ஜப்பான் Mitsubishi, இந்திய Mahindra கூட்டுறவு

விவசாய வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனமான ஜப்பானின் Mitsubishiயும் இந்தியாவின் விவசாய வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனமான Mahindraவும் கூட்டாக செயல்பட முன்வந்துள்ளன, அதன் பிரகாரம், Mahindra, Mitsubishi Agricultural Machineryயின் 33% பங்கினை கொள்வனவு செய்யும். இந்த கொள்வனவின் பெறுமதி சுமார் U$ 25 மில்லியன் ஆகும். அதன்படி Mahindra, Mitsubishiயின் வடிவமைப்பில் உருவான நெல் நடும் இயந்திரங்கள் (rice planters) போன்றவற்றை தயாரித்து உலகவில் விற்பனை செய்யும். . ஜப்பானிய விவசாய முறை பல ஆசிய நாடுகளில் […]

சீனா தலைமையிலான வங்கியில் இணைகிறது பிரித்தானியா

1966 ஆம் ஆண்டு அமெரிக்கா மற்றும் ஜப்பான் தலைமைகளில் ஆரம்பிக்கப்பட்ட Asian Development Bank இக்கு மாற்றீடாக ஒரு ஆசிய அபிவிருத்தி வங்கியை அமைக்க கடந்த வருடம் சீனா முன்வந்திருந்தது. முதலில் இலங்கை உட்பட சுமார் 20 நாடுகள் இந்த புதிய Asian Infrastructure Investment Bank இல் இணைய முன்வந்திருந்தன. ஆனால் அவை அனைத்தும் ஆசிய நாடுகளாகவே இருந்தன. . அதேவேளை World Bank மற்றும் Asian Development Bank போன்ற அமைப்புகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் […]

சீன பங்குச்சந்தை 7.7% வீழ்ச்சி

சீனாவின் பங்குச்சந்தை (Shanghai Index) நேற்று (2015/01/19) 7.7% வீதத்தால் வீழ்ந்துள்ளது, அதாவது 260 புள்ளிகளால் வீழ்ந்துள்ளது. 2008 ஆம் ஆண்டுக்கு பின் இதுவே மிகப்பெரிய வீழ்ச்சி ஆகும். . இந்த வீழ்ச்சிக்கு பல காரணிகள் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. முதலாவது சீன அரசு சட்டத்துக்கு முரணாக வளர்ந்துவரும் margin trading முறையை கட்டுப்படுத்த முன்வந்துள்ளமை. உதாரணமாக 1 மில்லியன் Yuanஐ (சீன நாணயம்) முதலிடும் ஒருவரை அவரின் பங்குச்சந்தை முகவர் 2 மில்லியன் Yuanஇக்கு பங்குகளை […]

$17 பில்லியன் தண்டம் செலுத்தும் Bank of America

அமெரிக்காவின் பெரிய வங்கிகளில் ஒன்றான Bank of Americaவும் அமெரிக்காவின் Department of Justice உம் செய்து கொண்ட உடன்படிக்கையின்படி Bank of America மொத்தம் $17 பில்லியனை குற்றப்பணமாக செலுத்த முன்வந்துள்ளது. இதை Justice Department இன்று வியாழன் அறிவித்துள்ளது. . 2008 ஆம் ஆண்டளவில் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளுக்கு முன்னணி காரணங்களில் ஒன்றான வீட்டு கடன் கொடுப்பனவுகளில் நடந்துகொண்ட தவறான செயல்பாடுகளுக்கே இந்த தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. அக்காலங்களில் இந்த வங்கிகள் கடனை திருப்பி […]

அமெரிக்க-இந்தியரின் 4வது வங்கியும் ஆபத்தில்

  ஆதி காலங்களில் அமெரிக்கா வந்த இந்தியர்கள் சிறுது சிறுதாக சேமித்து, படிப்படியாக பொருளாதரத்தில் வளர்ந்தவர்கள். குறிப்பாக இந்தியாவின் பட்டேல்கள் தமது பொருளாதாரத்தை வளர்த்து, அமெரிக்காவின் பல வணிகத்துறைகளில் வேரூன்றி நின்றவர்கள். Motel துறை இவர்கள் வேரூன்றிய முன்னணி வணிகங்களில் ஒன்று. சிலர் அதற்கும் மேலாக சென்று பிராந்திய அளவிலான வங்கிகளையும் ஆரம்பித்திருந்தனர். அனால் அண்மைக்காலங்களில் அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் இவர்களையும் விட்டுவைக்கவில்லை. . கடந்த மாதம் United States Department of Treasury இந்தியர்களால் […]

