இந்தியாவின் Neeraj Chopra இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஈட்டி எறிதல் விளையாட்டில் (javelin) தங்க பதக்கம் பெற்றுள்ளார். Tokyo 2020 போட்டியில் இவர் ஈட்டியை 87.58 மீட்டர் தூரம் எறிந்து முதலிடத்தை அடைந்து உள்ளார். Neeraj Chopra, வயது 23, ஒரு இராணுவத்தினர். இவர் இந்தியாவின் Rajputana Rifles என்ற இராணுவ அணியில் உள்ளார். இதுவே இந்தியாவின் முதல் ‘athletics’ தங்க பதக்கமாகும். ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியா இதுவரை 10 தங்க பதக்கங்களை வென்று இருந்தாலும், அவை […]
இன்று வியாழன் இடம்பெற்ற ஆண்களுக்கான field hockey ஒலிம்பிக் விளையாட்டில் இந்தியா மூன்றாம் இடத்தை அடைந்து பித்தளை பதக்கத்தை வென்றுள்ளது. ஜெர்மனியை தோற்கடித்தே இந்தியா இந்த பதக்கத்தை வென்றுள்ளது. முதலாம் இடத்தில் பெல்ஜியமும், இரண்டாம் இடத்தில் அஸ்ரேலியாவும் உள்ளன. தற்போது இந்தியா 2 வெள்ளி மற்றும் 3 பித்தளை பதக்கங்களாக மொத்தம் 5 பதக்கங்களை வென்றுள்ளது. 1900ம் ஆண்டு முதல் இந்தியா 33 பதக்கங்களையே வென்றுள்ளது. அதில் 12 பதக்கங்கள் field hockey விளையாட்டுக்கே கிடைத்தன. முற்காலங்களில் […]
கரோனா வரைஸ் தாக்கத்தின் மத்தியிலும் இன்று வெள்ளிக்கிழமை (23/07/2021) பின்போடப்பட்ட Tokyo 2020 ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாகி உள்ளன. இம்முறை போட்டிகளை நேரடியாக காண பார்வையாளர் எவரும் அனுமதிக்கப்படவில்லை. தொலைக்காட்சிகள் மூலமே போட்டிகள் ஆவலரை அடையும். ஆரம்ப விழாவின் வாணவேடிக்கையும் தொலைக்காட்சிக்கு பொருந்தும் வகையிலேயே இடம்பெற்றது. பங்குகொள்ளும் நாடுகளின் அணிவகுப்பும் 5,700 பேரை மட்டுமே கொண்டிருந்தது. 2016ம் ஆண்டு போட்டியில் 16,000 க்கும் அதிமானோர் அணிவகுத்து இருந்தனர். ஜூலை 1ம் திகதி முதல் ஒலிம்பிக் வளாகத்தில் மட்டும் […]
சீனாவில் Zhang Ziyu என்ற 14 வயது மாணவி தற்போது 2.26 மீட்டர் (7 அடி 5 அங்குலம்) கொண்டவளாக உள்ளார். ஒரு கூடைப்பந்து விளையாடும் இவர் Yao Ming என்ற முன்னாள் சீன கூடை பந்தாட்ட வீரனை நினைவு கொள்ள வைக்கிறார். Yao Ming முன்னாள் வீரர் 2.29 மீட்டர் (7 அடி 6 அங்குலம்) உயரம் கொண்டவர். ஏனைய கூடை பந்தாட்ட வீரர் துள்ளி, பாய்ந்து பந்தை கூடைக்குள் போடும் நிலையில், Zhang Ziyu […]
இன்று இடம்பெற்ற Euro 2020 உதைபந்தாட்ட இறுதி போட்டியில் இத்தாலி முதலாம் இடத்தை வென்றுள்ளது. அதனுடன் மோதிய இங்கிலாந்து இரண்டாம் இடத்தை அடைந்து உள்ளது. கரோனா காரணமாக Euro 2020 இந்த ஆண்டே இடம்பெற்றது. ஆட்டம் ஆரம்பித்து 2 நிமிடங்களில் இங்கிலாந்து தனது 1வது புள்ளியை (goal) பெற்றது. இத்தாலி 67 நிமிடங்களின் பின் தனது 1ம் புள்ளியை பெற்றது. ஆனால் 90 நிமிடங்களின் வழங்கப்பட்ட மேலதிக நேரத்தின் பின்னரும் 1:1 என்ற நிலையிலேயே புள்ளிகள் இருந்தன. […]
