இந்திய அணிவகுப்பில் அக்கினி V, விக்கிரமாதித்தன்

இன்று தைமாதம் 26ஆம் திகதி இந்தியா தனது குடியரசு தினத்தை தலைநகர் டில்லியில் கொண்டாடியது. பிரதமர் மன்மோகன் சிங் உட்பட பல விசேட பிரதிநிதிகள் கலந்துகொண்ட இவ்விழாவில் முக்கிய பாகமாக இராணுவத்தின் அணிவகுப்பும் நடைபெற்றது. இந்த அணிவகுப்பில் இந்தியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய அக்கினி V என்ற ஏவுகணையும் ரஷ்யாவிடமிருந்து பெற்றுக்கொள்ளவுள்ள விக்கிரமாதித்தன் என்ற விமானம் தாங்கி கப்பலின் அமைப்பும் எடுத்துச்செல்லப்பட்டது. அக்கினி V என்ற ஏவுகணை 5000 km வரை செல்லக்கூடியது. இது முற்றாக இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. […]

அமெரிக்காவை எச்சரிக்கும் வடகொரியா

அண்மையில் ஐ.நா. வின் கண்டனத்துக்கும் அதிகரித்த தடைகளுக்கும் உள்ளான வடகொரியா தனது ஏவுகணைகள் மூலம் அமெரிக்காவை குறிவைக்கப்போவதாக கூறியுள்ளது. அத்துடன் தாம் 3ஆம் அணுவெடிப்பு பரிசோதனைகளையும் செய்யவுள்ளதாக கூறியுள்ளது. கடந்த மார்கழியில் வடகொரியா நீண்ட தூரம் செல்லக்கூடிய ஏவுகணை ஒன்றை செய்மதி ஒன்றை அனுப்புவதன்மூலம் பரிசோதனை செய்திருந்தது. அதன் பின்னரே ஐ.நா. தண்டனைகளை அதிகரித்திருந்தது. Institue for Science and International Security இன் கருத்துப்படி வடகொரியா 2016 ஆம் ஆண்டளவில் 21 முதல் 32 எண்ணிக்கையிலான அணுக்குண்டுகளை வைத்திருக்கும். அந்நிய படைகளால் […]

அல்ஜீரிய முற்றுகையில் 37 கடத்தப்பட்டோர் பலி

அல்ஜீரிய பிரதமர் Abdelmalek Sellal அவர்களின் கருத்துப்படி அந்த நாட்டில் உள்ள In Amenas என்ற இடத்தில் உள்ள BPOil நிலையத்தில் நடைபெற்ற பணியாளர் கடத்தல் விவகாரத்தில் குறைந்தது 37 வெளிநாட்டு பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இறந்த அல்லது காணாமல் உள்ள சில வெளிநாட்டோர் விபரம் வருமாறு: Colombia: மரணம் 1, காணாமல் உள்ளோர் 1 France: மரணம் 1 Japan: மரணம் 7, காணாமல் உள்ளோர் 10 Malaysia: காணாமல் உள்ளோர் 2 Norway: காணாமல் உள்ளோர் 5 Philippines: மரணம் 6, காணாமல் […]

இலங்கை நீதிக்கு அமெரிக்கா U$ 4.5 மில்லியன்!

இன்று 17 ஆம் திகதி (01.17.2013) மாத்தறை வர்த்தக சம்மேளனத்தில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் Sison ஆற்றிய உரையின் ஒரு சிறு பகுதி இங்கே தரப்படுகிறது: “மாத்தறையில் மீண்டும் சந்திப்பதையிட்டு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.” “பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க மீதான குற்றப்பிரேரணை தொடர்பில் எமது அரசாங்கத்தின் கரிசனை குறித்து வெளியான செய்தித்தலைப்புகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இந்த குற்றப்பிரேரனையானது இலங்கையிலுள்ள அதிகார வேறாக்கம் குறித்தும் அதன் பிரசன்னமின்றிய நிலையில் ஜனநாயக நிறுவனங்களுக்கு ஏற்பாடும் தாக்கத்தையும் கேள்விக்குட்படுத்துவதாக அமைந்துள்ளது.” “வொஷிங்டனிலுள்ள எமது பேச்சாளர் இவ்வாரத்தில் குறிப்பிட்டதுபோன்று […]

இந்தியாவின் Rafale யுத்தவிமான கொள்வனவு 189 ஆக அதிகரிப்பு

அண்மையில் இந்தியா, பிரெஞ்சு தாயாரிப்பான Rafale யுத்தவிமானங்கள் 126 ஐ கொள்வனவு செய்ய இணங்கியிருந்தது. ஆனால் அந்த எண்ணிக்கை இப்போது 189 ஆக உயரலாம் என தெரியவருகிறது. தற்போது பிரான்ஸ் சென்றுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷிட் இந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். அவ்வாறு கொள்வனவு எண்ணிக்கை 189 ஆக உயரின், மொத்த கொள்வனவின் பெறுமதி சுமார் U$18 பில்லியன் ஆக இருக்கும். இந்த உடன்படிக்கையின் கீழ், முதல் 18 விமானக்களும் பிரான்சிலேயே முற்றாக உற்பத்தி செய்யப்படும். ஏனையவை பிரான்சில் தயாரிக்கபட்டு இந்தியாவின் பெங்கலூரில் பொருத்தப்படும். […]

உயர்படிப்பு முதலீட்டில் சீனா முன்னிடம்

உயர் கல்விக்கு அதியுயர் முக்கியத்துவம் கொடுக்கும் நாடாக இன்று சீனா விளங்குகிறது. சீனாவின் உயர் கல்விக்கான தற்போதைய வருடாந்த செலவீடு சுமார் U$ 250 பில்லியன். சுமார் 10 வருடத்தின் முன் இங்கு உயர்கல்விக்கான செலவீடு $30 பில்லியன் அளவிலேயே இருந்தது. அப்போது சீனா சுமார் 2 மில்லியன் பட்டதாரிகளையே வருடமொன்றில் உருவாக்கியது. ஆனால் தற்போது சுமார் 8 மில்லியன் பட்டதாரிகளை வருடமொன்றில் உருவாக்குகிறது. இந்த வேகம் தொடருமாயின் தற்போது ‘Made in China’ பொருட்களை கொள்வனவு செய்யும் நாடுகள் விரைவில் ‘Made in […]

புதிய அமெரிக்க பாதுகாப்பு செயலாளர்: Hagel

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா இன்று தனது இரண்டாம் ஆட்சிக்காலத்துக்கான புதிய உறுப்பினர்களை முன்மொழிந்துள்ளார். அமரிக்காவின் புதிய பாதுகாப்பு செயலாளராக Chuck Hagel (சக் கேகல்) பதவி வகிப்பார்.

1 322 323 324