தடைகளுக்கு மத்தியிலும் சீன ஏற்றுமதி 10.7% வளர்ச்சி

தடைகளுக்கு மத்தியிலும் சீன ஏற்றுமதி 10.7% வளர்ச்சி

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் சீனா மீது பெரும் தடைகளை விதித்தாலும் டிசம்பர் மாதம் சீனாவின் ஏற்றுமதி 10.7% ஆல் வளர்ச்சி அடைந்துள்ளது என்று இன்று திங்கள் வெளிவந்த தரவுகள் கூறுகின்றன. ரம்ப் இந்த மாதம் சனாதிபதி ஆனவுடன் சீன பொருட்களுக்கு இறக்குமதி வரிகளை அதிகரிக்கலாம் என்ற பயத்தில் மேற்கு நாடுகளின் வர்த்தகங்கள் அதிகரித்த இறக்குமதியை செய்திருக்கலாம் என்று கருதப்பட்டாலும், ஆசியாவிலும் சீனாவின் ஏற்றுமதி அதிகரித்து உள்ளது. அதேவேளை சீனாவின் இறக்குமதி 1% ஆல் அதிகரித்து உள்ளது.  […]

அதானி முதலீடுகளை இடைநிறுத்தும் பிரான்சின் TotalEnergies 

அதானி முதலீடுகளை இடைநிறுத்தும் பிரான்சின் TotalEnergies 

அதானி நிறுவனங்களில் மேற்கொண்டு முதலீடுகள் செய்வதை பிரான்சின் எண்ணெய் வள நிறுவனமான  TotalEnergies தற்காலிகமாக இடைநிறுத்தி உள்ளது.  அமெரிக்கா தற்போது அதானி மீது தொடுத்துள்ள $265 மில்லியன் இலஞ்ச குற்றச்சாட்டே TotalEnergies தனது புதிய முதலீடுகளை இடைநிறுத்த காரணம். TotalEnergies அதானியின் Adani Green Energy என்ற நிறுவனத்தில் 19.7% பங்கை 2021ம் ஆண்டு கொள்வனவு செய்திருந்தது. Adani Total Gas என்ற கூட்டுறவு நிறுவனத்தில் TotalEnergies 37.4% உரிமையை கொண்டுள்ளது. அதானி மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை அற்றன என்று நிரூபிக்கும் வரை TotalEnergies மேற்கொண்டு அதானி நிறுவனங்களில் […]

கனடிய வங்கிக்கு அமெரிக்கா $3 பில்லியன் தண்டம்

கனடிய வங்கிக்கு அமெரிக்கா $3 பில்லியன் தண்டம்

TD Bank என்ற கனடிய வங்கிக்கு அமெரிக்க அரசு வியாழக்கிழமை $3 பில்லியன் தண்டம் விதித்துள்ளது. TD Bank தெரிந்தும் பெருமளவு பண கடத்தலுக்கு உதவியுள்ளது என்று அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. TD வங்கியும் குற்றத்தை ஏற்றுக்கொண்டுள்ளது. அமெரிக்காவில் இயங்கும் TD Bank கனடிய TD Bank கின் கிளை நிறுவனமே. அமெரிக்க கிளை நிறுவனம் அமெரிக்காவின் கிழக்கே உள்ள 16 மாநிலங்களில் வங்கி சேவையை வழங்குகிறது. இது அமெரிக்காவில் 10ஆவது பெரிய வங்கி. மூன்று பெரிய […]

முதல் 100 இந்திய செல்வந்தர்களிடம் $1.115 டிரில்லியன்

முதல் 100 இந்திய செல்வந்தர்களிடம் $1.115 டிரில்லியன்

இந்தியாவின் முதல் 100 செல்வந்தர்களிடம் மொத்தம் $1.115 டிரில்லியன் ($1,115 பில்லியன்) சொத்துக்கள் உள்ளதாக அமெரிக்காவின் Forbes நிறுவனம் கணித்துள்ளது. இந்த சொத்துக்களில் பெரும்பாலானவை திடம் அற்ற பங்குச்சந்தை மூலமான சொத்துக்களே. கடந்த ஆண்டு இந்த 100 பேரிடமும் இருந்த சொத்துக்கள் $800 பில்லியன் மட்டுமே. அதாவது இவர்களின் சொத்துக்கள் கடந்த 12 மாதங்களில் மட்டும் 40% ஆல் அதிகரித்துஉள்ளன. இந்தியாவின் முதலாவது செல்வந்தரான முகேஷ் அம்பானியிடம் தற்போது $119.5 பில்லியன் சொத்துக்கள் உள்ளன. இவரின் சொத்துக்கள் கடந்த 12 […]

Forbes கணிப்பில் உலகின் மிகப்பெரிய வங்கிகள்

Forbes கணிப்பில் உலகின் மிகப்பெரிய வங்கிகள்

Forbes செய்தி மற்றும் வணிகத்துறை ஆய்வு நிறுவனம் செய்த கணிப்பின்படி பின்வரும் வங்கிகள் உலக அளவில் முதல் 10 இடங்களை அடைந்துள்ளன. அந்த வங்கிகளும் அவை அக்டோபர் மாதம் 4ம் திகதி கொண்டிருந்த market capital தொகைகளும் வருமாறு: 1) JPMorgan Chase (அமெரிக்கா): $583.91 பில்லியன் 2) Bank of America (அமெரிக்கா): $304.56 பில்லியன் 3) Industrial and Commercial Bank of China (சீனா): $288.06 பில்லியன்4) Agricultural Bank of China (சீனா): $231.00 […]

