ரஷ்ய விளையாட்டு வீரர்கள் அதிக அளவில் ஊக்க மாத்திரை பயன்படுத்துகிறார்கள் என்று அறிந்த WADA (World Anti-Doping Agency) ரஷ்யா மீது 4-வருட தடை விதித்து உள்ளது. போட்டிகளில் மேலதிக உந்து சக்தியை பெறும் நோக்கில் சில விளையாட்டு வீரர்கள் ஊக்க மாத்திரைகளை பயன்படுவர். ஆனால் அது சட்டத்துக்கு விரோதம். . மேற்படி தடை காரணமாக ரஷ்யா 2020 Tokyo ஒலிம்பிக், 2022 Qatar World Cup போன்ற போட்டிகளில் பங்கு கொள்ளுமா என்பது சந்தேகமே. . […]
தற்போது நேபாளத்தில் இடம்பெற்றுவரும் 2019 ஆம் ஆண்டுக்கான தென்னாசிய விளையாட்டு போட்டியில் புதன்கிழமை வரையிலான காலத்தில் இந்தியா 70 பதக்கங்களை பெற்று முன்னணியில் உள்ளது. இதில் 34 தங்க பதக்கங்களும், 23 வெள்ளி பதக்கங்களும், 13 பித்தளை பதக்கங்களும் அடங்கும். . இரண்டாம் இடத்தில் உள்ள நேபாளம் மொத்தம் 69 பதக்கங்களை வென்றுள்ளது. அதில் 29 பதக்கங்கள் தங்க பதக்கங்கள். . இலங்கை 8 தங்க பதக்கங்கள், 23 வெள்ளி பதக்கங்கள், 38 பித்தளை பதக்கங்கள் அடங்க […]
2019 ஆம் ஆண்டின் பெண்களுக்கான FIFA (Federation Internationale de Football Association கேடயத்தை வென்றது அமெரிக்கா. நெதர்லாந்துக்கும் அமெரிக்காவுக்கும் இடையே இன்று பிரான்சின் Lyon நகரில் இடம்பெற்ற இறுதி ஆட்டத்தில் அமெரிக்கா 2 goal களையும் , நெதர்லாந்து 0 goal களையும் பெற்றுள்ளன. . 2019 ஆம் ஆண்டின் வெற்றியும், 2015 ஆம் ஆண்டின் வெற்றியும் அமெரிக்க பெண்கள் FIFA அணிக்கு அடுத்தடுத்தான (back-to-back) வெற்றியை வழங்கி உள்ளது. இன்றைய வெற்றியுடன் அமெரிக்க பெண்கள் […]
தற்போது 15 வயதுடைய Cori Gauff என்ற அமெரிக்கா tennis விளையாட்டு வீராங்கனை தற்போது tennis விளையாட்டில் இராணியான இருக்கும் வீனஸ் வில்லியத்தை (Venus Williams) இன்று வென்றுள்ளார். தற்போது இடம்பெறும் விம்பிள்டன் (Wimbledon 2019) போட்டியிலேயே Gauff தனது சாதனையை நிகழ்த்தி உள்ளார். . Gauff பிறப்பதற்கு முன்னரே வீனஸ் வில்லியம் 2 விம்பிள்டன் வெற்றிகள் உட்பட 4 Grand Slam வெற்றிகளை வென்றிருந்தவர். . 1968 ஆம் ஆண்டு முதல் இன்றுவரையான காலத்தில் அதிகுறைந்த […]
ஸ்பெயின் நாட்டவரான, 33 வயதுடைய, நடால் (Rafael Nadal) இன்று மீண்டும் French Open என்ற tennis போட்டியை வென்றுள்ளார். இது அவரது 12 ஆவது French Open வெற்றியாகும். இவர் 2005 ஆம் ஆண்டில், தனது 19 ஆவது வயதில், முதலாவது French Open வெற்றியை இவர் அடைந்திருந்தார். இதுவரையான இவரின் மொத்த வெற்றிகளின் எண்ணிக்கை 18 ஆகும். Roger Federer என்பவரிடம் மொத்தம் 20 வெற்றிகள் உண்டு. . இடது கை வல்லமை கொண்ட […]
