திருமலை மின்னுலை திட்டத்திலிருந்து வெளியேறுகிறது இந்திய NTPC?

இந்திய அரச கூட்டுத்தாபனமான NTPC (National Thermal Power Corporation) இலங்கையின் திருகோணமலையில் 500 MW நிலக்கரி மின் உற்பத்தி நிலையம் ஒன்றை நிறுவ இலங்கை மின்சார சபையுடன் (CEB – Ceylon Electricity Board) புரிந்துணர்வு ஒன்றில் கைச்சாத்திட்டிருந்தது. இந்த உடன்படிக்கை 2011 ஆன் ஆண்டு மாசி மாதத்தில் ஏற்படுத்தப்பட்டிருந்தது. இந்த திட்டத்தின் மொத்த செலவு இந்திய Rs. 4,000 கோடி என குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வருடம் தை மாதம் 7 ஆம் திகதி CEB தலைவர் எழுதிய கடிதத்தில் […]

பிரசில்ஸ் விமானநிலையத்தில் வைரங்கள் கொள்ளை

பாரிய ஆயுதம் தாங்கி, பொலிசார் போல் நடித்த எட்டு கொள்ளையர் பிரசில்ஸ் (Brussels) விமான நிலையத்தில் புறப்பட தயாராகிக்கொண்டு இருந்த Helvetic Airways என்ற விமானத்த்ல் இருந்து பல மில்லியன் பெறுமதியான வைரங்களை கொள்ளையிட்டுள்ளனர். அதிகாரபூர்வமாக கொள்ளை பெறுமதி அறிவிக்கவில்லை என்றாலும், மொத்த பெறுமதி 350 மில்லியன் வரை இருக்கலாம் என நம்பப்படுகிறது. பொலிசார் போல் இரண்டு வாகங்களில் திங்கள் கிழமை இரவு 8:00 மணியளவில் நுழைந்த எட்டு கொள்ளையர், பணியாளர், பயணிகள் எல்லோரையும் பயமுறுத்திவிட்டு, விமானத்தின் அடிப்பாகத்தில் இருந்து 120 பொதிகளை […]

மொசாட் உளவாளி Zygier கொலையா, தற்கொலையா?

ஆஸ்திரேலியா-இஸ்ரவேல் இரட்டை பிரசையான Ben Zygier 1990 ஆம் ஆண்டுகளில் இஸ்ரவேலுக்கு குடிபெயர்ந்து, பின் மொசாட்டில் வேலை செய்ய ஆரம்பித்திருந்தார். ஆனால் இவர் 2010 ஆம் ஆண்டில் மொசாட்டால் கைது செய்யப்பட்டு Ayalon என்ற சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்த சிறை இஸ்ரவேலின் தலைநகர் Tel Aviv  இற்கு அண்மையில் உள்ளது. 24 மணிநேர காவலில் இருந்த இவர் 2010 ஆம் ஆண்டு மார்கழி மாதம் மரணமானார். அப்போது இவரின் மரணம் தற்கொலை என பதியப்பட்டது. விசேட 24 மணிநேர காவலில் உள்ள கைதி […]

சிங்கப்பூரில் சனத்தொகை அதிகரிப்புக்கு எதிர்ப்பு

சமீப காலங்களில் சனத்தொகை பெருக்க வீதம் குறைந்த நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று. உலக வங்கியின் கருத்துப்படி 2010 ஆம் ஆண்டில் சிங்கப்பூரின் சனத்தொகை பெருக்கம் தாய்க்கு 1.2 குழந்தைகள். இந்த வீதம் சனத்தொகையை சமஅளவில் வைத்திருக்க போதுமானது இல்லை. சனத்தொகையை சம அளவில் வைத்திருக்க தாய்க்கு குறைந்தது 2.1 குழந்தையாவது தேவை. இவாறான குறைந்த சனத்தொகை [பெருக்க வீதம் விரைவில் சிங்கப்பூரின் மொத்த சனத்தொகையை குறைக்கும். அதுமட்டுமன்றி விரைவில் சிங்கப்பூரின் பெரும்பாலானோர் முதியோர்களாயும் சிறு தொகையினரே உழைக்கு, வரி செலுத்தும், சேவைசெய்யும் வயதினராகவும் இருப்பர். இந்த […]

ரஷ்யாவில் விழுந்த விண்கல், 1000 வரை காயம்

இன்று உள்ளூர் நேரப்படி காலை 9:20 மணியளவில் ரஷ்யாவின் Ural  மலைப்பகுதியில் பாரிய விண்கல் ஒன்று வீழ்ந்துள்ளது. இப்பகுதி மொஸ்கோவில் இருந்து சுமார் 1500 km கிழக்கே உள்ளது. இந்த நிகழ்வின்போது சுமார் 1000 பெயர்கள் காயமடைத்து உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் சிதறி பறந்த கண்ணாடி துண்டுகள் காரணமாகவே காயமடைந்து உள்ளனர். இந்த கல் சுமார் 10 தொன் எடை கொண்டதாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. இக்கல் வளிமண்டலத்துள் நுழையும்போது சுமார் 54,000 km/h ஆக இருந்திருக்கும் எனவும் நம்பப்படுகிறது. பூமிக்கு மேலே 30 […]