சீன EV வாகனங்களுக்கு ஐரோப்பா 25% மேலதிக வரி 

சீன EV வாகனங்களுக்கு ஐரோப்பா 25% மேலதிக வரி 

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுள் இறக்குமதி செய்யப்படும் சீன EV களுக்கு (electric vehicles) 25% மேலதிக இறக்குமதி வரியை அறவிட அங்கத்துவ நாடுகளால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ், இத்தாலி, போலந்து உட்பட 10 நாடுகள் மேலதிக வரிக்கு ஆதரவாக வாக்களிக்க, ஜெர்மனி, ஹங்கேரி உட்பட 5 நாடுகள் மேலதிக வரிக்கு எதிராக வாக்களித்து உள்ளன. ஸ்பெயின், பெல்ஜியம், ஸ்வீடன், போர்த்துக்கல் உட்பட 12 நாடுகள் வாக்களியாது இருந்துள்ளன. மேற்படி மேலதிக வரிக்கு 10 நாடுகள் மட்டுமே ஆதரவு வழங்க, 12 […]

DOW சுட்டியில் இருந்து Intel நீக்கப்படலாம்

DOW சுட்டியில் இருந்து Intel நீக்கப்படலாம்

1885ம் ஆண்டு DJA என்று ஆரம்பிக்கப்பட்டு பின்னர் 1896ம் ஆண்டு முதல் Dow Jones Industrial Average என்று அல்லது DOW என்று சாதாரணமாக அழைக்கப்படும் DOW சுட்டி தெரிந்து எடுக்கப்பட்ட 30 அமெரிக்க பங்குச்சந்தை பங்குகளின் விலைகளை கொண்டு கணிக்கப்படுவது. இந்த சுட்டி கணிப்பில் முதலில் உள்ளடக்கப்பட்ட இரண்டு தொழில்நுட்ப நிறுவனங்கள் Intel நிறுவனமும் Microsoft நிறுவனமும் ஆகும். அப்போது கணினியின் CPU chip தயாரிக்கும் Intel தொழில்நுட்பத்தின் உச்சத்தில் இருந்தது. CPU கணினியின் மூளையாக கருதப்படும். ஆனால் […]

சீனாவின் 52.9% வர்த்தகம் சீன யுவான் நாணயம் மூலம்

சீனாவின் 52.9% வர்த்தகம் சீன யுவான் நாணயம் மூலம்

இந்த ஆண்டு முதல் தடவையாக சீனா வெளிநாடுகளுடனான தனது வர்த்தகத்தின் (cross-border payments and receipts) 52.9% த்தை சீனாவின் நாணயமான யுவான் (Yuan) மூலம் செய்துள்ளது.  2010ம் ஆண்டு சீனா 0.3% வர்த்தகத்தை மட்டுமே யுவான் மூலம் செய்திருந்தது. அந்த ஆண்டு 84.3% வர்த்தகத்தை அமெரிக்க டாலர் மூலமும், 15.4% வர்த்தகத்தை பௌண்ட்ஸ், யூரோ போன்ற ஏனைய நாணயங்கள் மூலமும் செய்திருந்தது. அமெரிக்கா தனது டாலர் மூலம் சீனாவை கட்டுப்படுத்த முனையலாம் என்ற பயத்தால் சீனா […]

அதானி மீது Hindenburg மீண்டும் குற்றச்சாட்டு, $19 பில்லியன் இழப்பு

அதானி மீது Hindenburg மீண்டும் குற்றச்சாட்டு, $19 பில்லியன் இழப்பு

இந்திய செல்வந்தர் அதானிக்கு சொந்தமான Adani Group மீது அமெரிக்காவின் Hindenburg Research மீண்டும் முன்வைத்த குற்றச்சாட்டு காரணமாக Adani Group திங்கள் காலை $19 பில்லியன் பங்குச்சந்தை பெறுமதியை இழந்துள்ளது. இந்திய Nifty 50 பங்குச்சந்தை சுட்டியில் உள்ளடக்கப்பட்ட Adani Enterprises, Adani Ports ஆகியன பெருமளவு இழப்பை சந்தித்துள்ளன. Hindenburg சனிக்கிழமை வெளியிட்ட தனது தகவலில் Securities and Exchange Board of India (SEBI) தலைமை அதிகாரி Madhabi Puri Buch உம் அவரின் கணவரும் […]

nVIDIA உலக பங்கு சந்தையில் முதலாவது நிறுவனம்

nVIDIA உலக பங்கு சந்தையில் முதலாவது நிறுவனம்

nVIDIA என்ற பெருமளவில் AI (Artificial Intelligence) தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய கணனி chip தயாரிக்கும் நிறுவனம் உலக அளவில் முதலாவது பங்குச்சந்தை (stock) பெறுமதி கொண்ட நிறுவனம் ஆகியுள்ளது. நேற்று செவ்வாய் இதன் பங்குச்சந்தை பெறுமதி $3.334 ட்ரில்லியன் ($3,334 பில்லியன்) ஆகியுள்ளது. இரண்டாம் இடத்தில் $3.317 ட்ரில்லியன் பங்குச்சந்தை பெறுமதி கொண்ட Microsoft நிறுவனமும், மூன்றாம் இடத்தில் $3.286 ட்ரில்லியன் பெறுமதி கொண்ட Apple நிறுவனமும் உள்ளன. நேற்று செவ்வாய் மட்டும் nVIDIA பங்குச்சந்தை பெறுமதி $113 […]

1 2 3 16