அமெரிக்க உதவி சனாதிபதி JD வான்சும் (JD Vance) மற்றும் அவரின் இந்திய பெற்றாருக்கு அமெரிக்காவில் பிறந்த மனைவி உஷாவும் இத்தாலிக்கும், இந்தியாவுக்கும், பயணிக்கின்றனர். முதலில் வியாழன் இத்தாலிக்கும், அங்கிருந்து பின்னர் இந்தியாவுக்கும் இருவரும் பயணிக்கின்றனர். உதவி சனாதிபதியின் பயண நோக்கம் இரண்டு நாடுகளுடனும் வர்த்தக ஒப்பந்தங்களை ஏற்படுத்துவதே. இத்தாலியின் ரோம் நகருக்கு செல்லும் வான்ஸ் இத்தாலிய பிரதமர் Giorgia Meloni ஐ சந்திப்பார். அங்கிருந்து அடுத்த கிழமையின் ஆரம்பத்தில் டெல்லி செல்லும் வான்ஸ் பிரதமர் மோதியை […]
அமெரிக்க பொருளாதாரம் மிக பெரியது. குறிப்பாக நவம்பர் மாத இறுதியில் வரும் அமெரிக்க Thanksgiving முதல் டிசம்பர் மாதம் வரும் Boxing Day வரையிலான காலத்தில் பெருமளவு பொருட்கள் விற்பனை செய்யப்படும். இவற்றில் smartphone, computer, ஏனைய இலத்திரனியல் பொருட்கள் ஆகியன பெருமளவில் சீனாவிலேயே தயாரிக்கப்படுகின்றன. இவ்வகை order கள் குறைந்தது 8 மாதங்களுக்கு முன் சீன நிறுவனங்களுக்கு வழங்கப்படும். சீன நிறுவனங்கள் தேவையான மூல பொருட்களை கொள்வனவு செய்து, பாகங்களை தயாரித்து, இறுதி பொருளை பொருத்தி, […]
லண்டன் நகருக்கு வடக்கே Scunthorpe என்ற இடத்தில் உள்ள British Steel என்ற இரும்பு தயாரிக்கும் ஆலையின் தினசரி செயற்பாட்டை தனது கைக்கு கொண்டுவந்துள்ளது பிரித்தானிய அரசாங்கம். சனிக்கிழமை பாராளுமன்றத்தை விசேட அழைப்பில் அழைத்தே இந்த தீர்மானம் நடைமுறை செய்யப்பட்டுள்ளது. இந்த உருக்கு ஆலை சீனாவின் Jingye Group என்ற நிறுவனத்துக்கு சொந்தமானது. அந்த நிறுவனம் ரம்ப் அண்மையில் பிரித்தானிய இரும்பு உட்பட அனைத்து இரும்பு இறக்குமதிகளுக்கும் மேலதிக 25% வரி விதித்ததால் தினமும் $910,000 இழப்பை […]
கனடியர் அமெரிக்கா செல்வது பெப்ரவரி மாதம் 40% ஆல் குறைந்து உள்ளது என்று Flight Centre கூறியுள்ளது. தரை மூலம் கனடாவில் இருந்து அமெரிக்கா செல்லும் பயணிகள் தொகை பெப்ரவரி மாதம் 500,000 ஆல் குறைந்து உள்ளது என்றும் கூறப்படுகிறது. 2024ம் ஆண்டு மார்ச் மாதம் 2.13 மில்லியன் கனடியர் கார் மூலம் அமெரிக்கா சென்று இருந்தனர். ஆனால் இந்த ஆண்டு மார்ச் மாதம் 1.45 மில்லியன் கனடியர் மட்டுமே கார் மூலம் அமெரிக்கா சென்று இருந்தனர். […]
அமெரிக்க பொருட்கள் மீதான இறக்குமதி வரியை சீனா 84% இல் இருந்து 125% ஆக உயர்த்தி உள்ளது. ரம்ப் சீன பொருட்கள் மீதான இறக்குமதி வரியை 145% ஆக உயர்த்திய பின்னரே சீனா தனது வரியை 125% ஆக உயர்த்தியது. அத்துடன் அமெரிக்க பொருட்கள் மீதான 125% வரியே இறுதி வரி என்றும், இதற்கு மேல் தமது வரி உயர்த்தப்படாது என்றும் சீனா கூறியுள்ளது. இதற்கு மேலான வரி ஒரு number game மட்டுமே என்றுள்ளது சீனா. […]
