PwC கணக்கியல் நிறுவனத்தை கைவிடும் சீன நிறுவனங்கள்

PwC கணக்கியல் நிறுவனத்தை கைவிடும் சீன நிறுவனங்கள்

பிரித்தானியாவின் லண்டன் நகரை தளமாக கொண்ட PricewaterhouseCoopers International Limited (pwc) என்ற உலகின் மிக பெரிய கணக்கியல் ஆய்வு நிறுவனத்தை (auditing company) பல சீன நிறுவனங்கள் கைவிட்டு வருகின்றன. சீனாவின் பல பெரிய நிறுவனங்களுக்கு கணக்காய்வு போன்ற சேவைகளை pwc செய்து வந்திருந்தது. ஆனால் சீனாவின் Evergrande என்ற வீடு கட்டுமான நிறுவனம் பல ஆண்டுகளாக பெரும் கணக்கியல் குளறுபடிகள் செய்திருந்தாலும் அந்த நிறுவனத்தை audit செய்த pwc அந்த குளறுபடிகளை முறைப்படி அடையாளம்கண்டு ஆவணப்படுத்தவில்லை. […]

சீனாவின் அடுத்த தயாரிப்பு 400-ஆசன C939 விமானம்

சீனாவின் அடுத்த தயாரிப்பு 400-ஆசன C939 விமானம்

COMAC என்ற சீன பயணிகள் விமான தயாரிப்பு நிறுவனம் சுமார் 400 பயணிகளை காவக்கூடிய மிகப்பெரிய விமானம் ஒன்றை தயாரிக்கும் பணியை ஆரம்பித்து உள்ளது. C939 என்ற அழைக்கப்படும் இந்த விமானம் அமெரிக்காவின் Boeing 777 மற்றும் ஐரோப்பாவின் Airbus 350 ஆகிய விமானங்களுக்கு போட்டியாக அமையலாம். இரண்டு பெரிய இயந்திரங்களை கொண்டிருக்க உள்ள C939 விமானம் சுமார் 13,000 km தூரம் பயணிக்க வல்லதாக இருக்கும். COMAC ஏற்கனவே ARJ21 (Advanced Regional Jet) என்ற குறுந்தூர […]

வட்டி செலவில் மாளும் அமெரிக்கா

வட்டி செலவில் மாளும் அமெரிக்கா

அமெரிக்காவின் கடன்களுக்கான வட்டி செலவு வேகமாக அதிகரித்து வருகிறது. வட்டி செலவு தற்போது அமெரிக்க மத்திய அரசின் மூன்றாவது பெரிய செலவாக மாறி உள்ளது. உலகின் மிகப்பெரிய இராணுவத்துக்கு செலவிடப்படும் பாதுகாப்பு செலவு நாலாம் இடத்திற்கு பின் தள்ளப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் ஆரம்பித்த 2024ம் கணக்கியல் ஆண்டின் (fiscal year) முதல் 7 மாதத்தில் அமெரிக்கா $514 பில்லியனை தனது கடனுக்கான வட்டியாக செலுத்தி உள்ளது. அதே காலத்தின் பாதுகாப்புக்கு அமெரிக்கா செலவழித்து சுமார் $497 பில்லியன் மட்டுமே. […]

இலங்கைக்கு IMF வழங்கும் கடனின் அடுத்த பங்கு பிந்தலாம்

இலங்கைக்கு IMF வழங்கும் கடனின் அடுத்த பங்கு பிந்தலாம்

இலங்கைக்கு IMF வழங்கும் $2.9 பில்லியன் கடனின் அடுத்த பகுதியான $337 மில்லியன் கடன் வழங்கல் பின்போடப்படலாம் என்று .நம்பப்படுகிறது. இலங்கை பிற அரசுகளிடம் இருந்து பெற்ற கடன்களை அடைக்க இணக்கங்கள் ஏற்பட்டு இருந்தாலும், bond மூலம் பெற்ற கடன்களுக்கு இதுவரை இணக்கங்கள் ஏற்படவில்லை. அதனால் IMF வழங்கும் கடனின் அடுத்த வழங்கல் பிந்தலாம் என்று கருதப்படுகிறது. Bond மூலம் கடன் வழங்கியோர் தம் மீதான கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் நடைமுறையில் இருப்பதை ஏற்க மறுக்கின்றனர். இந்த இழுபறியால் […]

மீண்டும் நெருங்கும் சீன-அஸ்ரேலிய உறவு, 218% wine வரி நிறுத்தம்

மீண்டும் நெருங்கும் சீன-அஸ்ரேலிய உறவு, 218% wine வரி நிறுத்தம்

சீனாவுக்கும் அஸ்ரேலியாவுக்கும் இடையிலான உறவு மீண்டும் நெருக்கம் அடைய ஆரம்பித்து உள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக அஸ்ரேலிய wine களுக்கு சீனா நடைமுறை செய்திருந்த 218.4% இறக்குமதி வரி மார்ச் 29ம் திகதி முதல் நிறுத்தப்படுகிறது. இதனால் அஸ்ரேலிய wine சீன சந்தையை முழுமையாக அடைகிறது. அமெரிக்க சனாதிபதி ரம்ப் காலத்தில் அஸ்ரேலியாவை ஆட்சி செய்த ரம்ப் ஆதரவு அரசு சீனாவுடன் முரண்பட்டது. அதனால் சீனா மெல்ல அஸ்ரேலிய தயாரிப்புகள் மீது மேலதிக இறக்குமதி வரிகளை நடைமுறை செய்தது. மேற்கு நாடுகள் அஸ்ரேலியா சீனாவுடன் முரண்படுவதை விரும்பினாலும், அஸ்ரேலியாவின் தயாரிப்புகளை […]

