சிங்கப்பூரின் தந்தை Lee Kuan Yew நிலைமை கவலைக்கிடம்

சிங்கப்பூர் மூன்றாம் உலக நாட்டு நிலைமைக்கு தள்ளப்படாமல், முதலாம் உலக நாடுகளுக்கு நிகராக வளர முன்னணி காரணமாக இருந்த Lee Kuan Yew நிமோனியா காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளார். இவருக்கு வயது 91. . 1959 இல் நாடு சுதந்திரம் அடைந்த போது இவரே சிங்கப்பூரின் முதலாவது பிரதமர் ஆனார். இவர் கடுமையாக ஆட்சி செய்திருந்தாலும், மிகவும் நேமையானதும் சட்டத்துக்கு உட்பட்டதுமான ஆட்சியை செய்து வந்திருந்தார். சிங்கப்பூரை ஒரு பல்கலாச்சார நாடாக வளர்த்தார். 1956 ஆம் ஆண்டில் ஆரம்பித்த […]

வளரும் உலக ஆயுத விற்பனை

2005 முதல் 2009 ஆண்டு வரையான காலத்துடன் ஒப்பிடும் போது 2010 முதல் 2014 ஆண்டு வரையான காலத்தில் உலக ஆயுத விற்பனை 16% ஆல் அதிகரித்துள்ளதாக SIPRI (Stockholm International Peace Research Institute) தெரிவித்துள்ளது. . உலகின் அதி கூடிய ஆயுதங்களை விற்பனை செய்யும் நாடான அமெரிக்காவின் ஆயுத விற்பனை (உலக ஆயுத விற்பனையின் 31%) இந்த காலப்பகுதியில் 23% ஆல் அதிகரித்துள்ளது. இரண்டாவது அதிக ஆயுதங்களை விற்பனை செய்யும் நாடான ரஷ்யாவின் விற்பனை […]

உலகை வலம்வரும் solar விமானம்

Solar Impulse 2 என்ற solar சக்தியில் இயங்கும் சிறிய விமானம் ஒன்று உலகை சுற்றி வலம்வரும் முயற்சி ஒன்றில் ஈடுபட்டுள்ளது. இந்த விமானம் அபுதாபியில் இருந்து தனது பயணத்தை அபுதாபி நேரப்படி திங்கள் காலை 7:12 ஆரம்பித்துள்ளது. இது Borchberg மற்றும் Piccard ஆகிய இருவரினதும் 13 வருட முயற்சியின் பயனாகும். இந்த இருவருமே ஒவ்வொருவராக இதை இயக்குவர். . அபுதாபியில் இருந்து ஓமான், இந்தியா, பர்மா, சீனா, ஹவாய், நியூ யோர்க் ஊடாக 12 […]

சுகுமாரன், Chan தூக்கில் இடப்படும் சாத்தியம்

இங்கிலாந்தில் 1981 ஆம் ஆண்டு பிறந்து ஆஸ்திரேலியா வாசியான மையூரன் சுகுமாரனுக்கும், Andrew Chan கும் விரைவில் இந்தோனேசிய அரசு மரணதண்டனை வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களுடன் மொத்தம் 9 நபர்கள் இந்தோனேசியாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு போதை (heroin) எடுத்து செல்ல முனைந்ததாக குற்றம் சாட்டப்பட்டு 2005 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டு இருந்தனர்.  2006 ஆம் ஆண்டில் இவர்களுக்கு மரணதண்டனைக்கான தீர்ப்பு வழங்கப்பட்டு இருந்தது. இந்தோனோசியாவில் துப்பாகியால் சுட்டே மரணதண்டனை வழங்கப்படும். . ஆஸ்திரேலியா சுகுமாரனையும், […]

2.8 மில்லியன் வருட தாடை எலும்பு

சுமார் 2.8 மில்லியன் வருட பழமைவாய்ந்த, 5 பற்களை கொண்ட தாடை எலும்பு ஒன்று எதியோப்பியாவின் வடகிழக்கு பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த எலும்பை எதியோப்பிய நாட்டை சார்ந்தவரும், அமெரிக்க Arizona State University பட்டதாரி மாணவனுமான Chalachew Seyoum இரண்டு வருடங்களின்முன் கண்டு எடுத்திருந்ததார். . விஞ்ஞான ஆய்வின்படி இந்த எலும்புக்குரிய இனம் ஹோமோசேப்பியன் (Homo-sapiens) என்ற மனித இனத்துக்கு சிலபடிகள் முன்னைய இனமாக கருதப்படுகிறது. அதாவது இந்த எலும்பு மனித குரங்கு வகையில் இருந்து மனித […]

