ஜப்பான் நாட்டின் இலத்திரனியல் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனமான SHARP இன் 2012 ஆம் ஆண்டுக்கான நிகர நட்டம் US $5.4 பில்லியன் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் 2011 ஆண்டுக்கான நிகர நட்டம் US $4.7 பில்லியன் ஆக இருந்ததுவும் இங்கு குறிப்பிடத்தக்கது. 1912 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம் முதலில் Ever-Sharp என்ற mechanical pencil களை தயாரித்ததால் SHARP என்ற பெயரை கொண்டிருந்தது. அண்மை காலங்களில் cell phone, LCD panel, calculators, printers, தொலைக்காட்சிகள் என பலதரப்பட்ட பொருட்களை […]
தென் கொரியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான சாம்சங் (Samsung Electronics Co) தனது 2013 இன் முதலாம் காலாண்டு இலாபம் U$6.4 பில்லியன் (7.15 ட்ரில்லியன் கொரியன் won) என வியாழக்கிழமை அறிவித்துள்ளது. இது முன்னைய வருட நாலாம் காலாண்டின் இலாபத்தைவிட 42% அதிகமாகும். இவர்களின் பெரும்பாலான வருமானம் சாம்சங்கின் Galaxy போன்ற smartphone பிரிவில் இருந்தே கிடைத்துள்ளது. உலக smartphone சந்தையின் 32.7% பங்கை சாம்சங் தற்போது கொண்டுள்ளது. கடந்த காலாண்டில் இது 30% ஆகவும் ஒரு வருடத்தின் முன் 28.8% ஆகவும் இருந்தது. சாம்சங்கின் இவ்வாறான வளர்ச்சி […]
செவ்வாய்க்கிழமை (16-04-20133) IMF மீண்டும் 2013 ஆம் ஆண்டுக்கான உலக அளவிலான பொருளாதார வளர்ச்சி எதிர்பார்ப்பை குறைத்துள்ளது. IMF இன் தற்போதைய கணிப்பின்படி 2013 இல் உலக பொருளாதார வளர்ச்சி 3.3% ஆக மட்டுமே இருக்கும். ஐரோப்பிய மற்றும் அமெரிக்க பொருளாதார மந்த நிலைமைகளே இதற்கு காரணம் என்கிறது IMF. IMF இன் இந்த மீள் கணிப்பீடு பிரித்தானியா (0.6% வளர்ச்சி), ரஷ்யா, சீனா, இந்தியா, பிரேசில் போன்ற பல நாடுகளுக்கு கடந்த தை மாதத்தில் வழங்கிய கணிப்பீடுகளிலும் குறைவானவையே. ஜப்பான் மட்டுமே இதற்கு விதிவிலக்கு. […]
பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் உள்ள Cayman தீவு (Cayman Island), Mann தீவு (Isle of Man), British Virgin Island, Bermuda போன்ற இடங்களில் வெளிநாட்டவர் இரகசிய வங்கி கணக்குகள், நிறுவனங்கள் போன்றவற்றை வைத்திருக்க முடியும். அவ்வாறு வைப்புகள், சொத்துகளை வைத்திருப்போரின் பெயர், முகவரி போன்ற விடயங்களை இந்த அரசுகள் இரகசியமாக வைத்திருக்கவும் உதவும். அமெரிக்கா, கனடா போன்ற செல்வந்த நாட்டு திருட்டு செல்வந்தர்களும் சில வறிய நாட்டு திருட்டு பண உரிமையாளர்களும் இங்கு சொத்துக்களை ஒளித்து வைத்துள்ளனர். இவ்வாறு செய்வதன்மூலம் இவர்கள் தமது நாடுகளில் வரி […]
பொருளாதாரத்தில் முடங்கிப்போகும் ஐரோப்பிய நாடுகளில் சைப்பிரசும் அடங்கும். கல்விமான்கள் உலகம் வங்கிகளை ஒரு பாதுகாப்பானதும் புத்திசாலிகளின் பண வைப்பிடமாகவும் அடையாளம் காண்பதுண்டு. ஆனால் சைப்பிரஸ் அது பொய்யாகி விட்டது. பொருளாதார நெருக்கடிகளில் இருந்து தப்பும் நோக்கில் அவ்வரசு 100,000 யூரோக்களுக்கும் அதிகமாக Bank of Cyprus PCL, இல் வைப்பு வைத்திருந்தோரின் முதலில் 40% ஐ ‘வரி’ ஆக அபகரிக்கிறது. மிகுதி 60% கூட வைப்பாளார்களுக்கு பணமாக கிடைக்கப்போவது இல்லை. பதிலாக அந்த வங்கிகளில் அவர்களின் 60% இக்கு […]
