அமெரிக்க பொருட்கள் மீதான இறக்குமதி வரியை சீனா 84% இல் இருந்து 125% ஆக உயர்த்தி உள்ளது. ரம்ப் சீன பொருட்கள் மீதான இறக்குமதி வரியை 145% ஆக உயர்த்திய பின்னரே சீனா தனது வரியை 125% ஆக உயர்த்தியது. அத்துடன் அமெரிக்க பொருட்கள் மீதான 125% வரியே இறுதி வரி என்றும், இதற்கு மேல் தமது வரி உயர்த்தப்படாது என்றும் சீனா கூறியுள்ளது. இதற்கு மேலான வரி ஒரு number game மட்டுமே என்றுள்ளது சீனா. […]
சீனாவின் 84% பதிலடி வரியால் விசனம் கொண்ட ரம்ப் 104% ஆக அறிவித்திருந்த சீன பொருட்களுக்கான இறக்குமதி வரியை புதன்கிழமை 125% ஆக உயர்த்தி உள்ளார். அதேவேளை பங்கு சந்தைகளின் பாரிய இழப்புகளை குறைக்கும் நோக்கில் ஏனைய நாடுகளுக்கான இறக்குமதி வரியை 90 தினங்களுக்கு 10% ஆக மட்டும் கொண்டிருக்கவும் அறிவித்துள்ளார். சீனா மீதான இந்த புதிய 125% வரி உடனடியாக நடைமுறைக்கு வருகிறது என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த மிகையான இருதரப்பு வரிகளால் அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையேயான […]
அமெரிக்க சனாதிபதி சீன பொருட்களுக்குகான இறக்குமதி வரியை செவ்வாய்க்கிழமை 54% இல் இருந்து 104% ஆக அதிகரித்த பின் இன்று புதன் சீனா அமெரிக்க பொருட்களுக்கான இறக்குமதி வரியை 34% இல் இருந்து 84% ஆக அதிகரித்து உள்ளது. இதனால் பங்குச்சந்தைகள் மேலும் கவிழும் வாய்ப்பு அதிகமாகிறது. ரம்ப் இரண்டாம் தடவை பதவிக்கு வந்த பின் சீன பொருட்களுக்கு முதலில் 10% இறக்குமதி வரியை அறிவித்து இருந்தார். பின் உலக நாடுகள் எல்லாவற்றுக்கும் 10% வரியை அறிவித்தார். […]
வெள்ளிக்கிழமை அமெரிக்காவின் DOW JONES பங்குச்சந்தை சுட்டி மேலும் 2,230 புள்ளிகளை (5.5%) இழந்துள்ளது. இந்த சுட்டி ஏற்கனவே வியாழக்கிழமை 4% பெறுமதியை இழந்திருந்தது. வெள்ளிக்கிழமை NASDAQ மற்றும் S&P 500 ஆகிய சுட்டிகளும் சுமார் 6% பெறுமதியை இழந்துள்ளன. ரம்பின் இந்த வரி யுத்தத்தால் அமெரிக்காவின் பங்குச்சந்தைகள் கடந்த 2 தினங்களில் மட்டும் $6 ட்ரில்லியன் (அல்லது $6,000 பில்லியன்) பங்குச்சந்தை பெறுமதியை இழந்துள்ளன. வரலாற்றில் இது மிக பெரிய இழப்பாகும். ரம்பின் வரிக்கு சீனா […]
இலான் மஸ்க்கின் (Elon Musk) பெரும்பான்மை உரிமை கொண்ட அமெரிக்காவின் Tesla என்ற மின்னில் இயங்கும் கார் நிறுவனத்தின் வருமானத்தை பின் தள்ளி கடந்த ஆண்டு சீனாவின் BYD என்ற மின்னில் இயங்கும் கார் நிறுவனத்தின் விற்பனை $107 பில்லியனுக்கும் அதிகமாகி உள்ளது. அத்துடன் BYD யின் நிகர இலாபமும் (net profit) 2023ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 34% ஆல் அதிகரித்து $5.5 பில்லியன் (40.3 பில்லியன் யுவான்) ஆகியுள்ளது. 2024ம் ஆண்டு Tesla வின் வருமானம் […]
ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை $3,000 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்க சனாதிபதி ரம்பின் இறக்குமதி வரிகள் உலக பொருளாதாரத்தை மிரட்டுவதாலும், உலகின் பல முனைகளில் யுத்தங்கள் இடம்பெறுவதாலுமே தங்கத்தின் விலை இவ்வாறு அதிகரித்து செல்கிறது. நாடுகள், வங்கிகள், நிறுவனங்கள், தனியார் எல்லோருமே தமது கையிருப்பை பாதுகாக்க தங்கத்தில் முதலிடுகின்றனர். சுமார் 25 ஆண்டுகளுக்கு முன், 2000ம் ஆண்டில், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை சுமார் $300 ஆக மட்டுமே இருந்தது. ரம்ப் யூக்கிறேன் சனாதிபதி செலன்ஸ்கியை […]
அமெரிக்க சனாதிபதி ரம்பின் ஆட்சியில் ரம்புக்கு அடுத்து இரண்டாவது பலம் கொண்ட நபராக உள்ளவர் இலான் மஸ்க் (Elon Musk). ஆனால் அவரின் மின்னில் இயங்கும் கார் தயாரிப்பு நிறுவனமான Tesla பங்குச்சந்தையில் சுமார் $700 பில்லியனை கடந்த 3 மாதங்களில் இழந்துள்ளது. இது சுமார் 45% இழப்பு. ரம்ப் சனாதிபதி தேர்தலில் வென்றபின், டிசம்பர் 17ம் திகதி இலானின் Tesla நிறுவனத்தின் பங்குச்சந்தை பெறுமதி $1.5 டிரில்லியன் ($1,500 பில்லியன்) பெறுமதியை கொண்டிருந்தது. தற்போது Tesla […]
சீனாவை தளமாக கொண்ட DeepSeek என்ற AI நிறுவனத்தின் வருகையால் அமெரிக்காவை தளமாக கொண்ட INVIDIA என்ற முதல் தர AI நிறுவனம் திங்கள்கிழமை பங்கு சந்தையில் $592.7 பில்லியன் பெறுமதியை இழந்துள்ளது. அதனால் NVIDIA வின் பங்கு சந்தை பெறுமதி திங்கள் மட்டும் 17% ஆல் விழுந்துள்ளது. கடந்த கிழமையே DeepSeek தனது AI செயலியை Apple நிறுவனத்தின் app store இல் அறிமுகம் செய்திருந்தது. திங்கள் வரையில் DeepKeep கின் செயலி ChatGPT செயலியின் […]
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் சீனா மீது பெரும் தடைகளை விதித்தாலும் டிசம்பர் மாதம் சீனாவின் ஏற்றுமதி 10.7% ஆல் வளர்ச்சி அடைந்துள்ளது என்று இன்று திங்கள் வெளிவந்த தரவுகள் கூறுகின்றன. ரம்ப் இந்த மாதம் சனாதிபதி ஆனவுடன் சீன பொருட்களுக்கு இறக்குமதி வரிகளை அதிகரிக்கலாம் என்ற பயத்தில் மேற்கு நாடுகளின் வர்த்தகங்கள் அதிகரித்த இறக்குமதியை செய்திருக்கலாம் என்று கருதப்பட்டாலும், ஆசியாவிலும் சீனாவின் ஏற்றுமதி அதிகரித்து உள்ளது. அதேவேளை சீனாவின் இறக்குமதி 1% ஆல் அதிகரித்து உள்ளது. […]
அதானி நிறுவனங்களில் மேற்கொண்டு முதலீடுகள் செய்வதை பிரான்சின் எண்ணெய் வள நிறுவனமான TotalEnergies தற்காலிகமாக இடைநிறுத்தி உள்ளது. அமெரிக்கா தற்போது அதானி மீது தொடுத்துள்ள $265 மில்லியன் இலஞ்ச குற்றச்சாட்டே TotalEnergies தனது புதிய முதலீடுகளை இடைநிறுத்த காரணம். TotalEnergies அதானியின் Adani Green Energy என்ற நிறுவனத்தில் 19.7% பங்கை 2021ம் ஆண்டு கொள்வனவு செய்திருந்தது. Adani Total Gas என்ற கூட்டுறவு நிறுவனத்தில் TotalEnergies 37.4% உரிமையை கொண்டுள்ளது. அதானி மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை அற்றன என்று நிரூபிக்கும் வரை TotalEnergies மேற்கொண்டு அதானி நிறுவனங்களில் […]