அமெரிக்காவில் 5000 புலிகள்

உலகம் எங்குமுள்ள காடுகளில் 3200 வரையான புலிகள் மட்டும் வாழ்கையில் அமெரிக்காவில் 5000 வரையான புலிகள் வாழ்வதாக மிருக நலன் நிறுவனமான WWF (World Wildlife Fund) தெரிவித்துள்ளது. இந்த 5,000 அமரிக்க புலிகளில் 6% புலிகள் (300 புலிகள்) மட்டுமே சட்டப்படியான மிருகசாளைகளில் (Zoo) உள்ளன. ஏனையவை தனியார் நிருவனக்களிடமும் தனியாரிடமும் உள்ளன. . அண்மை காலங்களில் திருத்தமான புலி எண்ணிக்கையை அறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் முனைந்துள்ளன. பூட்டான் தம்மிடம் மொத்தம் 103 […]

கடல்மட்டம் 1 மீட்டர் உயரும் என்கிறது NASA

அடுத்த 100 முதல் 200 வருடங்கள் வரையான காலத்துள் உலக கடல்மட்டம் ஒரு மீட்டர் அளவில் அதிகரிக்கும் என்று கணிக்கிறது நாசா (NASA). அப்போது Tokyo, சிங்கப்பூர் போன்ற நகரங்களின் பாகங்கள் கடலுள் முற்றாக அமிழ்ந்து இருக்குமாம். மாலைதீவின் அதியுயர் பகுதி கடல் மட்டத்தில் இருந்து 2.4 மீட்டர் உயரத்திலேயே உள்ளது. அமெரிக்காவின் Florida போன்ற பகுதிகளும் பெருமளவில் அமிழ்ந்து இருக்குமாம். . உலக சனத்தொகையில் 150 மில்லியன் மக்கள் கடல்மட்டத்தில் இருந்து 1 மீட்டர்க்கும் பதிவான […]

அகதிகள் சென்ற கப்பலில் 50 உடல்கள்

லிபியாவில் (Libya) இருந்து ஐரோப்பாவுக்கு சென்ற அகதிகள் வள்ளம் ஒன்றில் இருந்து 50 உடல்கள் எடுக்கப்பட்டுள்ளது. சுவீடன் நாட்டின் Poseidon என்ற காவல் துறை கப்பலே இவ்வுடல்களை புதன்கிழமை கண்டுள்ளன. . சிரியா, ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் நிலவும் யுத்தம் காரணமாகவும் ஆபிரிக்க நாடுகளில் நிலவும் வறுமை காரணமாகவும் பெருமளவில் அகதிகள் ஐரோப்பா நோக்கி செல்கின்றனர். . அண்மையில் Mediterranean கடல் அமைதியாக உள்ளதால் வள்ளங்கள் மூலம் செல்லும் அகதிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேற்படி சுவீடன் […]

Air Show ஆபத்துக்கள்; ஒரு வாரத்தில் 3 விபத்துக்கள், 9 பலி

சிறுவர் முதல் பெரியோர் வரை எல்லோரையும் மகிழவைக்கும் ஒரு நிகழ்ச்சி Air Show. பொதுவாக அந்தந்த நாட்டின் வான் படையினரால் நடாத்தப்படும் Air Show சுதந்திர தினம் போன்ற நாட்களின் முக்கிய அம்சமாக இருக்கும். விமான பயன்பாட்டின் அதீதங்களை உள்ளடக்கும் இந்நிகழ்வுகள் ஆபத்துக்களையும் கொண்டன. கடந்த ஒரு கிழமையில் மட்டும் 3 Air Show விபத்துக்களில் மொத்தம் 9 உயிர்கள் பலியாகியுள்ளன. . கடந்த 15 ஆம் திகதி அமெரிக்காவின் சிக்காகோ (Chicago) நகரில் நடைபெற்ற Air […]

தாய்லாந்து இந்து ஆலயம் அருகில் குண்டு வெடிப்பு, 19 உயிர்கள் பலி

தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்கொக்கில் (Bangkok) உள்ள இந்து ஆலயம் ஒன்றின் அருகில் குண்டு ஒன்று இன்று திங்கள் வெடித்துள்ளது. இக்குண்டு வெடிப்புக்கு 19 உயிர்கள் பலியாகி உள்ளதுடன் சுமார் 120 பெயர்கள் வரை காயமடைந்து உள்ளனர். இந்த குண்டு வெடிப்புக்கு இதுவரை எவரும் உரிமை கொண்டாடவில்லை. . இறந்தவர்களில் 10 பெயர்கள் தாய்லாந்து நாட்டினர் எனவும், இருவர் சீனர் எனவும், ஒருவர் பிலிப்பீன் நாட்டவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளது. ஏனைய உடல்கள் அடையாளம் காணப்படவில்லை. . […]

