மாலைதீவில் தான் கொண்டிருந்த கடற்படை தளத்தை சீனாவுக்கு இழந்த இந்தியா தனது சொந்த தீவான மினிக்காய் தீவில் கடற்படை தளம் ஒன்றை அமைக்கிறது. மினிக்காய் தீவு மாலைதீவில் இருந்து 500 km தூரம் வடக்கே உள்ளது. INS Jatayu என்ற இந்த கடற்படை தளம் மார்ச் மாதம் 6ம் திகதி ஆரம்பிக்கப்படும். ஆரம்ப விழாவில் சுமார் 15 இந்திய யுத்த கப்பல்கள் பங்குகொள்ளும். இந்த தளம் இந்து சமுத்திரத்தை கண்காணிக்க உதவும். ஆனாலும் இந்து சமுத்திரம் ஊடான […]
காசாவில் அகதிகளுக்கு உணவு வழங்க வந்த வண்டிகளை சுற்றி இருந்தோரை இஸ்ரேல் இராணுவம் சுட்டதால் ஏற்பட்ட குழப்பத்தில் 104 பேர் பலியாகியும், 760 பேர் காயமடைந்தும் உள்ளனர். அகதிகள் மீது தனது படைகள் சுட்டதை ஏற்றுக்கொண்ட இஸ்ரேல் சம்பவத்தை தாம் விசாரணை செய்வதாக கூறியுள்ளது. துப்பாக்கி சூடுகளில் இருந்து தப்பி ஓட முனைந்த உணவு வண்டிகளும் சிலரை மோதி கொலை செய்துள்ளன என்றும் கூறப்படுகிறது. இஸ்ரேலின் இந்த தாக்குதலை “gross violation of international humanitarian laws and […]
அமெரிக்காவின் Michigan மாநிலத்தில் இன்று இடம்பெற்ற சனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளரை தெரிவு செய்யும் உட்கட்சி தேர்தலில் அந்த மாநில இஸ்லாமிய மக்கள் தமது கடுமையான எதிர்ப்பை திடமாக காட்டி உள்ளனர். காசா யுத்தத்தில் இஸ்ரேலுக்கு பைடென் கண்மூடித்தனமான ஆதரவு வழங்குவதே இஸ்லாமியரின் வெறுப்புக்கு காரணம். Michigan தேர்தலில் போட்டியிடுபவர்கள் எவருக்கும் வாக்களிக்க விரும்பாத ஒருவர் “Uncommitted” என்ற வகைக்கு வாக்களிக்கலாம். இன்று இடம்பெற்ற Democratic கட்சியின் உட்கட்சி தேர்தலில், 99% வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், பைடெனுக்கு கிடைத்த […]
பிரித்தானியாவின் Which? என்ற கருத்து கணிப்பு நிறுவனம் பயணிகளின் விருப்புக்குரிய, வெறுப்புக்குரிய விமான சேவைகள் பட்டியலை வெளியிட்டு உள்ளது. சுமார் 10,000 விமான பயணங்களின் தரவுகள், பயணிகளின் கருத்துக்கள் ஆகியன இந்த கணிப்புக்கு பயன்பட்டன. குறுந்தூர விமான சேவைகளும் அவை பெற்ற புள்ளிகளும்:1. Jet2, 81%2. Icelander, 74%3. Norwegian, 74%4. Turkish Airlines, 73%5. Logan Air, 72%6. Swiss Air, 71%7. Finn Air, 68%8. Tap Air Portugal, 67%9. Aer Lingus, 66%10. […]
பலஸ்தீனர் விடுதலைக்கு ஆதரவளித்து அமெரிக்க விமானப்படை உறுப்பினர் ஒருவர் அமெரிக்காவில் உள்ள இஸ்ரேல் தூதரகம் முன்னாள் ஞாயிற்றுக்கிழமை தீக்குளித்து மரணித்து உள்ளார். அமெரிக்க படையினர் ஒருவர் தீக்குளிப்பது இதுவே முதல் தடவை. Aaron Bushnell என்ற இந்த 25 வயது படையினன் காசா யுத்தத்தில் அமெரிக்கா கண்மூடித்தனமாக இஸ்ரேலுக்கு வழங்குவதை கண்டித்து, “I will no longer be complicit in genocide” என்று கூறியபடியே தனக்கு தானே தீ மூட்டி உள்ளார். தீ பற்றிய இவர் […]
