ஜோர்ஜ் புஷ் (George Bush) ஈராக்கிய சதாம் மீது நடாத்திய யுத்தம் காரணமாக அமெரிக்காவுக்கு ஏற்பட்ட மொத்த செலவு U$ 2.2 trillion என்கிறது Brown University யின் Watson Institute. இதில் யுத்தத்துக்காக நேரடியாக செலவிட்ட தொகை $1.7 trillion, யுத்தத்தால் பாதிக்கப்பட்டோரை 40 வருடங்கள் வரை பராமரிக்க கணிக்கப்பட்ட தொகை $490 பில்லியன். இந்த $ 2.2 trillion தொகையானது ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்ட தொகையின் சுமார் 40 மடங்காகும். அதாவது ஆரம்பத்தில் புஷ் குழு யுத்த செலவு சுமார் $50 முதல் […]
சீனாவில் உள்ள Yunnan மாநில Coca Colaவின் பிரிவுக்குள் அடங்கிய விநியோக வாகனங்கள் சட்டவிரோதமாக GPSகளை (Global Positioning System) பாவிக்கின்றன என்று குற்றம் சாட்டுகிறது Yunnan மாநில அரசு. இந்த தொழில்நுட்பத்தின் மூலம் சீனாவின் முக்கிய, பாதுகாப்புடன் சம்பந்தப்பட்ட நிலையங்களை வரைபடங்களில் இலகுவில் அடையாளப்படுத்த முடியும். அதனால் சீனாவில் மேற்கு நாட்டு சேவையான GPS பாவனைக்கு மெரும் தடை உண்டு. GPS மேற்கு நாட்டு செய்மதிகளை பாவித்து செயல்படுவன. GPS ஆனது அமெரிக்கா இராணுவத்தால் உருவாக்கப்பட்டது. அத்துடன் இது மேற்கு நாடுகளின் […]
Google நிறுவனத்தின் Street View என்ற பிரிவே உலகப்படத்தையும், சில நாடுகளில் வீதிகளை படம்பிடித்தும் Google Map இல் வெளியிடுகிறது. இவ்வாறு வீதிகளை படம்பிடிக்க ஒவ்வொரு வீதியிலும் Camera பொருத்திய வாகனங்கள் செல்லும். அவ்வாறு செல்லும் வாகனங்கள் படம் பிடித்தலுடன் மட்டும் நின்றுவிடாது, வீதியின் இருபுறத்தேயும் உள்ள வீடுகளின் Router களில் உள்ள தனியார் விபரங்களையும் எடுத்து சென்றுவிட்டது. இது தவறுதலாக நடந்துவிட்டது என்கிறது Google. ஆனால் பல அமெரிக்க மாநில அரசுகள் அதை நம்புவதாக இல்லை. இப்போது Google இதற்கு […]
வெள்ளையர்களுக்கு மட்டும் என பொது சேவைகள் இருந்த காலம் போய்விட்ட இக்காலத்தில் இஸ்ரவேலில் இனவாத பயணிகள் போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அங்கு பாலஸ்தினியர்களுக்கு மட்டும் என பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதாவது பஸ் நிலையங்களில் பாலஸ்தினியர்களுக்கு ஒரு வரிசை, யூதர்களுக்கு இன்னோர் வரிசை. இந்த சேவை மத்திய வகுப்பு தொழில் புரியும் பாலஸ்தினியர்களை West Bank இல் இருந்து Tel Aviv இக்கு தினமும் எடுத்துச்செல்லும். இதில் யூதர்கள் விரும்பினால் பயணிக்கலாம் ஆனால் யூதர்களுக்குரியத்தில் பாலஸ்தினியர்கள் பயணிக்கக்கூடாது. இந்த சேவையை Afikim […]
பாரிய வரவு-செலவு நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள அமெரிக்க அரசு பல முனைகளிலும் செலவீன குறைப்பு செய்து வருகிறது. இதற்கு அமெரிக்க படைகளும் விலக்கல்ல. குறிப்பாக அமெரிக்க படைகளின் பெரும் செலவுகள் பின்போடப்பட்டு அல்லது இரத்து செய்யப்பட்டு வருகின்றன. இதனால் அமெரிக்க படைகளின் வல்லமைகளும் படிப்படியாக முடக்கப்பட்டு வருகின்றன. உதாரணமாக அமெரிக்காவின் 10 அணுசக்தி விமானம் தாங்கி கப்பல்களில் ஒன்றான USS Abraham Linclon க்கு மீள அணுசக்தி நிரப்பல் நடவடிக்கைகள் (இது இக்கப்பலின் mid-life திருத்த வேலையாகும்) தற்போது பின்போடப்பட்டுள்ளது. இந்த […]
