Zheng Shuang என்ற பிரபல சீன நடிகை (வயது 29) தனக்கும், Zhang Heng (வயது 30) என்ற தயாரிப்பாளருக்கும் அமெரிக்காவில் இரண்டு வாடகை தாய்மார்கள் மூலம் (surrogacy) பெற்ற இரண்டு குழந்தைகளையும் கைவிட்டுள்ளார். இந்த நடிகையின் செயல் சீனாவில் அவர்மீது எதிர்ப்பை உருவாகியுள்ளது திருமணமாகாதா நடிகை Zheng தயாரிப்பாளர் Zhang உடனான உறவை முறித்துக்கொண்டதே குழந்தைகளை கைவிட காரணம் என்று கூறப்படுகிறது. குழந்தைகள் தற்போது அமெரிக்காவில் தங்கியுள்ள தந்தை Zhang உடன் வாழ்கின்றன. ஆண் குழந்தை […]
ரஷ்யாவின் Sputnik-V என்ற கரோனா தடுப்பு மருந்து எதிர்பார்த்தபடி நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கிறது என்று ரஷ்யா கூறியுள்ளது. ஆனால் மேற்கு நாடுகள் சிறிது நம்பிக்கையையே கொண்டுள்ளார். மருந்தை பெருமளவு மக்களுக்கு வழங்கி பரிசோதனை செய்யாமை, நீண்ட காலம் பரிசோதனையை செய்யாமை ஆகியனவே மேற்கு நாடுகளின் நம்பிக்கை இன்மைக்கு காரணம். ரஷ்யாவின் தடுப்பு மருந்து ஜூன் மாதமும் ஜூலை மாதமும் இரண்டு 38 சுகதேகிகளை கொண்ட குழுக்களுக்கு வழங்கப்பட்டு இருந்தது. அவர்கள் 18 முதல் 60 வயது […]
Life of pie, Slumdog Millionaire ஆகிய திரைப்படங்களில் நடத்திருந்த Irrfan Khan தனது 53 ஆவது வயதில் புற்றுநோய்க்கு (neurodocrine tumour) பலியாகினார். இவரின் மரண செய்தியை இன்று புதன்கிழமை அவரது பேச்சாளர் அறிவித்து உள்ளார். கடந்த சில தினங்களாக இவர் மும்பாய் வைத்தியசாலை ஒன்றில் வைத்தியம் பெற்றுவந்திருந்தார். . 1988 ஆம் ஆண்டு Salaam Bombay என்ற படத்தில் ஒரு சிறிய பங்கில் நடித்து இவர் தனது நடிப்பு வாழ்வை ஆரம்பித்து இருந்தார். இந்திய […]
World Health Organization (WHO) தாய் பாலூட்டலை ஊக்குவிக்கும் நோக்கில் நடைமுறை செய்யவிருந்த செயல்பாடுகளை அமெரிக்காவின் ரம்ப் அரசு தடுக்க முனைந்துள்ளமை தற்போது தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் New York Times பத்திரிகை இந்த உண்மைகளை வெளியிட்டுள்ளது. இறுதியில் ரஷ்யாவின் உதவியுடனேயே WHO அமைப்பின் இந்த முயற்சிகள் நடைமுறை செய்யப்பட்டன. . அண்மையில் WHO தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை உலக நாடுகளுக்கு உணர்த்த தீர்மானம் ஒன்றை செய்யவிருந்தது. அத்துடன் அரசுகள் குழந்தை உணவுகளை தயாரிக்கும் நிறுவனங்கள் பொய்யான பிரச்சாரங்களை மேற்கொள்ளவதையும் […]
