இதுவரை காலமும் அதிக பயணிகளை கையாளும் விமான நிலையமாக லண்டன் Heathrow விமான நிலையமே இருந்து வந்திருந்தது. ஆனால் Dubai விமான நிலையம் அந்த பெருமையை 2014 ஆம் ஆண்டில் பறித்துள்ளது. 2014 ஆம் ஆண்டில் Dubai விமான நிலையம் 70.5 மில்லியன் பயணிகளை கையாண்டு உள்ளது. ஆனால லண்டன் Heathrow விமான நிலையம் 68.1 மில்லியன் பயணிகளை மட்டுமே கையாண்டு உள்ளது. . Dubaiயின் 2014 ஆம் ஆண்டுக்கான பயணிகள் தொகை 2013 ஆண்டின் தொகையைவிட […]
முன்னாள் CIA உறுப்பினரான Jeffrey Sterling இன்று அமெரிக்காவில் குற்றவாளியாக தீர்ப்பு அளிக்கப்பட்டுளார். 1993 CIAயில் இணைந்த இவர் 1997 பாரசீக மொழி பயிற்சியின் பின் ஈரான் சம்பந்தப்பட்ட உளவு பணியில் அமர்த்தப்பட்டார். இவரின் வேலை அமெரிக்காவில் உள்ள முன்னாள் ஈரான் வம்சாவளியினரை பயன்படுத்தி ஈரானின் அணு ஆராய்வு மற்றும் கட்டுமானங்களை அழிப்பதாகும். . அதன் ஒருபடியாக CIA அமெரிக்கா பிரசையாகிவிட்ட முன்னாள் ரஷ்யா நாட்டு ஆணு வல்லுநர் ஒருவரை பயன்படுத்தி ஈரானின் அணு ஆய்வை குழப்புவதாகும். […]
இன்று 26 ஆம் திகதி நடைபெறவுள்ள இந்திய குடியரசு தினத்தில் கலந்து கொள்கிறார் அமெரிக்க ஜானதிபதி ஒபாமா. அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் இந்திய குடியரசு தினத்தில் கலந்து கொள்வது இதுவே முதல் தடவை. அது மட்டுமல்லாது அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் தனது ஆட்சிக்காலத்தில் இரு தடவைகள் இந்தியா செல்வது இதுவே முதல் தடவை. . ஒபாமாவை வரவேற்கும் இந்திய பிரதமர் மோடிக்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் வரை அமெரிக்கா விசா கொடுக்க மறுத்து வந்திருந்தது. . இந்தியாவில் […]
ஜோர்டான் (Jordan) நாட்டால் இன்று 15 நாடுகள் அங்கம் வகிக்கும் ஐ.நா. Security Council இல் முன்வைத்த இஸ்ரவேல்-பாலஸ்தீனியர் விவகாரத்துக்கான தீர்வு 1 வாக்கு குறைவால் முறியடிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்வு அடுத்த படியை அடைய மொத்தம் 15 வாக்குகளில் குறைந்தது 9 வாக்குகளை பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு 9 வாக்குகளை இந்த திட்டம் பெற்றிருந்தாலும், அமெரிக்கா இதை veto மூலம் நிராகரித்து இருக்கும். ஆனால் அமெரிக்கா veto பாவிக்கும் நிலைக்கு தள்ளப்படுவதை விரும்பி இருந்திருக்கவில்லை. . இந்த […]
அமெரிக்கா கட்டிய பனாமா கால்வாயை மிஞ்சும் வகையில் நிக்கரகுவாவை ஊடறுத்து புதியதோர் கால்வாயை கட்ட இன்று அடிக்கல் நாட்டியுள்ளது சீனா. நிக்கரகுவாவின் சன் குவான் (San Juan) ஆற்றையும் நிக்கரகுவா வாவியையும் உள்ளடக்கி செல்லப்போகும் இந்த கால்வாய், அத்திலாந்திக் சமுத்திரத்தையும் பசிபிக் சமுத்திரத்தையும் இணைக்கப்போகும் இரண்டாவது கால்வாய் ஆகும். . ஆதியில் அமெரிக்கா இந்த வழியில் கால்வாய் ஒன்றை அமைப்பதை ஆராய்ந்து இருந்தது. ஆனால் பின்னர் பனாமாவை தெரிந்து கொண்டது. . 2013 ஆம் ஆண்டு ஜூன் […]
