மாஒ தலைமையிலான சீன கம்யூனிஸ் கட்சியின் (Chinese Communist Party) பெரும் படையெடுப்புக்கு முகம் கொடுக்க முடியாத சீன தேசிய கட்சியினர் (Chinese National Party அல்லது KuoMinTang) அதன் தலைவர் ChiAng Kai-Sheck உடன் தாய்வான் என்ற தீவுக்கு தப்பினர். சுமார் 2 மில்லியன் KMT உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் தப்பியதாக கூறப்படுகிறது.1949 முதல் 1987 வரை தாய்வானில் KMT தனிக்கட்சி ஆட்சி செய்து வந்திருந்தனர். பின்னர் அங்கு பல கட்சி அரசியல் உருவானது. தாய்வான் தன்னை […]
மத்திய அமெரிக்காவுக்கு கிழக்காக உள்ள அழகிய தீவுகளில் ஒன்று Puerto Rico (போட்ரோ ரிக்கோ). இது அமெரிக்காவுக்கு சொந்தமானதோர் ‘அரைகுறை’ மாநிலம் (state). 1898 இல், அமெரிக்க-ஸ்பெயின் யுத்த முடிவில், அதுவரை ஸ்பெயின் கட்டுப்பாட்டில் இருந்த Puerto Rico, Philippines மற்றும் Guam ஆகிய இடங்கள் அமெரிக்கா வசமானது. 1917 இல் Puerto Rico பிரசைகளுக்கு அமெரிக்க பிரசைகள் உரிமை (citizenship) வழங்கப்பட்டது. ஆனால் Puerto Rico வுக்கு மற்றைய அமெரிக்க states களுக்கு உள்ள அதிகாரம் […]
இந்தியா விரைவில் 180 நாட்டு பிரசைகளுக்கு இந்தியாவை வந்தடையும்போது 30-நாள் விசா வழங்கவுள்ளது. உல்லாச பயணிகளிடம் இருந்து பெறும் வருமதியை அதிகரிப்பதே இந்த நடவடிக்கைக்கு காரணம். இந்த வசதி சிங்கப்பூர், ஜப்பான், வியட்னாம், பிலிப்பீன், பர்மா, நியூ சீலாந்து, பின்லாந்து, கம்போடியா உட்பட்ட 11 நாடுகளுக்கு ஏற்கனவே உள்ளது. ஆனால் இந்த சலுகை இலங்கை, பாகிஸ்தான், ஈரான், ஈராக், சீனா, ஆப்கானிஸ்தான், சோமாலியா, நைஜீரியா மற்றும் சுடான் போன்ற எட்டு நாட்டவருக்கு வழங்கபப்பட மாட்டாது. இந்த எட்டு […]
கடந்த 25 ஆம் திகதி முதல் ஜெனீவாவில் நடைபெற்றுவந்த சிரியா பேச்சுவார்த்தை இன்று வெள்ளிக்கிழமை (31 ஆம் திகதி) ஏறக்குறைய முழு தோல்வியில் முடிவு பெற்றுள்ளது. அதேவேளை இவ்விடயம் தொடர்பான எல்லா விபரங்களையும் தெரிந்த எவரையும் இந்த தோல்வி ஆச்சரியப்பட வைக்கவும் இல்லை. முதலில், சிரியாவில் நடைபெற்றுக்கொண்டு இருக்கும் யுத்தம் ஒரு உள்நாட்டு யுத்தமல்ல. இது சவூதி மற்றும் கட்டார் உட்பட்ட சுனி இஸ்லாம் சார்ந்த அரசியல்வாதிகளுக்கும் சியா இஸ்லாமியர்களான ஈரானுக்கும் இடையேயான அரசியல் ‘பினாமி’ யுத்தம் […]
பாலஸ்தீனியர் உரிமைகளுக்காக அவர்களை சுற்றியுள்ள அரபு மற்றும் இஸ்லாமிய நாட்டு தலைவர்கள் கடந்த காலங்களில் யுத்தங்கள் வரை சென்றிருந்தாலும் நாளடைவில் அவர்களின் நடவடிக்கைகள் அவரவர் சொந்த நலன்களையே நோக்காக கொண்டிருந்தன. அதன் விளைவு நாளாந்தம் பாலஸ்தீனியர்களின் நிலங்கள் இஸ்ரவேலினால் அபகரிக்கப்பட்டு வந்தன. இந்த விடயத்தில் தன்னை ஒரு நடுவராக உட்புகுத்தும் அமெரிக்காகூட இஸ்ரவேலின் நலன்களில் மட்டுமே நாட்டம் காட்டியது. ஆனால் அண்மையில் ஐரோப்பிய சமூகம் புதியதோர் நியாயமான சட்டத்தை நடைமுறைப்படுத்தியது. அதன்படி பாலஸ்தீனியர்களின் நிலங்களில் சர்வதேச சட்டத்துக்கு […]
