சுமார் 50 வருட இராணுவ ஆட்சிக்கு பின் அங் சன் சு கி தலைமையில் புதியதோர் ஜனநாயக ஆட்சி பர்மாவில் அமைகிறது. இன்று திங்கள் வெளிவர தொடங்கிய தேர்தல் முடிவுகளின்படி அங் சன் சு கி தலைமையிலான National League for Democracy (NLFD) 70% வாக்குக்களை பெற்றுள்ளது. இராணுவ ஆதரவுடன் போட்டியிட்ட Union Solidarity and Development Party (USDP) தோல்வி அடைந்ததை ஏற்றுக்கொண்டுள்ளது. . 1990 ஆம் ஆண்டிலும் இவ்வாறு ஒரு தேர்தல் நடைபெற்று இருந்தது. […]
மோடி இந்திய ஆட்சியை கைப்பற்றியபோது இந்திய மக்கள் அவர் மீது பெரும் எதிர்பார்ப்பை வைத்திருந்தனர். ஆனால் அண்மைகால இந்திய தேர்தல் முடிவுகள் மோடி தனது ஆளுமையை இழந்து செல்வதை காட்டுகின்றன. தற்போது வெளிவந்துகொண்டிருக்கும் பீகார் மாநில தேர்தல் முடிவுகள் மோடி தலைமையிலான கட்சி 40% ஆசனங்களை இழந்துள்ளதாக கூறுகின்றன. . பீகார் தேர்தலில் BJP இம்முறை 58 ஆசனங்களை மட்டுமே எடுக்கும் எனவும், இவர்களுக்கு எதிராக போட்டியிட்ட மாநில கட்சி கூட்டணி 178 ஆசனங்களை எடுக்கும் எனவும் […]
மருத்துவ குறைபாடுகள், முதிய வயது போன்ற காரணங்களால் குழந்தை கொள்ளலில் குறைபாடு கொண்ட பெண்கள் (infertile) சுகதேகியான இன்னோர் பெண்ணின் கருப்பையை 10 மாதம் வாடகைக்கு எடுப்பதுண்டு. அதற்கு பெரும் பணமும் சிலவேளைகளில் கொடுக்கப்படும். இவ்வாறு இந்திய பெண்கள் வெளிநாட்டு குடும்பத்துக்கு வாடகை தாய் (surrogate mother) ஆவதை சட்டப்படி தடை செய்கிறது இந்தியா. . இந்தியாவில் ஒரு வாடகை தாயை அமர்த்த சுமார் $15,000 செலவாகும். அதில் சுமார் $5,000 மட்டுமே வாடகை தாயை அடையும். […]
அமெரிக்காவில் அண்மையில் நடாத்தப்பட்ட கருத்து கணிப்பு ஒன்று, அமெரிக்க வாலிபர் (teen) நாள் ஒன்றில் சுமார் 9 மணித்தியாலங்களை Internet பாவித்தல், social media பாவித்தல், video game விளையாடுதல், digital video பார்த்தல் போன்ற செயல்களில் செலவிடுவதாக கண்டுள்ளது. Common Sense Media என்ற அமைப்பு நடாத்திய இந்த கணிப்பில் 8 முதல் 12 வயதானோர் நாள் ஒன்றில் 6 மணித்தியாலங்கள் digital mediaவில் செலவிடுவதாகவும் கண்டுள்ளது. . அத்துடன் பணக்கார வீட்டு பிள்ளைகளை விட, […]
Abdul Mohsen bin Walid bin Abdul Aziz al-Saud என்ற சவுதி இளவரசர் உட்பட 10 நபர்கள் மீது லெபனான் அரசு இன்று திங்கள் போதை கடத்திய குற்ற வழக்கு தாக்கல் செய்துள்ளது. இவர்களில் 5 பேர் தற்போது தலைமறைவாக உள்ளனர். . கடந்த மாதம் 25 ஆம் திகதி இளவரசரும் அவரது கூட்டும் லெபானின் பெய்ரூத் நகரில் இருந்து சவுதிக்கு விமான மூலம் 40 பொதிகளில் இந்த போதையை கடத்த முனைந்துள்ளனர். இதன் பெறுமதி […]
