தனது கடன்களுக்கு வட்டி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டு இன்று புதன் முறியும் நிலையில் இருந்து அமெரிக்கா இறுதி நேரத்தில் தப்பி உள்ளது. நேற்று செவ்வாய் இரவு காங்கிரஸ் அமெரிக்கா சட்டப்படி பெறக்கூடிய அதிகூடிய கடன் எல்லையை மேலும் $2.5 டிரில்லியனால் அதிகரித்து உள்ளதாலேயே அமெரிக்கா முறிவில் இருந்து தப்பி உள்ளது. இந்த அதிகரிப்பால் அமெரிக்கா 2023ம் ஆண்டு முடியும்வரை முறிவு நிலைக்கு தள்ளப்படாது இருக்கும். கடன் பெறக்கூடிய அளவு அதிகரிக்கப்படாவிடின் டிசம்பர் மாதம் 15ம் திகதியில் […]
Rogers Communication கனடாவின் மிகப்பெரிய நிறுவனம். Rogers Wireless, Fido Wireless, Chatr Wireless, Rogers Cable, Rogers Sports, Blue Jays team, Maple Leafs team, Raptors team அனைத்தும் இதன் அங்கம். சுமார் $24 பில்லியன் (C$30 பில்லியன்) பெறுமதியான இந்த நிறுவனத்தை ஆளும் Rogers குடும்ப சண்டை தற்போது நிறுவனத்தை நீதிமன்றம் இழுத்துள்ளது. 1960ம் ஆண்டுகளில் Ted Rogers என்பவர் இந்த நிறுவனத்தை ஆரம்பித்திருந்தார். அவர் 2008ம் ஆண்டு மரணமாகியபின் குடும்ப […]
இன்று இத்தாலியின் ரோம் நகரில் இடம்பெற்ற G20 அமர்வில் பல நாடுகளில் இயங்கும் multinational நிறுவனங்கள் மீது குறைந்தது-15% (minimum corporate tax) வரியை நடைமுறை செய்ய அங்கத்துவ நாடுகள் இணங்கி உள்ளது. உண்மையில் இந்த இணக்கம் கடந்த ஜூலை மாதமே அறியப்பட்டு இருந்தாலும், இன்றே தலைவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பல நாடுகளில் இயங்கும் Apple, Google போன்ற மேற்கு நாடுகளின் பெரு நிறுவனங்கள் தமது இலாபத்தை வரி குறைந்த நாடுகளுக்கு நகர்த்தி, உரிய வரி செலுத்துவதில் இருந்து […]
எல்லையில் இந்தியாவும், சீனாவும் முரண்டு செய்தாலும் இந்த இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மிக வேகமாக வளர்ந்து உள்ளது என்பதை வர்த்தக தரவுகள் காட்டுகின்றன. இரு நாடுகளுக்கும் இடையில் இந்த ஆண்டுக்கான மொத்த வர்த்தகம் $100 பில்லியனை மீறும் என்று கணிப்பிடப்படுகிறது. இந்த ஆண்டின் முதல் மூன்று காலாண்டிலும் (முதல் 9 மாதங்களில்) இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையிலான வர்த்தகம் $90.37 பில்லியன் ஆக இருந்துள்ளது. கடந்த ஆண்டின் முதல் 9 மாத கால தொகையுடன் ஒப்பிடுகையில் இந்த […]
கரோனா காரணமாக வீழ்ச்சி அடைந்திருந்த உலக பொருளாதாரத்தின் மீட்சி மேலும் மந்தமாகவே இருக்கும் என்று IMF இன்று செவ்வாய்க்கிழமை கூறியுள்ளது. புதிய கணிப்பின்படி உலக பொருளாதாரம் 5.9% ஆல் மட்டுமே வளரும். ஜூலை மாதம் கொண்டிருந்த கணிப்பிலும் இது 0.1% குறைவு. அமெரிக்கா, ஜேர்மனி ஆகிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததிலும் குறைவாக இருப்பதே பிரதான காரணங்கள் என்று கூறப்பட்டுள்ளது. வறிய நாடுகளில் கரோனா தடுப்பு மருந்து வேகமாக வழங்கப்படாமையும் காரணமாக உள்ளது. Chip தட்டுப்பாடு காரணமாக […]