உச்சக்கட்டத்தில் ஒபாமா, Netanyahu மோதல்

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கும் இஸ்ரவேல் பிரதமர் Netanyahu வுக்கும் இடையில் நீண்ட காலமாக உறவு முறிந்து வருகின்றது. ஆனால் அந்த முறிவு இப்போது உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. இரு தரப்பும் ஒருவர் மீது மற்றவர் வெளிப்படையாக அவதூறு சொல்லும் நிலையில் உள்ளது. . ஒபாமா அரசு ஈரானுடன் அணு உற்பத்தி விடயத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதை Netanyahuஅறவே விரும்பவில்லை. கடந்த காலங்களில் அமெரிக்கா ஈரான் மீது நடைமுறைப்படுத்திய தடைகளை மேலும் வலுப்படுத்தவே Netanyahu விரும்புகிறார். ஈரான்  மட்டுமே இஸ்ரவேலுக்கு பணிய […]

ஈரானுக்கு Antey-2500 ஏவுகணை விற்க ரஷ்யா தீர்மானம்

ஈரானுக்கு தனது நவீன Antey-2500 ஏவுகணைகளை விற்பனை செய்ய தீர்மானித்துள்ளது. இந்த செய்தியை ரஷ்யாவின் இராணுவ தளபாட நிறுவனமான Rostec இன் தலைவர் தெரிவித்துள்ளார். தரையில் இருந்து வானத்துக்கு ஏவப்படும் இந்த ஏவுகணை 200 km தூரத்துக்கும் 30 km உயரத்துக்கும் சென்று தாக்கக்கூடியது. ரஷ்ய அதிகாரிகளின் கூற்றுப்படி இது நவீன யுத்த விமானங்கள், ஏவுகணைகள், ஆளில்லா விமானங்கள் (drone) போன்றவற்றை தாக்கி அழிக்கக்கூடியது. . 2010 ஆண்டில் ரஷ்யா ஈரானுக்கு S-300 ஏவுகணைகளை விற்க முன்வந்திருந்தும் […]

டெல்லியில் AAP வெற்றி, மோடியின் BJP படுதோல்வி

இன்று வெளியான டெல்லி மாநில தேர்தல் முடிவுகளின்படி இலஞ்ச எதிர்ப்பு கட்சியான AAP மொத்தம் 70 ஆசனங்களில் 67 ஆசனங்களை பெற்று வெற்றி பெற்றுள்ளது. மோடியின் BJP கட்சிக்கு 3 ஆசனங்கள் மட்டுமே கிடைத்துள்ளது. தேர்தலின் போது AAP கட்சி Arvind Kejriwal தலைமையிலும் BJP  கட்சி Nupur Sharma தலைமையிலும் போட்டியிட்டு இருந்தன. காங்கிரஸ் கட்சி ஒரு ஆசனத்தையும் பெறவில்லை. 2013 ஆம் ஆண்டு முடியும் வரை காங்கிரஸ் 15 வருடமாக டெல்கியை ஆண்டு வந்திருந்தது. […]

வீட்டு கதைகளை வெளியே சொல்லும் Samsung TV

இதுவரை smart phone கள் நீங்கள் கதைப்பது, GPS மூலம் நீங்கள் செல்லுமிடம், நீங்கள் அனுப்பும் text message போன்றவற்றை மூன்றாம் நபர்களுக்கு விற்று வந்தது நாம் அறிவோம். காவல் துறைக்கு மட்டுமல்ல, இலாப நோக்குடன் இயங்கும் வர்த்தக நிறுவனங்களுக்கும் விற்று வந்தன. அதற்கும் மேலாக Samsung நிறுவனத்தால் தாரிக்கப்பட்டு விற்பனைக்கு வரும் புதிய smart தொலைகாட்சிகளும் இவ்வகை உளவு வேலைகளை செய்யவுள்ளது. . இவ்வகை smart தொலைக்காட்சி பெட்டிகள் “Please be aware that if […]

அமெரிக்க வீடு கொள்வனவில் உலக கருப்பு பணம்

அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் Condo வகை வீட்டு விலை நியாயப்படுத்த முடியாத அளவு அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் உலகின் எல்லா பாகங்களில் இருந்தும் கருப்பு பணம் இந்த நாடுகளை நோக்கி நகர்வதே. அண்மையில் New York Times இதுபற்றி ஓர் கட்டுரை எழுதியுள்ளது, இது அதன் தொகுப்பு. . 2008 ஆண்டில் உணமையான கொள்வனவாளர்களின் பெயர் மற்றும் முகவரிகளை மறைத்து பினாமிகள் (proxy) மூலம் நியூ யோர்க் நகரில் கொள்வனவு செய்யப்பட்ட உயர்விலை […]