இன்று 17 ஆம் திகதி (01.17.2013) மாத்தறை வர்த்தக சம்மேளனத்தில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் Sison ஆற்றிய உரையின் ஒரு சிறு பகுதி இங்கே தரப்படுகிறது: “மாத்தறையில் மீண்டும் சந்திப்பதையிட்டு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.” “பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க மீதான குற்றப்பிரேரணை தொடர்பில் எமது அரசாங்கத்தின் கரிசனை குறித்து வெளியான செய்தித்தலைப்புகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இந்த குற்றப்பிரேரனையானது இலங்கையிலுள்ள அதிகார வேறாக்கம் குறித்தும் அதன் பிரசன்னமின்றிய நிலையில் ஜனநாயக நிறுவனங்களுக்கு ஏற்பாடும் தாக்கத்தையும் கேள்விக்குட்படுத்துவதாக அமைந்துள்ளது.” “வொஷிங்டனிலுள்ள எமது பேச்சாளர் இவ்வாரத்தில் குறிப்பிட்டதுபோன்று […]
அண்மையில் இந்தியா, பிரெஞ்சு தாயாரிப்பான Rafale யுத்தவிமானங்கள் 126 ஐ கொள்வனவு செய்ய இணங்கியிருந்தது. ஆனால் அந்த எண்ணிக்கை இப்போது 189 ஆக உயரலாம் என தெரியவருகிறது. தற்போது பிரான்ஸ் சென்றுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷிட் இந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். அவ்வாறு கொள்வனவு எண்ணிக்கை 189 ஆக உயரின், மொத்த கொள்வனவின் பெறுமதி சுமார் U$18 பில்லியன் ஆக இருக்கும். இந்த உடன்படிக்கையின் கீழ், முதல் 18 விமானக்களும் பிரான்சிலேயே முற்றாக உற்பத்தி செய்யப்படும். ஏனையவை பிரான்சில் தயாரிக்கபட்டு இந்தியாவின் பெங்கலூரில் பொருத்தப்படும். […]
உயர் கல்விக்கு அதியுயர் முக்கியத்துவம் கொடுக்கும் நாடாக இன்று சீனா விளங்குகிறது. சீனாவின் உயர் கல்விக்கான தற்போதைய வருடாந்த செலவீடு சுமார் U$ 250 பில்லியன். சுமார் 10 வருடத்தின் முன் இங்கு உயர்கல்விக்கான செலவீடு $30 பில்லியன் அளவிலேயே இருந்தது. அப்போது சீனா சுமார் 2 மில்லியன் பட்டதாரிகளையே வருடமொன்றில் உருவாக்கியது. ஆனால் தற்போது சுமார் 8 மில்லியன் பட்டதாரிகளை வருடமொன்றில் உருவாக்குகிறது. இந்த வேகம் தொடருமாயின் தற்போது ‘Made in China’ பொருட்களை கொள்வனவு செய்யும் நாடுகள் விரைவில் ‘Made in […]
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா இன்று தனது இரண்டாம் ஆட்சிக்காலத்துக்கான புதிய உறுப்பினர்களை முன்மொழிந்துள்ளார். அமரிக்காவின் புதிய பாதுகாப்பு செயலாளராக Chuck Hagel (சக் கேகல்) பதவி வகிப்பார்.