ரம்ப் தேர்தலுக்கு இலான் மஸ்க் 1/4 பில்லியன் டாலர் நன்கொடை

ரம்ப் தேர்தலுக்கு இலான் மஸ்க் 1/4 பில்லியன் டாலர் நன்கொடை

ரம்ப் சனாதிபதியாக தெரிவு செய்யப்படுவற்கு உலகின் முதல் செல்வந்தரான இலான் மஸ்க் (Elon Musk) $260 மில்லியன் (1/4 பில்லியன் டாலர்) நன்கொடையாக வழங்கி உள்ளதாக தேர்தல் திணைக்கள பதிவுகள் கூறுகின்றன. தனிநபர் ஒருவர் தேர்தலுக்கு வழங்கிய அதிகூடிய தொகை இதுவே. ரம்பின் ஆதரவை அதிகரிக்க மஸ்க் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் ஆரம்பித்த America PAC என்ற பிரச்சார அமைப்புக்கு மட்டும் $238 மில்லியன் வழங்கி உள்ளார். அத்துடன் அக்டோபர் மாதம் ஆரம்பித்த RBG PAC என்ற அமைப்புக்கு $20.5 மில்லியன் […]

பெரும் வீழ்ச்சி அடையும் இந்திய ரூபாயின் பெறுமதி

பெரும் வீழ்ச்சி அடையும் இந்திய ரூபாயின் பெறுமதி

2022ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து இந்த நாணயத்தின் பெறுமதி தொடர்ச்சியாக வீழ்ச்சி அடைந்து வருகிறது. அமெரிக்க டாலருக்கு எதிராக மட்டுமன்றி இலங்கை ரூபாய்க்கு எதிராகவும் இந்திய ரூபாய் பெறுமதி இழந்து வருகிறது. 2015ம் ஆண்டின் ஆரம்பத்தில் 1 இந்திய ரூபாய்க்கு சுமார் 2 இலங்கை ரூபாய்கள் மட்டுமே கிடைத்தன. ஆனால் 2022ம் ஆண்டு மே மாதத்தில் 1 இந்திய ரூபாய்க்கு 4.7 இலங்கை ரூபாய்கள் கிடைத்தன. அப்போது கடன் தொல்லை காரணமாக இலங்கை ரூபாயின் பெறுமதி பாரிய […]

நம்பிக்கையில்லா தீர்மானத்தால் பிரெஞ்சு அரசு கவிழ்ந்தது

நம்பிக்கையில்லா தீர்மானத்தால் பிரெஞ்சு அரசு கவிழ்ந்தது

Michel Barnier என்ற பிரெஞ்சு பிரதமருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி அடைந்ததால் Barnier தலைமையிலான அரசு கவிழ்ந்துள்ளது. இவர் 3 மாதங்களுக்கு முன்னரே பிரதமராக பதவி அடைந்திருந்தார். சபையில் உள்ள மொத்தம் 577 வாக்குகளில் இவரின் பிரதமர் பதவியை பறிக்க 288 வாக்குகள் மட்டுமே தேவைப்பட்டது. ஆனால் பிரதமரை பதவியில் இருந்து நீக்கும் தீர்மானத்துக்கு 331 வாக்குகள் கிடைத்துள்ளன. தற்போது பிரான்சில் எவருமே ஆட்சி செய்ய முடியாத அளவில் வாக்காளர் ஆதரவு இடது, வலது, மத்திய கொள்கை கட்சிகளுள் முடங்கி […]

இராணுவ சட்டத்தை கைவிட்டார் தென் கொரிய சனாதிபதி

இராணுவ சட்டத்தை கைவிட்டார் தென் கொரிய சனாதிபதி

பலத்த எதிர்ப்புகள் காரணமாக தனது இராணுவ சட்டத்தை தென் கொரிய சனாதிபதி Yoon நடைமுறை செய்து 24 மணித்தியாலத்துள் கைவிட்டு உள்ளார். இந்த நிலையில் அவர் தொடர்ந்தும் சனாதிபதியாக ஆட்சி செய்வது கடினமாகிறது. இராணுவ சட்டம் நடைமுறையை செய்யப்பட்டதை அறிந்த தொழிலாளர், அரசியல் உறுப்பினர்கள், மக்கள் வீதிக்கு வந்ததால் சனாதிபதி தனது திட்டத்தை கைவிட நேர்ந்துள்ளது. மொத்தம் 300 பாராளுமன்ற உறுப்பினர்களில், அவரின் கட்சியை சார்ந்தோர் உட்பட, குறைந்தது 190 பேர் சனாதிபதிக்கு எதிராக மாறியுள்ளனர். இன்று புதன்கிழமை எதிர்க்கட்சியினர் சனாதிபதியை பதவியில் இருந்து impeachment மூலம் விலக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். […]

கல்லியம் (Ga), ஜேர்மானியம் (Ge) ஏற்றுமதிக்கு சீனா தடை

கல்லியம் (Ga), ஜேர்மானியம் (Ge) ஏற்றுமதிக்கு சீனா தடை

நேற்று திங்கள் அமெரிக்காவின் பைடென் அரசு அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகள் சீனாவுக்கு ஏற்றுமதி செய்யும் தொழில்நுட்பங்களுக்கு மேலதிக தடை விதித்த பின் செவ்வாய்க்கிழமை சீனா தனது நாட்டில் இருந்து கல்லியம் (Ga), ஜேர்மானியம் (Ge), antimony (Sb) ஆகியவற்றை ஏற்றுமதி செய்வதை தடை செய்துள்ளது. கல்லியம், ஜேர்மானியம் போன்ற கனியங்களின் பொதுமக்கள் பாவனை மிக குறைவு என்றாலும் தொழில்நுட்ப தயாரிப்பில், இராணுவ பயன்பாட்டில் இவற்றின் பயன்பாடு பிரதானம். EV எனப்படும் மின்னில் இயங்கும் கார் தயாரிப்புக்கு இவை […]