NSA (National Security Agency) என்ற அமெரிக்காவின் உளவு நிறுவனத்தின் நடவடிக்கைகள் தேசிய பாதுகாப்பு காரணமானது மட்டும்தான் என்று கூறினாலும் முன்னாள் NSA ஊழியர் Edward Snowden கருத்துப்படி NSA பொருளாதார உளவுகளிலும் ஈடுபட்டுள்ளது. இவரின் கூற்று குறிப்பாக ஜேர்மன் நிறுவனமான Siemens அடையாளம் கண்டுள்ளது. ஜேர்மன் தொலைக்காட்சி நிறுவனமான ARD TV உடனான உரையாடல் ஒன்றில் Snowden “அங்கே (Siemens இல்) அமெரிக்க நலனுக்கு தகுந்த தரவுகள் இருந்திருந்தால் – அவை அமெரிக்க பாதுகாப்பு சம்பந்தப்பட்டவை […]
ஜப்பானின் பிரதமர் Shinzo Abe தற்போது இந்தியாவுக்கு சென்றுள்ளார். இந்தியாவின் பிரதமர் மன்மோகன் சிங் உட்பட பலரை சனிக்கிழமை சந்தித்துள்ள Abe இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையிலான உறவை மேம்படுத்தும் வகையில் பொருளாதார மற்றும் பாதுகாப்பு திட்டங்களுக்கு உடன்பட்டுள்ளார். இதன் ஒரு அங்கமாக ஜப்பான் இந்தியாவுக்கு $2 பில்லியன் (200 பில்லியன் யென் ) கடன் உதவி செய்யவுள்ளது. இந்த கடன் இந்தியாவின் தலைநகர் டெல்லியில் subway (நிலக்கீழ் train) கட்டவும், renewable energy உருவாக்களுக்கும் பயன்படுத்தப்படும். அத்துடன் […]
அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா, மற்றும் சீனா ஆகிய 6 பலம்மிக்க நாடுகளும் ஈரானும் அணுசக்தி விடயத்தில் இணங்கியுள்ள 6-மாத கால இடைக்கால இம்மாதம் 20 ஆம் திகதி நடைமுறைக்கு வருகின்றது. வழமை போல் மூடிய அறைகளுள் பேசி தீர்மானிக்கப்பட்ட இந்த உடன்படிக்கை விபரங்கள் முற்றாக வெளியிடப்படவில்லை. பகிரங்கப்படுத்தப்பட்ட விபரங்களின்படி எதிர்வரும் 6 மாத காலத்தில் ஈரான் தனது அணு வேலைகளை முற்றாக நிறுத்தவேண்டிய அவசியம் இல்லை என்றாலும் 5% இற்கும் மேற்பட்ட யுரேனியம் 235 […]
அண்மையில் கிழக்கு சீன கடலின் மேலான வான் பரப்பில் தனது பாதுகாப்பு வலயம் ஒன்றை உருவாக்கிய சீனா இப்போது தென் சீன கடலில் புதியதோர் கடல் சட்டத்தையும் அறிவித்துள்ளது. இந்த சட்டப்படி சீனாவினால் அடையாளம் காணப்பட்டுள்ள தென் சீன கடல் பரப்புள் நுழையும் மீன் பிடி வள்ளங்கள் சீனாவிடம் முன் அனுமதியை பெற்றிருக்க வேண்டும். ஆனால் இந்த கடல் பரப்பை Philippines, Malaysia, Brunei, Vietnam போன்ற நாடுகளும் உரிமை கொண்டாடுகின்றன. இந்த புதிய சட்டத்துக்கு அடங்கும் […]
அமெரிக்காவின் மற்றும் கனடாவின் பகுதிகள் வழமைக்கும் அதிகமாககடும் குளிரிலும் snowவிலும் மூழ்கியுள்ளது. வழமையாக குளிர் பிரதேசமான வட அகலாங்கு 61.22 இல் உள்ள ஆங்கேராச் அலாஸ்காவை விட (Anchorage, Alaska) அமெரிக்காவின் பல தென் நகரங்கள் கடும் குளிருக்கு உள்ளாகியுள்ளன. உதாரணமாக ஆங்கேராச் வெப்பநிலை சுமார் +35 F (+2 C) ஆக இருக்கையில், வட அகலாங்கு 41.88 இல் உள்ள சிக்காக்கோ (Chicago) வெப்பநிலை -17 F (-27 C), வட அகலாங்கு: 33.75 இல் […]