ரஷ்யாவின் Metrojet விமான சேவைக்கு சொந்தமான AirBus A321 வகை பயணிகள் விமானம் (flight 7K9268) ஒன்று எகிப்தின் Sinai குடாவில் வீழ்ந்ததால் 224 உயிர்கள் பலியாகி உள்ளன. அதில் 17 சிறுவர்கள் உட்பட 217 பயணிகளும், 7 பணியாளர்களும் இருந்துள்ளனர். இந்த விபத்து உள்ளூர் நேரப்படி சனி காலை 6:14 மணிக்கு இடம்பெற்றுள்ளது. . செங்கடல் (Red Sea) கரையோரம் உள்ள Sharm el-Sheikh என்ற உல்லாச பயண நகரில் இருந்து ரஷ்யாவின் St Petersburg […]
எகிப்தில் நீண்ட காலமாக அமெரிக்காவினதும், இஸ்ரவேலினதும் உதவியுடன் சர்வாதிகார ஆட்சி செய்து வந்த முபாரக்கை மக்கள் போராட்டம் கவிழ்த்தது. அதன் பின் இஸ்லாமிய கொள்கை கொண்ட மோர்சியின் அரசு ஜனநாய முறையில் ஆட்சியை எகிப்தின் கைப்பற்றியது. எதிர்பாராது, மிக குறுகிய காலத்தில் தமது கட்டுப்பாட்டை இழந்த அமெரிக்காவும், இஸ்ரவேலும் மீண்டுமொரு கைபொம்மையான ஸிசியின் இராணுவ ஆட்சி அங்கு இராணுவ சாதியின் மூலம் அமர்த்தின. . ஸிசி முதலில் செய்தது ஜனநாயக முறையில் முன்னர் ஆட்சி செய்த கட்சியை […]
பெருகி வந்த சனத்தொகைக்கு தேவையான உணவு போன்ற அத்திய அவசிய பொருட்களை வழங்க முடியாத சூழ்நிலை தோன்றிய போது ஒரு பிள்ளை மட்டும் என்ற கட்டாய சட்டத்தை நடைமுறைப்படுத்தியது சீனா. 1977 ஆம் ஆண்டில் முன்வைக்கப்பட்டு 70 களின் இறுதியில் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த சட்டத்தை சீனா இப்போது இரத்து செய்கிறது. . புதிய சட்டப்படி ஒவ்வொரு குடும்பமும் இரண்டு பிள்ளைகளை பெற அனுமதியுண்டு. . ஒரு பிள்ளை மட்டும் என்ற கொள்கையால் சுமார் 400 மில்லியன் (400,000,000) […]
அமெரிக்காவின் அடுத்த சந்ததி யுத்த விமானங்களை தயாரிக்கும் பெறுப்பை அமெரிக்காவின் Northrop Grumman என்ற நிறுவனம் பெற்றுள்ளது. அமெரிக்க பாதுகாப்பின் தலைமையகமான பென்ரகன் (Pentagon) இதை நேற்று செவ்வாய் கிழமை அறிவித்துள்ளது. இந்த திட்டம் U$ 60 பில்லியன் ($60,000,000,000) பெறுமானம் கொண்டது என கணிப்பிடப்பட்டுள்ளது. . Long Range Strike Bomber (LRS-B) வகையான இந்த யுத்த விமானங்கள் எதிரியின் எல்லைக்குள் ஆழ ஊடுருவி எதிரியின் முக்கிய இடங்களை தாக்கும் வல்லமை கொண்டிருக்கும். இவை போர்முனைக்கு […]
மத்திய கிழக்கு நாடுகளில், குறிப்பாக சிரியாவில் நடைபெறும் யுத்தங்கள் காரணமாக இந்த வருடம் மட்டும் 700,000 இக்கும் அதிகமான அகதிகள் ஐரோப்பாவை கடல் மூலம் அடைந்துள்ளதாக ஐ.நா. கூறியுள்ளது. அதேவேளை 3,210 க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். . இவர்களில் 562,355 பேர் கிரேக்கத்தை அடைந்து பின் ஜெர்மனி போன்ற மேற்கு ஐரோப்பாவை அடைந்துள்ளனர். இத்தாலி வழியாக சுமார் 140,000 பயணித்துள்ளனர். பல்லாயிரம் அகதிகள் இஸ்பெயின் மூலம் பயணித்துள்ளனர். . இந்த அகதிகளில் 20% சிறுவர்கள், 15% […]