Netflix என்ற இணையம் மூலம் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்யும் (streaming) நிறுவனம் இன்று நியூ யார்க் பங்கு சந்தையில் (Nasdaq) சுமார் $60 பில்லியனை இழந்துள்ளது. அந்த நிறுவனம் சுமார் 200,000 வாடிக்கையாளரை இழந்ததே இந்த பங்கு வீழ்ச்சிக்கு காரணம். நேற்று சுமார் $348 க்கு விற்பனை செய்யப்பட்ட Netflix பங்கு ஒன்று இன்று $212 வரையிலே விற்பனை செய்யப்படுகிறது. அதவாது கடந்த 24 மணி நேரத்தில் இந்த பங்கு ஒன்று சுமார் 39% வெகுமதியை இழந்து […]
நீண்ட காலமாக இந்தியாவின் முதலாவது பணக்காரராக இருந்த முகேஷ் அம்பானியை பின்தள்ளி நேற்று திங்கள் அடானி (Gautam Adani) இந்தியாவின் முதலாவது செல்வந்தர் ஆகியுள்ளார். தற்போது அடானியிடம் $88.5 பில்லியன் சொத்துக்கள் உள்ளதாகவும், அம்பானியிடம் $87.9 பில்லியன் சொத்துக்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சொத்துக்கள் பெரும்பாலும் திடமான பெறுமதியை கொண்டிராத பங்கு சந்தை பங்குகளே. அம்பானி பெருமளவு முதலீட்டை Facebook நிறுவனத்தில் செய்திருந்தார். அண்மையில் Facebook நிறுவன பங்கு பெரும் வீழ்ச்சி அடைந்த போது அம்பானியின் வெகுமதியும் […]
Facebook நிறுவனத்தின் தாய் நிறுவனமான Meta வின் பங்கு சந்தை பெறுமதி இன்று $252 பில்லியனை இழந்துள்ளது. இந்த நிறுவனத்தின் வர்த்தக வளர்ச்சி நலிவடைந்து செல்வதே காரணம். வேகமாக வளரும் Tik Tok நிறுவனம் Facebook வர்த்தகத்தை வேகமாக பறித்து வருகிறது. Facebook (அல்லது Meta) பங்கு ஒன்றின் விலை இன்று $85.24 ஆல் வீழ்ச்சி அடைந்து உள்ளது. அது 26.39% வீழ்ச்சி. பெரிய நிறுவனங்களின் இவ்வகை வீழ்ச்சியை ஒப்பிடுகையில் இதுவே மிக பெரிய வீழ்ச்சி. Facebook […]
இந்திய வர்த்தகர் அம்பானியின் தலைமையில் இயங்கும் Reliance Industries என்ற நிறுவனம் bond மூலம் $4 பில்லியன் வெளிநாட்டு முதலீடுகளை திரட்டி உள்ளது. இந்திய நிறுவனம் ஒன்று bond மூலம் பெற்ற மிகக்கூடிய தொகை இதுவே. இந்த bond சிங்கப்பூர் stock exchange மூலமே விற்பனை செய்யப்படுகிறது. இந்த bond களின் 53% த்தை ஆசியரும், 33% த்தை அமெரிக்கரும், 14% த்தை ஐரோப்பியரும் கொள்வனவு செய்து உள்ளனர். மேற்படி bond கொள்வனவை செய்த நிறுவனங்களின் பெயர்கள் […]
அமெரிக்காவின் iPhone தயாரிப்பு நிறுவனமான Apple முதல் தடவையாக பங்கு சந்தையில் $3 டிரில்லியன் ($3,000 பில்லியன்) பெறுமதியை அடைந்து உள்ளது. இந்த ஆண்டின் முதல் பங்கு சந்தை வர்த்தக தினத்திலேயே Apple இந்த உயர்வை அடைந்து உள்ளது. Apple நிறுவனம் தயாரிக்கும் iPhone விற்பனையே இந்த நிறுவனத்தின் வருமானம் தொடர்ந்தும் உச்சத்தில் இருக்க காரணம். ஆண்டுதோறும் பல மில்லியன் iPhone கள் விற்பனை செய்யப்படுகின்றன. 2018ம் ஆண்டு Apple நிறுவனத்தின் பங்குசந்தை பெறுமதி $1 டிரில்லியன் […]
