முதலில் உலகுக்கு cell phoneகளை அறிமுகப்படுத்திய நிறுவனங்களில் Motorola ஒன்று. ஆனால் Motorola பின்னர் iPhone, Samsun போன்ற தயாரிப்புக்களால் பின்தள்ளப்பட்டது. Cell phone சந்தையில் பின்தள்ளப்பட்ட Motorola வின் cell phone பிரிவை 2012 ஆம் ஆண்டில் Google நிறுவனம் U$12.5 பில்லியனுக்கு கொள்வனவு செய்திருந்தது. ஆனால் Motorola பிரிவு Googleஇக்கு நட்டத்தையே கொடுத்தது. நட்டத்தை குறைக்க Google இந்த பிரிவில் உள்ள பலரை வேலை நீக்கமும் செய்திருந்தது. ஆனால் இந்த நடவடிக்கைகள் எதுவும் பயனளிகாதவிடத்து […]
இலத்திரனியலில் OS என்று சுருக்கமாக அழைக்கப்படும் Operating System முதல் முக்கியமானது. Hard drive, keyboard, mouse, screen, memory போன்ற hardware களையும் word, excel, power-point, browser போன்ற software களையும் இணைக்கும் பணியை செய்வது OS. 1950 ஆண்டுகளில் OS என்ற பாகம் தோன்றியிருந்தாலும் அவை இன்றைய OS களைப்போல் வல்லமையானவையாக இருந்திருக்கவில்லை. DOS என்ற OS வீட்டுக்கு வீடு கணணியை வைத்திருக்க முதலில் உதவியது. DOS ஐ கொள்வனவு செய்த Microsoftநிறுவனம் […]
JPMorgan வங்கி உலகில் இரண்டாவது பெரியது, அமெரிக்காவில் முதலாவது பெரியது. இதன் ஆரம்பம் 1895. 2000 அம்ம ஆண்டில் இதுவும் அமெரிக்காவின் மற்றுமோர் வங்கியான Chase Manhattan உடன் இணைந்திருந்தது. 2012 ஆம் ஆண்டளவில் இதன் மொத்த சொத்துக்கள $2500 பில்லியனுக்கும் அதிகம் (1.5 ரில்லியன்). 2005 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு காலங்களில் JPMorgan பல பெரு நட்டங்களை எதிர்பார்க்கக்கூடிய முதலீடுகளில் பங்கெடுத்தது. வேறு பல வங்கிகளும் வீடு அடமான நிறுவனக்களும் இவ்வாறு […]
அண்மையில் சீனாவின் CHEC (China Harbor Engineering Company) $500 மில்லியன்னுக்கும் அதிகம் பெறுமதியான 3 கட்டமைப்பு வேளைகளில் ஈடுபடவுள்ளது. இந்த உடன்படிக்கை November 14ம் திகதி ஏற்படுத்தப்பட்டதாக சீனாவின் Xinhua செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. முதலாவது கட்டமைப்பு மாத்தறையில் ஒரு 250 அறைகளை கொண்ட ஒரு உல்லாச விடுதியை கட்டுவதாகும். இதில் ஒரு வரிகள் அற்ற வர்த்த நிலையமும் அமையும். இதே சீன நிறுவனம் 209 அறைகள் கொண்ட இன்னுமோர் விடுதியை இங்கு இந்த வருட […]
பிரேசில் நாட்டவரான Eike Batista சில வருங்களின் முன்னர் உலகின் பெரும் செல்வந்தர்களில் ஒருவர். 2012 ஆம் ஆண்டளவில் இவரின் மொத்த பெறுமதி (market value) சுமார் $30 பில்லியன்.இந்த வருட நடுப்பகுதில் இவரின் பெறுமதி சுமார் $200 மில்லியன். இவாரம் அவரின் நிறுவனம் Bankruptcy ஆகிறது. எண்ணெய் மற்றும் உலோக அகழ்வுகளில் முன்னணி வகித்த இவரின் நிறுவனம் ஒரு காலத்தில் பிரேசிலிலும் கனடாவிலும் 8 தங்க அகழ்வுகள், 1 சில்வர் அகழ்வு, 3 இரும்பு அகழ்வுகளை […]
