சொத்துக்கள் ஒளிப்பால் ஐஸ்லாந்து பிரதமர் ராஜினாமா

கடந்த சில நாட்களாக வெளிவந்துகொண்டிருக்கும் பனாமா நாட்டை மையமாக கொண்ட பினாமி நிறுவனங்கள் விடயம் காரணமாக ஐஸ்லாந்து (Iceland) பிரதமர் பதிவியை ராஜினாமா செய்துள்ளார். Panama Papers என்று அழைக்கப்படும் இந்த விசாரணை ஐஸ்லாந்து பிரதமரும் அவரது மனைவியும் பனாமா நாட்டில் பினாமி நிறுவனங்களை ஆரம்பித்து அதன் மூலம் தமது சொத்துக்களை ஒளித்து வைத்தாக கூறியிருந்தது. அதற்கு Mossack Fonseca என்ற சட்டத்தரணிகள் குழு உதவி செய்துள்ளது. . உண்மை வெளிவந்தபோது ஐஸ்லாந்து பிரதமரை பதவி விலகும்படி […]

சொத்துக்களை ஒளிக்க 214,000 பினாமி நிறுவனங்கள்

The International Consortium of Investigative Journalists (ICIJ) என்ற அமைப்பு, பிரித்தானியாவின் BBC, ஜெர்மனின் Süddeutsche Zeitung பத்திரிக்கை போன்றன இணைந்து நடாத்திய விசாரணை ஒன்றின்படி பனாமா (Panama) நாட்டில் பதிவாகியுள்ள Mossack Fonseca என்ற சட்டத்தரணிகள் நிறுவனம் 214,000 பினாமி நிறுவனங்களை தமது வாடிக்கையாளர் சார்பில் கண்காணித்து உள்ளது. இந்த வாடிக்கையாளர் தமது சொத்துக்களை ஒளித்து வைப்பதற்கே இவ்வாறு பனாமா போன்ற நாடுகளில் பினாமி நிறுவனங்களை வைத்துள்ளனர். இந்த விசாரணை கடந்த 40 வருட […]

ஜனாதிபதிக்கு அதிபதியாக அங் சன் சு கி

பொதுவாக நாடு ஒன்றில் அதிகம் அதிகாரம் கொண்ட ஒருவராக அந்நாட்டின் ஜனாதிபதி இருப்பார். ஆனால் பர்மாவில் ஜனாதிபதின் அதிபதியாக உருவாகியுள்ளார் அங் சன் சு கி. . இதுவரை பர்மாவை ஆட்சி செய்துவந்த இராணுவம் அந்நாட்டின் ஜனாதிபதி சார்பில் சட்டம் ஒன்றை உருவாக்கி இருந்தது. அச்சட்டப்படி அந்நாட்டவர் ஒருவரின் குடும்ப உறவு ஒன்று வெளிநாட்டு பிரசையாக இருந்தால் அவர் பர்மாவின் ஜனாதிபதி ஆக முடியாது. அச்சட்டப்படி அங் சன் சு கி அந்நாட்டின் ஜனாதிபதி ஆக முடியாது. […]

கல்கத்தாவில் மேம்பாலம் உடைந்து 21 பேர் பலி

இந்தியாவின் கல்கத்தா நகரில் தற்பொழுது கட்டப்பட்டுவந்த மேம்பாலம் (overpass) ஒன்று உடைந்து வீழ்ந்ததில் குறைந்தது 21 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலர் காயமடைந்தும் உள்ளனர். 100 மீட்டர் நீளம் கொண்ட பகுதி ஒன்றே உடைந்து வீழ்ந்துள்ளது. . காயமடைந்த சுமார் 70 பேர் கல்கத்தாவில் உள்ள இரண்டு மருத்துவ நிலையங்களுக்கு எடுத்து செல்லப்பட்டு உள்ளனர். தற்போது இராணுவம் அகப்பட்டோரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளது. . இந்த மேம்பாலம் அமைப்பு வேலை மேலும் இரண்டு வருடங்களில் முற்றுபெற […]

பாகிஸ்தானில் தற்கொலை தாக்குதல், 65 பேர் பலி

இன்று ஞாயிரு பாகிஸ்தானின் லாகூர் (Lahore) நகரில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலுக்கு சுமார் 65 பேர் பலியாகியுள்ளதுடன் சுமார் 300 பேர் காயமடைந்து உள்ளனர். பாகிஸ்தானில் உள்ள Jamaat-ul-Ahrar என்ற தலபான் குழு இத்தாக்குதலுக்கு உரிமை கொண்டாடி உள்ளது. . அப்பகுதியில் உள்ள கிறீஸ்தவர்கள் ஈஸ்டர் ஞாயிரை (Easter Sunday) அங்குள்ள சிறுவர் விளையாட்டு இடம் ஒன்றில் (Gulshan-e-Iqbal Park) கொண்டாடும் போதே இந்த தாக்குதல் இடம்பெற்று உள்ளது. அதனால் அதிகமாக பெண்களும், சிறுவர்களுமே இத்தாக்குதலுக்கு […]