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் தொடரும் ரம்பின் பொருளாதார யுத்தம் காரணமாக சீனா அமெரிக்க ஹொலிவூட் திரைப்படங்களை வியாழன் தடை செய்துள்ளது. ஒரு காலத்தில் ஹொலிவூட் திரைப்படங்கள் சீனாவை முழுமையாக ஆக்கிரமித்து இருந்தாலும், அண்மைக்கால தரமான சீன திரைப்படங்கள் சீனாவில் பெரும் ஆதரவை பெற்றுள்ளன. அதனால் சுமார் 80% சீன திரைப்பட வருமானம் சீன திரைப்படங்கள் மூலமே கிடைக்கின்றன. உதாரணமாக சீனா தயாரித்த Ne Zha 2 என்ற கார்ட்டூன் திரைப்படம் அமெரிக்காவின் Pixar நிறுவனம் தயாரித்த Inside […]
சீனாவின் 84% பதிலடி வரியால் விசனம் கொண்ட ரம்ப் 104% ஆக அறிவித்திருந்த சீன பொருட்களுக்கான இறக்குமதி வரியை புதன்கிழமை 125% ஆக உயர்த்தி உள்ளார். அதேவேளை பங்கு சந்தைகளின் பாரிய இழப்புகளை குறைக்கும் நோக்கில் ஏனைய நாடுகளுக்கான இறக்குமதி வரியை 90 தினங்களுக்கு 10% ஆக மட்டும் கொண்டிருக்கவும் அறிவித்துள்ளார். சீனா மீதான இந்த புதிய 125% வரி உடனடியாக நடைமுறைக்கு வருகிறது என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த மிகையான இருதரப்பு வரிகளால் அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையேயான […]
அமெரிக்க சனாதிபதி சீன பொருட்களுக்குகான இறக்குமதி வரியை செவ்வாய்க்கிழமை 54% இல் இருந்து 104% ஆக அதிகரித்த பின் இன்று புதன் சீனா அமெரிக்க பொருட்களுக்கான இறக்குமதி வரியை 34% இல் இருந்து 84% ஆக அதிகரித்து உள்ளது. இதனால் பங்குச்சந்தைகள் மேலும் கவிழும் வாய்ப்பு அதிகமாகிறது. ரம்ப் இரண்டாம் தடவை பதவிக்கு வந்த பின் சீன பொருட்களுக்கு முதலில் 10% இறக்குமதி வரியை அறிவித்து இருந்தார். பின் உலக நாடுகள் எல்லாவற்றுக்கும் 10% வரியை அறிவித்தார். […]
அமெரிக்க சனாதிபதி ரம்ப் ஆரம்பித்த இறக்குமதி வரிகள் காரணமாக கடந்த 3 தினங்களாக அமெரிக்க மற்றும் உலக பங்கு சந்தைகள் பாரிய வீழ்ச்சியை அடைந்துள்ளன. இதற்கிடையில் நேற்று திங்கள் X அல்லது Twitter எனப்படும் social media வில் வெளிவந்த பொய் செய்தி ஒன்று அமெரிக்க பங்கு சந்தை சுட்டிகளை பல ட்ரில்லியன் பெறுமதியால் அதிகரிக்க செய்து, பின் சில நிமிடங்களில் மீண்டும் வீழ்த்தி உள்ளது. இந்த social media பொய் செய்தியால் பலர் பெருமளவு பணம் […]
அமெரிக்க பொருட்களுக்கு சீனா அண்மையில் நடைமுறை செய்த 34% மேலதிக பதிலடி வரியை செவ்வாய்க்கு முன்னர் நீக்காவிட்டால் சீனா மீதான இறக்குமதி வரியை தான் மேலும் 50% ஆல் அதிகரிக்க உள்ளதாக சனாதிபதி ரம்ப் திங்கள் மிரட்டி உள்ளார். ரம்பின் 50% மிரட்டலுக்கு பின் சீனாவை அழுத்துவது அல்லது மிரட்டுவது (pressuring or threatening) சரியான வழியல்ல என்று சீன தூதரகம் கூறியுள்ளது. சுமார் 45,000 ஆக உயர்ந்து இருந்த அமெரிக்க DOW பங்கு சந்தை சுட்டி […]