மாலைதீவில் இருந்து இலங்கைக்கு இந்திய சீனி 

மாலைதீவில் இருந்து இலங்கைக்கு இந்திய சீனி 

இந்திய அரசு மாலைதீவுக்கு மட்டும் என்று அனுமதி வழங்கிய இந்திய சீனியின் ஒரு பகுதி இடைவழியில் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதை இந்திய Directorate-General of Foreign Trade (DGFT) தற்போது விசாரணை செய்கிறது. உள்நாட்டு உற்பத்தி குறைந்ததாலும், இந்தியாவின் சில இடங்களில் தேர்தல் இடம்பெற்றதாலும் இந்தியா சீனி ஏற்றுமதியை இடைநிறுத்தி இருந்தது. ஆனால் மாலைதீவை சீனாவில் இருந்து தன் பக்கம் இழுக்க மாலைதீவுக்கு மட்டும் மலிவு விலையில் 64,000 தொன் சீனியை ஏற்றுமதி செய்ய இந்தியா அக்டோபர் 25ம் திகதி அனுமதித்து […]

இஸ்ரேல், ஹெஸ்புல்லா இடையே 60 தின யுத்த நிறுத்தம் 

இஸ்ரேல், ஹெஸ்புல்லா இடையே 60 தின யுத்த நிறுத்தம் 

லெபனான் ஆயுத குழுவான ஹெஸ்புல்லாவுக்கும், இஸ்ரேல் இராணுவத்துக்கும் இடையே இன்று செவ்வாய் 60 தின யுத்த நிறுத்தம் அறிவிக்கப்பட்டு உள்ளது. யுத்த நிறுத்தம் லெபனான் நேரப்படி புதன் காலை 4:00 மணிக்கு ஆரம்பமாகும். இஸ்ரேல் அமைச்சரவையும் இந்த யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொண்டுள்ளது. ஆனால் இஸ்ரேலின் கடும்போக்கு வலதுசாரி அரசியல்வாதிகள் இந்த யுத்த நிறுத்தத்தை சரண் அடைவதற்கு சமம் என்று கூறியுள்ளனர். யுத்த நிறுத்த காலத்தில் இஸ்ரேல்-லெபனான் எல்லையில் ஐ.நா. படைகளும், லெபனான் படைகளும் நிலைகொள்ளும். ஆனாலும் மேலதிக யுத்த நிறுத்த […]

கனேடிய, மெக்சிக்கோ பொருட்களுக்கு ரம்ப் 25% வரி 

கனேடிய, மெக்சிக்கோ பொருட்களுக்கு ரம்ப் 25% வரி 

ஜனவரி மாதம் 20ம் திகதி முதல் கனடா, மெக்சிக்கோ ஆகிய இரண்டு நாடுகளில் இருந்து வரும் பொருட்களுக்கு 25% இறக்குமதி வரி அறவிட உள்ளதாக ரம்ப்  இன்று திங்கள் கூறியுள்ளார். அது தற்போது நடைமுறையில் உள்ள NAFTA உடன்படிக்கைக்கு முரணானது.  அத்துடன் சீனாவில் இருந்து வரும் பொருட்களுக்கு 10% மேலதிக இறக்குமதி வரி அறவிட உள்ளதாகவும் ரம்ப் கூறியுள்ளார். ரம்ப் இவ்வாறு முன்னரும் பல மிரட்டல்களை அறிவித்து தனக்கு சாதகமான பொருளாதார பேச்சுகளுக்கு தளம் அமைத்திருந்தார். இவர் தனது 2017 ஆட்சியில் […]

அதானி முதலீடுகளை இடைநிறுத்தும் பிரான்சின் TotalEnergies 

அதானி முதலீடுகளை இடைநிறுத்தும் பிரான்சின் TotalEnergies 

அதானி நிறுவனங்களில் மேற்கொண்டு முதலீடுகள் செய்வதை பிரான்சின் எண்ணெய் வள நிறுவனமான  TotalEnergies தற்காலிகமாக இடைநிறுத்தி உள்ளது.  அமெரிக்கா தற்போது அதானி மீது தொடுத்துள்ள $265 மில்லியன் இலஞ்ச குற்றச்சாட்டே TotalEnergies தனது புதிய முதலீடுகளை இடைநிறுத்த காரணம். TotalEnergies அதானியின் Adani Green Energy என்ற நிறுவனத்தில் 19.7% பங்கை 2021ம் ஆண்டு கொள்வனவு செய்திருந்தது. Adani Total Gas என்ற கூட்டுறவு நிறுவனத்தில் TotalEnergies 37.4% உரிமையை கொண்டுள்ளது. அதானி மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை அற்றன என்று நிரூபிக்கும் வரை TotalEnergies மேற்கொண்டு அதானி நிறுவனங்களில் […]

அதானியின் கொழும்பு துறையும் அமெரிக்க விசாரணையில் 

அதானியின் கொழும்பு துறையும் அமெரிக்க விசாரணையில் 

இலங்கை அரசு பகிரங்க கேள்விகள் எதுவும் இன்றி Adani Ports என்ற அதானியின் நிறுவனத்துக்கு கொழும்பு துறைமுகம் ஒன்றை (WCT: West Container Terminal) கட்டி, சேவைக்கு விட அனுமதி வழங்கி இருந்தது. இந்த திட்டத்துக்கு US International Development Finance Corp.  என்ற அமைப்பு $500 மில்லியன் கடன் வழங்கவும் முன்வந்திருந்தது. ஆனால் அண்மையில் அமெரிக்கா அதானி உட்பட 8 பேர் மீது $250 மில்லியன் இலஞ்ச குற்றச்சாட்டை சுமத்தி, அவர்களை கைது செய்ய ஆணையும் வழங்கியுள்ளது. இந்நிலையில் […]

