளை தங்கியுள்ளன. ஈரானின் ஒரு ஏவுகணை Herzliya நகரில் உள்ள மொசாட் உளவு […]

இஸ்ரேல் படைகள் லெபனானுள் நுழைந்தன

இஸ்ரேல் படைகள் லெபனானுள் நுழைந்தன

ஹெஸ்புல்லா குழுவை தாக்கும் நோக்கில் இஸ்ரேல் படைகள் லெபனானுள் இன்று செவ்வாய் நுழைந்துள்ளன.  அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளடங்க மேற்கு நாடுகள் உடனடியாக 21-தின யுத்த நிறுத்தத்தை கேட்டு ஊளையிட்டு இருந்தாலும் இஸ்ரேல் அமெரிக்கா வழங்கிய ஆயுதங்களுடன் தன் விருப்பப்படி லெபனானுள் நுழைகிறது. இந்த ஆக்கிரமிப்பு ஒரு குறுங்கால நடவடிக்கை என்று இஸ்ரேல் கூறினாலும் அந்த கால அளவை கூற மறுத்துவிட்டது. லெபனானுள் நுழைவதற்கு முன் இஸ்ரேல் தென் லெபனான் மீது பலத்த எறிகணை தாக்குதலை பல மணித்தியாலங்கள் […]

இஸ்ரேல் தாக்கி ஹெஸ்புல்லா தலைவர் பலி 

இஸ்ரேல் தாக்கி ஹெஸ்புல்லா தலைவர் பலி 

இஸ்ரேல் யுத்த விமானங்கள் தாக்கி லெபனான் ஆயுத குழுவான ஹெஸ்புல்லாவின் தலைவர் ஹசான் நஸ்ரல்லா (Hassan Nasrallah) இன்று வெள்ளி படுகொலை செய்யப்பட்டுள்ளார். லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் (Beirut) தென் பகுதியிலேயே  தாக்குதல் இடம்பெற்றுள்ளது. ஹெஸ்புல்லா குழுவை சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் ஆரம்பித்தவர்களில் ஒருவர் 1960ம் ஆண்டு பிறந்த நஸ்ரல்லா. கடந்த திங்கள் மட்டும் இஸ்ரேல் யுத்த விமானங்கள் 1,800 தாக்குதல்களை செய்துள்ளன. 1982ம் ஆண்டு இஸ்ரேல் லெபனானில் உள்ள பலஸ்தீனர்களை தாக்க இஸ்ரேல் படைகள் லெபனானுள் நுழைந்தபோது அவர்களை […]

இலங்கை விசாவுக்கு மீண்டும் பழைய இணையம் 

இலங்கை விசாவுக்கு மீண்டும் பழைய இணையம் 

இலங்கைக்கான விசா வழங்கல் மீண்டும் பழைய Mobitel இணையம் மூலம் செய்யப்படுகிறது. இந்த இணையமே நீண்ட காலமாக இலங்கைக்கான விசா வழங்கும் பணிகளை செய்து வந்தது. ஆனால் அமைச்சர் Tiran Alles காலத்தில் இந்த பணி இலங்கையின் Mobitel நிறுவனத்திடம் இருந்து பறிக்கப்பட்டு இந்தியாவின் VFS Global நிறுவனத்திடம் கையளிக்கப்பட்டது. VFS Global கடணங்களை மிகையாக அதிகரித்தது. VFS Global கையளிப்புக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட, நீதிமன்றம் பழைய முறைமைக்கு மாற்றி அமைக்க பணித்தது. ஆனால் அதற்கு […]

காசாவை போல் லெபனான் யுத்த நிறுத்தத்துக்கு ஊளையிடும் மேற்கு

காசாவை போல் லெபனான் யுத்த நிறுத்தத்துக்கு ஊளையிடும் மேற்கு

எங்கள் தமிழ் அரசியல்வாதிகள் பொங்கலுக்கு தீர்வு, தீபாவளிக்கு தீர்வு என்று ஊளையிட்ட தீர்வு இன்று வரை மக்களுக்கு கிடைக்கவில்லை. அவ்வாறே ரமழானுக்கு முன் காசாவில் யுத்த நிறுத்தம், ரமழானுக்கு பின் காசாவில் யுத்த நிறுத்தம் என்று மேற்கு நாடுகள் ஊளையிட்டாலும் இதுவரை காசாவில் யுத்த நிறுத்தம் இல்லை. குறிப்பாக சனாதிபதி பைடென் கேட்ட யுத்த நிறுத்தங்களை இஸ்ரேல் உதாசீனம் செய்தது. அதே மேற்கு நாடுகள் தற்போது இஸ்ரேல்-ஹெஸ்புல்லா சண்டைக்கும் 21 தின யுத்த நிறுத்தம் என்று காவடி தூக்கியுள்ளன. அமெரிக்கா, கனடா, அஸ்ரேலியா, […]

1 8 9 10 11 12 337