அறுவடைக்கும் உரிமைகொள்ளும் Monsanto

Mnsanto Co என்பது ஒரு அமெரிக்க நிறுவனம். இந்த நிறுவனம் genetically modified பயிர்களை தயாரிப்பவர்கள். அத்துடன் அவ்வாறு தயாரித்த பயிர்களை தமது உடமையாக பெரும் பணம் செலவு செய்து பாதுகாப்பவர்கள். அண்மையில் இந்த நிறுவனம் 75 வயதுடைய Vernon Bowman என்ற அமெரிக்க கமக்காரருக்கு எதிராக வழக்கு ஒன்றை 2007 ஆம் ஆண்டில் தாக்கல் செய்திருந்தது. ஆரம்ப நீதிமன்றம் Monsanto சார்பில் தீர்ப்பு கூறி இருந்தது. இபோது இந்த வழக்கு உயர் நீதிமன்றம் செல்கின்றது. Vernon Bowman செய்த குற்றம் என்ன? Monsanto விற்பனை செய்த […]

வடகொரியாவின் மூன்றாவது அணுக்குண்டு வெடிப்பு

கடந்த செவ்வாய்க்கிழமை வடகொரியா சிறிய ஆனால் வலுமிக்க அணுக்குண்டு ஒன்றை வெடித்து மூன்றாவது முறையாக பரிசோதனை செய்துள்ளது. ஐ.நா., அமெரிக்கா போன்ற நாடுகளின் எதிர்ப்புகள் எல்லாவற்றையும் உதாசீனம் செய்துவிட்டு வடகொரியா இந்த பரிசோதனையை நடாத்தியுள்ளது.1960 களில் USSR இன் உதவியுடன் இத்துறையில் செயல்பட தொடங்கிய வடகொரியா தனது முதல் அணுக்குண்டை 2006 பரிசோதனை செய்திருந்தது. பின்னர் இரண்டாவது பரிசோதனையை 2009 இல் செய்திருந்தது. முதல் இரண்டு குண்டுகளும் புளுடோனியத்தை அடிப்படையாக கொண்டவை. ஆனால் மூன்றாவது குண்டு யுரேனியத்தை அடிப்படையாக கொண்டதாக கருதப்படுகிறது. இவ்வாறு […]

ஆப்கானிஸ்தான் இலஞ்ச தொகை $3.9 பில்லியன்

2012 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் இலஞ்சமாக கொடுக்கப்பட்ட மொத்த தொகை US$ 3.9 என்கிறது UN அறிக்கை ஒன்று. இது அந்நாட்டின் மொத்த உள்நாட்டு வருமானத்தின் இரண்டு மடங்கு எனப்படுகிறது. இலஞ்சம் கொடுப்பதை வாழ்வில் ஒரு அங்கமாக கருதுகிறார்கள் பெரும்பாலான ஆப்கானிஸ்தான் மக்கள். இங்கு அதிகம் இலஞ்சம் பெறுவது நீதிபதிகளும், அரச சட்டத்துரையினருமே. இவர்கள் பெறும் சராசரி இலஞ்சம் சுமார் $300. வைத்திய துறையினர் சராசரி $100 பெறுகின்றனர். இலஞ்சம் காரணமாக கடந்த கார்த்திகை மாதத்தில் ஐரோப்பிய ஒன்றியம் […]

சாலமன் தீவு பகுதியில் 8.0 நிலநடுக்கம்

இன்று புதன்கிழமை சாலமன் தீவுகளுக்கு அண்மையில் 8.0 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நடுக்கம் 1.5 மீட்டர் உயர அலைகளை உருவாக்கி இருந்தாலும் பாதிப்புகள் அதிகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடத்துக்கு அண்மையில் உள்ள Vanuath என்ற இடத்தில் 11 cm வரையான அலைகள் தென்பட்டதாக கூறப்பட்டுள்ளது. அமெரிக்க புவியியல் நிலைய கூற்றுப்படி இந்த நிலநடுக்கம் Lata என்ற இடத்தில் இருந்து 81 km மேற்கே, 5.8 km ஆழத்தில் இடம்பெற்றுள்ளது. சுமார் 200 தீவுகளை கொண்ட சாலமன் தீவுகளின் […]

எகிப்தில் ஈரானிய ஜனாதிபதி Ahmadinejad

சுமார் 32 வருடங்களின் பின் ஈரானிய ஜனாதிபதி ஒருவர் எகிப்துக்கு பயணம் செய்துள்ளார். மாசி மாதம் 6 ஆம் திகதி எகிப்தில் நடைபெற உள்ள Organisation of Islamic Cooperation (OIC) இல் பங்கு கொள்வதற்காக அங்கு சென்ற Ahmadinejad எகிப்திய ஜனாதிபதி மோர்சி உட்பட பல உயர்மட்ட எகிப்திய அதிகாரிகளை சந்திக்கவுள்ளார். 1980 களில் எகிப்து அமெரிக்காவின் கைப்பொம்மை ஆனபின், எகிப்துவுக்கும் ஈரானுக்கும் இடையில் உறவுகள் முறிந்திருந்தன. அம்முறிவு முபாரக் பதவியில் இருந்து 2012 ஆம் ஆண்டில் துரத்தப்படும்வரை நீடித்தது. […]