பிரான்ஸ் (France) மற்றும் குரோசியா (Croatia) ஆகிய நாடுகளுக்கு இடையே இன்று ஞாயிரு இடம்பெற்ற 2018 FIFA உதைபந்தாட்ட இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் வென்றுள்ளது (பிரான்ஸ்: 4, குரோசியா: 2). . பிரான்ஸ் 1998 ஆம் ஆண்டிலும் FIFA கிண்ணத்தை வென்றிருந்தது. அத்துடன் 2006 ஆம் ஆண்டில் இரண்டாம் இடத்தையும், 1958 ஆம் மற்றும் 1986 ஆம் ஆண்டுகளில் 3ஆம் இடத்தையும் பிரான்ஸ் வென்றிருந்தது. அதேவேளை 2010 ஆம் ஆண்டில் பிரான்ஸ் 29 ஆம் இடத்தில் இருந்துள்ளது. […]
பிரித்தானியாவுக்கும் குரேசியாவுக்கும் (Croatia) இடையில் இன்று இடம்பெற்ற FIFA கிண்ணத்துக்கான அரை-இறுதி (Semi-final) ஆட்டத்தில் குரேசியா வென்றுள்ளது (குரேசியா 2 : இங்கிலாந்து 1). அதனால் குரேசியா இறுதி போட்டிக்கு (Final) தெரிவாகி உள்ளது. . ஏற்கனேவே பெல்ஜியத்துடன் போட்டியிட்ட பிரான்ஸும் வெற்றி பெற்று (1:0) இறுதி போட்டிக்கு தெரிவாகி இருந்தது. அதன்படி பிரான்சும், குரேசியாவும் முதலாம் மற்றும் இரண்டாம் இடங்களுக்கான போட்டியில் வரும் ஞாயிற்று கிழமை, 15ஆம் திகதி விளையாடும். . பிரான்சிடம் தோல்வி கண்ட […]
பசுபிக் கடலை நீந்திக்கடக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் பிரெஞ்சு நாட்டு Ben Lecomte என்பவர். சுமார் 9,000 km நீளம் கொண்ட இவரின் நீச்சல் ஜப்பானின் கிழக்கு கரையில் ஆரம்பித்து அமெரிக்காவின் மேற்கு கரையான San Franciscoவில் முடிவடையும். இந்த சாதனையை இவர் வெற்றிகரமாக நிறைவு செய்தால் இவரே பசுபிக் கடலை நீந்திக்கடந்த முதலாவது நபர் ஆவார். . தான் தினமும் 8 மணித்தியாலங்கள் நீந்தவுள்ளதாக இவர் கூறியுள்ளார். இவருக்கு உதவியாக வள்ளம் ஒன்று இவருடன் பயணிக்கும். இந்த […]
இலங்கையில் இடம்பெறும் cricket விளையாட்டு போட்டி முடிபுகளை தமது விருப்பத்துக்கு ஏற்றவாறு அமைத்து பெரும் பணத்தை சட்டவிரோத குழுக்கள் பெறுவதாக Al Jazeera என்ற கட்டார் நாட்டு தொலைக்காட்சி நிறுவனம் கூறுகிறது. இந்த தொலைக்காட்சி நிறுவனம் இரகசியமாக பதிவு செய்த video படங்கள் விரைவில் ஒளிபரப்பப்படவுள்ளன. . 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இடம்பெற்ற இலங்கை-இந்தியா போட்டியும், அதே வருடம் ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற இலங்கை-அஸ்ரேலியா போட்டியும் இவ்வாறு ‘fix’ செய்யப்பட்ட போட்டிகள் என்று கூறுகிறது […]