அமெரிக்காவின் Intel நிறுவனம் தயாரிக்கும் கணினி chip களுக்கு சீன அரசு விரைவில் பலத்த கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என்று நம்பப்படுகிறது. Cybersecurity Association of China (CSAC) என்ற சீன ஆய்வு அமைப்பு புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை ஒன்றே இதற்கு காரணம். Xeon processors உட்பட Intel தயாரிப்புகள் கொண்டுள்ள (embedded) operating systems அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு அமைப்பான National Security Agency (NSA) இரகசிய பின் கதவுகளை கொண்டிருக்க வசதி செய்கிறது என்றும், அது சீனாவின் […]
மேலும் 230 சீன இணைய திருடர்களை இன்று (அக்டோபர் 15) கைது செய்துள்ளதாக விஜித ஹேரத் கூறியுள்ளார். இவர்கள் உலகம் எங்கும் உள்ள வங்கிகளில் இருந்து இணையம் மூலம் திருடுபவர்கள் என்று கூறப்படுகிறது. இந்த கைதுக்கு உதவ சீனாவில் இருந்து காவல் அதிகாரிகள் இலங்கை வந்திருந்தனர். இந்த சீனரை சீனாவுக்கு நாடு கடத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அக்டோபர் 12ம் திகதி கண்டி நகருக்கு அண்மையில் உள்ள குண்டசாலை பகுதியில் 120 சீன இணைய திருடர்கள் கைது செய்யப்பட்டு இருந்தனர். அவர்கள் 47 […]
2023ம் ஆண்டு இடம்பெற்ற Hardeep Singh Nijjar படுகொலை உட்பட கனடாவில் இடம்பெற்ற சில படுகொலைகள் தொடர்பாக இந்தியாவுக்கும், கனடாவுக்கும் இடையே இன்று திங்கள் மீண்டும் முரண்பாடு தோன்றியுள்ளது. ஞாயிறு கனடா தனது diplomatic communication ஒன்றில் Sanjay Kumar Verma என்ற கனடாவுக்கான இந்திய தூதுவரும், சில இந்திய தூதரக அதிகாரிகளும் படுகொலைகளில் “persons of interest” என்று கூறியிருந்தது. இதனால் விசனம் கொண்ட இந்தியா கனடிய பிரதமர் ரூடோ தேர்தல் வாக்கு பெறும் நோக்க அரசியல் செய்கிறார் […]
Elon Musk என்பவரின் SpaceX நிறுவனத்தின் Starship என்ற விண்கலத்தின் 5ஆவது பரிசோதனை இன்று ஞாயிறு வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது. இந்த கலம் நியூ யார்க் நேரப்படி காலை 8:25 மணியளவில் Texas மாநிலத்தில் உள்ள Boca Chica என்ற இடத்தில் ஏவப்பட்டது. இந்த பரிசோதனை ஏவலில் எவரும் பயணித்து இருக்கவில்லை. இது 121 மீட்டர் உயரமானது. அத்துடன் 16.7 மில்லியன் இறத்தல் உந்தத்தை கொண்டது. இது இரண்டு பகுதிகளை கொண்டது. கீழே உள்ளது 33 ஏவு இயந்திரங்களை கொண்ட […]
Concern Worldwide என்ற ஐரோப்பாவின் NGO தயாரித்த 2024ம் ஆண்டுக்கான உலக பசி கொடுமை சுட்டியில் (Global Hunger Index) இலங்கை 56ம் இடத்தில் உள்ளது. நேபால் 68ம் இடத்திலும், பங்களாதேஷ் 84ம் இடத்திலும், இந்தியா 105ம் இடத்திலும், பாகிஸ்தான் 109ம் இடத்திலும் உள்ளன. இலங்கை, நேபால், பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் பசி கொடுமை நிலைமை “Moderate” என்றும் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் நிலைமை “Serious” என்றும் கூறப்படுகிறது. சீனா உட்பட 22 நடுகள் 1ம் […]
