எண் தமிழ்

க. நீலாம்பிகை“எண் என்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண் என்ப வாழும் உயிர்க்கு”“எண்ணும் எழுத்தும் கண்ணென தகும்” மேல் கூறிய மூத்தோர் வாக்குகள் மூலம் பண்டைய தமிழர் எழுத்தறிவுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை சம அளவில் எண் அறிவுக்கும் கொடுத்திருந்தமையை அறியக்கூடியதாக உள்ளது. அதுமட்டுமன்றி இன்று உலகெங்கும் பாவனையில் உள்ள நவீன எண்களை (modern decimal number system) பண்டைய தமிழரே உலகிற்கு வழங்கியிருக்கலாம் என கருத பல ஆதாரங்கள் உண்டு. முதலாவதாக நாம் இலக்கங்களை அழைக்கும் முறையை […]