இந்திய நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பு காரணமாக இன்று சனிக்கிழமை தனது 54வது வயதில் மரணமாகி உள்ளார். இவர் தனது உறவினர் ஒருவரின் திருமண நிகழ்வுக்கு Dubai சென்றிருந்தபோதே மரணமாகி உள்ளார். . 1963 ஆம் ஆண்டு தமிழ்நாடு சிவகாசியில் தமிழ் தந்தையாருக்கும், தெலுங்கு தாயாருக்கும் பிறந்த இவர் ‘துணைவன்’ படம் (1969) மூலம் தனது நடிப்பு தொழிலை ஆரம்பித்து இருந்தார். . இவர் முதன்மை பாத்திரமாக நடித்த திரைப்படம் கே. பாலசந்தரின் ‘மூன்று முடிச்சு’ என்ற 1976 […]
Anthony Bourdain என்ற அமெரிக்கர் உலகம் எங்கும் சென்று பல்வேறு சமையல் முறைகளையும், அந்த மக்களின் வாழ்வு முறைகளையும் தொலைக்காட்சி விவரண படமாக தாயரிப்பவர். இவரின் இந்த விவரண படங்கள் அமெரிக்காவின் CNN உட்பட பல தொலைக்காட்சி சேவைகளில் ஒளிபரப்பு செய்யப்படும். . Anthony Bourdain இலங்கைக்கு முன்னரும் பயணம் செய்து சமையல் தொலைக்காட்சிகள் தயாரிப்பு செய்திருந்தாலும், இவர் அண்மையில் யாழ் சென்று மேலும் ஒரு விவரண படத்தை தயாரித்து உள்ளார். இவரின் யாழ் பயணத்தின்போது முக்கிய […]
ஒருவரை ‘வியர்வை சிந்த உழைத்தவர்’ என்று அழைப்பது சாதாரணம். ஒருபடி மேலே சென்று சிலரை ‘உதிரம் சிந்த உழைத்தவர்’ என்றும் அழைப்பது உண்டு. அப்படி உத்திரம் சிந்துவது சாத்தியமா? அது சாத்தியம் என்கிறது Canadian Medical Association Journal (CMAJ) பதிப்பு செய்த ஆய்வு கட்டுரை ஒன்று. . இன்று அக்டோபர் 23 ஆம் திகதி CMAJ வெளியிட்ட கட்டுரை ஒன்றிப்படி, இத்தாலி நாட்டில் 21 வயதுடைய பெண் ஒருவர் கடந்த 3 வருடங்களாக இவ்வாறு இரத்தம் […]
அமெரிக்காவின் விஸ்கான்சின் (Wisconsin) மாநிலத்தில் Ceylon Lagoon என்ற ஒரு சிறிய நீர் பரப்பு உண்டு. இந்து சமுத்திரத்தில் உள்ள இலங்கையின் பெயரில் வடஅமெரிக்காவில், அமெரிக்க-கனேடிய எல்லையோரமாக உள்ள இந்த குடா தனக்குள்ளே ஒரு பெரும் கதையையே கொண்டுள்ளது. . Geneva Lake என்ற வாவி Wisconsin மாநிலத்தவர்களுக்கும் அதை அண்டிய மாநிலத்தவர்களுக்கும் ஒரு கோடைகால சுவர்க்கம். சுமார் 12 km நீளத்தையும், 22 சதுர km பரப்பளவையும் கொண்ட இந்த வாவி அருகே, கிழக்கு பக்கமாக, […]
அண்மையில் வெளியான விஜயின் திரைப்படமான ‘தெறி’ திரையிடப்படல் கனடாவில் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. Scarborough, Brampton, Mississauga ஆகிய இடங்களில் இத்திரைப்படம் வெளியிடப்பட்டு இருந்தது. ஆனால் அந்த திரை அரங்கு ஒன்றில் கெடுதியான வாயு பரவல் இடம்பெற்றதால் பார்வையாளர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டு, திரையிடலும் நிறுத்தப்பட்டது. பின்னர் Richmond Hill நகரில் இன்று மேலும் ஒரு திரையரங்கு அப்படத்தை திரையிடலை நிறுத்தி உள்ளது. பொலிசார் சம்பவத்தை விசாரணை செய்கிறார்கள். . முதல் 6 நாட்களில், உலக அளவில் இப்படம் சுமார் […]