தென் கொரியாவில் செவ்வாய் முதல் இராணுவ சட்டம்

தென் கொரியாவில் செவ்வாய் முதல் இராணுவ சட்டம்

தென் கொரிய சனாதிபதி Yoon செவ்வாய்க்கிழமை இராணுவ சட்டத்தை நடைமுறை செய்வதாக அதிகாலை தொலைக்காட்சி செய்தி மூலம் அறிவித்துள்ளார். தென் கொரியாவை வட கொரிய கம்யூனிஸ்ட்களின் ஆபத்தில் இருந்து பாதுகாக்கவே இந்த இராணுவ சட்டத்தை தான் நடைமுறை செய்வதாக கூறினாலும், அவர் விளக்கம் எதையும் அறிவிக்கவில்லை. சனாதிபதியின் இந்த எதிர்பார்க்காத அறிவிப்பால் மக்களும், அதிகாரிகளும் வியப்பு அடைந்துள்ளனர். சனாதிபதி Yoon இராணுவ சட்டத்தை அறிவித்தாலும் அவரின் conservative கட்சி அதை தவறு என்று கூறியுள்ளது. People Power Party என்ற சனாதிபதியின் […]

Diego Garcia தமிழ் அகதிகள் பிரித்தானியா சென்றனர் 

Diego Garcia தமிழ் அகதிகள் பிரித்தானியா சென்றனர் 

Diego Garcia என்ற இந்து சமுத்திர தீவில் தஞ்சம் அடைந்திருந்த இலங்கை தமிழ் அகதிகள் செவ்வாய் பிரித்தானியாவுக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளனர். இவர்கள் 6 மாதங்களுக்கு பிரித்தானியாவில் வசிக்க அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் சுமார் 60 இலங்கை தமிழ் அகதிகள் Diego Garcia தீவில் தஞ்சம்அடைந்திருந்தனர். இவர்களில் 16 பேர் சிறுவர்கள். பிரித்தானியா சென்ற இவர்களுக்கு வழங்கிய கடிதம் ஒன்றில் இவர்களின் பிரித்தானிய அனுமதி “outside of the Immigration Rules” என்று கூறப்பட்டு உள்ளதாம். […]

கனடிய அரசியலுள் வேர் விடும் இந்திய அரசியல் 

கனடிய அரசியலுள் வேர் விடும் இந்திய அரசியல் 

மேற்கு நாடுகள் மூன்றாம் உலக நாடுகளுள் மூக்கை நுழைக்கும் காலம் கடந்து தற்போது இந்தியா போன்ற நாடுகளின் அரசியல் கனடா போன்ற மேற்கு நாடுகளுள் வேர் விடும் காலம் தோன்றியுள்ளது. இதற்கு கனடா போன்ற நாடுகளின் தற்கால குள்ள நோக்கம் கொண்ட அரசியல்வாதிகளே காரணம். உதாரணமாக கனடாவின் Conservative கட்சியின் தலைவராக Patrick Brown என்பவர் 2022ம் ஆண்டு உள்கட்சி தேர்தலில் வெல்வதை இந்தியா தடுத்துள்ளது என்று செய்திகள் வெளிவருகின்றன.  Patrick Brown தற்போது இந்தியாவில் பிரிவினை தேடும் கனடிய சீக்கியர்களின் பலத்த ஆதரவை […]

மகனுக்கு அப்பா சனாதிபதி பைடென் பொது மன்னிப்பு

மகனுக்கு அப்பா சனாதிபதி பைடென் பொது மன்னிப்பு

அமெரிக்க சனாதிபதி பைடென் தனது மகன் Hunter க்கு இன்று ஞாயிறு பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார். பைடென் வழங்கும் இந்த பொது மன்னிப்பை ஜனவரி முதல் சனாதிபதி ஆகவுள்ள ரம்ப் மாற்றி அமைக்க முடியாது. பைடென் தனது அறிக்கை ஒன்றில் “Today, I signed a pardon for my son Hunter” என்றும் இது ஒரு “full and unconditional pardon” என்றும் கூறியுள்ளார். கடந்த அமெரிக்க சனாதிபதி தேர்தலுக்கு முன்னும், தேர்தலுக்கு பின் இன்று வரையும் பைடென் தான் மகனுக்கு பொது மன்னிப்பு வழங்ககேன் என்று பல […]

காசாவில் war crime இடம்பெறுகிறது, கூறுவது முன்னாள் ஜெனரல்

காசாவில் war crime இடம்பெறுகிறது, கூறுவது முன்னாள் ஜெனரல்

இன்று ஞாயிறு இஸ்ரேல் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு வழங்கிய உரையில் 2013 முதல் 2016 வரையான காலத்தில் நெட்டன்யாஹு ஆட்சியில் பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்த ஜெனரல் Moshe Yaalon காசாவின் வட பகுதியில் இஸ்ரேல் படைகள் war crime செய்கின்றன என்று கூறியுள்ளார். இஸ்ரேல் காசாவின் வட பகுதியில் இருந்து பலஸ்தீனரை விரட்டி அங்கு யூதர்களை குடியமர்த்த முனைவதாக முன்னாள் ஜெனரல் Moshe இஸ்ரேலின் கடும்போக்கு அரசு மீது குற்றம் சாட்டியுள்ளார். அவர் தனது கூற்றில் “at the […]