China Fortune Land Development என்ற அடுக்குமாடி வீடுகள் கட்டி விற்பனை செய்யும் நிறுவனத்திற்கு money manager ஆக பணிசெய்தவர் $313 மில்லியன் பணத்துடன் தலைமறைவு ஆகி உள்ளார் என்கிறது Fortune Land நிறுவனம். இந்த money manager உடன் தாம் தற்போது தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் Fortune Land கூறியுள்ளது. இது தொடர்பாக சீன போலீசிலும் முறைப்பாடு செய்யப்பட்டு உள்ளது. Fortune Land நிறுவனத்தின் கையில் உள்ள பணத்தை வேறு திட்டங்களில் முதலீடு செய்யும் […]
தனது கடன்களுக்கு வட்டி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டு இன்று புதன் முறியும் நிலையில் இருந்து அமெரிக்கா இறுதி நேரத்தில் தப்பி உள்ளது. நேற்று செவ்வாய் இரவு காங்கிரஸ் அமெரிக்கா சட்டப்படி பெறக்கூடிய அதிகூடிய கடன் எல்லையை மேலும் $2.5 டிரில்லியனால் அதிகரித்து உள்ளதாலேயே அமெரிக்கா முறிவில் இருந்து தப்பி உள்ளது. இந்த அதிகரிப்பால் அமெரிக்கா 2023ம் ஆண்டு முடியும்வரை முறிவு நிலைக்கு தள்ளப்படாது இருக்கும். கடன் பெறக்கூடிய அளவு அதிகரிக்கப்படாவிடின் டிசம்பர் மாதம் 15ம் திகதியில் […]
Rogers Communication கனடாவின் மிகப்பெரிய நிறுவனம். Rogers Wireless, Fido Wireless, Chatr Wireless, Rogers Cable, Rogers Sports, Blue Jays team, Maple Leafs team, Raptors team அனைத்தும் இதன் அங்கம். சுமார் $24 பில்லியன் (C$30 பில்லியன்) பெறுமதியான இந்த நிறுவனத்தை ஆளும் Rogers குடும்ப சண்டை தற்போது நிறுவனத்தை நீதிமன்றம் இழுத்துள்ளது. 1960ம் ஆண்டுகளில் Ted Rogers என்பவர் இந்த நிறுவனத்தை ஆரம்பித்திருந்தார். அவர் 2008ம் ஆண்டு மரணமாகியபின் குடும்ப […]
இன்று இத்தாலியின் ரோம் நகரில் இடம்பெற்ற G20 அமர்வில் பல நாடுகளில் இயங்கும் multinational நிறுவனங்கள் மீது குறைந்தது-15% (minimum corporate tax) வரியை நடைமுறை செய்ய அங்கத்துவ நாடுகள் இணங்கி உள்ளது. உண்மையில் இந்த இணக்கம் கடந்த ஜூலை மாதமே அறியப்பட்டு இருந்தாலும், இன்றே தலைவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பல நாடுகளில் இயங்கும் Apple, Google போன்ற மேற்கு நாடுகளின் பெரு நிறுவனங்கள் தமது இலாபத்தை வரி குறைந்த நாடுகளுக்கு நகர்த்தி, உரிய வரி செலுத்துவதில் இருந்து […]
எல்லையில் இந்தியாவும், சீனாவும் முரண்டு செய்தாலும் இந்த இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மிக வேகமாக வளர்ந்து உள்ளது என்பதை வர்த்தக தரவுகள் காட்டுகின்றன. இரு நாடுகளுக்கும் இடையில் இந்த ஆண்டுக்கான மொத்த வர்த்தகம் $100 பில்லியனை மீறும் என்று கணிப்பிடப்படுகிறது. இந்த ஆண்டின் முதல் மூன்று காலாண்டிலும் (முதல் 9 மாதங்களில்) இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையிலான வர்த்தகம் $90.37 பில்லியன் ஆக இருந்துள்ளது. கடந்த ஆண்டின் முதல் 9 மாத கால தொகையுடன் ஒப்பிடுகையில் இந்த […]