சிங்கப்பூர் கடவுச்சீட்டு முதலாம் இடத்தில்

சிங்கப்பூர் கடவுச்சீட்டு முதலாம் இடத்தில்

2024ம் ஆண்டுக்கான Henley கடவுச்சீட்டு சுட்டியில் சிங்கப்பூர் கடவுச்சீட்டு முதலாம் இடத்தில் உள்ளது. சிங்கப்பூர் கடவுச்சீட்டை கொண்டவர்கள் 195 நாடுகளுக்கு அல்லது இடங்களுக்கு விசா இன்றி பயணிக்கலாம். இந்திய  கடவுச்சீட்டு 83ம் இடத்தில் உள்ளது. இந்திய கடவுச்சீட்டை கொண்டவர்கள் 58 நாடுகளுக்கு மட்டுமே விசா இன்றி பயணிக்கலாம். இலங்கை கடவுச்சீட்டு 95ம் இடத்தில் உள்ளது. இலங்கை கடவுச்சீட்டை கொண்டவர்கள் 44 நாடுகளுக்கு மட்டுமே விசா இன்றி பயணிக்கலாம்.  2006ம் ஆண்டு இலங்கை கடவுச்சீட்டு 74ம் இடத்தில் இருந்தது. […]

இலங்கை தூதரக அதிகாரிகள் 16 பேர் திருப்பி அழைப்பு 

இலங்கை தூதரக அதிகாரிகள் 16 பேர் திருப்பி அழைப்பு 

உலகம் எங்கும் இலங்கை தூதரகங்களில் பணியாற்றும் 16 அதிகாரிகள் உடனடியாக அனுர அரசால் இலங்கைக்கு திருப்பி அழைக்கப்படுகின்றனர். இவர்கள் தாம் கொண்டிருந்த அரசியல் செல்வாக்குகள் காணமாகவே மேற்படி பதவிகளை அடைந்தனர் என்று கூறப்படுகிறது. திருப்பி அழைக்கப்படும் 16 அதிகாரிகள் வருமாறு:

செவ்வாய் அமெரிக்க சனாதிபதி தேர்தல், எவரும் வெல்லலாம் 

செவ்வாய் அமெரிக்க சனாதிபதி தேர்தல், எவரும் வெல்லலாம் 

செவ்வாய்க்கிழமை (நவம்பர் 5) அமெரிக்காவில் சனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளது. தேர்தலுக்கு மேலும் 2 தினங்கள் மட்டுமே இருக்கையில் போட்டியில் எவர் வெல்வார் என்று கூறமுடியாது உள்ளது. நாடளாவிய கருத்து கணிப்பில் கமலா ஹாரிஸுக்கு 48% ஆதரவும், ரம்புக்கு 47% ஆதரவும் உள்ளன. ஆனால் அமெரிக்காவில் நாடளாவிய மொத்த வாக்குகள் வெற்றியை தீர்மானிப்பதில்லை. பதிலுக்கு போட்டியாளர் ஒவ்வொரு மாநிலத்தையும் தனித்தனியே வென்று, அதன் மூலம் அந்த மாநிலங்களின் electoral வாக்குகளை பெறவேண்டும்.  மொத்தம் 538 electoral வாக்குகளில் சனாதிபதியாக தெரிவு செய்யப்பட குறைந்தது […]

இன்று முதல் சனி, ஞாயிறு காங்கேசன்துறை Intercity 

இன்று முதல் சனி, ஞாயிறு காங்கேசன்துறை Intercity 

இன்று சனிக்கிழமை (நவம்பர் 2) முதல் சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் கொழும்பு முதல் காங்கேசன்துறை வரையான குளிரூட்டப்பட்ட Intercity ரயில் சேவை ஆரம்பிக்கிறது என்று இலங்கை ரயில் திணைக்களம் அறிவித்துள்ளது. சனி, ஞாயிறு தினங்களில் காலை 5:30 மணிக்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து பயணிக்கும் இந்த Intercity ரயில் காலை 11:38 மணிக்கு காங்கேசன்துறையை அடையும். பின் காங்கேசன்துறையில் இருந்து பிற்பகல் 12:30 பயணத்தை ஆரம்பித்து மாலை 7:19 மணிக்கு கொழும்பை […]

எல்லையில் தீபாவளி இனிப்புகள் பரிமாறிய இந்திய, சீன படைகள்

எல்லையில் தீபாவளி இனிப்புகள் பரிமாறிய இந்திய, சீன படைகள்

நேற்றைய தீபாவளி தினத்தன்று இந்திய, சீன படைகள் தீபாவளி இனிப்புகளை எல்லையில் பரிமாறியுள்ளன. இரண்டு நாடுகளுக்கும் இடையில் முறுகல் நிலை தணிவதை இது எடுத்துக்காட்டுகிறது. இந்த இனிப்பு பரிமாற்றம் Ladakh பகுதியிலும், அருணாச்சல் பிரதேசத்திலும் உள்ள Line of Actual Control வழியே 5 இடங்களில் இடம்பெற்றுள்ளன. அதனால் இந்த பரிமாற்றம் இரண்டு அரசுகளினதும் அங்கிகாரம் பெற்ற நிகழ்வாக கருதப்படுகிறது. BRICS அமர்வுக்கு ரஷ்யா சென்ற இந்திய பிரதமர் மோதியும், சீன சனாதிபதி சீயும் அக்டோபர் 23ம் […]