InfoSys இந்தியாவின் மிகப்பெரியதோர் software நிறுவனம். பெங்களூர், கர்நாடகாவில்தலைமையகத்தை கொண்ட இது உலகளவில் சுமார் 160,000 பணியாளர்களை கொண்டது. அமெரிக்காவில் மட்டும் சுமார் 30,000 பணியாளர் உண்டு. இதன் வருட வருமானம் $7.3 பில்லியனுக்கும் அதிகம். நிகர இலாபம் $1.7 பில்லியனுக்கும் அதிகம். அண்மையில் இதன் அமெரிக்க பணியாளர் Jay Palmer சில உள்வீட்டு உண்மைகளை பகிரங்கப்படுத்தினார். அதனை தொடர்ந்து அமெரிக்க அரசு விசாரணைகளை தொடங்கியது. அமெரிக்காவில் 3 வருடம் வரை பணியாற்ற விரும்பும் இந்திய தொழிநுட்ப […]
முதல் தடவையாக ஜப்பானின் கடன் தொகை ஆயிரம் ரில்லியன் யென்னை (1000 trillion Yen = U$ 10.4 trillion) தாண்டியுள்ளது என்று ஜப்பானிய நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. அதாவது ஒவ்வொரு ஜப்பானிய பிரசையும் 7.92 மில்லியன் yen (U$ 82,000) கடனாளியாவார். இத்தொகையில் 830 trillion அரச bond களும் அடங்கும். ஜப்பானிய நிதி அமைச்சின் தரவுகளின்படி கடந்த சித்திரை மாதம் முதல் ஆனி மாதம் வரையான காலத்தில் மட்டும் ஜப்பானின் கடன் தொகை U$ […]
2010 ஆம் ஆண்டில் சீனா தனது நாணயமான Yuan (யுஅன் அல்லது RMB) ஐ உலக வணிக நாணயமாக மாற்ற நடவடிக்கைகள் எடுத்தது. அதாவது Yuanஐ சர்வதேச கொடுக்கல், வாங்கல் போன்றவற்றுக்கு பயன்படும் நாணயமாகவும், foreign reserve நாணயமாகவும் பயன்படுத்தப்படுவதை ஊக்கிவிக்க சீன அரசு முயன்றது. தற்போது Yuan பயன்பாடு மிகவும் வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் பிரித்தானியாவின் Bank of England 200 பில்லியன் Yuan (சுமார் US$ 30 பில்லியன்) currency swap […]
உலகின் மிக பெரிய கப்பல் சேவை நிறுவனமான Maersk தனது புதிய Triple E வகை கப்பல்களை சேவையில் ஈடுபடுத்தவுள்ளது. Triple E கப்பல் 400 மீட்டர் நீளமும், 59 மீட்டர் அகலமும் கொண்டது. இதன் வெற்றுகப்பல் நிறை 60,000 தொன். இதில் 18,000 கொள்கலன்களை எடுத்துச்செல்ல முடியும். இந்த முதலாவது கப்பல் Maersk McKinney Moeller என பெயரிப்பட்டுள்ளது. இவ்வகையான 20 கப்பல்களை கட்டுமானம் செய்ய தென்கொரியாவின் கப்பல் கட்டுமான நிறுவனமான Daewoo சுமார் US$ […]
Shuanghui International of China என்ற சீன இறைச்சி பதனிடும் நிறுவனம் Smithfield Foods என்ற அமெரிக்க இறைச்சி பதனிடும் நிறுவனத்தை 4.7 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு கொள்வனவு செய்யவுள்ளது. பொதுவாக சீன நிறுவனங்கள் சீன தயாரிப்புகளை அமெரிக்காவில் விற்பனை செய்வதுண்டு. ஆனால் அமெரிக்காவின் உள்ளேயே இந்த அளவில் முதலிட்டு சீன நிறுவனம் வணிகம் செய்வது இதுவே முதல்தடவை. அதேவேளை Smithfield தயாரிப்புகளும் சீன பாவனையாளரை சென்றடைகின்றன. சீனாவில் பெரியதோர் இறைச்சி பதனிடும் நிறுவனமான Shuanghui ஜப்பான், […]