$400 பில்லியன் சீனா-ரஷ்யா எரிவாயு ஒப்பந்தம்

2004 ஆம் ஆண்டு முதல் பல வருட பேச்சுவார்த்தைகளின் பின் சீனாவும் ரஷ்யாவும் சுமார் $400 பில்லியன் பெறுமதியான 30-வருட எரிவாயு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்து இட்டுள்ளதாக ரஷ்யாவின் ITAR-TASS செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. Ukraine விவகாரங்கள் காரணமாக ரஷ்யாவை பொருளாதரத்தில் தனிமைப்படுத்த அமெரிக்காவும் ஐரோப்பாவும் முனையும் இக்காலத்தில் சீனாவின் எரிவாயு வர்த்தகம் ரஷ்யாவுக்கு வர்த்தக பலத்தை அளித்துள்ளது. இந்த உடன்படிக்கைப்படி முதல் கட்ட எரிவாயு 2018 ரஷ்யாவின் Kovyktinskoye மற்றும் Chayandinskoye பகுதிகளில் இருந்து சீனாவுக்கு […]

கணணி தயாரிப்பில் இருந்து ஒதுங்குகிறது SONY

ஒரு காலத்தில் இலத்திரனியல் தயாரிப்பில் முன்னணி வகித்த ஜப்பானிய நிறுவனமான SONY தற்காலங்களில் iPhone, Samsung போன்ற தயாரிப்புக்களால் பின்தள்ளப்பட்டுள்ளது. 2013/03 முதல் 2014/03 வரையான ஒருவருட காலத்தில் SONY உலக அளவில் $1.3 பில்லியன் நட்டத்தை அடைந்துள்ளது. இந்த காலத்துக்கான மொத்த வருமானம் $77.7 பில்லியன். அதேவேளை SONY  தனது கணணி தயாரிப்பு பிரிவையும் Japan Industrial Partners (JIP) என்ற நிறுவனத்துக்கு விற்பனை செய்யவுள்ளது. அதன்படி SONY யின் பிரபல Vaio கணணிகளும் எதிர்வரும் […]

2013 இல் அமெரிக்காவை பின்தள்ளிய சீனாவின் வர்த்தகம்

2013 ஆம் ஆண்டில் சீனாவின் மொத்த வர்த்தகம் (ஏற்றுமதி+இறக்குமதி) முதல் தடவையாக அமெரிக்காவை விட அதிகமாகி, இதுவரை முதலாவதாக இருந்து வந்த அமெரிக்காவை இரண்டாம் இடத்துக்கு தள்ளி உள்ளது என்கிறது World Trade Organization (WTO) தரவுகள். சீனாவின் 2013 ஆம் ஆண்டுக்கான மொத்த ஏற்றுமதி $2.21 ட்ரில்லியன். இது 2012 ஆம் ஆண்டைவிட 8% அதிகம். அதேவேளை சீனாவின் 2013 ஆம் ஆண்டுக்கான மொத்த இறக்குமதி $1.95 ட்ரில்லியன், இது 2012 ஆம் ஆண்டிலும் 7% […]

ஜப்பானில் அதிகரித்துவரும் தனிநபர் வரி

2014 ஆம் ஆண்டில் சராசரி ஜப்பானியர் தமது மொத்த வருட வருமானத்தின் 41.6% ஐ வரியாக செலுத்துவர் என கணிக்கப்பட்டுள்ளது. 1970 ஆம் ஆண்டில் இங்கு தனிநபர் ஒருவரின் வரி அவரது மொத்த வருமானத்தின் 24.3% ஆக மட்டுமே இருந்துள்ளது. இந்த அதீத மாற்றத்துக்கு காரணம் ஜப்பானில் அதிகரித்துவரும் முதியோர் விகிதமும் அவர்களுக்கு வழங்கும் சேவைகளின் செலவுகளே. இங்கு சிறு தொகை உழக்கும் வயதினரின் வரியில் பெரும் தொகை முதியோருக்கு சேவை வழங்கவேண்டியுள்ளது. 2005 ஆம் ஆண்டில் […]

Microsoft இன் அடுத்த CEO இந்தியாவில் பிறந்த Satya Nadella

சுமார் 40 வருடங்களின் முன், 1975 ஆம் ஆண்டில், Microsoft ஐ கூட்டாக உருவாக்கியவர்கள் Bill Gates என்பவரும் Paul Allen என்பவரும் ஆகும். Bill Gates இதன் நீண்ட கால CEO ஆக பதவி வகித்து வந்திருந்தார். 2000 ஆம் ஆண்டு முதல் Steve Ballmer இதன் CEO ஆனார். இதன் மூன்றாவது CEO ஆக Satya Nadella 2014-02-04 முதல் நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் Bill Gates, Satya Nadella வுக்கு உதவியாளராக பணிபுரியவுள்ளார். Satya […]