2026 ஆம் ஆண்டுக்கான Commonwealth போட்டிகள் இலங்கையின் ஹம்பந்தோட்டை நகரில் இடம்பெற சந்தர்ப்பங்கள் உண்டு என்று கருதப்படுகிறது. கனடாவின் ஒன்றாரியோ மாநிலத்தில், Toronto நகருக்கு மேற்கே, அமைந்துள்ள Hamilton என்ற நகரமே 2026 Commonwealth போட்டிகளை கொண்டிருக்க விரும்பும் நகரங்களில் முன்னணியில் உள்ளது. ஆனால் ஒன்றாரியோ மாநிலம் அதை விரும்பவில்லை. 2026 ஆம் ஆண்டு FIFA World Cup உதைபந்தாட்ட போட்டிகள் கனடா (Toronto), அமெரிக்கா, மெக்ஸிக்கோ ஆகிய நாடுகளில் இடம்பெறவுள்ளதால் 2026 ஆம் ஆண்டுக்கான Commonwealth […]
உலகின் மிக சிறந்த உதைபந்தாட்ட வீரரான டியேகோ மரடோனா (Diego Maradona) இன்று புதன் (2020/11/25) தனது 60 ஆவது வயதில் மாரடைப்புக்கு பலியானார். இவர் captain ஆக இருந்து 1986 ஆம் ஆண்டு ஆர்ஜென்டீனா World Cup உதைபந்தாட்ட வெற்றியை அடைய வழி வகுத்தவர். 1986 ஆம் ஆண்டு ஆர்ஜென்டீனாவுக்கும், பிரித்தானியாவுக்கு இடையில் இடம்பெற்ற FIFA போட்டியின் 90 நிமிட காலிறுதி (quarterfinal) ஆட்டத்தின்போதான மரடோனாவின் விளையாட்டு தரம் உலக புகழ் பெற்றது. ஆர்ஜென்டீனாவை உலக […]
சுமார் 3 மாதங்களாக கொரோனா வைரசால் முடங்கி இருந்த சீனாவில் தற்போது $1.7 பில்லியன் பெறுமதிக்கு 100,000 ஆசனங்களை கொண்ட உதைபந்தாட்ட மைதானம் ஒன்றை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு உள்ளன. கடந்த வியாழன் ஆரம்பிக்கப்பட்ட கட்டுமான வேலைகள் 2022 ஆம் ஆண்டில் பூரணம் அடைந்து அவ்வாண்டு மைதானம் பாவனைக்கு வரும். . Guangzhou Evergrande என்ற உதைபந்தாட்ட குழுவுக்கு சொந்தமான இந்த மைதானம் ஹாங் காங் நகருக்கு அண்மையில் உள்ள Guangzhou நகர் பகுதியில் அமையும். இந்த […]
வரும் ஜூலை 24 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட இருந்த Tokyo 2020 ஒலிம்பிக் போட்டிகள் திட்டமிட்டபடி ஜூலை 24 ஆம் திகதி ஆரம்பிக்கப்படாது. பதிலாக இந்த போட்டிகள் 2021 ஆம் ஆண்டு கோடை காலத்துக்கு முன்னரான காலத்தில் இடம்பெறும் என்று தற்போது கூறப்பட்டுள்ளது. . கொரோனா வைரஸ் காரணமாக போட்டிகளை பின்தள்ளும் ஜப்பானின் விருப்பத்தை ஒலிம்பிக் அமைப்பு ஏற்றுக்கொண்டு இந்த பின்தள்ளலை உறுதி செய்துள்ளது. 2021 ஆண்டில் இடம்பெற்றாலும் இந்த போட்டி Tokyo 2020 என்றே அழைக்கப்படும். […]
உலகம் எங்கும் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் காரணமாக Tokyo நகரில் இடம்பெறவுள்ள இந்த ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகளும் நிறுத்தப்படலாம் என்று ஒலிம்பிக் அதிகாரி Dick Pound கூறியுள்ளார். . Tokyo 2020 ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 24 ஆம் திகதி முதல் இடம்பெறவுள்ளன. இதில் சுமார் 11,000 போட்டியாளர் பங்கு கொள்வர். . ஆனால் இந்த போட்டிகள் பெரும் திரளான பார்வையாளர் பங்கு கொள்ளும் இடம் ஆகையால், கொரோனா வைரஸின் பாதிப்பு தொடருமானால், போட்டிகளை […]