இஸ்ரேலின் Haaretz பத்திரிகைக்கு இஸ்ரேல் அரசு தடை

இஸ்ரேலின் Haaretz பத்திரிகைக்கு இஸ்ரேல் அரசு தடை

இஸ்ரேலில் வெளியாகும் Haaretz என்ற பத்திரிகைக்கு பிரதமர் நெட்டன்யாஹுவின் அரசு தடை விதித்துள்ளது. இடதுசாரி பத்திரிகையான Haaretz வெளியிடும் செய்திகளால் விசனம் கொண்டதாலேயே வலதுசாரி பிரதமர் அந்த பத்திரிகை மீது தடையை விதித்துள்ளார். 1918ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட Haaretz இஸ்ரேலின் மூத்த பத்திரிகையாகும். இது பொதுவாக இடதுசாரி கொள்கைகளை கொண்டது. இது இஸ்ரேல் பலஸ்தீனரை தொடர்ந்தும் ஆக்கிரமிப்பதை கண்டிப்பது. இது காசாவில் இஸ்ரேல் படைகள் செய்யும் கொடுமைகளை பகிரங்கம் செய்து வந்துள்ளது. இந்த ஆண்டு அக்டோபர் 31ம் திகதி Haarezt பத்திரிகையை வெளியிடுபவரான Amos Schocken […]

அமெரிக்க விமானப்படை தளங்கள் அருகே Drones 

அமெரிக்க விமானப்படை தளங்கள் அருகே Drones 

பிரித்தானியாவில் உள்ள அமெரிக்காவின் விமானப்படை தளங்கள் மூன்றின் அருகே சில அடையாளம் காணப்படாத drone கள் புதன்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரையான காலத்தில் பறந்ததாக அமெரிக்கா அறிவித்துள்ளது. பிரித்தானியாவின் Suffolk பகுதியில் உள்ள RAF Lakenheath, RAF Mildenhall மற்றும் Norfolk பகுதியில் உள்ள RAF Feltwell விமானப்படை தளங்களுக்கு அருகேயே மேற்படி இனம் தெரியாத ஆள் இல்லாத drone கள் பறந்ததாக கூறப்படுகிறது. மேற்படி 3 தளங்களையும் அமெரிக்காவே பயன்படுத்துகிறது. Lakenheath தளத்தில் அமெரிக்காவின் F-35A வகை யுத்த […]

IMF அடுத்த கட்ட $333 மில்லியனையும் வழங்குகிறது

IMF அடுத்த கட்ட $333 மில்லியனையும் வழங்குகிறது

இன்று சனிக்கிழமை IMF அதிகாரிகள் இலங்கை அரசின் பொருளாதார நடவடிக்கைகளை மீள் பார்வை செய்த பின் அடுத்த கட்ட கடன் தொகையையும் வழங்க IMF முன்வந்துள்ளது. அதன்படி இலங்கைக்கு மேலும் $333 மில்லியன் கிடைக்கும். இன்று அறிவித்துள்ள $333 மில்லியன் தொகையுடன் இலங்கை இதுவரை $1.3 பில்லியன் கடனை IMF இடமிருந்து பெற்றுள்ளது. மொத்தம் $2.9 பில்லியன் கடன் வழங்க IMF கடந்த ஆண்டு இணங்கி இருந்தது. இலங்கையின் வளர்ச்சிக்கு ஏற்ப அந்த தொகையை IMF துண்டம் துண்டமாகவே வழங்கும். […]

இஸ்ரேல் பிரதமர் நெட்டன்யாஹு கைதுக்கு ICC கட்டளை 

இஸ்ரேல் பிரதமர் நெட்டன்யாஹு கைதுக்கு ICC கட்டளை 

இஸ்ரேல் பிரதமர் நெட்டன்யாஹு (Netanyahu), முன்னாள் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் Gallant, ஹமாஸ் அதிகாரி Ibrahim Al-Masri ஆகிய மூவரையும் கைது செய்ய ICC என்ற சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (International Criminal Court) இன்று வியாழன் arrest warrants மூலம் கட்டளை இட்டுள்ளது. காசா யுத்தத்தில் இவர்கள் செய்த war crime களே கைது கட்டளைக்கான காரணம். இஸ்ரேல் பிரதமரும், முன்னாள் பாதுகாப்பு அமைச்சரும் காசா யுத்தத்தில் war crime, crimes against humanity, starvation as a weapon […]

அதானி மீது அமெரிக்கா இலஞ்ச வழக்கு தாக்குதல் 

அதானி மீது அமெரிக்கா இலஞ்ச வழக்கு தாக்குதல் 

இந்திய பிரதமர் மோதியின் உற்ற நண்பரான தொழிலதிபர் அதானி மீதும் அவரின் உறவினரான Sagar Adani மீதும், Vneet Jaain என்பவர் மீதும் அமெரிக்கா (US Department of Justice, US Securities and Exchange Commission) நியூ யார்க் நகரில் ஊழல் வழக்கு ஒன்றை புதன்கிழமை தாக்கல் செய்துள்ளது. வழக்கை கையாளும் அமெரிக்க நீதிபதி அதானியின் கைதுக்கு உத்தரவு இட்டுள்ளார். புதன் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு 2020ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரையான காலத்தில் அதானி $250 மில்லினுக்கும் அதிகமான பணத்தை இந்திய […]

1 6 7 8 9 10 330