உலகம் எங்கும் பண வீக்கம், சீனாவில் பண சுருக்கம் 

உலகம் எங்கும் பண வீக்கம், சீனாவில் பண சுருக்கம் 

உலகம் எங்கும் பண வீக்கம் (inflation) அந்த நாடுகளின் பொருளாதாரத்தை பாதிக்கையில் சீனாவில் பண சுருக்கம் (deflation) சீனாவின் பொருளாதாரத்தை பாதிக்கிறது. மிகையான inflation, deflation இரண்டுமே விருப்பத்துக்கு உரியன அல்ல. சீனாவில் கடந்த ஆண்டு ஜனவரி மாத consumer prices index (CPI) கணியத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஜனவரியில் CPI 0.8% ஆல் வீழ்ச்சி அடைந்துள்ளது. உணவு பொருட்களின் விலைகளை தவிர்த்து கணித்தால் CPI 0.4% ஆல் அதிகரித்து உள்ளது. அவ்வகை வாசிப்பு நலமானது. சீனாவின் […]

ஒரு தினத்தில் Tesla $80 பில்லியனை இழந்தது

ஒரு தினத்தில் Tesla $80 பில்லியனை இழந்தது

மின்சக்தியில் இயங்கும் (EV அல்லது electric vehicle) கார்களை தயாரிக்கும் அமெரிக்காவின் Tesla என்ற நிறுவனம் வியாழக்கிழமை $80 பில்லியன் பங்குச்சந்தை பெறுமதியை இழந்துள்ளது. Tesla வின் CEO Elon Musk இந்த நிறுவனத்தின் வருங்கால விற்பனை குறைவடையும் என்று கூறியதால் வியாழன் Tesla வின் பங்குச்சந்தை பங்கு ஒவ்வொன்றும் 13% பெறுமதியை இழந்துள்ளன. Elon Musk கின் பெறுமதியும் இந்த தினத்தில் $18 பில்லியனால் வீழ்ச்சி அடைந்துள்ளது. ஆனாலும் இவரே தற்போதும் உலகின் முதலாவது செல்வந்தர். […]

தமிழ்நாடும் தொழிநுட்ப நிறுவங்களும் $4.4 பில்லியன் முதலீடு

தமிழ்நாடும் தொழிநுட்ப நிறுவங்களும் $4.4 பில்லியன் முதலீடு

தமிழ்நாடு அரசும் Pegatron, Tata Electronics, Hyundai Motors ஆகிய தொழிநுட்ப நிறுவனங்களும் தமிழ்நாட்டில் $4.4 பில்லியன் முதலிட இன்று ஞாயிறு இணங்கி உள்ளன. தாய்வானை தளமாக கொண்ட Pegatron அமெரிக்காவின் Apple நிறுவனத்துக்கு பாகங்களை வழங்கும் நிறுவனம். Tata Electronics Apple நிறுவனத்தின் iPhone சிலவற்றை பொருத்தும் (assemble) பணியை செய்கிறது. Tata Power நிறுவனமும் மேலும் 700 பில்லியன் இந்திய ரூபாய்களை முதலிடவும் திட்டங்களை கொண்டுள்ளது. அதேவேளை ஜனவரி 10ம் திகதி முதல் 12ம் […]

Tesla விலும் அதிக கார்களை சீனாவின் BYD விற்றது

Tesla விலும் அதிக கார்களை சீனாவின் BYD விற்றது

அமெரிக்காவின் Tesla என்ற நிறுவனம் விற்பனை செய்த மின்னில் இயங்கும் கார்களின் (electric car) எண்ணிக்கையிலும் அதிக தொகையான மின்னில் இயங்கும் கார்களை சீனாவின் BYD என்ற நிறுவனம் கடந்த காலாண்டில் உலக அளவில் விற்பனை செய்துள்ளது. 2023ம் ஆண்டின் இறுதி காலாண்டில் BYD மொத்தம் 526,000 மின் கார்களை உலக அளவில் விற்பனை செய்துள்ளது. அதே காலத்தில் Tesla 484,500 மின் கார்களை மட்டுமே உலக அளவில் விற்பனை செய்துள்ளது. BYD கார்கள் அமெரிக்காவில் விற்பனை செய்யப்படுவது […]

இலங்கை பொருளாதாரம் 1.6% ஆல் வளர்ந்தது

இலங்கை பொருளாதாரம் 1.6% ஆல் வளர்ந்தது

ஜூலை முதல் செப்டம்பர் வரையான கடந்த காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் 1.6% ஆல் வளர்ந்து உள்ளது என்று இலங்கையின் புள்ளிவிபர திணைக்களம் இன்று வெள்ளி கூறியுள்ளது. 2021ம் ஆண்டு இறுதிக்கு பின்னர் காலாண்டு ஒன்றில் பொருளாதாரம் வளர்ச்சி அடைவது இதுவே முதல் தடவை. இந்த காலாண்டில் விவசாய துறை 3% ஆலும், சேவை துறை 1.3% ஆலும், தொழிற்சாலை உற்பத்தி 0.3% ஆலும் வளர்ச்சி அடைந்துள்ளன. ஆனாலும் இந்த ஆண்டின் 12 மாதங்களில் பொருளாதாரம் 3.6% ஆல் […]