இலங்கையில் முருங்கை மரத்தை அடிப்படியாக கொண்ட மருத்துவ தயாரிப்புகளுக்கு கியூபா உதவ முன்வந்துள்ளது என்று இன்று புதன்கிழமை கூறப்பட்டு உள்ளது. கியூபாவின் இலங்கைக்கான தூதுவர் Andres Gonzalez இந்த இந்த அறிவிப்பை செய்துள்ளார். கியூபா முருங்கை குளிசைகள் மற்றும் முருங்கை இலை தூள் போன்றவற்றை ஏற்கனவே தயாரிக்கிறது. ஆனாலும் முருங்கை இந்தியாவில் இருந்தே உலகம் எங்கும் பரவி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. ஆங்கிலத்தில் முருங்கை காயை drumstick என்று சிலர் அழைத்தாலும், பொதுவாக Moringa என்ற தமிழ் […]
காளானை (mushroom) உண்பது புற்றுநோய் ஏற்படுவதை சுமார் 45% ஆல் குறைக்கும் என்கிறது அமெரிக்காவின் Pennsylvania State University ஆய்வு ஒன்று. தினமும் இரண்டு நடுத்தர அளவிலான காளானை உண்பது மேற்படி அளவிலான புற்றுநோய் தவிர்ப்புக்கு உதவுமாம். 1966ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரையான காலத்து 17 ஆய்வுகளின் தரவுகளை ஆய்ந்த பின்னரே இந்த கருத்தை மேற்படி ஆய்வுக்குழு வெளியிட்டு உள்ளது. இந்த ஆய்வுக்கு 19,500 புற்றுநோய் நோயாளிகளின் தவுகள் உள்ளடக்கப்பட்டு இருந்தன. காளானில் vitamins, […]
Anthony Bourdain என்ற அமெரிக்கர் உலகம் எங்கும் சென்று பல்வேறு சமையல் முறைகளையும், அந்த மக்களின் வாழ்வு முறைகளையும் தொலைக்காட்சி விவரண படமாக தாயரிப்பவர். இவரின் இந்த விவரண படங்கள் அமெரிக்காவின் CNN உட்பட பல தொலைக்காட்சி சேவைகளில் ஒளிபரப்பு செய்யப்படும். . Anthony Bourdain இலங்கைக்கு முன்னரும் பயணம் செய்து சமையல் தொலைக்காட்சிகள் தயாரிப்பு செய்திருந்தாலும், இவர் அண்மையில் யாழ் சென்று மேலும் ஒரு விவரண படத்தை தயாரித்து உள்ளார். இவரின் யாழ் பயணத்தின்போது முக்கிய […]
அமெரிக்காவில் தயாரிக்கப்படும் Parmesan என்ற cheese வகையில் சுமார் 8% மரக்கூழ் என்ற உண்மை வெளியாகியுள்ளது. அத்துடன் இவ்வாறு cheese மரக்கூழை கொண்டிருப்பது அமெரிக்க அரசால் அனுமதிக்கப்பட்ட முறைமையே. பொதுவாக 1% முதல் 2% வரையான பங்கே மரக்கூழ் ஆக இருப்பது அனுமதிக்கப்பட்டு இருந்தாலும் சில அமெரிக்க Parmesan cheese தயாரிப்புகள் 8% வரை மரக்கூழாக உள்ளதாம். . Parmesan cheese திரண்டு கட்டியாகாமல் இருப்பதற்காகவே இவ்வாறு மரக்கூழ் சேர்க்கப்படுகிறது. உண்மையில் இது நன்கு அரைக்கப்பட்டு cellulose […]
சீனாவுக்கு அடுத்ததாக உலகில் அதிகம் வெங்காயத்தை உற்பத்தி செய்யும் நாடு இந்தியா. அத்துடன் வெங்காயம் இந்தியர்களின் சமையலில் ஓர் முக்கிய அங்கமாகும். இந்தியர்கள் வருடம் ஒன்றுக்கு சுமார் 16.5 மில்லியன் தொன் வெங்காயத்தை கொள்வனவு செய்கிறார்கள். இந்நிலையில் இந்தியாவில் வெங்காயத்துக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த பாரிய தட்டுப்பாடு காரணமாக ஒரு Kg வெங்காயத்தின் விலை Rs 100.00 வரைக்கு உயர்ந்துள்ளது. சில மாதங்களின் முன் ஒரு Kg Rs 25.00 ஆக இருந்துள்ளது. இந்த அதீத […]
வாரம் இருமுறை பச்சையாக உள்ளி (வெள்ளைப்பூடு, garlic) உட்கொண்டு வந்தால் நுரையீரல் புற்றுநோய்வாய்ப்படுவதை 44% ஆல் குறைக்கலாம் என்று சீன ஆய்வு ஒன்று கணித்துள்ளது. சீனாவின் Jiangsu மாநிலத்தில் உள்ள Cancer Prevention Research என்ற அமைப்பே இந்த ஆய்வை தெரிவித்துள்ளது. 2003 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை நடைபெற்றிருந்த இந்த ஆய்வு சுமார் 4,500 சுகதேக நபர்களிடம் இருந்தும் 1,424 நுரையீரல் நோயாளிகளிடம் இருந்தும் தரவுகளை பெற்றிருந்தது. உள்ளியை கடிக்கும்போது அல்லது […]
செயல்முறை: Tofu கறி அம்பிகா ஆனந்தன் தேவையான பொருட்கள் (5 பேருக்கு பரிமாற): 1. மெதுமையான tofu சுமார் 1.0 kg 2. இரண்டு (2) நடுத்தர அளவான தக்காளி 3. ஒரு (1) நடுத்தர அளவான வெங்காயம் 4. ஒன்று அல்லது இரண்டு பச்சை மிளகாய் 5. சிறிது கருவேப்பிலை 6. கறித்தூள் ஒண்டரை (1.5) தேகரண்டி 7. கடுகு, பெரும் சீரகம், வெந்தயம் அளவாக (தாழிக்க) 8. சிறிது எண்ணை பொரிக்க 9. உப்பு அளவாக […]