X-Press Pearl கப்பல் விசயத்தில் ஊழல்? AKD அரசு மீண்டும் விசாரணை

X-Press Pearl கப்பல் விசயத்தில் ஊழல்? AKD அரசு மீண்டும் விசாரணை

X-Press Pearl கப்பல் விசயம் தொடர்பாக வெளியாகும் பல உண்மைகள் அதில் பெரும் ஊழல் இடம்பெற்று இருக்கலாம் என்று சந்தேகிக்க வைக்கிறது. அதனால் நவம்பர் 14 தேர்தலின் பின் சனாதிபதி AKD அரசு தீவிர விசாரணை ஒன்றை செய்ய அறிவித்துள்ளது. 2021ம் ஆண்டு X-Press Pearl கப்பல் நைத்திரிக் அமிலம் கசிந்து கொழும்பு கடலில் பெரும் அழிவை ஏற்படுத்தி இருந்தது. அதனால் இப்பகுதியில் மீன்பிடியும் தடைப்பட்டு இருந்தது. இலங்கையின் 40 அறிவாளர்களை கொண்ட Marine Environmental Protection Authority (MEPA) […]

இஸ்ரேல் வீசிய ஒரு குண்டுக்கு 93 பேர் பலி, 25 பேர் சிறுவர்

இஸ்ரேல் வீசிய ஒரு குண்டுக்கு 93 பேர் பலி, 25 பேர் சிறுவர்

கசாவின் வடக்கே உள்ள Beit Lahia என்ற இடத்தில் இஸ்ரேல் செவ்வாய்க்கிழமை வீசிய குண்டு ஒன்றுக்கு 93 பேர் பலியாகி உள்ளனர். அதில் 25 பேர் சிறுவர்கள். தாம் ஒரு சந்தேக ஒருவரை நோக்கி வீசிய குண்டுக்கு எவ்வாறு 93 பலியாகினர் என்று தெரியாது என்று இஸ்ரேல் இராணுவம் கூறியுள்ளது. ஒருவரை கொலை செய்ய 100 பேரை கொலை செய்யக்கூடிய குண்டை வீசும் இராணுவமா இஸ்ரேல் இராணுவம்? தாக்குதலுக்கு உள்ளானோர் அப்பகுதியில் உள்ள Kamal Adwan என்ற வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டாலும் அந்த […]

பலஸ்தீன ஐ.நா. உதவி அமைப்பு UNRWA மீது இஸ்ரேல் தடை 

பலஸ்தீன ஐ.நா. உதவி அமைப்பு UNRWA மீது இஸ்ரேல் தடை 

பலஸ்தீன அகதிகளுக்கு உதவி செய்வதற்கு 1967ம் ஆண்டு ஐ.நா. உடன்படிக்கை ஒன்று மூலம் உருவாக்கப்பட்ட UN Relief and Works Agency for Palestine Refugees (UNRWA) இஸ்ரேல் பாராளுமன்றத்தில் 2 சட்டங்கள் மூலம் தடை செய்யப்பட்டுள்ளது. இரண்டு சட்டங்களில் ஒன்று UNRWA இஸ்ரேலில் இயங்குவதை தடை செய்கிறது. பாராளுமன்றத்தில் இது 92 ஆதரவு வாக்குகளையும், 10 எதிர்ப்பு வாக்குகளையும் பெற்று சட்டமாகியது. மற்றையது இஸ்ரேல் அதிகாரிகள் UNRWA வுடன் தொடர்பு கொள்வதை தடை செய்கிறது. இது […]

இந்திய மருந்து நிறுவனம் ரஷ்யாவுக்கு தொழில்நுட்ப விற்பனை

இந்திய மருந்து நிறுவனம் ரஷ்யாவுக்கு தொழில்நுட்ப விற்பனை

இந்தியாவின் Shreya Life Sciences என்ற மருந்து ஆய்வு நிறுவனம் ரஷ்யாவுக்கு அமெரிக்காவின் Dell நிறுவனம் தயாரித்த PowerEdge XE9680 வகை server களை விற்பனை செய்துள்ளது என்று Bloomberg செய்தி நிறுவனம், ImportGenius, NBD ஆகியன கூட்டாக அறிந்துள்ளன. Shreya மொத்தம் 1,111 இவ்வகை Dell sever களை ரஷ்யாவுக்கு விற்பனை செய்துள்ளது. இந்த sever களில் ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு தடை செய்யப்பட்ட NVIDIA H100 chip உள்ளன. இவை இந்த ஆண்டு ஏப்ரல் முதல் […]

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் NPP வெற்றி

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் NPP வெற்றி

நேற்று சனிக்கிழமை (அக்டோபர் 26) இடம்பெற்ற எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தலில் அனுர குமார திசாநாயக்க தலைமையிலான National People’s Party (NPP) கட்சி மொத்தம் 30 ஆசனங்களில் 15 ஆசனங்களை வென்றுள்ளது. இப்பகுதியில்  இம்முறை NPP 47.6% வாக்குகளை பெற்றுள்ளது. கடந்த சனாதிபதி தேர்தலில் NPP இங்கே 51.4% வாக்குகளை பெற்று இருந்தது. சஜித் தலைமையிலான SJB கட்சி 6 ஆசனங்களையும், SLPP கட்சி 3 ஆசனங்களையும், People’s Alliance கட்சி 2 ஆசனங்களையும் வென்றுள்ளன. […]

1 5 6 7 8 9 327