இந்தியாவின் மூன்றாவது பெரிய செல்வந்தரும், உலககின் 41வது பில்லியனருமான Azim Premji $2.3 பில்லியன் பெறுமதியான தனது முதலீட்டு பங்குகளை கல்வி சார்ந்த பொதுச்சேவை நிறுவனம் ஒன்றுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். இந்த நன்கொடைக்கு முன்னர், 2012 ஆம் ஆண்டில் இவரின் மொத்த சொத்து சுமார் $12.2 பில்லியன். இந்த நன்கொடையை வழங்குவதற்கு முதல் நாளே இவர் Bill Gate (Microsoft) இன் Giving Pledge கூட்டில் இணைந்திருந்தார். Azim Premji இந்தியாவின் புகழ்மிக்க software நிறுவனமான Wipro இன் செயலாளர் ஆவர். நன்கொடைக்கு […]
மொத்தம் 100 அமரிக்க படையினரை விமானியில்லா வேவுவிமான தளம் ஒன்றை அமைக்கும் பணியில் அமர்த்த Niger என்ற நாட்டுக்கு அனுப்பியுள்ளது அமெரிக்காவின் ஒபாமா அரசு. இந்த தகவலை ஒபாமா வெள்ளிக்கிழமை (2013-02-22) தெரிவித்துள்ளார். இந்த தளத்தில் இருந்து Predator போன்ற விமானியில்லா வேவுவிமாங்கள் (UAV, Unmanned Aerial Vehicle) இயக்கபப்டும். இந்த தளம் Niger நாட்டு தலைநகர் Niamey இல் அமையும். இவர்கள் மாலியில் (Mali) சண்டையிடும் பிரெஞ்சு இராணுவத்துக்கு தேவைப்பட்ட உளவுகளை செய்வார்கள். ஒபாமா தன கூற்றில், Niger […]
இந்திய அரச கூட்டுத்தாபனமான NTPC (National Thermal Power Corporation) இலங்கையின் திருகோணமலையில் 500 MW நிலக்கரி மின் உற்பத்தி நிலையம் ஒன்றை நிறுவ இலங்கை மின்சார சபையுடன் (CEB – Ceylon Electricity Board) புரிந்துணர்வு ஒன்றில் கைச்சாத்திட்டிருந்தது. இந்த உடன்படிக்கை 2011 ஆன் ஆண்டு மாசி மாதத்தில் ஏற்படுத்தப்பட்டிருந்தது. இந்த திட்டத்தின் மொத்த செலவு இந்திய Rs. 4,000 கோடி என குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வருடம் தை மாதம் 7 ஆம் திகதி CEB தலைவர் எழுதிய கடிதத்தில் […]
பாரிய ஆயுதம் தாங்கி, பொலிசார் போல் நடித்த எட்டு கொள்ளையர் பிரசில்ஸ் (Brussels) விமான நிலையத்தில் புறப்பட தயாராகிக்கொண்டு இருந்த Helvetic Airways என்ற விமானத்த்ல் இருந்து பல மில்லியன் பெறுமதியான வைரங்களை கொள்ளையிட்டுள்ளனர். அதிகாரபூர்வமாக கொள்ளை பெறுமதி அறிவிக்கவில்லை என்றாலும், மொத்த பெறுமதி 350 மில்லியன் வரை இருக்கலாம் என நம்பப்படுகிறது. பொலிசார் போல் இரண்டு வாகங்களில் திங்கள் கிழமை இரவு 8:00 மணியளவில் நுழைந்த எட்டு கொள்ளையர், பணியாளர், பயணிகள் எல்லோரையும் பயமுறுத்திவிட்டு, விமானத்தின் அடிப்பாகத்தில் இருந்து 120 பொதிகளை […]
ஆஸ்திரேலியா-இஸ்ரவேல் இரட்டை பிரசையான Ben Zygier 1990 ஆம் ஆண்டுகளில் இஸ்ரவேலுக்கு குடிபெயர்ந்து, பின் மொசாட்டில் வேலை செய்ய ஆரம்பித்திருந்தார். ஆனால் இவர் 2010 ஆம் ஆண்டில் மொசாட்டால் கைது செய்யப்பட்டு Ayalon என்ற சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்த சிறை இஸ்ரவேலின் தலைநகர் Tel Aviv இற்கு அண்மையில் உள்ளது. 24 மணிநேர காவலில் இருந்த இவர் 2010 ஆம் ஆண்டு மார்கழி மாதம் மரணமானார். அப்போது இவரின் மரணம் தற்கொலை என பதியப்பட்டது. விசேட 24 மணிநேர காவலில் உள்ள கைதி […]