இந்தியாவின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான ICICI வங்கியின் முகாமையாளர் ஒருவர் தான் அறிந்த வாடிக்கையாளர் ஒருவரின் வங்கி கணக்கில் இருந்து $1.9 மில்லியன் (135 மில்லியன் இந்திய ரூபாய்கள்) பணத்தை திருடி உள்ளார். நீண்ட காலம் அமெரிக்காவில் வாழ்ந்த Shveta Sharma என்பவரும் அவரின் கணவரும் இந்தியாவுக்கு NRI (non-resident Indian) உரிமை பெற்று சென்றுள்ளனர். அமெரிக்காவில் வட்டி மிக குறைவு ஆனபடியால் அவர்கள் தமது சேமிப்பையும் கூடவே எடுத்து சென்றுள்ளனர். இதை அறிந்த நண்பர்கள் மூலம் அறிமுகமான […]
அமெரிக்க Republican கட்சி வரும் நவம்பரில் இடம்பெறவுள்ள சனாதிபதி தேர்தலில் அக்கட்சி சார்பில் போட்டியிடும் நபரை தெரிவு செய்ய ஒவ்வொரு மாநிலத்திலும் உட்கட்சி தேர்தலை செய்து வருகிறது. இறுதியாக உட்கட்சி தேர்தல் இடம்பெற்ற மாநிலம் South Carolina. இது உட்கட்சி தேர்தல் இடம்பெற்ற 4வது மாநிலம். ஆரம்பத்தில் பலர் Republican உட்கட்சி தேர்தலில் போட்டியிட்டாலும் ரம்புடன் போட்டியிட முடியாது என்பதை உணர்ந்த அவர்கள் போட்டியில் இருந்து வெளியேறி உள்ளனர். நிக்கி ஹேலி மட்டும் தொடர்ந்தும் ரம்புடன் போட்டியிடுகிறார். ஆனாலும் இடம்பெற்ற […]
இஸ்ரேல் ஆக்கிரமித்து உள்ள West Bank பகுதியில் அண்மையில் ஒரு யூதர் பலஸ்தீன ஆயுதாரியால் சுட்டு கொலை செய்யப்பட்டு இருந்தார். அதற்கு தண்டனையாக இஸ்ரேல் 3,300 வீடுகளை யூதர்களுக்கு ஆக்கிரமித்து உள்ள West Bank பகுதியில் கட்ட உள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. இஸ்ரேலின் நிதி அமைச்சர் Bezalel Smotrich இந்த அறிவிப்பை வியாழன் இரவு தெரிவித்து இருந்தார். மேற்படி புதிய வீடுகளில் 300 யூத வீடுகள் ஆக்கிரமித்து உள்ள Kedar பகுதியிலும், 2,350 யூத வீடுகள் ஆக்கிரமித்து […]
யுக்கிறேனில் ரஷ்ய படைகளுக்கு ஆதரவாக இந்தியர்களும் போரிடுவதாக இன்று வெள்ளிக்கிழமை இந்திய வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார். இந்த இந்தியர்கள் யுக்கிறேனில் ஆயுதம் ஏந்தி சண்டையிடுகிறார்களா அல்லது ரஷ்ய இராணுவத்துக்கு வேறு உதவிகள் செய்கிறார்களா என்று தமக்கு தெரியாது என்று இந்தியா கூறியுள்ளது. இந்தியா இந்தியர்களை யுத்தங்களில் பங்கெடுக்காது விலகி இருக்குமாறு கேட்டு உள்ளதாகவும் இந்தியா கூறியுள்ளது. இந்தியாவின் Hindu பத்திரிகை 18 இந்தியர்கள் ரஷ்ய படைகளுடன் உள்ளதாக புதன்கிழமை கூறியிருந்தது. இன்னோர் செய்தி 100 க்கும் அதிகமானோர் […]
தற்போது டெல்லியை நோக்கி படையெடுக்கும் 42 உழவர்களின் X (Twitter) கணக்குகளை மூடவும், அவர்களின் பதிவுகளை அழிக்கவும் இந்திய அரசு கட்டளையிட்டு இருந்தது. பேச்சு சுதந்திரத்தை பாதுகாக்கும் X தாம் இந்திய அரசின் கட்டளையை நிராகரிப்பதாக கூறியுள்ளது. ஆனாலும் தாம் இந்திய அரசின் கட்டளைக்கு ஏற்ப மேற்படி 177 கணக்குகளையும் முடக்கி வைப்பதாக கூறியுள்ளது. வருமானமா, கொள்கையா என்ற போட்டியில் கொள்கை தோல்வி அடைந்துள்ளது. மொத்தம் 177 கணக்குகளை இந்தியா அழிக்க கட்டளை இட்டுள்ளது. அதில் 35 […]