சீனாவில் இரசாயன களஞ்சிய விபத்து, 50 வரை பலி

சீனாவின் தலைநகர் பெய்ஜிங்குக்கு அண்மையில் உள்ள ரியன்ஜின் (Tianjin) என்ற கைத்தொழில் நிறுவனங்கள் நிறைந்த துறைமுக நகரில் புதன் இரவு நடைபெற்ற விபத்தில் 50 உயிர்கள் வரை பலியாகி உள்ளன. அத்துடன் 700 இக்கும் அதிகமானோர் காயமடைந்து உள்ளனர். பலியானவர்களுள் 12 தீயணைப்பு படையினரும் அடங்குவர். . இந்த விபத்து உள்ளூர் நேரப்படி புதன் இரவு 11:30 இக்கு இடம்பெற்றுள்ளது. ஒன்றின் பின் ஒன்றாக இரண்டு வெடிப்புகள் இடம்பெற்று உள்ளன. இரண்டாவது வெடிப்பு மிகவும் பெரியது எனவும், […]

காசுக்காக பொய் பிரச்சாரத்தில் கல்விமான்கள்

Coca-Colaவின் கைக்கூலிகளாக செயல்படும் சில கலாநிதிகள் பற்றிய கட்டுரை ஒன்றை New York Times பத்திரிகை இன்று வெளியிட்டுள்ளது. . அதிகமாக சுவையூட்டிய, அதிகூடிய calories கொண்ட Coca-Cola போன்ற பாணங்கள் உடல் பருமனை அதிகரிக்கின்றன என்ற கருத்தை மூடி மறைத்து பதிலாக போதிய உடல் பயிட்சிகள் இல்லாமையே உடல் பருமனை அதிகரிக்கின்றன என்ற கருத்தை மக்கள் மத்தியில் ‘விஞ்ஞான’ கருத்தாக பரப்ப சில கலாநிதிகளை பணம் கொடுத்து அமர்த்தியுள்ளது.. . Steven N. Blair என்ற […]

மலேசியன் விமானம் MH370வின் பாகம்?

இந்து சமுத்திரத்தின் மேற்கு பகுதியில், மடகாஸ்கருக்கு (Madagascar) கிழக்காக உள்ள Reunion என்ற தீவில் கரை ஒதிங்கியுள்ள விமான பாகம் ஒன்று கடந்த வருடம் காணாமல் போயிருந்த மலேசிய விமானம் MH370 இன் பாகமா என்பதை ஆராய அதிகாரிகள் அனுப்பப்பட்டுள்ளார்கள். இங்கு ஒதிங்கியுள்ள பாகம் சுமார் 2 மீட்டர் நீளமானதாகும். . ஒதிங்கியுள்ள பாகம் Boeing 777 வகை விமானத்தின் இறகுகளில் உள்ள flaperon என்ற பாகாமாக தெரிகிறது என்று ஓர் அதிகாரி கூறியுள்ளார். 2014 ஆம் […]

இன்றுமுதல் Windows 10, இலவசம்

நீண்ட காலமாக எதிர்பார்த்து இருந்த Windows 10 என்ற OS (Operating System) ஐ இன்று புதன் (2015/07/29) வெளியிடுகிறது Microsoft நிறுவனம். வழமைக்கு மாறாக இந்த OS பலருக்கு இலவசமாகவும் கிடைக்கவுள்ளது. தற்போது சட்டப்படியான Windows 7 Home, Premium மற்றும் Windows 8 OS கள் மூலம் இயங்கும் கணனிகள் மற்றும் smart phone கள் இந்த Windows 10 ஐ இலவசமாக இறக்கம் செய்யலாம். . 1995 ஆம் ஆண்டில் Windows 95 […]

Plutoவை அண்மிக்கும் NASAவின் New Horizons

சூரிய மண்டலத்தின் எல்லையில் இருக்கும் புளுட்டோவை (Pluto) படம் பிடிக்க 2006 ஆம் ஆண்டில் NASAவினால் New Horizon என்ற விண்கலம் ஏவப்பட்டு இருந்தது. சுமார் 9.5 வருடங்களில் 4.8 பில்லியன் km தூரம் பயணித்த அக்கலம் இன்று புளுட்டோவுக்கு அண்மையாக, 12,500 km தூரத்தில் செல்கிறது. அப்போது அதன் வேகம் 45,000 km/h. . மேலும் சில நாட்களில் இந்த கலம் புளுட்டோவை படம் பிடித்து NASAவுக்கு அனுப்பும். . புளுடோவுக்கு Charon, Styx, Nix, […]