இலங்கையை பிறப்பிடமாக கொண்ட ராஜ் ராஜரட்ணம் (Raj Rajaratnam) என்பவர் அமெரிக்காவில் பங்கு சந்தை மோசடிகள் காரணமாக 11 வருட சிறையை அனுபவித்து வருகிறார். இவர் பெரிய நிறுவனக்களின் தரவுகளை களவாக பெற்று அதற்கு ஏற்ப அந்த நிறுவனத்தின் பங்குகளை கொள்வனவு அல்லது விற்பனை செய்து அதன் மூலம் சட்டவிரோத இலாபம் பெற்றுவந்துள்ளார். அந்த குற்றம் நிறுபிக்கப்பட்டதாலேயே அவர் 11 வருட சிறை தண்டனை பெற்றார். இப்போது அவரின் தம்பியார் ரெங்கன் என்பவர் மீது வழக்கு தொடர்கிறது அமெரிக்க […]
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட இந்திய அரசின் விசாரணை, இந்தியாவில் இயங்கும் Cadbury’s என்ற chocolate தயாரிக்கும் நிறுவனம் இல்லாத ஒரு தொழிற்சாலையை பயன்படுத்தி $46 மில்லியன் வரி ஒழிப்பு செய்துள்ளது. Cadbury’s இனது ஆவணங்களின்படி இவர்களின் Himachal Pradesh தொழில்சாலை 2010 ஆம் ஆண்டு பங்குனி 31 முதல் chocolate உற்பத்தியை ஆரம்பித்துள்ளது. ஆனால் அந்த தொழில்சாலைக்கு முறைப்படி அரச உரிமை அப்போது கிடைத்திருக்கவில்லை. அவ்வகை அரச உரிமை 2011 ஆம் ஆண்டு தை மாதம் 14 ஆம் திகதியே அவர்களுக்கு கிடைத்துள்ளது. […]
அமெரிக்க அரசு S&P (Standard and Poor”s) என்ற credit rating நிறுவனத்தை $5 பில்லியன் குற்றப்பணம் செலுத்துமாறு பணித்துள்ளது. இந்த நிறுவனம் பல தரக்குறைவான சொத்து நிறுவனங்களுக்கு அதியுயர் மதிப்பீடான AAA ஐ வழங்கியதால், பல முதலீட்டாளர்கள் அந்த நிறுவனங்களில் முதலீடு செய்து பின் 2008-2009 களில் பாரிய நட்டத்தை அடைந்திருந்தனர். அமெரிக்க மத்திய அரசு மட்டுமன்றி, 13 மாநில அரசுகளும் S&P இக்கு எதிராக மேலும்பல வழக்குகளை தொடர்ந்துள்ளன. உதாரணமாக கலிபோர்னிய மாநிலம் $4 பில்லியன் நட்டஈடு கேட்டுள்ளது. […]
தென் கொரியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான சாம்சங் (Samsung Electronics Co) தனது 2012 இன் நாலாம் காலாண்டு இலாபம் U$6.58 பில்லியன் என இன்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. இது முன்னைய வருட நாலாம் காலாண்டின் இலாபத்தைவிட 76% அதிகமாகும். இவர்களின் பெரும்பாலான வருமானம் சாம்சங்கின் Galaxy போன்ற smartphone பிரிவில் இருந்தே கிடைத்துள்ளது. ABI Research இன் கருத்துப்படி உலக smartphone சந்தையின் 30% பங்கை சாம்சங் கொண்டுள்ளது. சாம்சங்கின் இவ்வாறான வளர்ச்சி தொடரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சங் கடந்த காலாண்டில் சுமார் 63 மில்லியன் […]
பல காலம் அமெரிக்காவிலேயே அதிகூடிய வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்திருந்தது. ஆனால் கடந்த 4 வருடங்களாக அதிகூடிய வாகனங்கள் சீனாவிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. 2012 ஆம் ஆண்டில் மட்டும் சீனாவில் 19.3 மில்லியன் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. The China Association of Automobile இன் கணிப்பின்படி சீனாவின் 2012 ஆம் வருடத்தின் கார் விற்பனை 2011 வருட விற்பனையைவிட 4.3% அதிகம். அதேவேளை தற்போது உலக வாகன விற்பனையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் அமெரிக்காவில் 2012 ஆம் ஆண்டுக்கான வாகன விற்பனை […]