முதலில் பாவனைக்கு வந்திருந்தது முனைக்கு-முனை பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்ட (dedicated) copper கம்பிகளால் தொடுக்கப்பட்ட தொலைபேசி முறைமை. அழைக்கப்படும் நபர் அழைக்கும் நபரின் அடுத்த வீட்டில் இருந்தால் என்ன, அடுத்த கண்டத்தில் இருந்தால் என்ன, அவர்களின் தொலைபேசிகள் copper wire களினால் உரையாடல் தொடரும் வரை இணைக்கப்பட்டு இருந்தன. முதலில் இந்த இணைப்பு வேலைகளை மனித இணைப்பாளர்களே செய்து வந்திருந்தனர். பின்னர் தொழில் நுட்பம் நிறைந்த இலத்திரனியல் உபகரணங்கள் இந்த இணைப்புக்களை இணைத்து வந்தன. இணைப்பை மனிதன் இணைந்தால் […]
அமெரிக்காவின் NASA இன்று காலை Florida நேரப்படி 7:05 மணிக்கு செலுத்திய Orion என்ற விண்கலம் தனது பரீட்சையை வெற்றிகரமாக முடித்துள்ளது. இந்த பரீட்சை புதன் கோளுக்கு மனிதரை எடுத்துச்செல்லும் நோக்கிற்கான முதல் பரீட்சையே. . மொத்தம் 4 மணித்தியாலங்கள் 24 நிமிடங்கள் பயணித்த இந்த கலம் இரண்டு தடவைகள் பூமியை வலம் வந்து இருந்தது. இது முதல் சுற்றில் 270 km உயரத்திலும் இரண்டாம் சுற்றில் 5794 km உயரத்திலும் பயணித்து இருந்தது. தற்போது உலகை […]
F-35 அல்லது Joint Strike Fighter என்று அழைக்கப்படும் யுத்த விமானம் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா போன்ற பல மேற்கு நாட்டு படைகளுக்கு பலம் ஊட்டப்போகும் அடுத்த சந்ததி யுத்த விமானம். தரைப்படைக்கு ஒருவகை யுத்தவிமானம், வான் படைக்கு இன்னொரு வகை விமானம், கடல் படைக்கு (aircraft carrier) பிறிதொரு விமானம் என்றெல்லாம் இல்லது எதிர்வரும் காலத்தில் முப்படைகளும் இந்த F-35 என்ற ஒருவகை விமானத்தை, சில சிறிய மாற்றங்களுடன், மட்டுமே கொண்டிருக்கும். தொழில்நுட்ப்பத்தில் மிகையான […]
ஜப்பானின் தெற்கே சும்மார் 1000 km தூரத்தில் புதிதாக ஒரு தீவு தோன்றிவருகிறது. எரிமலை (Volcanic) நிகழ்வுகள் அதிகம் காணப்படும் ஜப்பானுக்கும் தெற்கே உள்ள Bonin தீவுகள் பகுதியிலேயே இந்த புதிய தீவு தோன்றுகிறது. இந்த புதிய தீவுக்கு Niijima தீவு என்று பெயரிடப்பட்டாலும் இந்த புதிய தீவு ஏற்கனவே தோன்றியுள்ள Nishino-shima தீவுக்கு அண்மையில் தோன்றி, இரண்டு தீவுகளும் சேர்ந்து Snoopy என்ற பிரபல cartoon நாய்க்குட்டியை ஒத்துள்ளதால் பலரும் இதை Snoopy தீவு என […]
இந்த வருடம் மாசி மாதம் பெரியதோர் விண்கல் ரஷ்யாவின் Chelyabinsk என்ற நகரின் அண்மையில் வீழ்ந்திருந்தது.இன்று புதன்கிழமை அந்த கல்லை Chebarkul வாவிக்கு அடியில் இருந்து மீட்டுள்ளனர். இந்த கல் வீழ்ந்தபோது பனிப்பாறை படர்ந்த வாவியின் மேற்பரப்பில் 20 அடி துளையை ஏற்படுத்தி இருந்தாலும் சுமார் 40 அடி ஆழத்தில் 8 அடி சதுப்புக்குள் புதைத்திருந்த இந்த கல்லை கண்டுபிடித்து எடுக்க 7 மாதங்கள் வரை எடுத்துள்ளது. இதை வாவிக்கு வெளியே எடுக்கும்போது 3 துண்ட்டுகளாக உடைந்துள்ளது. […]
வரும் வெள்ளிக்கிழமை (மாசி மாதம் 15 ஆம் திகதி) 2012 DA14 என்ற விண்கல் பூமிக்கு மிக அண்மையில் செல்லவுள்ளது. இந்த கல்லின் பாதை வழமையாக செய்மதிகள் சுற்றிவரும் பாதையை ஊடறுத்து செல்கிறது. ஆனாலும் இந்த கல்லால் பூமிக்கு எந்தவித பாதிப்பும் நிகழ மாட்டாது என NASA அறிவித்துள்ளது. மெரும்பாலான செய்மதிகள் பூமியில் இருந்து சுமார் 35,000 km உயரத்தில் சுற்றும். இந்த விண்கல் அந்த தூரத்திலேயே ஊடறுத்து செல்லும். பூமிக்கும் சந்திரனுக்கும் இடையேயான தூரம் சுமார் 385,000 km. இந்த […]
இந்த மாதம் 30ஆம் திகதி முதல் Research in Motion ஒரு புதிய OS ஐ பயன்படுத்த தொடங்கவுள்ளது. இதன் பெயர் QNX. QNX கனடாவில் 1982 ஆம் ஆண்டு Quantum Software System என்ற நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. 2010 ஆம் ஆண்டு இதை Research in Motion கொள்வனவு செய்திருந்தது. எதிர்வரும் 30 ஆம் திகதி சந்தைக்கு வரும் BB10 என்ற cell phone இந்த OS ஐயே கொண்டிருக்கும். QNX இன் வரவு OS போட்டியை உக்கிரமாக்கும் என்பதில் சந்தேகமில்லை.