வெளியே தாக்கினாலும் உள்ளே தாக்கப்படும் IS

ஈராக், சிரியா போன்ற நாடுகளில் அண்மைக்காலங்களில் வளர்ந்திருந்த IS என்ற இஸ்லாமியவாத ஆயுதக்குழு பிரான்ஸ், பெல்ஜியம் போன்ற நாடுகளில் பாரிய தாக்குதல்களை மேற்கொண்டாலும் தமது இடங்களில் பரிய தோல்விகளை தழுவி வருகிறது. . சிரியாவின் அசாத் தலைமையிலான அரச படைகள் இன்று Palmyra என்ற வரலாற்று முக்கியத்துவம் கொண்ட நகரை மீண்டும் தம்வசமாக்கி உள்ளன. அத்துடன் Palmyra நகரில் இருந்து ஈராக் செல்லும் பெரும்தெருவையும் சிரியாவின் அரச படைகள் கைப்பற்றி உள்ளன. ஆரம்பத்தில் இந்த நகரில் சுமார் 70,000 […]

இன்று முதல் Googleலில் இலங்கை வீதிப்படம்

Google சேவையில் இன்று Google Map ஆகும். இந்த சேவை உலகின் பல நாட்டு வீதிகளை உலகின் எப்பாகத்தில் இருந்தும் பார்க்க வசதி செய்திருந்தது. இன்று முதல் இலங்கையின் வீதிகளையும் இந்த சேவையில் பார்க்கலாம். இலங்கையுடன் மொத்தம் 76 நாட்டு வீதிகளை இந்த சேவை மூலம் பார்க்கலாம். . Google தேடலில் Sri Lanka என்று தேடினால், இலங்கை சம்பந்தமான தரவுகளுடன் இலங்கையின் வரைபடமும் வழங்கப்படும். அந்த வரைபடத்தை தொடர்ந்தால் இலங்கையின் முழு வரைபடம் தோன்றும். அந்த […]

பெல்ஜியத்தில் சில குண்டுவெடிப்புகள், 26 பலி

பிறசில்ஸ் (Brussels) என்ற பெல்ஜியத்தின் (Belgium) தலைநகரில் இன்று காலை இடம்பெற்ற சில குண்டு தாக்குதல்களுக்கு குறைந்தது 26 பேர் பலியாகி உள்ளதுடன் குறைந்தது 130 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அங்குள்ள நிலக்கீழ் Subway ஒன்றில் இடம்பெற்ற தாக்குதலுக்கு 15 பேர் பலியாகி உள்ளனர். அங்குள்ள விமான நிலையத்தில் இடம்பெற்ற தாக்குதலுக்கு 11 பேர் பலியாகி உள்ளனர். . இந்த விமான நிலையத்தில் பல விமானசேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. இங்கு வரவிருந்த பல விமானங்களும் வேறு இடங்களுக்கு […]

ஒபாமா கியூபா பயணம்

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தனது Air Force One விமானத்தில் பயணமானார். அமெரிக்க தலைநகர் வாசிங்டன் DC நேரப்படி இன்று ஞாயிரு பிற்பகல் 1:35 மணிக்கு இந்த விமானம் கியூபாவின் தலைநகர் ஹவானா நோக்கி பறந்தது. ஒபாமாவுடன் அவரது மனைவி, மகள்கள் ஆகியோரும் கியூபா பயணமாகினர். . இதற்கு முன் பதவியில் உள்ள அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் கியூபா 1928 ஆம் ஆண்டிலேயே. அமெரிக்காவின் 30ஆவது ஜனாதிபதி Calvin Coolidge 1928 இல் கியூபா சென்றிருந்தார். சுமார் […]

FlyDubai விமானம் விபத்தில், 60 பேர் வரை பலி

இன்று டுபாய் விமான நிலையத்தில் இருந்து ரஷ்யாவின் தென்பகுதியில் உள்ள Rostov-on-Don விமான நிலையம் சென்ற FlyDubai Flight 981 Rostovவில் தரை இறங்கும்போது விபத்துக்கு உள்ளாகியது. இந்த விபத்துக்கு பாதகமான காலநிலையே காரணம் என்று கூறப்படுகிறது. . விபத்துக்கு உள்ளானது FlyDubai விமான சேவையின் Boeing 737-800 வகை விமானமாகும். இதில் சுமார் 59 பேர்வரை இருந்துள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் நிலத்தில் இருந்தோர் சிலரும் பலியாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த விமானம் 5 வருடங்கள் […]