இந்தியாவின் அரச நிறுவனமான Air India விமான சேவையை Tata Group கொள்வனவு செய்வதாக இன்று வெள்ளி அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த கொள்வனவுக்கு Tata $2.4 பில்லியன் செலவிடுகிறது. 2009ம் ஆண்டு முதல் நட்டத்தில் இயங்கும் Air India சேவையிடம் தற்போது 141 விமானங்கள் உண்டு. புதிய நிறுவனம் இந்திய அரசுக்கு 27 பில்லியன் இந்திய ரூபாய்களை வழங்கும். அத்துடன் Air India நிறுவனம் கொண்டிருக்கும் 153 பில்லியன் ரூபாய்கள் கடனையும் ஏற்றுக்கொள்ளும். மேலும் தற்போதைய Air […]
வரும் அக்டோபர் மாதம் 18ம் திகதிக்கு பின் அமெரிக்க மத்திய அரசிடம் பண இன்றிய நிலை உருவாகும் என்று அமெரிக்காவின் திறைசேரி செயலாளர் (Treasury Secretary) Janet Yellen இன்று செவ்வாய் கூறியுள்ளார். அமெரிக்க காங்கிரஸ் அமெரிக்கா பெறக்கூடிய உச்ச கடன் தொகையை அதிகரித்தால் மட்டுமே, மேலதிக கடன் பெற்று பணம் இல்லாது போகும் நிலையை தவிர்க்கலாம் என்றும் Yellen கூறியுள்ளார். அமெரிக்க சட்டப்படி காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளும் தொகைக்கு (debt ceiling) மேலாக கடன் பெற முடியாது. […]
அண்மை காலங்களில் உலகம் எங்கும் மக்கள் வீட்டு கொள்வனவுகளை முதலீட்டு வழியாக (investment vehicle) பயன்படுத்தி வருகின்றனர். இதனால் வீடு மற்றும் condo கட்டுமானம், கொள்வனவு எல்லாம் அளவுக்கு மிஞ்சி வளர்ந்துள்ளது. தேவைக்கு அப்பாற்பட்ட வளர்ச்சி சில இடங்களில் பாரிய இழப்புகளுக்கு காரணமாகி வருகிறது. தற்போது சீனாவின் China Evergrande என்ற நிறுவனம் பலரின் முதலீடுகளையும் அழித்து, தானும் அழியக்கூடும் என்ற நிலையில் உள்ளது. 1996ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட China Evergrande என்ற வீடு கட்டுமான நிறுவனம் […]
அமெரிக்காவின் வாகன உற்பத்தி நிறுவனமான Ford Motor Company தனது இந்திய வர்த்தக நடவடிக்கைகளை கைவிடுவதாக கூறியுள்ளது. இந்தியாவில் தம்மால் இலாபகரமாக செயற்பட முடியாது என்று Ford கூறியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் தமது இந்திய வர்த்தக நடவடிக்கை $2 பில்லியன் இழப்பை கொண்டுள்ளது என்றும் Ford கூறியுள்ளது. சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் Ford இந்தியாவில் இயங்க ஆரம்பித்து இருந்தது. ஆனால் அது இந்தியாவில் பலமாக காலூன்ற முடியவில்லை. தற்போது இந்தியாவில் விற்பனை செய்யப்படும் […]
அந்நிய செலாவணி பளுவை குறைக்கும் நோக்கில் இலங்கை அரசு இறக்குமதிகளுக்கு பெரும் கட்டுப்பாடுகளை இட்டுள்ளது. இச்செயல் அந்நிய செலவாணி பளுவை குறைக்க சிறிது நிவாரணம் வழங்கினாலும், இறக்குமதியில் பிணைந்துள்ள சிறு வர்த்தகங்கள் பாதிப்பை அடைகின்றன. இறக்குமதி தடைகள் காரணமாக கார், மோட்டார் சைக்கிள் போன்ற பாவித்த பொருட்களின் விலைகளும் உள்ளூரில் மிகையாக அதிகரித்து உள்ளன. இலங்கை சராசரியா ஆண்டு ஒன்றில் 50,000 முதல் 60,000 வாகனங்களை இறக்குமதி செய்யும். ஆனால் கட்டுப்பாடுகள் காரணமாக அத்தொகை தற்போது குறைந்து […]