TD Bank என்ற கனடிய வங்கிக்கு அமெரிக்க அரசு வியாழக்கிழமை $3 பில்லியன் தண்டம் விதித்துள்ளது. TD Bank தெரிந்தும் பெருமளவு பண கடத்தலுக்கு உதவியுள்ளது என்று அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. TD வங்கியும் குற்றத்தை ஏற்றுக்கொண்டுள்ளது. அமெரிக்காவில் இயங்கும் TD Bank கனடிய TD Bank கின் கிளை நிறுவனமே. அமெரிக்க கிளை நிறுவனம் அமெரிக்காவின் கிழக்கே உள்ள 16 மாநிலங்களில் வங்கி சேவையை வழங்குகிறது. இது அமெரிக்காவில் 10ஆவது பெரிய வங்கி. மூன்று பெரிய […]
இந்தியாவின் முதல் 100 செல்வந்தர்களிடம் மொத்தம் $1.115 டிரில்லியன் ($1,115 பில்லியன்) சொத்துக்கள் உள்ளதாக அமெரிக்காவின் Forbes நிறுவனம் கணித்துள்ளது. இந்த சொத்துக்களில் பெரும்பாலானவை திடம் அற்ற பங்குச்சந்தை மூலமான சொத்துக்களே. கடந்த ஆண்டு இந்த 100 பேரிடமும் இருந்த சொத்துக்கள் $800 பில்லியன் மட்டுமே. அதாவது இவர்களின் சொத்துக்கள் கடந்த 12 மாதங்களில் மட்டும் 40% ஆல் அதிகரித்துஉள்ளன. இந்தியாவின் முதலாவது செல்வந்தரான முகேஷ் அம்பானியிடம் தற்போது $119.5 பில்லியன் சொத்துக்கள் உள்ளன. இவரின் சொத்துக்கள் கடந்த 12 […]
அமெரிக்காவின் பசிபிக் படையணி கட்டளை அதிகாரி (Pacific Fleet Commander) Steve Koehler, ஒரு 4-star அட்மிரல், நாளை வியாழன் (அக்டோபர் 10) இலங்கைக்கு திடீர் பயணம் ஒன்றை செய்கிறார். இந்த பயணத்தின் நோக்கம் அமெரிக்காவுக்கும், இலங்கைக்கும் இடையே இருதரப்பு உறவை வளர்ப்பதே என்று அமெரிக்கா கூறினாலும், அதை ஏன் ஒரு திடீர் பயணம் மூலம் செய்யவேண்டும் என்று கூறவில்லை. பொதுவாக கியூபா போன்ற கம்யூனிஸ்டுகள் மீது காழ்ப்பு கொண்ட அமெரிக்கா இடதுசாரி அரசுகளுடன் உறவை பேணுவதில்லை. அமெரிக்காவை விரட்டிய இடதுசாரிகளின் […]
ரஷ்ய சனாதிபதி பூட்டினும், Masoud Pezeshkian என்ற ஈரானிய சனாதிபதியும் வெள்ளிக்கிழமை Turkmenistan நாட்டில் சந்தித்து உரையாடவுள்ளனர். ஈரானுக்கும், இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் முறுகல் நிலை இவர்களின் உரையாடலில் முதன்மை விசயமாக இருக்கும். ஈரான் யூக்கிறேன் யுத்தத்தில் ரஷ்யாவுக்கு பெருமளவு உதவிகளை செய்தாலும், ரஷ்யா இதுவரை ஈரானுக்கு இஸ்ரேல் விசயத்தில் பெருமளவு உதவிகளை செய்யவில்லை. ஈரான் ரஷ்யாவின் S-400 ஏவுகணைகளை பெற நீண்ட காலம் முயற்சிக்கிறது. இதற்கான சில பாகங்கள் ஈரான் வந்தாலும் ஈரானில் S-400 சேவைக்கு […]
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் திகதி ஹமாஸ் இஸ்ரேல் மீது செய்த தாக்குதலுக்கு 1,200 பேர் பலியாகியும், 250 பேர் பணயம் எடுக்கப்பட்டும் இருந்தனர். ஹமாஸின் இந்த தாக்குதலுக்கு பழிவாங்க இஸ்ரேல் கடந்த ஒரு ஆண்டில் சுமார் 42,000 பலஸ்தீனரை கொலை செய்துள்ளது. அதில் அரை பங்குக்கும் மேலானவர்கள் பெண்களும், சிறுவர்களும். பலஸ்தீனர் மீதான இஸ்ரேலின் இந்த யுத்தத்துக்கு அமெரிக்கா இதுவரை $17.9 பில்லியன் ஆயுத உதவி செய்ததாக Brown University கூறுகிறது. அத்துடன் அமெரிக்கா […]