1961 ஆம் ஆண்டு துண்டிக்கப்பட்ட அமெரிக்கா-கியூபா உறவை மீண்டும் புதிப்பிக்கும்படி அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா இன்று பணித்துள்ளார். இதன் முதல் கட்டமாக கியூபாவின் தலைநகர் ஹவானாவில் இருந்த அமெரிக்க தூதுவர் நிலையம் மீண்டும் ஆரம்பிக்கப்படும். அத்துடன் அமெரிக்கர்கள் கியூபா செல்லவும் இலகுவாக அனுமதிக்கப்படும். கடந்த 18 மாதங்களாக நடாத்திய பேச்சுவார்த்தைகளின் பயனாகவே இந்த முடிபு எடுக்கப்பட்டுள்ளது. . இந்த புது உறவின் ஒரு அங்கமாக அமெரிக்கா தன்னிடம் கைதிகளாக இருந்த 3 கியூபா நாட்டவர்களை விடுதலை செய்யவுள்ளது. […]
அமெரிக்காவில் இன்று வெளியிடப்பட்ட Senate Report, அவர்களால் கைது செய்யப்பட்ட al-Queda உறுப்பினர் மீது சட்டங்களுக்கு அப்பால் CIA செய்த கொடூர விசாரணைகள் புதிதாக உண்மைகள் எதையும் கொடுக்கவில்லை என்கிறது. al-Quedaவின் தலைவர் ஒசாமாவின் மறைவிடத்தை கண்டுபிடித்ததிலும் CIAயின் விசாரணைகளால் பெறப்பட்ட உண்மைகள் பயன்படவில்லை என்கிறது இந்த அறிக்கை. . சுமார் 120 சந்தேகநபர்கள் மீது நடாத்தப்பட்ட water-boarding (கைதியின் முகத்தை மேலே பார்க்க வைத்து முகத்தில் நீண்ட நேரம் பெருமளவு நீரை ஊற்றுதல்), ஒரு வாரகாலம் […]
Transparency International என்ற ஊழல் எதிர்ப்பு குழு நடாத்திய இந்த ஆண்டு கணிப்பில் இலங்கை 38 புள்ளிகளை மட்டும் பெற்று 85வது இடத்தை அடைந்துள்ளது. Burkina Faso, இந்தியா, Jamaica, Peru, Philippines, Thailand, Trinidad and Tobago, Zambia போன்ற நாடுகளும் 38 புள்ளிகளை பெற்று 85 இடத்தை இலங்கையுடன் இணைந்து பெற்றுள்ளன. மொத்தம் 174 நாடுகள் இந்த கணிப்பில் உள்ளடக்கப்பட்டு இருந்தன. . Denmark 92 புள்ளிகளை பெற்று முதலாம் இடத்தையும், New Zealand […]
இந்த மாதம் 18 ஆம் திகதி சீனாவின் கிழக்கு எல்லையில் உள்ள YiWu நகரில் இருந்து 82 கொள்கலன்களை ஏற்றிக்கொண்டு ரயில் ஒன்று ஸ்பெயின் நாட்டின் Madrid நகருக்கு புறப்பட்டுள்ளது. சீனாவின் தற்போதை அதிபர் சீ (Xi) இன் திட்டத்துக்கு இணங்க இந்த 6,200 மைல் நீள பயணம் ஆரம்பமாகியுள்ளது. இந்த ரயில் 21 நாட்களில் தனது பயணத்தை Madrid இல் முடிக்கும் என கூறப்பட்டுள்ளது. . சீனா இரண்டு புதிய silk road களை கட்டியெழுப்ப […]
இந்திய பிரதமர் மோடி அமெரிக்காவின் அதிபர் ஒபாமாவை இந்தியாவுக்கு வருமாறு இன்று (2103-11-21) அழைத்துள்ளார். 2015 ஆம் ஆண்டு January 26 ஆம் திகதி நடைபெறுவுள்ள இந்திய குடியரசு தினத்து (Republic Day) நிகழ்வுகளுக்கே ஒபாமா அழைக்கப்பட்டுள்ளார். . அழைப்பை ஏற்று ஒபாமா இந்தியா செல்வார் என வெள்ளைமாளிகையும் அறிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் ஒருவர் இந்திய குடியரசு தினத்தில் பங்கு கொள்வது இதுவே முதல் தடவையாக இருக்கும். . அதேவேளை ஒபாமா இதுவரை கால நட்பு நாடான பாகிஸ்தானின் […]